पूर्व प्रधानमंत्री डॉ. मनमोहन सिंह जी की जयंती पर उन्हें सादर नमन।
अपनी विनम्रता, ईमानदारी और दूरदर्शिता से उन्होंने देश की अर्थव्यवस्था और सामाजिक न्याय को नई दिशा दी। भारत के निर्माण में उनके ऐतिहासिक निर्णय और अमूल्य योगदान हमारा सदैव मार्गदर्शन करते रहेंगे।
दिल्ली की BJP सरकार के एक मंत्री वीडियो में एक नौजवान को थप्पड़ मारते दिख रहे हैं।
उसका गुनाह? वो वीडियो बना रहा था।
मंत्री के सामने सड़क खोदकर दिखाई जा रही थी, और उसके हाथ में कैमरा था।
ये उस सत्ता का चेहरा है जिसे अब वोटर से डर लगना बंद हो गया है।
सड़क पर सवाल पूछो - थप्पड़।
पेपर लीक पर सवाल पूछो - लाठी।
संसद में सवाल पूछो - माइक बंद।
ये लोग ऐसा इसलिए करते हैं क्योंकि इन्हें अब ये डर ही नहीं कि चुनाव इन्हें हटा सकता है। वोट चोरी यही ख़रीदती है - सिर्फ़ नतीजा नहीं, उसके बाद आने वाला अहंकार भी।
जो सरकार जीत को पक्का मान लेती है, उसे आपकी रज़ामंदी नहीं चाहिए - आपकी ख़ामोशी और अंधभक्ति चाहिए।
ये वीडियो देखिए 👇
BJP नेता और यूपी विधानसभा अध्यक्ष सतीश महाना राष्ट्रगान के लिए 52 सेकेंड नहीं रुक पाए।
राष्ट्रगान होता रहा और वे उसके पूरा होने से पहले ही चलते बने- ये हमारे राष्ट्रगान का अपमान है, जिसे किसी भी कीमत पर बर्दाश्त नहीं किया जाएगा।
BJP नेता की इस घटिया हरकत से हिंदुस्तान की संप्रभुता, इतिहास और संस्कृति के प्रतीक राष्ट्रगान का सम्मान करने वाला हर देशवासी आहत है... गुस्से में है।
इस अपराध के लिए सतीश महाना, नरेंद्र मोदी और पूरी BJP को देश से माफी मांगनी चाहिए।
தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள திரு @TVKVijayHQ அவர்களுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை, தியாகராய நகரில் உள்ள சிபிஐ அலுவலகமான பாலன் இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய தோழர் ஆர்.என்.கே என்றழைக்கப்படும் தோழர் இரா.நல்லக்கண்ணு அவர்களின் பூதவுடலுக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினேன்.
அஞ்சலி நிகழ்ச்சியின் போது, தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்புச் செயலாளர் திரு.செ.ராம்மோகன், சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் தலைவர்கள், வழக்கறிஞர் கீ.சு.குமார் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. கு.செல்வப்பெருந்தகை அவர்கள் சந்தித்து, பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அடுத்த சில நாட்களிலும் மழை தீவிரமாக இருக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு கனமழை, வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஆற்றங்கரைகள், ஏரிக்கரைகள் மற்றும் தாழ்வான இடங்களில் தங்குவதைத் தவிர்க்கவும். மின்கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள் அருகே செல்ல வேண்டாம். தேவையில்லாமல் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் வாகனத்திலோ, நடந்தோ செல்ல வேண்டாம். வீடுகளில் அவசர விளக்குகள், மின் சார்ஜ் சாதனங்கள் மற்றும் அத்தியாவசிய மருந்துகளை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்கவும்.
மேலும், அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பின்பற்றவும். மழை பாதிப்பு ஏற்பட்டால் அருகிலுள்ள நிவாரண முகாம்கள் அல்லது ஆட்சியர் அலுவலகங்களை தொடர்புகொள்ளவும். காங்கிரஸ் பேரியக்கத்தினர் அனைவரும் மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் இணைந்து மழை, வெள்ளம் பாதிப்பு ஏற்படும் இடங்களில் உள்ள மக்களுக்கு உடனடியாக உதவிட வேண்டும் என்றும், மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருந்து, பாதுகாப்பாக இருக்குமாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
#TNRains
இன்று (22.10.2025) எனது தாயார் திருமதி ராசம்மாள் குப்புசாமி அவர்களின் 13வது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு, மணிமங்கலத்தில் உள்ள அவரின் சமாதியில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.