தவெக அரசே, பிஜேபி அரசே, இந்தியாவில் கருத்துச் சொல்லும் உரிமை உண்டா இல்லையா?
முற்போக்கு அமைப்புகள் - ஜனநாயக சக்திகள், சுதந்திர ஊடகங்களுக்கு அரணாக இருக்க வேண்டும்., அரசிடம் இருந்து உரிய பதிலைப் பெற உரிய வகையில் அழுத்தம் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
#tndju
ஊடகவியலாளர் இசை செல்விக்கு எதிராக நடத்தப்படும் இணையவழிக் கும்பல் தாக்குதலை TNDJU வன்மையாகக் கண்டிக்கின்றோம். மேலும் இச்செயலில் ஈடுபட்டுள்ளோர் மீது தமிழ்நாடு காவல்துறை மற்றும் சைபர் க்ரைம் பிரிவு நடவடிக்கை வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றோம்!
நமது TNDJU சங்கத்தின் தலைவர் தோழர் மகிழ்நன் அவர்களின் தாயார் இன்று அதிகாலை காலமானார்.
அவருக்கான நிறைவு மரியாதை கோடம்பாக்கம் வெள்ளாளர் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் செலுத்தப்படவுள்ளது.
தோழர் @Makizh_nan மற்றும் அவரது உற்றாருக்கு TNDJU ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றோம்.
புதுச்சேரியில் ஊடகவியலாளர் ராஜூவிடம் தரக்குறைவாக நடந்துகொண்ட @NaamTamilarOrg@Seeman4TN & அந்த ஊடகவியலாளரைக் கடுமையாகத் தாக்கியுள்ள அக்கட்சியினரையும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க, புதுச்சேரி காவல்துறையை வலியிறுத்துகிறோம். #tndju
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இருந்து ஊடகவியலாளர் திரு. @KariKalankiru நீக்கப்பட்டதையும் பொதுக்குழுவில் கலந்துகொண்ட கும்பலின் நடத்தையையும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அவர் மீதான சட்டவிரோத நடவடிக்கையைத் திரும்பப்பெற வலியுறுத்துகிறோம். #tndju
திரைக்கலைஞர் கௌரி ஜி கிஷன் அவர்களிடம் மோசமான வகையில் கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர் செயல்பாட்டை தமிழ்நாடு டிஜிட்டல் ஊடகவியலாளர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. துணிச்சலாக எதிர்கொண்டு அறத்தை உணர்த்திய @Gourayy அவர்களுக்கு பாராட்டுகள்! #tndju
செய்தியாளர் திவ்ய விக்னேஷ் அவர்களை ஒருமையில் பேசி கண்ணியமற்ற முறையில் நடந்துகொண்ட தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அவர்களைத் தமிழ்நாடு டிஜிட்டல் ஊடகவியலாளர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. #TNDJU
TNDJU submission to Hon'ble Supreme Court on Karur Stampede issue petitions
&
Appreciation to Journalist Aravind, Tribes Tamil Media, Its Founder - Editor Karikalan for their meticulous work #tndju
- @THE_INDRA_KUMAR, Chief Organiser, Tamil Nadu Digital Journalists Union.
‘கேள்விக்கு பதில் வசை, கண்டனத்திற்கு பதில் முத்திரை’ எனச் சாயம் பூச நினைப்பதை TNDJU வன்மையாகக் கண்டிக்கிறது. எமது சங்கத்தின் மீதான அவதூறுகளை மறுப்பதுடன் தமிழ்நாடு டிஜிட்டல் ஊடகவியலாளர் சங்கத்திற்கு களங்கம் கற்பிக்கும் அதிமுக ஐடி விங்கின் நடவடிக்கைகளை TNDJU வன்மையாகக் கண்டிக்கிறது