அதாவது மக்களே இப்போ என்ன ஆச்சுன்னா?
காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகாரங்க "பெண்கள் இடஒதுக்கீட்டை" தடுத்து நிறுத்திட்டாங்கன்னு பாஜகவும் NDA அடிமைகளும் நேற்று ஒப்பாரி ஓலா விட்டானுங்க இல்ல...
இன்னைக்கு, யாருடா நிறுத்துனது? உடனே அமல்படுத்துடா 'கயிரே' என காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி பெண்கள் மோடியின் வீட்டு வாசலுக்கே வந்துட்டாங்க.
மாட்டிக்கின்னாரு ஒருத்தரு
கொலை, பாலியல் குற்றங்கள் செய்த அரசியல் தலைவர்கள் மலிந்திருக்கும் காலச்சுழலே இன்று நிலவுகிறது. தன் மீதான பாலியல் குற்றங்களை மடைமாற்ற ஈரான் மீது நியாயமின்றி போர் தொடுத்து பல்லாயிரம் பேரை கொன்றுள்ளார் டிரம்ப்.
உடன்படிக்கை எடுக்கும் போது கூட தன் மீது அந்நிய பெண்களின் கைபடாமல், தன் அரசியல் முன்னேற்றத்திற்காக எந்த மனிதநேயமற்ற செயல்களையும் செய்யாதவர் தான் நபிகள் நாயகம்(ஸல்)!
#ThePerfectLeaderMohamed
https://t.co/EdGgfVESWE
ஒன்றிய அரசின் வரிச்சுமையால், மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை நகர்த்த மிகுந்த சிரமப்படுகிறார்கள்.
கல்நெஞ்சக்காரனாக ஆட்சியாளர் இருக்கக்கூடாது என எச்சரித்த முஹம்மத்(ஸல்) அவர்கள், தனது ஆட்சியில் மக்களின் நலனுக்ககாவே பாடுபட்டார்கள்!
#ThePerfectLeaderMohamed
தன்னை எதிர்ப்பவர்களை விட ஆதரிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து விட்டால், நினைத்ததை எல்லாம் சட்டமாக கொண்டுவரலாம் என்ற போக்கில் தொகுதி மறுவரை சட்டத்தை தான்தோன்றித்தனமாக அமல்படுத்த ஒன்றிய அரசு முனைந்து தோற்றுப்போனது.
மதீனாவில் முஹம்மத்(ஸல்) ஆட்சி செய்த காலங்களில், யூதர்கள் தன்னை எதிர்த்தார்கள் என்ற போதும், அவர்களை ஓரம்கட்ட சட்டம் போட்டு, அவர்களுக்கான உரிமைகளை பறிக்கும் வேலையை நபிகள் நாயகம்(ஸல்) ஒரு போதும் செய்ததில்லை.
#ThePerfectLeaderMohamed
https://t.co/grhk0igPRg
ஆட்சியாளர்கள் சாலையில் வருகிறார்கள் என்பதற்காக பெரும் மக்கள் கூட்டத்தை கூட்டுவது, அவசர தேவைக்கு செல்வோரை காக்க வைப்பது - இவற்றையெல்லாம் இன்றைய அரசியல் காட்சிகளாக பார்க்கிறோம். இதை ஆட்சியாளர்கள் விரும்பவும் செய்கிறார்கள்.
மாபெரும் சாம்ராஜ்யத்தை ஆண்ட முஹம்மத்(ஸல்) அவர்களோ, எளிமையின் சிகரமாக மக்களோடு மக்களாக வாழ்ந்தார்கள், பகட்டு வாழ்க்கையை வாழ துளியும் அவர்கள் விரும்பவில்லை!
#ThePerfectLeaderMohamed
அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள டிமா ஹசோ மாவட்டத்தின் சுமார் பாதி நிலப்பரப்பை (3000 பிகாஸ் நிலம்), மஹபால் சிமெண்ட்ஸ் என்ற தனியார் நிறுவனம் சுரங்கம் தோண்டுவதற்கு தாரை வார்க்கப்பட்டுள்ளதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம்: பழங்குடியின மக்கள் வசிக்கும் நிலங்களை எடுப்பது உங்களுக்கு என்ன விளையாட்டா? என ஆளும் பாஜக அரசை கேள்வி எழுப்பியுள்ளது!
இந்திய அரசியலமைப்பின் படி 6வது ஷெடியூல்ட் மாவட்டமாக உள்ள டிமா ஹசோவில் உள்ள பழங்குடியின மக்களின் நன்மைக்காகவே அந்நிலங்கள் உபயோகிக்கப்பட வேண்டுமென்ற சட்டத்தை எல்லாம் பாஜக அரசு மீறியுள்ளது.
சிறுபான்மை மக்களை சட்டவிரோத குடியேறிகள் என முத்திரை குத்தி ஒதுக்குவது, கார்ப்பரேட்களின் நலனுக்காக பழங்குடியின மக்களை அவர்களின் பகுதியிலிருந்து அப்புறப்படுத்துவது என அஸ்ஸாம் பாஜக அரசின் அட்டூழியம் அதிகரித்து கொண்டே போகிறது!
https://t.co/wrSsmKfvPL
இஸ்லாமியர்களுக்கு எதிராக அவதூறுகளை அள்ளி வீசும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்
மத நல்லிணக்கம், சகோதரத்துவம், மற்றும் இந்திய அரசியலமைப்பின் அடிப்படை மதிப்புகளை புறக்கணிக்கும் ஆளுநரின் இத்தகைய போக்கை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது
@tntjho
இஸ்லாமியர்களுக்கு எதிராக அவதூறுகளை அள்ளி வீசும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்
மத நல்லிணக்கம், சகோதரத்துவம், இந்திய அரசியலமைப்பின் அடிப்படை மதிப்புகளை புறக்கணிக்கும் ஆளுநரின் இத்தகைய போக்கை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது
மேற்கு டெல்லி பகுதியிலுள்ள கியாளா எனும் இடம் கடந்த 20 ஆண்டுகளாக ஜீன்ஸ் உடை தயாரிப்பின் கேந்திரமாக திகழ்கிறது. பெரும்பாலும் இங்கு இஸ்லாமியர்கள் வியாபாரம் செய்தாலும், ஹிந்துக்களும் சீக்கியர்களும் வியாபாரம் செய்கின்றனர்.
'பங்களாதேஷிகள், ரோஹிங்யாக்கள் இங்கு பணியாற்றுகின்றனர்; மற்றவர்களை துறத்திவிட்டு முஸ்லிம்கள் மட்டும் வாழும் இடமாக மாற்றிவிடும் Jeans Jihad சூழிச்சியை செய்ய முஸ்லிம்கள் திட்டமிட்டுள்ளார்கள்' என சங்பரிவார சக்திகள் வதந்தியை பரப்பி, அங்குள்ள இஸ்லாமியர்களின் நிறுவனங்களை மூட வைத்துள்ளனர்.
பாஜகவை சேர்ந்த டெல்லியின் தொழில்துறை அமைச்சரான மஞ்சிந்தர் சிங் சிர்ஸா, இந்த வதந்தியை ஊதி பெரிதாக்கும் கீழ்த்தனமான வேலையை செய்கிறார்.
தொழில் வளர்ச்சியை முடக்கவும், மத வெறுப்பை பரப்பவும் வேலை செய்யும் மதவாத சக்திகள் மீது கடும் சட்ட நடவடிக்கை பாய வேண்டும்.
https://t.co/sBP1SCKbUh
189 பேர் கொல்லப்பட்ட மும்பை 7/11 குண்டு வெடிப்பு வழக்கில் கைதான 12 முஸ்லிம்களில் 5 பேருக்கு தூக்கு தண்டனையும், 7 பேருக்கு ஆயுள் தண்டனையையும் வழங்கப்பட்டிருந்தது.
அதே வழக்கை மீண்டும் விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், அனைவரையும் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்துள்ளது. 17 ஆண்டு கால சிறை வாழ்க்கையில் ஒரு நாள் கூட இவர்கள் வெளியில் செல்லவில்லை. 12 பேரில் ஒருவர் கொரோனா நோயால் 2021ஆம் ஆண்டு சிறையிலேயே இறந்துவிட்டார்.
பொய் வழக்கு பதிந்த காவலர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டு, 12 பேரின் குடும்பத்திற்கும் போதுமான நிவாரணம் வழங்குவதை நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்.
https://t.co/2blmV38N8a
Special Intensive Revision (SIR) என்ற பெயரில் பிஹாரில் ஒரே மாதத்தில் 51 இலட்சம் பேரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது தேர்தல் ஆணையம். இவர்களெல்லாம் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட வாக்களித்தவர்கள்!
பிறப்பு சான்றிதழ் அடிப்படையில் இந்தியர்களை அடையாளம் காண்கிறோம் என்ற பெயரில் NRCன் வேறு வடிவமாக வந்துள்ள SIR முறை, ஜனநாயகத்தை படுகுழிக்கு இழித்து செல்லும் செயல்! இந்த செயல்திட்டம் உடனே நீக்கப்பட வேண்டும்.
https://t.co/8VUQOCDoOF
கொரோனாவிற்கு முன் டெல்லி தப்லிக் ஜமாஅத் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு, ஊரடங்கு அறிவிப்பு செய்யப்பட்ட பின் அடைக்கலம் கொடுத்தார்கள்; நோய் பரவலுக்கு துணை போனார்கள் என குற்றம் சாட்டப்பட்ட 70 பேரின் 16 FIRகளில் உள்ள குற்றப்பத்திரிக்கைகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இவர்களில் ஒருவருக்கு கூட கொரோனா நோய் இருந்ததாக
குற்றப்பத்திரிக்கையில் ஒரு வாக்கியம் கூட இல்லை என நீதிபதி தெரிவித்துள்ளார்!
அப்பாவி முஸ்லிம்களை சிறைப்படுத்துவதற்காக 5 ஆண்டுகள் அவர்களை அலைக்கழித்துள்ளது டெல்லி காவல்துறை. இதில் ஈடுபட்ட காவலர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
https://t.co/5YNg7FVnoQ