@Ronin9921 He's the one who gather the plus points of others with him as he's a plus point for the movie he knows very well . Just refer to others actors in 80s n 90s who talk abt this.
@Leennister Film lovers ku mukiyum than even though it will give entertaiment only. There r ppl who get making better life.
வாழ்க்கையே சரியா pathugama irukure pplku இது பொருந்தும்..
இதை நீங்க தெளிவா பேசணும்
For film lovers who life is in good state is a wish for them
எல்லோரும் #மொத_ராத்திரி நாயகன் @iam_rishikanth-ஐ @rajinikanth அவர்களோடு ஒப்பிட்டு எழுதி தள்ளுகிறார்கள்.
ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் ரஜினிகாந்தை ஆழமாக வேரூன்றி ரசித்ததால்தான், இன்று அதே இள வயதில் ரஜினிகாந்தின் முக ஜாடையுடன் ஒருவர் வரும்போது, அந்தப் பழைய ரஜினிகாந்தைப் பார்க்க வேண்டும் என்ற ஓர் ஏக்கம் உங்கள் மனதில் மீண்டும் எழுகிறது. அதன் விளைவுதான் நீங்கள் எழுதும் இந்த ஒப்பீட்டுப் பதிவுகள்.
காலம் மாறிச் செல்வதை உங்களால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. அதே நேரத்தில், சிறுவயதில் ரஜினிகாந்தைப் பார்த்துக் கொண்டாடிய அந்த மனதையும் தொலைக்கத் தயாராக இல்லை.
அதனால், இனி வரும் நாயகர்களிடம் அந்தக் கொண்டாட்டத்தை எதிர்பார்த்தவர்களே, ரஜினிகாந்தின் முக அமைப்பும், தலைமுடி அமைப்பும் பொருந்தி வரும் ரிஷிகாந்திடம் ரஜினிகாந்தைப் பார்க்கத் தொடங்கி விட்டீர்கள்.
அதன் விளைவுதான் இந்த இருவரையும் ஒப்பிட்டு எழுதித் தள்ளும் பதிவுகள்.
இது இப்போது எங்கே போய்க்கொண்டிருக்கிறது தெரியுமா?
“ரஜினியை விட ரிஷிகாந்த் இன்னும் அதிகமாகக் கவர்கிறார்” என்ற அர்த்தம் வரும் அளவுக்கு, சிலரது எழுத்துகள் நிலைமீறிச் செல்கின்றன.
அது எப்படி?
இரண்டு, மூன்று தலைமுறைகளாக மக்களை மகிழ்வித்து வந்த ஒரு நாயகனை, நேற்று வந்த ஒரே ஒரு படத்தில் நடித்து வெற்றி பெற்ற ஒரு இளம் நாயகனோடு ஒப்பிட முடிகிறது?
சினிமா பார்த்து வளர்ந்தவர்கள் நாம்.
நம் நடையிலும், கை அசைவிலும், குரலிலும், ரசனையிலும், நம்மை அறியாமலேயே ஏதோ ஒரு வகையில் ரஜினிகாந்த் இருக்கிறார்.
அவ்வளவு ஆழமாக நம் நினைவுகளுக்குள் பதிந்திருக்கிறார் அவர்.
அதேபோல, நடிப்புத் துறையில் முயன்று மேலே வரத் தொடங்கியிருக்கும் ரிஷிகாந்துக்குள்ளும், அவருக்குப் பிடித்த ஒரு ரஜினிகாந்த் இருக்கலாம்.
ஆனால், ரிஷிகாந்தின் ஒல்லியான உடல்வாகு, முக அமைப்பு, ரஜினிகாந்தைப் போன்ற தலைமுடி அமைப்பு ஆகியவற்றைப் பார்த்துவிட்டு, அவரை “இன்னொரு ரஜினிகாந்த்” என்று பார்க்கத் தொடங்குவது, அவருக்கே தேவையில்லாத ஒரு சுமையை உருவாக்கிவிடும்.
இதை நல்லதாக எடுத்துக்கொள்வதா என்று தெரியவில்லை.
நன்றாக வர வேண்டிய பையன் அவர்.
அவருடைய பயணத்தை அவருடைய திறமையோடும், அவருடைய படங்களோடும் சேர்த்து பாருங்கள்.
தயவுசெய்து, மூத்தவர்களுடன் ஒப்பிட்டு, இன்று எழுந்து வரும் இளைய தலைமுறையினரை முளையிலேயே கிள்ளி விடாதீர்கள்.
ரிஷிகாந்த் நன்றாக வர வேண்டும். அவர் இன்னும் பல உயரங்களைத் தொட வேண்டும். அப்படி அவர் நன்றாக வளர்ந்து வந்தால், அவருக்கு முதல் வாழ்த்து ரஜினிகாந்த் அவர்களிடமிருந்துதான் வரும்.
அதுதான் ஒரு மூத்த கலைஞரின் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
ஆகவே, அவரவர் படங்களை அவரவர் இடத்தில் வைத்து கொண்டாடுங்கள்.
படத்தைப் பார்த்துவிட்டு, ரசித்துவிட்டு, உங்கள் பிழைப்பைப் பார்க்கப் போங்கள்.
இப்படி தேவையில்லாத ஒப்பீடுகளை எழுதி ஒரு சஞ்சலத்தை உருவாக்கி, சினிமாவை நாசமாக்காதீர்கள்.
நீங்களும் நாசமாகிப் போகாதீர்கள்.
ரஜினிகாந்த் ஒரு தலைமுறையின் நினைவு.
ரிஷிகாந்த் இன்னொரு தலைமுறையின் புதிய நம்பிக்கையாக இருக்கட்டும்.
ஒருவரை ரசிப்பதற்காக இன்னொருவரை ஒப்பிட வேண்டிய அவசியமே இல்லை.
#Rajinikanth
#TamilCinema
@DrGopispeak என்னுடைய கருத்து என்னவென்றால் இந்த மாதிரியான அவருடைய முன்னுக்கு பின் முரணான க கொள்கைகள் அப்புள்ள மக்களுக்கு இருந்து இப்புள்ள மக்களுக்கு வரைக்கும் தெரிந்த நாள்தான் அவர் மீது ஒரு பக்கம் மரியாதை இருந்தாலும் இன்னொரு பக்கம் பல பேர் அவரை வெறுக்கிறார்கள் இதுதான் உண்மை
BABY ELEPHANT DURGA has arrived in Madurai after a 3,000-km journey from Assam.
She faces a life of captivity, chains & separation from her herd.
4 MORE BABY ELEPHANTS ARE ON THE WAY.
LET’S STOP THIS CRUELTY.
#SaveDurga#StopElephantTransfers#FreeElephants