1930 அப்போதைய மெட்ராஸ்.
15 வயசு சிறுமிக்கும்,
18 வயது சிறுவனுக்கு கல்யாணம்.
மூணே வருஷம். பையன் செத்து போனான். விதவை ஆன அவள் ஆறு மாச கர்ப்பம். பிறகு அந்த குழந்தை பெண்ணிற்கு குழந்தை பிறந்தது.
அந்த குடும்பத்தில் எந்த கேள்வியும் இல்லை. எந்த ப��ிலும் இல்லை. ஆழ்ந்த மவுனம் மட்டுமே. கையில் குழந்தையுடன் விட்டத்தை பார்த்து உட்காருவதே அவள் வாழ்க்கை ஆயிற்று.
போதும் இந்த தனிமை. வெறுமை என அவள் அப்போது எடுத்த முடிவை சந்திக்க அப்போதைய இந்தியா தயாராக வில்லை. அது அதிர்ந்து போனது.
அவள் அப்பா பாப்பு சுப்பாராவ், ஒரு பொறியியல் கல்லூரியில் எலக்டிரிக்கல் என்ஜினியரிங் பேராசிரியர். அவரை பார்த்து இந்த பெண் தலையில் சுரீர் என ஒரு பல்பு எரிந்தது. அது அவளது வாழ்க்கையை மட்டுமல்ல. லட்சக்கணக்கான இந்திய பெண்களின் எதிர்காலத்தையே மாற்றியது.
சென்னை கிண்டி என்ஜினியரிங் கல்லூரியில், எலக்ட்ரிக்கல் பட்டதாரி வகுப்பில் சேர்ந்தாள். ஆனால், அது அவ்வளவு சுலபம் ஆக இருக்க வில்லை. முழுக்க முழுக்க ஆண்கள் நிறைந்த கல்லூரியில் இவள் ஒருத்தி மட்டுமே பெண்.
அது வரை முறை வாசல் வேலைக்காக கூட எந்த இரு பெண்ணையும் பார்த்���ிராத காலேஜ். தன்னந்தனியே வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும்.
தன் காலில் நின்று தன் குழந்தையை வளர்த்து பெரிய ஆளாக்க வேண்டும் என்கிற ஒற்றை வேள்வித் தீ அவள் மனதில் பற்றி எரிய, 1943 ஆம் ஆண்டு அவள் என்ஜினியர் ஆனாள். இந்தியாவின் முதல் பெண் என்ஜினியர் இவள்தான்,
மற்றவர்கள் எல்லாம் இந்த இளம் விதவை மீது மாறுபட்ட பார்வைகளை வீசினாலும், கல்லூரி பரிந்துரையால்,
இந்தியாவின் மிகப்பெரிய பக்ரா நங்க���் அணையின் டிரான்ஸ்மிஷன் லைன்களை வரையும் வேலை கிடைத்த���ு. கட்டுமானங்களை, நாடுகள் எழுப்பிக் கொண்டு இருந்த போது, இவள் அவற்றை ஒளிமயமாக்கி கொண்டு இருந்தாள்.
கொல்கத்தாவின் அசோசிடியேட்டட் எலக்ட்ரிக்கல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.
சிஸ்டம் டிசைனிங், பழுதுகளை சரி ஆக்குதல் என
30 ஆண்டுகள் அவள் அங்கு உழைத்தாள்.
அந்த காலத்தில் விதவைகள் எங்கும் பயணம் செய்யக்கூடாது என்பதால், சைட்டுக்கு விசிட் செய்யும் வாய்ப்பு மட்டும் இவளுக���கு மறுக்கப்பட்டது. அவள் இதை எதிர்த்து கலகம் செய்ய வில்லை. அதையும் ஒரு வாய்ப்பாக்கி, துல்லிய எலக்ட்ரிக்கல் டிசைன்களை வடிவமைத்து தருவதில் கவனம் செலுத்தி சாதனை படைத்தாள். கிரிட்டுகள்களுக்கு மின் சக்தி அளித்தாள்.
1964. நியூயார்க்.
முதல் சர்வதேச மகளிர் இன்ஜினியர்கள் மற்றும் சயின்டிஸ்ட்டுகளி ன் மாநாடு நடந்தது. அதில் கலந்து கொள்ள இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட பெண் இவள்தான். சேலை உடுத்தி கொண்டு கம்பீரமாக நடந்து அந்த மாநாட்டில் ஒரு கலக்கு கலக்கினார். ஆனால், இந்த தேசத்துக்கு ��வள் பெயர் கூட தெரியாது.
1966.
லண்டனின் இன்ஸ்டிட்யூட் ஆப் எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங்-கில், முழு நேர உறுப்பினர் ஆனாள்.
நமது பாட நூல்கள், எஞ்சியரிங் கல்லூரிகள், நாட்டின் அணைகள், கிரிட்டுகள் எல்லாவற்றிலும் எத்தனை வோல்டேஜ் என குறிப்பிட பட்டு இருக்கும். ஆனால், ஒன்றில் கூட அவற்றை மின்மயமாக்கிய இவள் பெயர் இருக்காது.
அப்பேர்ப்பட்ட அவள் பெயர்:
அய்யல சோமாயஜுல லலிதா.
இந்தியா மதிக்கத் த���றிய, இந்தியா மறந்து போன இந்தியாவின் முதல் பெண் என்ஜினியர்...!
அணைத்து என்ஜினீயர்களுக்கு இந்த திரேட் சமர்ப்பணம் 🙏
#SSRThreads
அன்றைய #தீபாவளி...
அப்பாவிற்கு தீபாவளி போனஸ் வந்து விட்டது என்ற அம்மாவின் மந்திரச் சொல்லை கேட்டதில் ஆரம்பிக்கும் எங்களது தீபாவளி பண்டிகை...
வீடுகளில் பொருளாதார #சிக்கனம் காரணமாக ஒரே கலர் துணி எடுத்து அப்பாவிற்கு வேண்டிய டெய்லரிடம் மட்டுமே தைக்க கொடுக்க வேண்டும்..
வளரும் பையன்கள் என்பதற்காக கோமாளிகள் போடுவது மாதிரி தொளபுளா பேண்ட், சட்டை , தைத்து தருவார் அப்பாவின் அந்த #ஆஸ்தான டெய்லர் மாமா...
பெண் பிள்ளைகள் என்றாலே #பாவாடைதாவணி தான்..
அதில் பிரில் எனப்படும் லேஸ் வைத்து தைத்து தந்து விட்டால் ஏதோ #புதையலே கிடைத்தது போல்..
புதுப்படங்கள் போவதற்கு நமக்கு பர்மிஷனும் இருக்காது, துட்டும் இருக்காது.
அதனால் படம் பார்த்து விட்டு வந்த பெரிய அண்ணன்மார்களிடம் கதை கேட்டு ரசிப்போம்..
அதை விட கொடுமை அவர்களது சொந்த சொருகல்களையும் கேட்டுத்த��ன் ஆக வேண்டும்..
ஒரே ஒரு சீனிவெடி அல்லது ஓலை வெடி பாக்கெட்டை அண்ணன், தம்பிகளுக்குள் பங்கு பிரித்து வைத்துக்கொண்டு ஒவ்வொரு வெடியாக எண்ணி எண்ணி வெடித்தது..
தெருத்தெருவாக சென்று வெடிக்காத வெடிகளை பொறுக்கி வந்து புதுரக வெடிகளை தானாக தயார் செய்தது..
வெடிமருந்து அப்பிய கையோடு சாப்பிட அமர்ந்து அம்மாவிடம் அடி வாங்கியது..
.
பேப்பரில் வெடி மருந்துகளை மொத்தமாக சேர்த்து கொளுத்தும்போது ஏற்பட்ட தீக்காயம்.
தீபாவளிக்கு முந்தைய இரவு வரை தைக்க கொடுத்த துணிகள் வீடு வந்து சேரும் வரை எங்களது நிலை?!
வெடி வாங்கி வரும் அப்பாவின் வருகைக்காக வாசலில் வந்து வந்து எட்டிப் பார்த்து சென்றது..
காலையிலேயே தலைக்கு காய்ச்சிய எண்ணெய் தேய்த்து புலி அல்லது யானை மார்க் சீயக்காய் பொடி, ஆண்டாள் மார்க் பொடி தேய்த்து குளித்தது.
பெரும்பாலான வீடுகளில் அதிசயமாக இட்லி, தோசை சட்னி, மிளகாய் பொடி கூடவே தீபாவளி பலகாரங்கள்..
வெடிகளை கையில் பிடித்து எரிந்து பெரியவர்க��ிடம்
திட்டு வாங்கியது...
அண்ணே வெடி இருக்கு, அக்கா வெடி இருக்கு என்று
ரோட்டில் நடந்து வருபவர்களை ஓரமாக நடக்க வைத்து பயமுறுத்தியது...
பிடித்த ஆடைகளை வாங்க முடியாமல் விலை குறைவான ஆடைகளை வாங்கி, அப்பா அம்மாவிடம் கோபித்துக் கொண்டது...
இன்னமும் 20 நாள் இருக்கிறது, இன்னமும் 10நாள் இருக்கிறது என தீபாவளியின் வருகைக்காக நாட்களை எண்ணியது..
அம்மா அப்பா தாத்தா பாட்டி மாமா என அனைவரிடம் சேகர���த்த தீபாவளி காசை கொஞ்சம் கொஞ்சமாக வைத்து செலவு செய்தது..
தீபாவளி விடுமுறை முடிந்து பள்ளிக்கு செல்லும்போது புத்தாடைகளை அணிந்து சென்று பந்தா காட்டியது ..
.
அம்மா ஒளித்து வைத்த பண்டங்களை யாருக்கும் தெரியாமல் திருடித் தின்றது..
.
ஊதுபத்தி"க்கு பதிலாக தேங்காய்நார் கயிற்றால் கொளுத்தி வெடிகளை வெடித்தது...
ஒரு மத்தாப்பு அணையப் போகிறது என்று தெரிந்ததும் இன்னொரு மத்தாப்பை அதிலேயே ஒட்டி வைத்து எரிய வைத்தது...
பாம்பு மாத்திரைகளை வரிசையாக அடுக்கி மாடர்ன் ஆர்ட் போல கொளுத்தியது..
வெடிக்காத லட்சுமி வெடிக்குள் சீனி வெடியை ���ொருகி பில்டப் செய்தது..
தேங்காய் சிரட்டைகளில் வெடிகளை அமுக்கி வைத்து வெடித்தது..
அப்போதெல்லாம் ராக்கெட் வெடி மட்டும் தான். பாட்டிலில் வைத்து ராக்கெட் வெடியை அனுப்புவார்கள்.
அதுவும் பணக்காரர்களின் வெடியாக மட்டுமே இருந்தது..
மொட்டை மாடியில் நின்றுகொண்டு ஆங்காங்கே வெடிக்கும் வானவேடிக்கைகளை பார்த்து கைதட்டி ரசித்தது..
வெடி பாக்கெட்களை கையில் பிடித்துக் கொள்ள அசிஸ்டென்ட்���ை வைத்தது..
முப்பது வருடங்களுக்கு முன்பு நாங்கள் ப்ரியமாக கொண்டாடிய தீபாவளியை இப்போதைய சிறுவர்களும் இளைஞர்களும் கண்டிப்பாக கொண்டாட முடியவே முடியாது..
இப்போதைய தீபாவளி குடிப்பதற்கும், டிவியின் சிறப்பு நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கும், புதிய படம் பார்ப்பதற்கு மட்டுமே..
ஆனால்..
*எங்களுடைய நாட்கள் (அப்போதைய 80,90,களின் தீபாவளி ) என்றும் காலத்தால் மறக்க முடியாதவை.*
ஒரு காலத்தில் மொபைல் போன் இல்லை, இன்டர்நெட் இல்லை... ஆனால் இந்த "இளைய நிலா பொழிகிறதே" பாடல் மட்டும் ஒவ்வொருவர் வீட்டிலும், மனதிலும் ஒலித்துக் கொண்டிருந்தது!
40 வருடங்களாக நம்மை ஆளும் இந்தப் பாடலுக்குப் பின்னால் சில சுவாரஸ்யங்கள்!
வெறும் 30 நிமிடங்களில் உருவானது!
இசைஞானி இளையராஜா இந்த காலத்தால் அழியாத பாடலை வெறும் அரை மணி நேரத்தில் கம்போஸ் செய்தார் என்று கூறப்படுகிறது.
மோகனின் Signature Song:
இந்தப் பாடல் நடிகர் மோகனுக்கு அவரின் திரைப்பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்தது.
பாடலின் இடையிடையே வரும் கிட்டார் இசை, மேற்கத்திய கிளாசிக்கல் இசையான Bach-ன் சாயலில் அமைந்திருப்பது இசை ரசிகர்களால��� இன்றும் கொண்டாட��்படுகிறது.
இது வெறும் பாடல் மட்டுமல்ல, ஒரு இசை அதிசயம்!
இந்த மாதிரி வேறு எந்தப் பாடல் உங்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது?
கமெண்டில் சொல்லுங்கள்!
Hi, Am using Vikatan app and found it best for news stories and current affairs.I think you would also love this app. Use the below link and get 30 days free access to premium contents upon registration! Download Vikatan app https://t.co/mt4TVc7iy7
@NSubhashree@Chinmayi Because she reveal her inner thoughts to reach everyone. She is not overreacting. It is important to discuss things from either sides...