மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் அறிவுறுத்தலின்படி,
நாளை ஆகஸ்ட் 15ஆம் தேதி மக்களும், மக்களின் பிரதிநிதிகளும் த��்கள் கிராமங்கள் மேம்பட கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கிராம சபை சிறக்கட்டும்!கிராமங்கள் செழிக்கட்டும்!!
#Gramasabai
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, இன்று (11.08.2026) சென்னை தியாகராய நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.என்.ஆனந்த் அவர்கள் தலைமையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan | @BussyAnand |
தமிழக வெற்றிக் கழகத்தில் கழகப் பணிகளை இன்னும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில், கழக அமைப்பானது சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டங்களாக ஏற்கனவே பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நிர்வாக வசதிகளுக்காக கழக மாவட்டங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மாவட்டங்களோடு, மேலும் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, தற்போது பின்வரும் 27 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
கழகப் புதிய மாவட்டங்கள்:
1.விருதுநகர் மேற்கு மாவட்டம்
2. மதுரை வடக்கு மாவட்டம்
3. மதுரை மாநகர் மத்திய மாவட்டம்
4. மதுரை கிழக்கு மாவட்டம���
5. புதுக்கோட்டை மேற்கு மாவட்டம்
6. நாமக்கல் தென்கிழக்கு மாவட்டம்
7. தேனி வடகிழக்கு மாவட்டம்
8. தேனி தென்மேற்கு மாவட்டம்
9. தூத்துக்குடி மத்திய மாவட்டம்
10. திருவள்ளூர் வடமேற்கு மாவட்டம்
11. திருப்பூர் தென்கிழக்கு மாவட்டம்
12. திருப்பத்தூர் தெற்கு மாவட்டம்
13. திருநெல்வேலி தெற்கு மாவட்டம்
14. திருநெல்வேலி கிழக்கு மாவட்டம்
15. திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம்
16. திண்டுக்கல் தென்மேற்கு மாவட்டம்
17. தருமபுரி புறநகர் மேற்கு மாவட்டம்
18. சேலம் மத்திய மேற்கு மாவட்டம்
19. சேலம் தெற்கு மாவட்டம்
20. சென்னை தெற்கு மாவட்டம்
21. செங்கல்பட்டு வடக்கு மாவட்டம்
22. செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம்
23. கோவை கிழக்கு மாவட்டம்
24. கிருஷ்ணகிரி தென்கிழக்கு மாவட்டம்
25. கரூர் தெற்கு மாவட்டம்
26. ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம்
27. ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம்
புதிய மாவட்டங்களின் நிர்வாகிகள் விவரங்���ளை அறிய... Click Here https://t.co/MdFPIj5NN5
புதியதாக பொறுப்பேற்கும் மாவட்டக் கழக நிர்வாகிகளுக்கு எனது வாழ்த்துகளும், பாராட்டுகளும். இந்தப் புதிய நிர்வாகிகளுக்கு, கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தமிழக வெற்றிக் கழகத்தில் கழகப் பணிகளை இன்னும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில், கழக அமைப்பானது சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டங்களாக ஏற்கனவே பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நிர்வாக வசதிகளுக்காக கழக மாவட்டங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மாவட்டங்களோடு, மேலும் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, தற்போது
1. காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம்
2. திருநெல்வேலி தென்கிழக்கு மாவட்டம்
3. திருநெல்வேலி மத்திய மாவட்டம்
4. திருநெல்வேலி வடக்கு மாவட்டம்
5. திருவண்ணாமலை வடமேற்கு மாவட்டம்
ஆகிய 5 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
மாவட்ட நிர்வாகிகளின் விவரங்களை அறிய... Click Here https://t.co/MdFPIj5NN5
புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இன்று (15.06.2026), மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினரும் மதுரை மாநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான திரு. எஸ்.ஆர். தங்கபாண்டி அவர்கள் சத்தியமூர்த்தி நகர் மக்களை சந்தித்து நன்றி தெரிவித்து, அன்னதானம் வழங்கி, மக்களின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.
நீட் தேர்வை நீக்கும் ரகசியம் தெரியும் எனப் பொய்வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிய பொய்நிதி, போலிநிதி, மேலும் பல பொய்களை அவிழ்த்துவிட்டிருக்கிறார்.
ஒன்றிய அரசால் மட்டுமே நீட் தேர்வை நீக்க முடியும். மாநில அரசால�� நீக்கவே முடியாது என்பதை மறைத்து, நீட்டை நீக்குவோம் என்ற ரகசியநிதியின் பேச்சையும் அவரது தந்தையின் பேச்சையும் நம்பி ஏமாற வேண்டாம். எனவே, நீட் நீக்கப்படும் வரை, அதை மட்டுமே நம்பி மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டாம் என்பதற்காகத்தான் நீட் மட்டுமே உலகம் இல்லை என்று எங்கள் வெற்றித் தலைவர் சொன்னார். இதைத் திரித்துக் கதை கட்டி விட்டிருக்கிறார், இந்த��் திரிபுவாதநிதி.
ஜெயலலிதா அம்மையாரின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய தீயசக்தி, தன்னைப் போலவே பிறரையும் நினைக்கிறது. அந்தப் பிதற்றலைத்தான் ஸ்டிக்கர்நிதி ஸ்பீக்கர்நிதியாக மாறி, ஸ்பீட் காட்டி ரிபீட் மோடில் கீழே விழுந்து பல்லை உடைத்துக்கொள்கிறார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் மாநில உரிமைகளுக்காக உரத்துக் குரல் கொடுத்திருக்கிறார் எங்கள் தலைவர், மக்கள் விரும்பும் முதல்வர். நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத முதல்வரில்லை, எங்கள் தலைவர். எனவே, தனக்குத்தான் பேசத் தெரியும் எனத் தன் அப்பாவுக்காகத் தப்புத் தப்பாக டப்பாவை உருட்ட வேண்டாம், தப்புத்தாளநிதி அவர்களே.
மேலும், எங்கள் வெற்றித் தலைவர், மக்களை மனதார முழுமையாக நம்பினார். மக்கள் எங்கள் வெற்றித் தலைவரை மனதார முழுமையாக நம்பினர். அதனால் வந்த வெற்றியைப் பார்த்துப் பொறாமைநிதியாகிப் புலம்பி இருக்கிறா���், இந்த புலம்பல்நிதி.
போதும் நிறுத்திக்கொள்ளுங்கள் புளுகுநிதி. இல்லையேல் மக்கள் உங்களை மேலும் புறந்தள்ளி, கூப் சூப் உறிந்து குடிக்கும் வகையில் ஓரமாக அமர வைத்துவிட��வார்கள்.
ஸ்ரீவைகுண்டம் விவகாரத்தில் புகார் பெறப்பட்ட உடனே அதிரடியாகக் கைது செய்து, சிறையிலடைத்து, விரைந்து நடவடிக்கை எடுத்ததை நாடே அறியும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்கவே இயலாது. காரணம், இது மக்கள் விரும்பும் முதல்வரான நம் வ��ற்றித் தலைவரின் அரசு. இன்னும் சொ��்லப் போனால் இது மாடர்ன் மனுநீதிச் சோழன் அரசு. தப்பு செய்தவர் யாராக இருந்தாலும், எத்தகைய நிலையில் இருந்தாலும் தண்டிக்கப்படுவது உறுதி. அதே சமயத்தில் குற்றத்தில் சம்பந்தப்படாதவர்கள் பாதிக்கப்படாத வகையில் நியாயமான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதும் உறுதி.
நியாயமான நீதியை வழங்காமல் மனசாட்சியைக் குப்பையில் வீசிவிட்டு, குப்புறப் படுத்துக் கிடந்த பவளவிழா பாப்பா அரசன்று இந்த அரசு. உண்மை என்பது உப்புக்குக்கூட இந்த உதறல்நிதியிடம் இருக்காது என்பது உயர்தனி உண்மை. இருந்தாலும் அண்ணா பல்கலைக்கழகக் கொடூரச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சதிகாரர் ‘யாரந்த சார்?’ என்று இப்போதாவது அல்லது எப்போதாவது உளறல்நிதி, உண்மைநிதியாகப் பேசத் தயாரா?
பொள்ளாச்சி படுபயங்கரச் சம்பவத்தில் பச்சோந்தி போல நிறம் மாறி, நீதியைக் குழிதோண்டிப் புதைத்த தீர்ந்துபோன சக்தி போலவா நமது அரசு ���ருக்கிறது? இல்லவே இல்லை.
பெண்களுக்கு எதிரான கொடுமைகளை நமது அரசு ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்பது மக்களுக்கும் நன்றாகவே தெரியும். மக்களுக்கு நமது அரச���ன் மீது இருக்கும் இந்த நல்ல புரிதலைப் பார்த்து, தாங்க முடியாத பொறாமையில்தான் தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும் புகைச்சல் விட ஆரம்பித்துள்ளன.
அறிவாலயத்தில் எழுதப்படும் அறிக்கைக்குக் கண்ணை மூடிக்கொண்டு, தவளை போலத் தாவித் தாவித் தவழ்ந்துபோய் தத்தோம் ததிங்கினத்தோம் இசைக்கிறது தீர்ந்துபோன சக்தி.
அறிவாலய மியூசிக்கிற்கு அடிமையாகி, உடான்ஸ் டான்ஸ் ஆடும் ஆளாக மாறி, மக்கிப்போன தீர்ந்துபோன சக்தியும், தீர்ந்துபோன சக்தியின் தீம் மியூசிக்கிற்குக் கீபோர்ட் வாசிக்கும் கிறுக்குநிதியும் பொறாமையில் புகை விட்டுப் பொய்ப்புலம்பல் புகார் வாசிப்பது ஏனென்று மக்களுக்கே தெரியும்.
ஆட்சி அதிகாரம் பறிபோன ஆத்திரத்தில் இருக்கும் சித்தரஞ்சன் சாலையின் சிநேகத்தால் சிலுவம்பாளையத்திலும் கபீம் குபீம் காமெடி அரசியல் மற்றும் காண்டு அரசியலின் கதறல் சத்தம் கேட்பது வ��டிக்கையாகி விட்டது. மே 4ஆம் தேதியில் இருந்து இவர்களின் இயல்பும் இரவுபகலும் தலைகீழாக மாறிவிட்டதால் தடுமாற்றத்தில் தவறான தகவல்களையே தந்துகொண்டுள்ளனர். இப்படியே செய்துகொண்டிருந்தால், இவர்கள் இருவரின் கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும் என்பதில் சந்தேகமே இல்லை.
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள��� கலந்துகொள்ளும், திருச்சிராப்பள்ளி மாவட்ட மக்கள் சந்திப்பு மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி, நாளை (01.06.2026) தி��்கள்கிழமை, திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் மாலை 4.15 மணி முதல் நடைபெற உள்ளது.
காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க, அனுமதி பெற்றவர்களுக்கான நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5000 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்���ப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.
QR குறியீடு அனுமதிச் சீட்டானது, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான QR குறியீடு அனுமதி���் சீட்டு வழங்கப்படவில்லை. எனவே இவர்கள் யாரும் கண்டிப்பாக வர வேண்டாம்.
காவல்துறையின் வழிகாட்டுதலின்படி, பங்கேற்பாளர்கள் தங்களது வாகனங்களை நிறுத்த���ம் போது, அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாதவாறு நிறுத்த வேண்டும்.
QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளவர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அனுமதிச் சீட்டு இல்லாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி, சமூக வலைத்தள நேரலைகளில் கண்டு, QR குறியீடு அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
என்.ஆனந்த்
(ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர்),
பொதுச் செயலாளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்
கழக நிர்வாகிகளுக்கு வணக்கம்.
சுட்டெரிக்கும் கோடை வெயிலால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, தங்களது அன்றாடத் தேவைகளுக்காக வெளியே வருவ��ருக்கு, நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இது குறித்த விழிப்புணர்வு, மக்களுக்கு அவசியம் தேவை.
இந்த வெக்கையைச் சமாளிக்க, கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, கழக நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில் பொதுமக்களின் தாகத்தைப் போக்கும் வகையில் நீர்மோர்ப் பந்தல்களைத் திறக்க வேண்டும். பழச்சாறு, இளநீர், மோர், குடிநீர், வெள்ளரிக்காய், நுங்கு உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
@TVKVijayHQ | @TVKPartyHQ
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்த��றை அமைச்சர் திரு. என். ஆனந்த் அவர்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்ந்த அரசு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @BussyAnand | @imrajmohan |
மாண்புமிக�� ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. என். ஆனந்த் அவர்கள் நீர்வளத்துறை செயல்பாடுகள் மற்றும் நடைபெற்று வரும் முக்கியப்பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @BussyAnand | @imrajmohan |