தமிழ்நாடு நாள் விழா
01-11- 2026 ஞாயிற்றுக்கிழமை
மாலை 6 மணி - இரவு 9 மணி வரை சென்னையில் 6 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் எழிலார்ந்த முறையில் நடைபெற சிறப்பான ஏற்பாடுகள் தமிழ்நாடு அரசால் செய்யப்பட்டுள்ளன.
@CMOTamilnadu@TVKVijayHQ@imrajmohan#CMJosephVijay#TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
சொதப்பல் மாடல் அரசின் துணை முதல்வராக இருந்து
சொதப்போ சொதப்பு என சொதப்பிய ஒருவர் அறிக்கை விட்டு அழுது வடிந்திருக்கிறார்.
டம்மி திட்டங்களைத் தீட்டி அதை வைத்து ரம்மி ஆடிய சீட்டாட்டக்காரர்களைப் போல மக்கள் பணத்தை சுருட்டியது ஒவ்வொன்றாக அம்பலமாவதைத் திசை திருப்பும் டெக்னிக்தான் தினந்தோறும் வருகிற அழுகை அறிக்கை. மணி தோறும் வரும் மனநிலைத் தடுமாறும் ட்வீட்கள். நிமிடந்தோறும் வரும் நீட்டி முழக்கும் பொய்ப் பிரசார தொனியிலானப் பதிவுகள்.
தங்கள் ஆட்சியில் நடந்த அவலங்களுக்கு எல்லாம் நடவடிக்கையே எடுக்காமல் தூங்கியவர்கள், துரித நடவடிக்கையில் இறங்கும் மக்கள் விரும்பும் அரசைப் பார்த்து மதிகெட்டுப் புலம்புகிறார்கள்.
ஊழலின் ஊற்றுக்கண்ணை அடைக்கத் தொடங்கிய அரசைக் கண்டு, அந்த ஊழலின் ஊற்றுக்கண்ணில் இருந்து ரத்தம் கசிவதன் வெளிப்பாடுதான் இப்படி அர்த்தமற்ற அவதூறு புலம்பல் அறிக்கைகள் என்பதை மக்கள் நன்றாகவே அறிவர். ஊழலுக்குப் பொறுப்பேற்று உரிய விளக்கத்தை அளிக்காத தீயசக்தியின் திட்டமிட்ட அவதூறுகளை மக்கள் ஒவ்வொருநாளும் புறந்தள்ளி வருவது புரியாமலே தொடர்கிறது புழுதி வாரித் தூற்றும் புலம்பல்கள்.
காசு கொடுத்து ஆட்களை அழைத்து வந்ததோடு மட்டுமல்லாமல், Area பெயரைக் குறிப்பிட்டு, அங்கிருந்து வந்தவர்கள் அங்கே நில்லுங்கள், இங்கே நில்லுங்கள், காலியாக இருக்கும் இடங்களை நிரப்புங்கள் என்று கூறுவது ஆட்டுப்பட்டி சம்பவத்தை நினைவூட்டுகிறது.
காசுக்காகக் கூடும் கூட்டத்திற்கும், விசுவாசத்திற்காகக் கூடும் கூட்டத்திற்கும் உள்ள வித்தியாசம்கூடத் தெரியாத அறிவிலிக் கூட்டத்தின் அலப்பறைகள் இவை!
This little girl’s confidence is on another level🔥🔥
Can’t wait for that goosebumps moment when she receives an award from CM Vijay Anna himself❤️🔥❤️🔥
அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பினை ஐந்து ஆண்டுகள் உயர்த்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு
#CMJosephVijay
இளைஞர்களின் நலன் பேணும் தவெக அரசு!
போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று, அரசுப் பணிகளுக்கான நேரடி நியமனங்களில் வயது உச்சவரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி உத்தரவிட்டுள்ளார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள்.
இதன்படி, குரூப் 1, குரூப் 2, 2A மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான வயது உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.
வயது வரம்பு காரணமாக அரசுப் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் வாய்ப்பை இழக்கும் நிலை இனி அடுத்த 5 ஆண்டுகளுக்கு இருக்காது. அரசு வேலை என்ற கனவோடு தயாராகி வரும் இளைஞர்களுக்கு இது ஓர் அண்ணனின் நம்பிக்கையளிக்கும் நடவடிக்கை!
இளைஞர்களின் அரசு வேலைக் கனவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த உத்தரவு, இளைஞர்கள் நலனில் மாண்புமிகு முதலமைச்சர் கொண்டுள்ள அக்கறையின் வெளிப்பாடு.
இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஊழலில் ஈடுபடாமல், அவர்களின் எதிர்காலத்திற்கான வாய்ப்புகளை உருவாக்கி நம்பிக்கையளிக்கும் அரசாக தவெக அரசு மிளிர்கிறது!