நாள் 24.09.2026
மாலை 3 மணி
மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியின்
த. வெ. க வேட்பாளர் திருமதி மரகதம் குமரவேல் அவர்களை ஆதரித்து களப்பணி ஆற்றுவதற்கான செயல் திட்டங்களை முன்னெடுப்பது சம்பந்தமாக விவாதிக்க, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம் மாவட்டச் செயலாளர் பாரத் ராஜேந்திரன் அவர்களின் தலைமையில்
மதுராந்தகம், பாக்கம் பகுதியில் அமைந்துள்ள வள்ளலார் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது...
தேர்தலில் களப்பணி ஆற்றுவது குறித்தும், தவெக அரசின் ஊழலற்ற வெளிப்படையான அரசு நிர்வாகத்தின் சிறப்புகள் பற்றி மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய செயல்பாடுகள் குறித்தும்,
எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து நமது கூட்டணி வேட்பாளரின் வெற்றிக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் துணை நிற்க வேண்டும், அதற்கு நமது இயக்கத் தோழர்கள் தேர்தல் பார்வையாளர் துணைப் பொதுச் செயலாளர் சு. ஜீவன் அவர்கள் தலைமையில் சிறப்பாக செயலாற்ற வேண்டும் என்றும் உரை நிகழ்த்தினேன்.
இந்நிகழ்ச்சியில் கழகப் பொருளாளர் மு. செந்திலதிபன் மாநில நிர்வாகிகள் ஆவடி அந்திரிதாஸ், காரை செல்வராஜ், கவிஞர் மணிவேந்தன் உரையாற்றினார்கள்..
மதுராந்தகம் தொகுதியின் வெற்றி வேட்பாளர் திருமதி மரகதம் குமரவேல் அவர்களும் கலந்து கொண்டு மதிமுகவின் தோழமை உணர்வைப் பாராட்டியும் உரை நிகழ்த்தினார்கள்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் திரு.M. S. பாலாஜி, திரு தையூர் குமரவேல் கலந்து கொண்டார்கள்.
நமது மாவட்டக் கழகச் செயலாளர்கள்
நெமிலிச்சேரி மு. பாபு, சைதை சுப்பிரமணியன், மா. வை மகேந்திரன், ஜி. கருணாகரன், நொச்சிக்குப்பம் இரவிக்குமார், பூ. லோகநாதன், காயல் கோவிந்தராஜ், பெரம்பூர் பாஸ்கர், டில்லி பாபு, துணை மேயர் சூரியகுமார் தங்கள் மாவட்டக்கழக முன்னோடிகளுடன் கலந்து கொண்டார்கள்.
மாநில நிர்வாகிகள் எம். எல் எப் வெங்கடேசன், மகளிர் அணி மல்லிகா தயாளன், பொறியாளர் அணி ஹேமநாதன், மற்றும் மாங்காடு முருகன் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்தார்கள்.
செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக முன்னோடிகள் எம். எஸ் ஏழுமலை, க. புருஷோத்தமன் துரைமுருகன், பொறியாளர் பார்த்திபன், PL சாமிநாதன், C. இளவரசன் தங்கள் மாவட்டக்கழக தோழர்களுடன் பெரும் திரளாக கலந்துகொண்டார்கள்..
மிகக் குறைந்த இடைவெளியில் செயல்வீரர்கள் கூட்ட ஏற்பாடுகளை மாவட்டக் கழகச் செயலாளர் பாரத் இராஜேந்திரன் அவர்கள் விரிவாகச் செய்திருந்தது பாராட்டுக்குறியது
நன்றி
துரை வைகோ MP
மறுமலர்ச்சி திமுக
#DuraiVaiko #mdmk #tvk #ByElection #madurandagam
எதிர்வரும் இடைத்தேர்தலில், மறுமலர்ச்சி திமுகவின் ஆற்றலையும் அர்ப்பணிப்பையும் பறைசாற்றிட மறுமலர்ச்சி சொந்தங்களுக்கு என் அன்பான அழைப்பு!
புதிய, மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் இணைந்து நாம் பணியாற்றப் போகும் முதல் தேர்தல் களம் நம்மை அழைக்கிறது. நமது ஆற்றலையும் அர்ப்பணிப்பையும் பறைசாற்றும் வாய்ப்பு மீண்டும் நமக்காகக் காத்திருக்கிறது!
“வெற்றித் தமிழ்நாடு” என்ற மாபெரும் முழக்கத்தின் கீழ் நம் அனைவரையும் ஒருங்கிணைத்து, முன்னேற்ற அரசியலுக்குத் தலைமையேற்றிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான என் அன்புச் சகோதரர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, லஞ்சம், ஊழல், சுரண்டல் அற்ற முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைத்து நடக்கத் தொடங்கியிருக்கும் இந்த வேளையில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்ற இடைத்தேர்தல்களை நமது கூட்டணி சந்திக்கிறது.
மக்கள் பணியில் இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்கள் எவ்வளவு மகத்தான சாதனையாளரோ, அதே அளவுக்குத் தேர்தல் பணியிலும் சாதனையாளர் என்பதால் நமக்குத் தனிப்பெருமை உண்டு. அதை மீண்டும் நிரூபிக்க, நமது கூட்டணித் தலைமையான தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்கள் களம் காணும் இந்த இடைத்தேர்தலில், நமது மறுமலர்ச்சி திமுகவின் பங்களிப்பு இன்றியமையாதது என்பதை நிரூபித்து நம்மீது கவனம் ஈர்க்கும் பணியைச் செய்வதற்கான உத்தியை வகுப்பதற்கும்; நம்மோடு உறவாடி நம்மை வீழ்த்த நினைத்த தீய சக்திகளுக்கு நாம் எதிர் நின்று பாடம் புகட்டத் திட்டம் வகுத்துச் செயலாற்றுவதற்கும், கலந்துரையாடல் நிகழ்ச்சியாக இந்தச் செயல்வீரர்கள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த செயல்வீர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறேன். உங்களை நேரில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
செயல்வீர்கள் கூட்டம் (1) மதுராந்தகம்:
நாள்: 24.09.2026 வியாழக்கிழமை
நேரம்: மாலை 3:00 மணி
இடம்: வள்ளளார் திருமண மண்டபம், பாக்கம், GST சாலை
செயல்வீர்கள் கூட்டம் (2) தாராபுரம்:
நாள்: 29.09.2026 செவ்வாய் கிழமை
(நேரம் மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப்படும்.)
தவறாது வாருங்கள்! மறுமலர்ச்சி திமுகவின் ஆற்றல்மிகு தேர்தல் பணியை மீண்டும் உலகுக்குக் காட்டிட உறுதியோடு அணிவகுப்போம்.
அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
மறுமலர்ச்சி திமுக
23.09.2026
#DuraiVaiko #mdmk #tvk #ByElection # #Madurandagam
மலேசிய நாட்டின் பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வரும், மலேசிய உரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவருமான பெருமரியாதைக்குரிய பேராசிரியர் இராமசாமி அவர்கள் தங்கள் இணையருடன், இன்று (14.09.2026) எங்களது அண்ணா நகர் இல்லத்திற்கு வருகை தந்து, தலைவர் அவர்களையும் என்னையும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்கள். அவரைப் பட்டாடை அணிவித்து வரவேற்று மகிழ்ந்தேன்.
அப்போது, மலேசிய நாட்டின் அரசியல், பொருளாதாரம் குறித்தும், தமிழ்நாட்டின் அரசியல் மாற்றம் குறித்தும் பல்வேறு கோணங்களில் உரையாடினோம்.
அதன்பிறகு, எங்கள் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய விருந்தில் பங்கேற்று சிறப்பித்தார்கள்.
இந்தச் சந்திப்பிலும் விருந்து உபசரிப்பிலும் மலேசிய உரிமைக் கட்சி துணைத் தலைவரும், மலேசியத் தமிழர் குரல் அறவாரியத் தலைவருமான திரு. டேவிட் மார்ஷல் அவர்களும், பினாங்கு மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மலேசிய உரிமைக் கட்சிப் பொதுச் செயலாளருமான திரு. சதீஷ் முனியாண்டி அவர்களும், மலேசிய உரிமைக் கட்சிப் பொருளாளர் திரு. கிருஷ்ணசாமி அவர்களும், மலேசிய உரிமைக் கட்சியின் அரசியல் ஆலோசகரும் மலேசிய உயர்நீதிமன்ற வழக்குரைஞருமான முனைவர் திரு. சம்ஷேர் சிங் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
அன்புடன்,
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
மறுமலர்ச்சி திமுக
14.09.2026
#DuraiVaiko #Vaiko #mdmk #tvk @proframasamy
பிரபல India Today, ஆங்கில வார ஏடு மற்றும் டிஜிட்டல் சேனலின் தொகுதி மறுவரையறை (Delimitation) தொடர்பான விவாதத்தில் பங்கேற்றேன்.
தமிழ்நாட்டின் உரிமைகள், மாநிலங்களின் பிரதிநிதித்துவம், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறையின் தாக்கம் உள்ளிட்ட முக்கியமான கருத்துகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
#DuraiVaiko #delimitation #mdmk #tvk #cmvijay
சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள்(மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை)திருத்த மசோதா 2026 குறித்து நேற்று(15.08.2026) ஊடகவியலாளர்களுக்கு அளித்த பேட்டி.
#DuraiVaiko#mdmk#tvk#cmvijay#MariaWilson
இன்று (15.08.2026) காலை, மாண்புமிகு தமிழக நிதியமைச்சர் திரு. மரிய வில்சன் அவர்களைச் சந்தித்தேன்.
அப்போது, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026 தொடர்பாக, மாநிலங்களின் அதிகாரங்களையும் நிதி ஆதாரங்களையும் பாதிக்கும் அம்சங்கள் குறித்து மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் விரிவாக எடுத்துரைத்தேன். இம்மசோதா 12.08.2026 அன்று மக்களவையிலும், 13.08.2026 அன்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இம்மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு (Standing Committee) அனுப்பி விரிவாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும், மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் ஒன்றிய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு. கிஷன் ரெட்டி அவர்களை நேரில் சந்தித்து, நான் உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினோம்.
மேலும், மாநிலங்களின் வரி விதிக்கும் அதிகாரத்தைப் பாதுகாக்கும் வகையில், Section 9D-ஐ நீக்கும் திருத்த முன்மொழிவையும் நான் தனிப்பட்ட முறையில் மக்களவை சபாநாயகர் திரு. ஓம் பிர்லா அவர்களிடம் சமர்ப்பித்திருந்தேன். ஆனால், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை ஏற்காமல், எவ்வித விரிவான விவாதமுமின்றி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இம்மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
இம்மசோதாவில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Section 9D, “கனிம வளங்கள் மீதான உரிமை” மற்றும் “கனிமங்கள் தாங்கிய நிலங்கள்” மீது மாநில அரசுகள் வரி விதிப்பதற்கு கட்டுப்பாடுகளை ஏற்படுத்துகிறது. மாநில அரசுகளால் ஏற்கனவே விதிக்கப்பட்டு, இதுவரை வசூலிக்கப்படாமல் நிலுவையில் உள்ள லட்சக்கணக்கான கோடி ரூபாய் வருவாயையும் இனி வசூலிக்க முடியாத நிலையை இந்தத் திருத்தம் ஏற்படுத்துகிறது. இதனால் மாநிலங்களின் முக்கியமான நிதி ஆதாரங்கள் பாதிக்கப்பட்டு, அவற்றின் நிதிசார் தன்னாட்சிக்கு கடுமையான சவால் ஏற்படும்.
மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு 2024-ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில், கனிமங்கள் தாங்கிய நிலங்கள் மீது வரி விதிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு இருப்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்தத் தீர்ப்பின் அடிப்படையில்தான் தமிழக அரசு Tamil Nadu Mineral Bearing Land Tax Act, 2024 மற்றும் Tamil Nadu Mineral Bearing Land Tax Rules, 2025 ஆகியவற்றை இயற்றியது. 04.04.2025 முதல் இவ்வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. 2025–26ஆம் ஆண்டில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை மூலம் கிடைத்த ரூ.4,395.68 கோடி வருவாயில், ரூ.2,265 கோடி Mineral Bearing Land Tax மூலம் கிடைத்துள்ளது. இந்தச் சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தால், தமிழகத்தின் இந்த முக்கியமான வருவாய் ஆதாரம் பாதிக்கப்படும்.
எனவே, இது வெறும் வருவாய் இழப்புப் பிரச்சினை அல்ல; மாநிலங்களின் அதிகாரம், நிதிசார் தன்னாட்சி மற்றும் இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதிக்கும் பிரச்சினையாகும்.
இந்த விவரங்களை மாண்புமிகு நிதியமைச்சர் திரு. மரிய வில்சன் அவர்களிடம் எடுத்துரைத்து, தமிழகத்தின் நிதி உரிமைகளைப் பாதுகாக்க ஒன்றிய அரசிடம் வலுவாக வலியுறுத்த வேண்டும் என்றும், தேவையான சட்டரீதியான முன்னெடுப்புகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன்.
எனது கோரிக்கையை கவனத்துடன் கேட்டறிந்த மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள், தமிழக அரசின் சார்பில் எனக்கு நன்றி தெரிவித்ததுடன், இந்த விவகாரத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அன்பு சகோதரர் திரு ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று உறுதியளித்தார்.
அன்புடன்,
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் – திருச்சி
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (ம.தி.மு.க.)
15.08.2026
#DuraiVaiko #mdmk #tvk #cmvijay #MariaWilson
இன்று (12.08.2026), நான் உட்பட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதாவை (Mines and Minerals (Development and Regulation) Amendment Bill, 2026) Standing Committee-க்கு அனுப்பி விரிவாக ஆய்வு செய்யவும், மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்கவும் வலியுறுத்தினோம். மேலும், Section 9D-ல் மாநிலங்களின் வரி விதிக்கும் அதிகாரத்தைப் பாதுகாக்கும் வகையில் நான் நேற்று தனிப்பட்ட முறையில் திருத்த முன்மொழிவையும் நாடாளுமன்ற மக்களவை அவைத்தலைவர் அவர்களுக்கும் சமர்ப்பித்திருந்தேன்.
ஆனால், எங்களது கோரிக்கைகளை ஏற்காமல், மாநில அரசுகளின் கருத்துகளைக் கேட்டறியாமலும், Standing Committee-ன் ஆய்வுக்கு அனுப்பாமலும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநிலங்களின் நிதிசார் தன்னாட்சியையும் கூட்டாட்சித் தத்துவத்தையும் பாதிக்கும் வகையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் – திருச்சி
மதிமுக
12.08.2026
#DuraiVaiko #mdmk #tvk #cmvijay #federalism
ஒன்றிய அரசு கொண்டுவரவுள்ள வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா – 2026 (FCRA Amendment Bill, 2026)-ஐ திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியிருப்பதை மனதார வரவேற்கிறேன்.
கல்வி, சுகாதாரம், சமூகநலம் உள்ளிட்ட துறைகளில் நாட்டிற்கு பெரும் பங்களிப்பை வழங்கி வரும் சிறுபான்மையினரால் நடத்தப்படும் தொண்டு நிறுவனங்களானது சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மற்றும் சமூக ரீதியாகப் பின்தங்கிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் முக்கியப் பங்காற்றி வருகின்றன. இத்தகைய தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் FCRA திருத்த மசோதா கொண்டுவரப்படுவது கவலைக்குரியது.
இந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்படும்போது, அவற்றின் மூலம் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகநலச் சேவைகளைப் பெற்று வரும் ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மற்றும் சமூக ரீதியாகப் பின்தங்கிய மக்களும் நேரடியாகப் பாதிக்கப்படுவார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக நான் ஏற்கனவே எனது கருத்துகளைப் பதிவு செய்துள்ளேன்.
04.08.2026 அன்று நடைபெற்ற இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், இந்த FCRA திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதனை நாடாளுமன்றத்தில் முறையாக விவாதிக்க வேண்டும் என்று எனது கோரிக்கையை வலியுறுத்தினேன்.
அதேபோல், 08.08.2026 அன்று கலைவாணர் அரங்கத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் அன்புச் சகோதரர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கலந்தாய்வுக் கூட்டத்திலும் இது குறித்து எடுத்துரைத்தேன்.
சிறுபான்மை மக்கள் முதலமைச்சர் மீது வைத்துள்ள நம்பிக்கையைச் சுட்டிக்காட்டி, நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள வெளிநாட்டு நிதியைப் பெறும் தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பாதிக்கும் FCRA திருத்தச் சட்டத்தையும் நாம் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தேன்.
தமிழ்நாட்டிற்கு கேடு விளைவிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசும், தோழமைக் கட்சிகளும் ஒன்றுபட்டு வலுவாக எதிர்ப்போம் என்ற ஒருமித்த கருத்துடன் நடைபெற்ற அந்த ஆலோசனைக் கூட்டத்தில், சிறுபான்மை மக்களின் நலன்களுக்கும் எதிரான எந்த நடவடிக்கையையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளாது என்றும், இதுகுறித்து சட்டமன்றத்தில் தனி தீர்மானம் கொண்டு வரப்படும் என்று அன்றைய கூட்டத்திலேயே முதலமைச்சர் உறுதியளித்தார்.
அந்த உறுதியை செயல்படுத்தும் வகையில், FCRA திருத்த மசோதாவைத் திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியிருப்பது வரவேற்கத்தக்கது.
இதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அன்புச் சகோதரர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் எனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நாடாளுமன்றத்தில் இந்த திருத்த மசோதாவை நிறைவேற்றக்கூடாது என்று எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்நிலையில், கொண்டுவரப்படவுள்ள FCRA திருத்த மசோதாவை கூட்டு நாடாளுமன்றக் குழுவின் (JPC) பரிசீலனைக்கு அனுப்ப ஒன்றிய அரசு முன்வந்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத்தின் இந்த ஒருமித்த தீர்மானம், JPC பரிசீலனையின்போதும் முக்கியத்துவம் பெறும். இதேபோல மற்ற மாநிலங்களிலும் இந்த மசோதாவிற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் போது இந்த மசோதா நிறைவேற்றம் தவிர்க்கப்படும் என்றும் நம்பிக்கை உள்ளது.
சிறுபான்மை மக்களின் உரிமைகளையும், தொண்டு நிறுவனங்களின் சமூகப் பணிகளையும் பாதுகாப்பதற்கான எங்களது குரல் நாடாளுமன்றத்திலும் தொடர்ந்து வலுவாக ஒலிக்கும்.
-
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் - திருச்சி,
மதிமுக,
12.08.2026.
#DuraiVaiko #FCRA #mdmk #tvk #minorities
ஒன்றிய அரசு கொண்டுவரவுள்ள வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா – 2026 (FCRA Amendment Bill, 2026)-ஐ திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியிருப்பதை மனதார வரவேற்கிறேன்.
கல்வி, சுகாதாரம், சமூகநலம் உள்ளிட்ட துறைகளில் நாட்டிற்கு பெரும் பங்களிப்பை வழங்கி வரும் சிறுபான்மையினரால் நடத்தப்படும் தொண்டு நிறுவனங்களானது சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மற்றும் சமூக ரீதியாகப் பின்தங்கிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் முக்கியப் பங்காற்றி வருகின்றன. இத்தகைய தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் FCRA திருத்த மசோதா கொண்டுவரப்படுவது கவலைக்குரியது.
இந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்படும்போது, அவற்றின் மூலம் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகநலச் சேவைகளைப் பெற்று வரும் ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மற்றும் சமூக ரீதியாகப் பின்தங்கிய மக்களும் நேரடியாகப் பாதிக்கப்படுவார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக நான் ஏற்கனவே எனது கருத்துகளைப் பதிவு செய்துள்ளேன்.
04.08.2026 அன்று நடைபெற்ற இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், இந்த FCRA திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதனை நாடாளுமன்றத்தில் முறையாக விவாதிக்க வேண்டும் என்று எனது கோரிக்கையை வலியுறுத்தினேன்.
அதேபோல், 08.08.2026 அன்று கலைவாணர் அரங்கத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் அன்புச் சகோதரர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கலந்தாய்வுக் கூட்டத்திலும் இது குறித்து எடுத்துரைத்தேன்.
சிறுபான்மை மக்கள் முதலமைச்சர் மீது வைத்துள்ள நம்பிக்கையைச் சுட்டிக்காட்டி, நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள வெளிநாட்டு நிதியைப் பெறும் தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பாதிக்கும் FCRA திருத்தச் சட்டத்தையும் நாம் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தேன்.
தமிழ்நாட்டிற்கு கேடு விளைவிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசும், தோழமைக் கட்சிகளும் ஒன்றுபட்டு வலுவாக எதிர்ப்போம் என்ற ஒருமித்த கருத்துடன் நடைபெற்ற அந்த ஆலோசனைக் கூட்டத்தில், சிறுபான்மை மக்களின் நலன்களுக்கும் எதிரான எந்த நடவடிக்கையையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளாது என்றும், இதுகுறித்து சட்டமன்றத்தில் தனி தீர்மானம் கொண்டு வரப்படும் என்று அன்றைய கூட்டத்திலேயே முதலமைச்சர் உறுதியளித்தார்.
அந்த உறுதியை செயல்படுத்தும் வகையில், FCRA திருத்த மசோதாவைத் திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியிருப்பது வரவேற்கத்தக்கது.
இதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அன்புச் சகோதரர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் எனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நாடாளுமன்றத்தில் இந்த திருத்த மசோதாவை நிறைவேற்றக்கூடாது என்று எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்நிலையில், கொண்டுவரப்படவுள்ள FCRA திருத்த மசோதாவை கூட்டு நாடாளுமன்றக் குழுவின் (JPC) பரிசீலனைக்கு அனுப்ப ஒன்றிய அரசு முன்வந்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத்தின் இந்த ஒருமித்த தீர்மானம், JPC பரிசீலனையின்போதும் முக்கியத்துவம் பெறும். இதேபோல மற்ற மாநிலங்களிலும் இந்த மசோதாவிற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் போது இந்த மசோதா நிறைவேற்றம் தவிர்க்கப்படும் என்றும் நம்பிக்கை உள்ளது.
சிறுபான்மை மக்களின் உரிமைகளையும், தொண்டு நிறுவனங்களின் சமூகப் பணிகளையும் பாதுகாப்பதற்கான எங்களது குரல் நாடாளுமன்றத்திலும் தொடர்ந்து வலுவாக ஒலிக்கும்.
-
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் - திருச்சி,
மதிமுக,
12.08.2026.
#DuraiVaiko #FCRA #mdmk #tvk #minorities
இன்று (07.08.2026) மாண்புமிகு ஒன்றிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ராம்மோகன் நாயுடு கிஞ்சராப்பு அவர்களை புதுடெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து, எனது திருச்சிராப்பள்ளி நாடாளுமன்றத் தொகுதி தொடர்பான இரண்டு முக்கிய கோரிக்கை மனுக்களை வழங்கினேன்.
முதலாவதாக, திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலைய ஓடுபாதை (Runway) நீட்டிப்புத் திட்டத்திற்கு உரிய நிதியை ஒதுக்கி விரைந்து முடிக்குமாறு கேட்டுக்கொண்டேன்.
இத்திட்டத்திற்குத் தேவையான நிலங்களில் எஞ்சியுள்ள 7.67 ஏக்கர் நிலம் விரைவில் இந்திய விமான நிலைய ஆணையத்திடம் (AAI) ஒப்படைக்கப்படவுள்ளதையும், மாற்றுச் சாலை அமைக்கும் பணிகள் மற்றும் மின் வழித்தட மாற்றப் பணிகள் முன்னேற்றத்தில் இருப்பதையும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தேன். மேலும், உய்யக்கொண்டான் வாய்க்காலின் இயல்பான நீரோட்டத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில், அதன் மேல் பாலம் (Culvert) அமைத்து ஓடுபாதை நீட்டிப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினேன்.
பெரும்பாலான நிலங்கள் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டுள்ளதாலும், நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளதாலும், திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையத்தின் பயணிகள் போக்குவரத்து தொடர்ந்து உயர்ந்து வருவதாலும், இந்த நீண்டகாலத் திட்டத்தை இனியும் தாமதப்படுத்தாமல் உடனடியாக செயல்படுத்துமாறு கேட்டுக்கொண்டேன். இந்தத் திட்டம் நிறைவேறுவதன் மூலம், திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையம் சர்வதேச விமானப் போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து மற்றும் விமானங்களுக்கான பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் முழுமையான தொழில்நுட்ப மறுசீரமைப்பு (Maintenance, Repair and Overhaul – MRO) மையமாக உருவெடுத்து, மத்திய தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய உந்துசக்தியாக அமையும் என்பதையும் எடுத்துரைத்தேன்.
இரண்டாவதாக, திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையிலிருந்து, கொட்டப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள பட்டத்தம்மாள் தெரு குடியிருப்புப் பகுதி மற்றும் பச்சநாச்சி அம்மன் கோயில் அமைந்துள்ள நிலப்பகுதியை விலக்கி வைக்குமாறு கோரிக்கை மனுவை வழங்கினேன்.
விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்குத் தேவையான நிலங்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமான நிலம் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டு இந்திய விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பட்டத்தம்மாள் தெருவில் உள்ள 214-க்கும் மேற்பட்ட வீடுகளை இடம்பெயரச் செய்ய வேண்டிய நிலை ஏற்படுவதையும், நீண்டகாலமாக வழிபாட்டில் உள்ள பச்சநாச்சி அம்மன் கோயிலை அகற்றுவது பொதுமக்களின் மத உணர்வுகளை பாதிக்கும் என்பதையும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தேன்.
எனவே, விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல், பட்டத்தம்மாள் தெரு மற்றும் பச்சநாச்சி அம்மன் கோயில் அமைந்துள்ள இந்த இரண்டு நிலப்பகுதிகளையும் கையகப்படுத்தும் நடவடிக்கையிலிருந்து விலக்கி வைத்து, பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் மத உணர்வுகளையும் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டேன்.
மேற்கண்ட இரு கோரிக்கைகளையும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் கவனத்துடன் கேட்டறிந்து, உரிய பரிசீலனை செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
அன்புடன்,
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (ம.தி.மு.க.)
07.08.2026 | புதுடெல்லி
#DuraiVaiko #trichy #tvk #mdmk #cmvijay
நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்கல்செய்ய உள்ள, தொகுதி மறுவரையறை திருத்த மசோதா குறித்து தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டம், நேற்று (08.08.2026) மதியம் 3 மணியளவில், கலைவாணர் அரங்கத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அன்புச் சகோதரர் திரு ச. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
தோழமை கட்சி நாடாளுமன்ற உறுபினர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் கலந்துகொண்டேன்.
மிகக்குறிப்பாக, தொகுதி மறுவரையறை திருத்த மசோதாவில் உள்ள பாதகங்களை அலசி ஆராய்ந்தோம். அதை நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் விவாதித்தோம்.
எல்லா மாநிலங்களுக்கும் 50 விழுக்காடு கூடுதல் தொகுதிகள் வழங்கப்படும் என்று ஒன்றிய பாஜக அரசு எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் அளித்தாலும், குறிப்பாக அதனால் தமிழ்நாட்டிற்கும், சிறுபான்மை மக்களுக்கும் ஏற்படவுள்ள பாதகங்களை மிக விரிவாக எடுத்துரைத்து, அதை நாம் எதிர்க்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்திதேன்.
அத்துடன், சிறுபான்மை மக்கள் முதல்வர் மீது வைத்துள்ள நம்பிக்கையை சுட்டிக்காட்டி, நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள, வெளிநாட்டிலிருந்து நிதி பெறும் தொண்டு நிறுவனங்களை முடக்கும் FCRA திருத்தச் சட்டத்தையும் நாம் எதிர்க்க வேண்டிய அவசியத்தை எடுத்துக்கூறினேன்.
தமிழ்நாட்டிற்கு கேடு விளைவிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசும், தோழமை கட்சிகளும் வலுவாய் எதிர்ப்போம் என்று ஒருமித்த குரலோடு, இரண்டு மணிநேரம் தொடர்ந்த இந்த ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நிறைவுபெற்றது.
தமிழ்நாடு மாநில உரிமைக்கும், சிறுபான்மை மக்களுக்கும் எதிரான இந்த தொகுதி மறுவரையறை மசோதாவை தனது தலைமையிலான தமிழ்நாடு அரசு முழுமையாக எதிர்க்கும் என்றும், அதற்கான தீர்மானத்தை எதிர்வரும் நாட்களின் சட்டமன்றத்தில் நிறைவேற்றுவோம் என்றும் முதலமைச்சர் உறுதியளித்தார்.
அன்புடன்,
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
மறுமலர்ச்சி திமுக
09.08.2026
#DuraiVaiko #mdmk #tvk #cmotamilnadu #delimitation
@Madeshjournali1 பத்திரிக்கையாளராக உங்க வேலையை மட்டும் பார்த்தால் நன்றாக இருக்கும். இது போன்ற நக்கல் பதிவுகள் உங்களை பற்றி எழுத எங்களுக்கும் தெரியும் ஆனால் எங்கள் தலைவர் எங்களை அப்படி எழுத வார்ப்பிக்கவில்லை. அதற்காக நீங்கள் எழுதுவதை நாங்கள் வேடிக்கை மட்டும் பார்ப்போம் என்று எண்ண வேண்டாம். @rssubbu_mdmk@SrivilliputhurM@UdhayaLee95@karikalan3031@Venkate04158095
வைகோ அவர்களின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று புத்தகத்தை வெளியிட்ட ராகுல்காந்தி...வீட்டிற்கு சென்று அந்த புத்தகத்தை புரட்டிய போது பேரதிர்ச்சியாம்...
புத்தகத்தின் பெரும்பகுதியில் அவருடைய 4 தலைமுறை குடும்பத்தை பார்லிமென்ட்டில் திட்டியதை புத்தகமா போட்டு நம்ம கையாலேயே வெளியிட வச்சிட்டாங்களே என வேதனைபட்டு கொண்டாராம் ✍️