பேரறிஞர் அண்ணா அவர்களின் 118வது பிறந்தநாள்!
எளிமையின் சிகரமாகவும், தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் அழியாத தடம் பதித்த தலைவராகவும் திகழ்ந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் புகழை போற்றுவோம்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. C. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையில்,
மாண்புமிகு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும்
குடும்ப நலத்துறை அமைச்சர்
Dr. திரு. K.G. அருண்ராஜ் அவர்களது அறிவிப்பில்
கவுண்டம்பாளையம் தொகுதி மக்களின் நலனுக்காக
₹3.39 கோடி மதிப்பில் 7 முக்கிய சுகாதாரத் திட்டங்கள்
அறிவிக்கப்பட்டுள்ளதற்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விளாங்குறிச்சி • வெள்ளக்கிணறு • துடியலூர் • நாயக்கன்பாளையம் •எஸ்.எஸ்.குளம் • தாளியூர் • கவுண்டம்பாளையம்
ஆகிய பகுதிகளில் உள்ள நகர்ப்புற, மேம்படுத்தப்பட்ட மற்றும்
ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தொகுதி மக்களின் நலனுக்காக இத்தகைய முக்கியமான
சுகாதாரத் திட்டங்களை வழங்கிய
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும்,
மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களுக்கும்
எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களின் நலனே முதன்மை!
மக்கள் பணியே என்றும் முன்னிலை!
என்றும் மக்கள் பணியில்
திருமதி. RD. கனிமொழி சந்தோஷ்
கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர்.
எல்லோரும் பொதுவாய் Sundayக்காக காத்திருப்பாங்க.. எங்க தலைமுறையில் முதல் முறையாக ஒரு Mondayக்காக ஆவலோடு காத்திருக்கிறோம்.. #cmvijay@CMOTamilnadu@TVKVijayHQ
கடுங்குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது துரிதமாக வழக்குப் பதிந்து அதனை விரைவாக விசாரணை செய்தும், வழக்கினை நடத்தியும், கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு.
#CMJosephVijay
பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில், விடாமுயற்சியால் வெற்றிக் கனியைச் சுவைத்த என் அன்புத் தம்பி, தங்கைகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
இந்த வெற்றி, உங்கள் கடின உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரம். உயர்கல்வி எனும் அடுத்த கட்டத்தை நோக்கி, நம்பிக்கையுடன் அடி எடுத்து வையுங்கள். அதே நேரத்தில், வெற்றி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம். மீண்டும் முயற்சி செய்யுங்கள். வெற்றியின் அருகில்தான் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் அனைவரின் எதிர்காலமும் பிரகாசிக்கட்டும்!
நல்லதே நடக்கும்!
வெற்றி நிச்சயம்!
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கட்சி ஆரம்பித்ததில் இருந்தே நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் பேசியவர்களுமே அதிகம். அரசியலில் இது இயல்பே என்றுதான் நாமும் அதைக் கடந்து வந்தோம். எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி, தேர்தல் களத்திலும் தில்லாக நின்றோம்.
நடுநிலை என்ற பெயரிலும் விமர்சனம் என்ற பெயரிலும் முகமூடி அணிந்த அவமானங்களும் அவதூறுகளுமே நமக்குப் பரிசளிக்கப்பட்டன. ஆனால், நாம் யாருக்கு நன்றிக் கடன் செலுத்த அரசியலுக்கு வந்தோமோ அவர்கள்… நம் சொந்தங்களாகிய நம் தமிழ்நாட்டு மக்கள் நம்மை எப்போதும் தாயன்போடு தாங்கியே பிடித்து வந்தனர் - வருகின்றனர்.
அந்தத் தாயன்போடுதான் இந்தத் தேர்தலிலும் நமக்கு அளப்பரிய அன்புடன் அமோகமான வாக்குகளை அள்ளித் தந்துள்ளனர். இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் இந்தத் தேர்தல் ஓர் அதிசயத் தேர்தல் என்றோம். அது பல்வேறு வகைகளிலும் நிரூபணமானது.
ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அடரன்பால் வழிநடத்திய குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்கின்றனர்.
ஒரு மாபெரும் மாற்றத்துக்கான இந்தத் தேர்தல் அரசியல் போரில் வென்றது நம் தமிழக வெற்றிக் கழகம் மட்டுமன்று. தமிழக மக்களின் மனங்களில் ஆசை ஆசையாக வளர்த்தெடுக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான ஜனநாயகமும்தான். அதனால்தான் தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம், மாற்றத்திற்கான மாபெரும் முதன்மைச் சக்தியான அரசியல் இயக்கம் என்பது, இதன் மூலம் ஆழமாகவும் அழுத்தமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நியாயமான, நேர்மையான பார்வை கொண்ட அனைவரும் இதை அப்படியே ஏற்பர் என்பதே அடர் உண்மை.
எக்காலத்திலும் நிகழவே நிகழாது என்றிருந்த மாற்றத்திற்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக் காட்டிய தமிழ்நாட்டு மக்களாகிய என் சொந்தங்களுக்கு என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்.
நம் சொந்தங்களுக்கு நன்றி செலுத்தும் அதே வேளையில், நம் கழகத் தோழர்கள், அனைத்து நிலை நிர்வாகிகள், Virtual Warriors என உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வேளையில், நமக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்க மறந்தாலும், எதிர்வரும் காலங்களில் நம்மை அதிகமாக நேசிக்கப் போகும் நம் சொந்தங்களுக்கும் என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜனநாயகத்தின் கடமையை உணர்ந்து, கவுண்டம்பாளையம் தொகுதியில் வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்!
மக்களாட்சியின் உயிர்நாடியே வாக்களிப்பதுதான். தங்கள் வாக்கைச் சரியாகப் பதிவு செய்து, நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் பங்காற்றிய ஒவ்வொரு குடிமகனும் பாராட்டுக்குரியவர்கள். உங்கள் ஒவ்வொரு வாக்குக்கும் பெரும் மதிப்பு உண்டு!
உலகெங்கும் வாழும் தமிழக மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற, வெவ்வேறு நாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழகத்தின் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய பெருநகரங்களிலிருந்து மக்கள் அவரவர் சொந்த ஊருக்குச் சென்று வாக்களிக்க, போதிய பேருந்துகள் இல்லாமல் பேருந்து நிலையங்களில் தவித்து வருகிறார்கள்.
மக்கள் அதிகமாகப் பயணம் செய்யும் ஒரு நாளுக்கு போதிய பஸ் ஏற்பாடுகள் செய்யாதது கவலையளிக்கிறது. போக்குவரத்து செயலாளர் அவர்கள் அரசியல் தலையீடுகள் இல்லாமல் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கையில் இறங்கி, மக்கள் அனைவரும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வழிவகுக்க வேண்டும். மக்களுக்குத் தேவையான பேருந்து சேவைகளை விரைந்து வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
அனைவருக்கும் வணக்கம்.
மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், வெற்றித் தலைவர் அவர்கள், நாளை (10.04.2026, வெள்ளிக்கிழமை) சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில், காரைக்குடி டவுன், கண்ணதாசன் மணிமண்டபம் அருகே, நண்பகல் 12.00 மணி முதல் 2.30 மணி வரை தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்தப் பிரசார நிகழ்ச்சிக்காக, தேவையான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பிரசாரத்தில் கலந்துகொள்ள வரும் கழகத் தலைவர் அவர்களின் பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களிலும் யாரும், கண்டிப்பாகப் பின்தொடரக் கூடாது. இதை உறுதியாகக் கடைபிடிக்க வேண்டும்.
அத்தோடு தேர்தல் ஆணைய விதிகளை பின்பற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், இந்தத் தேர்தல் பிரசார நிகழ்வுகளில், கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
என்.ஆனந்த்,
பொதுச் செயலாளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்
சென்னை, பாரிமுனைப் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது, ஆளும் கட்சியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் அராஜகத் தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது.
இந்தத் தாக்குதலில், நான்கு மாதக் கர்ப்பிணி உள்பட நிர்வாகிகள் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர், அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நான்கு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயம் அடைந்த கழகத் தோழர்கள் ஆறு பேரும் விரைவில் குணமடைய விழைகிறேன்.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்களிடையே பெருகி வரும் செல்வாக்கைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆளும் கட்சியினர், மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுள்ள நம் கழகத் தோழர்கள் மீது இவ்வாறான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயலாகும். திமுகவின் தோல்வி பயத்தையே இது காட்டுகிறது. இந்த அராஜகத் தாக்குதலில் ஈடுபட்ட ஆளும் கட்சிக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டப் போவது நிச்சயம்!
BIG BREAKING 🚨🚨🚨
தமிழகவெற்றிக்கழகம் (TVK) தேர்தல் அறிக்கை இணையதளம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றி கழகம் தனது தேர்தல் அறிக்கைக்கான பொதுமக்களின் பரிந்துரைகளை சேகரிக்க தனிப்பட்ட இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
🔗 https://t.co/sfU8fHupD8
மக்கள் அந்த இணையதளத்தைப் பார்வையிட்டு தங்களுடைய கருத்துகளை நேரடியாக பகிரலாம். #TVKVijay