பிள்ளைகளை கூத்தாடி விஜய் பாடலுக்கு ஆட வைப்பது, ஓட்டு கேட்ட வைப்பது இல்லை மாற்றம்..
......த்தா இதுதான்டா உண்மையான மாற்றம் 💪💪💪💪💪
ஆதங்க படாதீங்க தமிழ்நாட்டு மக்களே. மீண்டும் வருவோம் புத்துணர்ச்சி யோடு,
#DMK_டா 🔥🔥🔥🔥
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து கள ஆய்வுக்குழுவில் , எனக்கு இடமளித்து , நம்பிக்கை வைத்த மாண்புமிகு கழக தலைவர் அவர்களுக்கும், இளம் தலைவர் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர்
அவர்களுக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள்.
@arivalayam@mkstalin@Office_of_Udhay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
மூன்றாவதாக தள்ளப்பட்டது தமிழ்த்தாய் வாழ்த்து ! முந்திக்கொண்ட வந்தே மாதரம், தேசிய கீதம் !
மத்திய அரசு ஏற்கெனவே உத்தரவிட்டிருந்த நிலையில் வந்தே மாதரம் பாடப்பட்டது… கொடுமை !
Will Mr. Rahul Gandhi enter into any sweet stall today and buy sweets for Mr. Vijay?
Sources: No it’s not possible. Mr. Rahul Gandhi is bringing “Special Halwa” from Delhi itself. He is personally carrying it in his black shoulder bag.
Wow! What a Masterstroke!
தமிழக அரசியலில் நடிகர் விஜய் நிகழ்த்திய அந்தப் பிரம்மாண்ட தேர்தல் வெற்றிக்கு பின்னால், வெறும் மக்கள் செல்வாக்கு மட்டுமல்ல, ஒரு மிகப்பெரிய டிஜிட்டல் மாயாஜாலமும் ஒளிந்திருப்பதாகத் தேசிய ஊடகங்கள் தற்போது அதிரடிப் புகார்களைக் கிளப்பியுள்ளன. ‘ரூட் மாஃபியா’ (Root Mafia) என்று அழைக்கப்படும் இந்த அதிநவீன டிஜிட்டல் மோசடி குறித்து, முன்னணித் தேசிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள ஆதாரங்கள் தமிழகத்தையே அதிர வைத்துள்ளன.
மக்களின் உணர்ச்சிகளைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றி, ஒரு செயற்கையான அலையை உருவாக்கி, அதன் மூலம் வாக்குகளைக் கவர்ந்ததாக இந்த ஆய்வறிக்கைகள் குற்றம் சாட்டுகின்றன. இது வெறும் தேர்தல் பிரச்சாரம் அல்ல, ஒரு திட்டமிடப்பட்ட ‘டிஜிட்டல் மூளைச்சலவை’ என்று ஊடகவியலாளர்கள் இதனை வர்ணிக்கின்றனர்.
தேசிய ஊடகங்களின் இந்த ஆய்வில், தமிழக வெற்றி கழகம் பயன்படுத்திய ‘சென்டிமென்ட் டிராக்கிங்’ (Sentiment Tracking) தொழில்நுட்பம் குறித்த மர்மங்கள் விலகியுள்ளன. சுமார் 34,000 வாட்ஸ்அப் குழுக்கள் மற்றும் நாள் ஒன்றுக்கு 150-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் மூலமாக, ஒவ்வொரு வாக்காளரின் செல்போன் திரையையும் தங்களது பிம்பத்தால் தவெக தரப்பு ஆக்கிரமித்துள்ளது.
ஒரு சாமானிய மனிதர் தனது போனில் எதைத் தேடுகிறார், எதைக் கண்டு வருத்தப்படுகிறார் என்பதை நுணுக்கமாகக் கண்காணித்து, அதற்கு ஏற்றாற்போல போலித் தகவல்களையும், மிகைப்படுத்தப்பட்ட வாக்குறுதிகளையும் அவர்கள் போனுக்கே நேரடியாகத் தள்ளும் ‘இன்பர்மேஷன் பாம்பர்ட்மென்ட்’ (Information Bombardment) உத்தியை இவர்கள் கையாண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது ஜனநாயக ரீதியிலான வெற்றி என்பதை விட, ஒரு தொழில்நுட்ப ரீதியிலான ஏமாற்று வேலை என்ற விமர்சனங்கள் தற்போது வலுவாக எழுந்துள்ளன.
இந்த ‘ரூட் மாஃபியா’ வியூகத்திற்காகப் பல கோடி ரூபாய் செலவிடப்பட்டதாகவும், இதற்காக வெளிநாட்டுத் தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவி பெறப்பட்டதாகவும் தேசிய ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. “மக்களின் உண்மையான தேவைகளை விட, அவர்களது மனநிலையை மென்பொருட்கள் மூலம் சிதைத்து வாக்குகளாக மாற்றுவது ஒரு ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து” என்று அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.
குறிப்பாக, நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி, அவர்கள் பார்க்கும் வீடியோக்கள் மூலமாகவே ஒரு மாய உலகத்தை உருவாக்கியது எப்படி என்பது குறித்த விரிவான ஆதாரங்களை இந்த ஊடகங்கள் பொதுவெளியில் வைத்துள்ளன. இது விஜய் பேசும் ‘தூய அரசியல்’ என்ற பிம்பத்திற்கு ஒரு மிகப்பெரிய கறையாகப் பார்க்கப்படுகிறது.
தற்போது தமிழகத்தில் ஆட்சியமைப்பதில் நிலவி வரும் இழுபறிக்கு, இதுபோன்ற டிஜிட்டல் மோசடிப் புகார்களும் ஒரு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. ஆளுநர் மாளிகை இந்த விவகாரத்தை மிகத் தீவிரமாகக் கவனித்து வருவதாகவும், மக்கள் தீர்ப்பு என்பது தொழில்நுட்பத்தால் விலைக்கு வாங்கப்பட்டதா என்ற கோணத்தில் ஆலோசனைகள் நடப்பதாகவும் தகவல்கள் கசிகின்றன.
ஒருபுறம் 108 இடங்களைப் பிடித்த உற்சாகத்தில் தவெக இருந்தாலும், மறுபுறம் தேசிய அளவில் கிளம்பியுள்ள இந்த ‘ரூட் மாஃபியா’ சர்ச்சை, அந்த வெற்றிக்கான தார்மீகத் தகுதியையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இந்த டிஜிட்டல் மோசடி விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றால், அது விஜய்யின் அரசியல் எதிர்காலத்திற்கு ஒரு மிகப்பெரிய இடியாக அமையும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த தோல்வியை அவ்வளவு எளிதில் கடந்து போக முடியவில்லை.இன்னும் மனம் கனத்து இருக்கு . தி மு கழகத்திற்கு
தோல்வி புதிதல்ல; ஆனால் இப்போது , இந்த முறை நாடே தோற்றது போல ஒரு வலி. மாண்புமிகு தலைவர் @mkstalin
அவர்களின் தோல்வி மிகுந்த வேதனை. ஏற்றுக் கொள்ளவே முடியல . இந்த வலி ஆறாது.
#Delimitation: தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் #தீ_பரவட்டும்!
பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்!
🔥 அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது!
🔥 இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன்.
🔥இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும்.
🔥 "தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!"
#SayNoToNDA
இன்று, கே.வி. குப்பம் தொகுதியில் காலைப் பரப்புரையின்போது, கலைஞர் கனவு இல்லம் திட்டப் பயனாளி ஒருவரின் வீட்டுக்கு, அவரது அன்பான அழைப்பை ஏற்றுச் சென்றேன்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திலும் அந்தச் சகோதரி மாதம் ஆயிரம் ரூபாய் பெற்று வருகிறார். அவரது குழந்தைகளும் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தில் பயனடைவதாகச் சொல்லி மகிழ்ந்தார்.
“அடுத்து, இல்லத்தரசி 8,000 ரூபாய் கூப்பனில் என்ன வாங்கப் போகிறீர்கள்?” என அவரிடம் கேட்டேன்.
2026 தேர்தல் Voting-க்கு முன்பாகவே,
இல்லத்தரசி 8,000 ரூபாய் கூப்பனில் வீட்டுக்கு என்ன பொருள் வாங்கலாம்? எந்தக் கடையில் வாங்கலாம்? என்ற Voting தொடங்கியாச்சு.
தமிழ்நாடு முழுக்க குடும்பங்களில் இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது.
வீட்டுக்குத் தேவையான எந்தப் பொருளையும் நீங்க வாங்கிக்கலாம். ஆனா, அது முழுக்க முழுக்க என் சகோதரிகளின் 'choice'-ஆகத்தான் இருக்கணும். அவர்கள்தான் 'இல்லத்து அரசிகள்', 'குடும்பத்தலைவிகள்'!
2026 Voting-இல் "தமிழ்நாடு அணியா - டெல்லி அணியா?"என்று நான் கேட்கும்போது தமிழ்நாடு அணி என அனைவரும் சொல்வதைப் போல, இல்லத்தரசி டிஸ்கஷனில் வீட்டில் அனைவரும் 'பெண்கள்தான்' எனச் சொல்லணும், பெண்கள்தான் எப்பவுமே வெல்லணும்!
#VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக
பச்சை பொய் பழனிசாமி அவர்களே, நாவை அடக்கிப் பேசுங்கள்!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநிலத்தின் முதலமைச்சரைப் பற்றிப் பேச, பழனிசாமி உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? நேற்று தரம் தாழ்ந்த வார்த்தைகளைப் பேசிவிட்டு, இன்று கண்டனங்கள் எழுந்தவுடன், நீங்கள் ஒரு 'பச்சை பொய்யர்' என்பதை நிரூபிக்கும் வகையில் மாற்றிப் பேசுகிறீர்கள்.
நீங்கள் எப்படி முதலமைச்சர் ஆனீர்கள் என்பது ஊர் அறிந்த ரகசியம். மக்கள் ஆதரவால் அல்ல, சசிகலாவின் காலில் விழுந்து, மேசைக்கு அடியில் ஊர்ந்து சென்று பெற்ற 'தவழ்ந்து வந்த' பதவி அது.
உங்கள் ஆட்சிக்காலம் முழுவதும் ஊழலில் திளைத்துவிட்டு, இன்று தன் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள டெல்லிக்கு அடிமையாகி, மோடியிடம் மண்டியிட்டுக் கிடக்கும் உங்களுக்கு, மக்கள் முதலமைச்சரைப் பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை.
இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் உங்களுக்கு மரண அடியைக் கொடுக்கத் தயாராகிவிட்டார்கள். உங்கள் படுதோல்வி இப்போதே உறுதியாகிவிட்டது. எங்கள் தலைவரைப் பற்றி அவதூறு பேசியதற்கு, வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் உங்களுக்குத் தகுந்த பாடம் புகட்டுவது உறுதி!
#SayNoToNDA
தலைவர் கலைஞர் ஒரு சிங்கம்!
தோல்வி பயத்தில், நாக்கில் நரம்பில்லாமல் பேசும் பழனிசாமி இனி எந்நாளும் ஆட்சிக்கு வரமுடியாது!
தலைவர் கலைஞர் ஒரு சிங்கம்! அந்தச் சிங்கத்தின் பிள்ளை நான். தந்தையாக மட்டுமல்ல, தலைவராக அவரை எந்நாளும் போற்றி வணங்குபவன்!
பண்பற்ற பழனிசாமி அவர்களே,
தலைவர் கலைஞரும் நானும் மக்களைச் சந்தித்து முதலமைச்சரானவர்கள். உங்களைப் போல, கூவத்தூர் கும்மாளங்களால், கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சர் பொறுப்பை ஏலத்துக்கு எடுத்தவர்கள் அல்ல!
எங்களைப் பற்றிப் பேசும் தகுதி உங்களுக்கு இல்லை! தமிழ்நாட்டுக்கு மக்கள் என்றுமே அந்தத் தகுதியை உங்களுக்கு வழங்க மாட்டார்கள்!
மே 4: மக்களின் Judgement Day-வில் உங்களுக்கான தண்டனை கிடைக்கும்!