கலை உலகின்
விலை மதிப்பற்ற
தலைமகன்
பாரதி ராஜா எனும்
இமையம் ஓய்ந்தது
இனி
"என் இனிய
தமிழ் மக்களே"
எனும் அந்த கம்பீரக் குரல் கேட்காது,
அந்த
மண் வாசனைத் தமிழனுக்கு
சிவப்பு ரோஜாக்களால்
முதல் மரியாதையுடன்
அஞ்சலி
செழுத்துவோம்...
அச.உமர் பாரூக்
திருப்பரம் குன்றம்
விவகாரத்தில் புதிய அரசு
நீதிமன்றத்தின் பக்கம் நிற்காமல் நீதியின் பக்கம் நிற்கவேண்டும்,
நீதிமன்றங்கள் தடுமாறலாம்
நீதி தடுமாறக்கூடாது,
நில அளவை தூணை
தீபத்தூண் என நிறுவ முயலும் பாசிச திரிபுவாதங்களுக்கு யாரும்
பலியாகக்கூடாது,
துளிர்விடும்
துர்ச் செயல்கள்...
திருவள்ளுவருக்கு
தீட்டப்படும் காவிச் சாயம்,
தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட அனுமதி கேட்க
பலகோடி செலவு செய்து
பயணித்து கெஞ்சும் நிலை,
பாலியல் குற்றங்கள்
குறையாத போக்கு,
கொ...ல பாதகச் செயல்கள்
அதிகரிக்கும் அவலம்,
மதுக்கடைகளில்
பத்து இருபதானது,
C.M.விஜய் அவர்களே
இந்த காங்கிரஸ் காரர்களிடம் கொஞ்சம் கவனமா இருங்க,
திராவிட உணர்வையும்
மாநில உரிமையையும்
காற்றில் பறக்க விட்டுருவாங்க...
எச்சரிக்கை !
-அச.உமர் பாரூக்
ஒரு மனிதனுக்கு
உயர்விலும் உயர்வானவர் தாய்
அந்த தாய்தான்
மூலவரும்,
முன்னவருமாய் திகழ்கிறார்
அந்த தாயை ஒப்பிட்டுச் சொல்லும் முதன்மையான சொல்
தாய் மொழி,
தாய் நாடு என்பவையாகும்
தாயும்,
தாய் மொழியும்,
தாய் நாடும் நம்
உணர்வுடன் கலந்தவைகள்
எனவே தாய் மொழி தினமான இந்நாளை கொண்டாடுவோம்
உங்கள் பார்வை எதுவாகவும் இருக்கலாம்,
எனது பார்வை இதுதான்.
பாசிச பாஜக வுக்கு
பலம் சேர்க்காத எந்த ஒரு நகர்வும்
தமிழ்நாட்டின் நலனுக்கு நல்லதே,
தேமுதிகவின் அணிமாற்றம் வரவேற்கத்தக்கதே என்பேன்,
மற்றதெல்லாம் பிறகு பேசுவோம்,
முதலில் கொள்கை எதிரியை வீழ்த்துவோம்,
பிறகுதான்
அரசியல் எதிரி
இதைச் சொல்ல தகுதியற்றவர் வாசன்
அய்யா மூப்பனார் அவர்கள் தம் வாழ்நாள் முழுவதும் மதவாத பாஜகவுடன் சமரசமே செய்துகொள்ளாதவர்
நீங்கள் அப்படியா ? பாஜகவின் புரோக்கராகவே மாறிவிட்டீரே அடுத்தவர்களை குறைகாணும் முன் கொஞ்சம் கண்ணாடியை பாரும்,அச.உமர் பாரூக்
தீ பரவட்டும்...
முகம்மது தீபக்
களத்தில்...
மம்தா பானர்ஜி
நீதிமன்றத்தில்...
ராகுல் காந்தியும்,
கமல் ஹாசனும்
பெண் உறுப்பனர்களும்
நாடாளு மன்றத்தில்...
வெச்சு செய்கிறார்கள் சங்கிகளை,
ஓடவும் முடியாமல்
ஒழியவும் முடியாமல் 56 இஞ்ச்
வழக்கம் போலவே
உயிர்ப்பிச்சை கேட்பது புதிதல்ல பழசு..
விஜய் பாஜக குறித்து பேசாமல் இருப்பதை 4 கோடி நைனார் நற்சான்றாக கருதுகிறார்
இனியும் பேசவில்லையெனில் மக்களுக்கும் சந்தேகம் வரலாம்
பாஜக கொள்கை எதிரியெனில் பேசுங்கள் விஜய்...
-அச.உமர் பாரூக்
தமிழ்நாடு எப்பவும்
குப்பைகளை குப்பைக்
கூடையிலேயே போடும் என்பதற்கான சான்றுகள்தான்
H. ராஜாவின் கந்தர் மலை,மோகன்g இன் திரௌபதி 2
எதைக்கொண்டாட வேண்டுமோ அதைத் தமிழன் கொண்டாடுவான்
உதாரணம் சிறை,அயோத்தி,
இங்கே வரலாறுகளுக்கு இடமுண்டு வரலாற்றுத் திரிபுகளுக்கு இடமே இல்லை,
"தை" மகளின்
வரவும்,பிறப்பும்
தமிழருக்கு சிறப்பு
"தை" பிறந்தால்
வழி பிறக்குமென்பர்
"தை" பிறந்தது
வழிகளும் திறந்தது
தை தை என தமிழ்மகளின்
தாண்டவம் 26 ன்
வெற்றிப் பூரிப்பாக
இருக்கத்தான் போகிறது,
அது
ஓடிய கால்களுக்கு
ஓய்வுக்காக அல்ல,
ஒய்யாரமாய் சாய்வதற்காகவும் அல்ல,