அங்கங்களின் உஷ்ணத்தில் மட்டுமே
அலரும் மலர்களை அள்ளிட வா
வாசம் நிறைந்து வழ���ந்தோடும்
நீர் பூக்களை அறுந்திட வா
உதிர்ந்து நனையவே
கிடந்தேன்....
உயிரை
இணைந்து நிறையவே வா...
யா....
#nimishangal
வான் இடறி பூக்களத்தில்
விழுந்த மின்னல்கள்!!
தாம் உன் எண்ணங்கள்!!
இப்படி தீண்டி
ஏங்க வைத்தால்
நொடிக்கொரு முறை
தானே பூக்க வைத்தால்
தாங்கிடுமா!
பெண் உள்ளம்!!!
காலம் படைத்தால்
அவன் கவி
காலத்தைப் படைத்தால்
மகாகவி
நீ மகாகவி
பாரதிக்கு முன்
பாரதிக்குப் பின் என்ற
காலத்தைப் படைத்தாய்
திருவல்லிக்கேணி மயானத்தில்
உன் எலும்ப���ம் தசையும் எரிந்தன
உன் தமிழை எரிப்பதற்கு
எந்த நெருப்புக்கும்
சூடு 'பத்தாது'
நீ
நெருப்பைச் சுமந்த
கருப்பையில் ஜனித்தவன்
நினைவுகளை
ஊற்றி
தனிமையை
எரித்துக்கொண்டிருக்கிறேன்....
அது வேகுமோ!
அல்லது வெளிச்சமோ!
இல்லை இதமோ!
எதுவானாலும் பொருட்டல்ல..
நிதர்சனம் ஒன்றுதான்
நான் எரிக்காவிடில்...
என்னை கொளுத்தி விடும்!!