தான் என்ற அகந்தையாலும், தனது தான்தோன்றித்தனத்தாலும் தமிழ்நாட்டின் காவிரி உரிமையை அடகு வைக்கப் பார்த்த #Subject!
தமிழ்நாட்டை அவமானப்படுத்திய Subjet-டை அவையிலே Left Right வாங்கிய உறுப்பினர்! Must Watch!
"கர்நாடகாவில் எனக்கு ஏற்படும் அவமானத்தை ஏற்றுக்கொள்ளத் தயார்" என்று விஜய் கூறுவது அவரது தனிப்பட்ட அவமானம் அல்ல; கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்களின் சுயமரியாதையையும், மாநில உரிமையையும் ஒட்டுமொத்தமாகச் காலில் போட்டு மிதிப்பதற்குச் சமம்!
ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்து கொண்டு, தன்மானத்தை விடுத்துத் தான்தோன்றித்தனமாகச் செயல்படுவதும், கர்நாடக அரசிடம் போய் உரிமையைக் கெஞ்சுவதும் நம் காவிரி உரிமையைக், கர்நாடகக் காலடியில் தாரைவார்ப்பதாகும்!
சட்டத்துறையின் வழியாகவும், உச்ச நீதிமன்ற உத்தரவுகள் வழியாகவும் போராடத் திராணியில்லாமல், தன் அனுபவமின்மையால் தமிழ்நாட்டின் முதுகெலும்பையே ஒடிக்கும் வகையில் தவெக விஜய் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் 8 கோடி தமிழ் மக்களைத் தலைகுனியச் செய்யும் செயல்!
பள்ளியில் இடம் பிடிப்பதில் தொடங்கி மறைவுக்கு பின்பு பேரறிஞர் அண்ணா அருகில் இடம் பெற்றது வரை அனைத்தையுமே போராடிப்பெற்ற போர்க்குணம் நிறைந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாள் இன்று.
நவீன தமிழ்நாட்டை - தனித்துவமிக்க மாநிலமாக உருவாக்கித் தந்த கலைஞரின் நினைவு நாளில்,
கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் நடைபெற்ற நினைவு நாள் அமைதிப் பேரணியில் கழக முன்னணி நிர்வாகிகளுடன் கலந்து கொண்டோம்.
நம் உணர்வோடும் உயிரோடும் கலந்திருக்கும் கலைஞர் அவங்களின் புகழ் ஓங்கட்டும்!
#KalaignarForever
‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே..’ என்ற காந்தக் குரலால், நம்மை நிறைத்த முத்தமிழறிஞர் கலைஞர் வழிநின்று, அவதூறுகளையும் அடக்குமுறைகளையும் துணிந்து எதிர்ப்போம், எளிய மக்களின் உயர்வுக்கு உடன் நிற்போம், ஆதிக்கத்தை உறுதியுடன் எதிர்த்து, கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டின் உரிமைகளை வென்றெடுப்போம்!
#KalaignarForever
மக்களுக்கான திட்டங்கள் - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு என முக்கிய அம்சங்கள் ஏதுமின்றி, திருத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது #SofaModel அரசு.
மாற்றம் மாற்றம் என்று ஆட்சிக்கு வந்தவர்கள் கழகத்தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்குப் பெயர் மாற்றம் செய்வதையே முழுநேர வேலையாக செய்கிறார்கள் என்பதற்கு இந்த பட்ஜெட்டும் ஒரு சாட்சி.
100 நாள் ஆட்சி எப்படி பூஜ்ஜியமாக இருக்கிறதோ அதைப்போல இந்த திருத்திய பட்ஜெட்டும் மாபெரும் பூஜ்ஜிமயாகவே உள்ளது.
#Budget
இன்று சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்ட #TNBudget2026 பற்றி Reels CM-க்குப் புரியும் மொழியில் சொல்ல வேண்டுமென்றால்,
'Blast Blast'-ஆக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு, ‘Waste Waste' எனச் சொல்லும்படிதான் இருக்கு!
அதுமட்டுமல்ல, இது #DravidianModel-அரசின் திட்டங்களின் Remake Version budget!
மக்கள் மொழியில் சொல்ல வேண்டுமென்றால்,
விவசாயிகள் பிரச்சினை, மின் கட்டணக் குளறுபடி பிரச்சினை, விலைவாசி உயர்வுப் பிரச்சினை என எதைப் பற்றியும் கவலையின்றி, மாநிலத்திற்குத் தேவையான புதிய தொலைநோக்குத் திட்டங்களையும் அறிவிக்காத பட்ஜெட்!
அதுமட்டுமல்ல,
- ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை,
- வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ. 4 ஆயிரம்,
- ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்,
- முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி, என முக்கிய வாக்குறுதிகள் எதைப் பற்றியும் மூச்சே விடாத பட்ஜெட்!
மொத்தத்தில்,
சொந்தமாகவும் யோசிக்காத -
சொன்னதையும் செய்யாத -
சுரத்தில்லாத - புஸ்வாண பட்ஜெட்டாகத்தான் ‘ரீல் அரசின்’ முதல் பட்ஜெட் அமைந்திருக்கிறது.
திருச்சி விமான நிலையத்தில் கழக இளைஞர் அணிச் செயலாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான @Udhaystalin பேட்டி
"தஞ்சாவூரில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில், விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டத்தை, நேற்று நடத்திக் காட்டினோம். அதில் நானும் கலந்துகொண்டேன். என்னோடு சேர்ந்து, நம்முடைய கூட்டணிக் கட்சித் தலைவர்கள், விவசாய சங்க நிர்வாகிகள், விவசாயிகள், பொதுமக்கள், நிறைய பேர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். நானும் கிட்டத்தட்ட ஒரு 25 நிமிடங்கள் அதில் பேசினேன்.
பொய் வாக்குறுதிகள்
முழுக்க முழுக்க இந்த ஆட்சி அமைந்த பிறகு, விவசாயிகளுக்கு என்னென்ன விதமான துரோகங்களைச் செய்திருக்கிறார்கள். தேர்தல் வாக்குறுதி என்று பொய் வாக்குறுதிகளைச் சொல்லி, இந்த அரசு விவசாயிகளை எப்படி ஏமாற்றி இருக்கிறது. மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு மிகத் தீவிரமாக முயற்சி செய்துகொண்டு இருக்கிறது, அங்கே இருக்கக்கூடிய முதலமைச்சர், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, மேகதாது அணை கட்டுவோம் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்கிறார், என்பது பற்றி விவரித்துப் பேசி கண்டனங்களைத் தெரிவித்தோம்.
தமிழ்நாட்டிற்குத் தொடர்ந்து விட வேண்டிய தண்ணீரையும், தொடர்ந்து விடவில்லை. எங்களுடைய தலைவர் முதலமைச்சராக இருக்கும்போது, ஒவ்வொரு மாதமும் ஜூன் மாதம், 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து, தொடர்ச்சியாக, இன்னும் சொல்லப்போனால், சில ஆண்டுகள் ஜூன் 12- ஆம் தேதிக்கு முன்பாகவே எங்களுடைய தலைவர், விவசாயிகளுக்காகத் தண்ணீரைத் திறந்து விட்டிருக்கிறார்கள். ஆனால், ஐந்து வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம் ஜூன் மாதம் போய், ஜூலை மாதம் போய், இப்போது ஆகஸ்ட் மாதமும் வந்துவிட்டது இதுவரைக்கும் தண்ணீர் திறக்கவில்லை.
தைரியம் இல்லை, தெம்பு இல்லை
அதற்கான வக்கில்லை இந்த அரசுக்கு. தண்ணீரைக் கேட்டுப் பெறுவதற்கும் வக்கில்லை. கர்நாடகாவை எதிர்த்துப் பேசுவதற்கு வக்கில்லை, தைரியம் இல்லை, தெம்பு இல்லை. எனவே, இந்த முதலமைச்சர் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும்.
சட்டசபையில் பேசும் போதும் சொன்னேன். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுங்கள். இது ஒரு தனிப்பட்ட கட்சியின் பிரச்சினை கிடையாது, இது நம் மாநிலத்தின் அனைத்து விவசாயிகளின் பிரச்சினை. நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து போராடுவோம், நம் ஒற்றுமையைக் காட்டுவோம் என்று தொடர்ந்து நான் சொன்னேன். அதற்கும் பதில் சொல்லவில்லை.
இவற்றையெல்லாம் நேற்று வலியுறுத்திப் பேசினேன். அதுமட்டுமல்ல, ஒவ்வொரு அமைச்சரும் இந்த மூன்று மாதக் காலங்களில் என்னென்ன செய்துகொண்டு இருக்கிறார்கள் என்று ஆதாரத்துடன் குறிப்பிட்டுப் பேசினேன். அதற்கெல்லாம் பதில் சொல்வதற்குத் தெம்பு இல்லாத, திராணி இல்லாத, வக்கில்லாத ஒரு முதலமைச்சர், ஒரு டம்மி முதலமைச்சர் நமக்கு வாய்த்திருக்கிறார்.
திசை திருப்பும் உத்தி
அதையெல்லாம் விட்டுவிட்டு, நான் பேசாத ஒரு விஷயத்தை கட், காப்பி, பேஸ்ட் செய்து, சில விஷயங்களைச் சேர்த்து ச் சொல்கிறார்கள். நான் யாரையும் தவறாகப் பேசவில்லை, முழுக்க முழுக்க விவசாயிகளுக்காகத்தான் பேசினேன்.
நேற்று பேசும்போதும் சொன்னேன், இந்த அரசு, குறிப்பாக இந்தக் கட்சி, இந்த தற்குறிக் கூட்டம், அவர்களின் கொள்கையே கவனத்தைத் திசை திருப்பும் உத்திதான் (Diversion Tactics). முழுக்க முழுக்கப் பொய் செய்தி (Fake News), கவனத் திருப்புதல். மாநிலத்தில் ஏதாவது ஒரு பிரச்சினை எழும் போது, அதைத் திசை திருப்புவதற்கு வேறு ஏதாவது ஒரு பிரச்சினையை எடுக்க வேண்டியது, முதலமைச்சர் ஒரு போட்டோ சூட் நடத்த வேண்டியது, தி.மு.க-வின் திட்டங்களை அப்படியே சுற்றிப் பார்க்க வேண்டியது, போஸ் கொடுக்க வேண்டியது, ரீல்ஸ் போடுவது, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் பள்ளிக்கூடத்திற்கு சென்று, அங்கே இருக்கக்கூடிய மாணவர்களை எல்லாம் வரச் சொல்லி, அவர்கள் கட்சிப் பெயரைச் சொல்லி கோஷம் போடச் சொல்லி, அதை ரீல்ஸாகப் போடுவது - இவற்றைத்தான் செய்துகொண்டு இருக்கிறார்கள்.
அவர்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் மீது அவர்களுடைய நிர்வாகிகளே இதுவரைக்கும் பல்வேறு குற்றங்களைச் சொல்லி இருக்கிறார்கள். பாலியல் குற்றங்கள் சொல்லி இருக்கிறார்கள். அதற்கெல்லாம் இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எல்லாவற்றிற்கும் ஒரு கவனத் திருப்பு உத்தியைப் பயன்படுத்துகிறார் இந்த முதலமைச்சர்.
அதுமாதிரி நேற்று நான் பேசிய பிறகு, அது விவசாயிகள் இடத்தில் மிகப்பெரிய ஒரு வரவேற்பைப் பெற்ற பிறகு, விவசாயிகள் இடத்தில் மிகப்பெரிய ஒரு எழுச்சியை ஏற்படுத்திய பிறகு, அதை எப்படியாவது திசைதிருப்ப வேண்டும், நாளைக்கு சட்டமன்றம் வேறு ஆரம்பிக்கும் போகிறது, சட்டமன்றத்தில் நிச்சயம் இந்தத் தலைப்பைப் பேசுவார்கள், எதிர்க்கட்சி இந்தப் பிரச்சினையை எழுப்பும் என்று தெரிந்துகொண்டு, அதை முடக்க வேண்டும் என்று, திசை திருப்பும் உத்தியாக இன்றைக்கு, காலையில் நான் பேசாத ஒரு விஷயத்தைப் பேசியதாக, கட், காபி, பேஸ்ட் செய்து, அதைத் தேசிய ஊடகங்கள் (National Media) வரைக்கும் கொடுத்துப் பரவ வைத்தனர்.
நான் கலைஞரின் பேரன்
காலையில் காவல்துறை என்னைக் கைது செய்யப் போவதாக வந்தார்கள்.
கைது செய்யப் போவதாகச் சொன்னார்கள், நானும் சரி, என்று முழு ஒத்துழைப்பைத் தருகிறேன் என்று சொல்லி அவர்களோடு சென்றேன்.
கைது செய்யப்படும்போதே, நான் பத்திரிகையாளர்கள் கேட்கும்போது சொன்னேன், இந்த கைதை எப்படிப் பார்க்கிறீர்கள்? என்று கேட்டதற்கு, நான் சொன்னேன் மிகவும் நகைச்சுவையாகப் பார்க்கிறேன் என்று.
நான் பேசாத ஒரு விஷயத்தைப் பேசியதாகக் கதை விட்டு, என்னைக் கைது செய்யப் பார்க்கிறார்கள், என்னை முடக்கப் பார்க்கிறார்கள், என்னை மிரட்டப் பார்க்கிறார்கள். இதற்கெல்லாம் பயப்படக்கூடிய ஆள் நான் கிடையாது. நான் கலைஞரின் பேரன், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் மகன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் உடன்பிறப்புகளில் ஒருவன். நாங்கள் எதற்கும் பயப்பட மாட்டோம். நான் எதிர்கொள்வதற்குத் தயாராக இருக்கிறேன், என்று சொன்னேன்.
அதே மாதிரி, நீதிமன்றத்திற்குச் சென்று, என்ன சொல்லியிருக்கிறார்கள் அரசு வழக்கறிஞர், அவரைக் கைது செய்கிற நோக்கமே எங்களுக்குக் கிடையாது, சும்மா விசாரணைக்கு அழைத்துக்கொண்டு போகிறோம் என்று சொல்லி, அரசு செலவில், மக்கள் வரிப்பணத்தில், கிட்டத்தட்ட 3,000 காவலர்கள் பாதுகாப்போடு, ஒரு பயங்கரவாதியை அழைத்துக்கொண்டு போவது மாதிரி, சென்னையிலிருந்து, சாலை வழியாக 400 கி.மீ தஞ்சாவூர் வரைக்கும் அழைத்துக்கொண்டு சென்றனர். எங்களை முறையாகவும் பார்த்துக் கொள்ளவில்லை. தஞ்சாவூர் அழைத்துக்கொண்டு செல்ல வேண்டும், ஆனால் தஞ்சாவூர் அழைத்துக்கொண்டு போகாமல், நடுவில் செங்கிப்பட்டி என்று ஒரு காவல் நிலையத்தில் இறக்கி, அங்கே விசாரணை என்ற பெயரில், பல கேள்விகளைக் கேட்டு, இன்றைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
சட்டப்படி நாங்கள் சந்திப்போம்
இதை நாங்கள் சட்டப்படியே நிச்சயமாக சந்திப்போம்.
நான் இந்த நேரத்தில் கூறிக்கொள்ள விரும்புவது, நான் எந்தவிதமான ஒரு தவறான எண்ணத்திலும் நேற்று பேசவே இல்லை. யாரையும் புண்படுத்த வேண்டும், யாரையும் தாழ்த்திப் பேச வேண்டும், குறிப்பாகச் சொன்னால் பெண்களைத் தாழ்த்திப் பேச வேண்டும் என்று துளி கூட என்னுடைய மனதில் எண்ணம் கிடையாது.
என்னுடைய பெற்றோர், என்னுடைய குடும்பம் என்னை அப்படி வளர்க்கவில்லை. என் தாய் தந்தை என்னை அப்படி வளர்க்கவில்லை. எனக்குத் திருமணமாகி ஒரு மனைவி இருக்கிறார், அவர்களோடுதான் நான் வாழ்ந்துகொண்டு இருக்கிறேன். எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறார், எனக்கு ஒரு தங்கை இருக்கிறார். எனக்கென்று ஒரு குடும்பம் இருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு தாய்மாரையும் என் குடும்பமாக, தாயாக, தங்கையாக நான் நினைத்துக்கொண்டு இருக்கிறேன்.
இப்படிப் பொய் வழக்குப் போட்டு என்னை பயமுறுத்தலாம் என்று இந்த அரசு நினைத்தார்கள். அதற்கெல்லாம் பயப்படக்கூடிய ஆள் நான் கிடையாது. இந்த நேரத்தில் என் கைதைக் கண்டித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த முன்னோடிகள், கழக உடன்பிறப்புகள் பல இடங்களில் மறியல் செய்து, ஆர்ப்பாட்டம் செய்து கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் என் மீது வைத்திருக்கக்கூடிய அந்த அன்பிற்கும் பாசத்திற்கும் இந்த நேரத்தில் நான் தலைவணங்குகிறேன். அவர்களை எல்லாம் விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என்று நான் இந்த அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.
எங்களுடைய தலைவர், பொதுச்செயலாளர், முதன்மைச் செயலாளர், வழக்கறிஞர் அணி, சட்டமன்ற உறுப்பினர்கள் அத்தனை பேரும் என் கூடவே இருந்தார்கள். அவர்களுக்கு இந்த நேரத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்களுடைய கூட்டணிக் கட்சித் தலைவர்கள், அவர்களுக்கு நான் என்ன பேசினேன் என்பது தெரியும். கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் நேற்று அந்தக் கூட்டத்தில் என்னுடன் பங்கேற்று அவர்களும் சிறப்புரையாற்றினார்கள். அவர்கள்தான் நான் பேசியதற்கு சாட்சி. அவர்களும் இந்த கைது முயற்சியை வன்மையாகக் கண்டித்திருக்கிறார்கள்.
எனக்கு இருக்கக்கூடிய ஒரே வருத்தம், சில தலைவர்கள் நான் பேசியதை முழுமையாகக் கேட்காமலோ, பார்க்காமலோ, தீர ஆராயாமலோ நான் தவறாகப் பேசிவிட்டேன் என்று கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். அது எனக்குக் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. நான் எந்த நேரத்திலும் அது மாதிரி தவறான எண்ணத்தில் பேசவே இல்லை. விவசாயிகளுக்கு ஆதரவாகப் பேசியதற்காக இந்த தரங்கெட்ட அரசு கைது செய்திருக்கிறது.
நான் மீண்டும் சொல்கிறேன், இந்த கைதுக்குப் பயப்பட மாட்டேன். இன்னும் 100 முறை பேசுவேன், மீண்டும் பேசுவேன். அதில் சில பேர் நான் இரட்டை அர்த்தத்தில் பேசிவிட்டேன் என்று சொல்லியிருக்கிறார்கள். நான் நிச்சயமாக இரட்டை அர்த்தத்தில் எல்லாம் பேசவே இல்லை. நான் ஒரே அர்த்தத்தில்தான் பேசினேன். மீண்டும் பேசுவேன்.
கடந்த காலத்தில் எங்களுடைய தலைவர் எடுத்த முயற்சியினாலே, காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டு, விவசாயிகளுக்குத் தண்ணீர் வந்திருக்கிறது. இந்த முறை தண்ணீர் வரவில்லை. காவிரிக்குத் தண்ணீர் வர வேண்டும். இதைத்தான் நான் பேசினேன், இதை மீண்டும் மீண்டும் நான் பேசுவேன். எனவே, இந்த மாதிரி பொய் வழக்குகளுக்கெல்லாம் பயப்படப் போவதில்லை. இதைச் சட்டரீதியாகச் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்.
கேள்வி: 100 நாளில் இருக்கிற இந்த ஆட்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பதில்: இதை நான் ஒரு ஆட்சியாகவே பார்க்கவில்லை. இதை ஒரு சர்க்கஸ் கூடாரம் மாதிரிதான் நான் பார்க்கிறேன்.
கேள்வி: உங்களை கைது செய்யக் காரணம் என்ன சார்?
பதில்: பயமுறுத்த வேண்டும். திசைதிருப்புதல்தான் (Diversion), வேறு ஒன்றும் கிடையாது.
கேள்வி: தொடர்ந்து தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களைக் கைது செய்கிறார்களே ஏன்?
பதில்: தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களைப் பார்த்தால் அவர்களைக் கைது செய்யத் தோன்றும், அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களைப் பார்த்தால் எப்படியாவது அவர்களுக்கு சோஃபா அனுப்பி வாங்க வேண்டும் என்று இந்த அரசு முயற்சிக்கிறது.
கேள்வி: பலரையும் தி.மு.க-வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களாகட்டும், எதிர்க்கட்சித் தலைவரையே கைது செய்யும் நடவடிக்கையில் இந்த அரசு ஈடுபட்டிருக்கிறது. வரக்கூடிய காலங்களில் அவர்களை எப்படி நீங்கள் அணுகப் போகிறீர்கள், என்ன செய்யப் போகிறீர்கள்?
பதில்: இந்த முதலமைச்சருக்கு தி.மு.க-வின் வரலாறு தெரியவில்லை, தமிழ்நாட்டின் வரலாறு தெரியவில்லை. தெரியாமல் இதையெல்லாம் செய்துகொண்டு இருக்கிறார். மக்கள் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். நிச்சயம் மக்கள் இதற்கான பதிலைத் தரவேண்டிய நேரத்தில் நிச்சயம் தருவார்கள்.
கேள்வி: சட்டமன்றக் கூட்டத் தொடரில் தி.மு.க-வின் வியூகம் என்ன?
பதில்: நாங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும், முக்கிய தலைவர்கள், மூத்த தலைவர்கள் அனைவரும், எங்களுடைய தலைவரைப் பார்க்க, தலைவரின் இல்லத்திற்குச் செல்கிறோம். தலைவர் எங்களுக்குத் தகுந்த அறிவுரையைக் கூறுவார். அதன்படி நாங்கள் நடந்துகொள்வோம்.
நன்றி.
இவ்வாறு கழக இளைஞர் அணிச் செயலாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் பேட்டி அளித்தார்.
விவசாயிகளின் துயர் துடைக்க வக்கற்ற #SofaModel அரசு, பிரச்சினைகளை திசைதிருப்புவதற்காக என்னை கைது செய்திருக்கிறது.
தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் தேவையற்ற வார்த்தைகளை நான் பயன்படுத்தியதாக ஆளுங்கட்சியின் Abusive warriors-ஐ வைத்து என் மீது அவதூறு பரப்பினார்கள்.
பொய் வழக்குகளைப்பதிவுச் செய்து சென்னையில் இருந்து தஞ்சைக்கு அலைக்கழிப்பதாக நினைத்து, யாரையோ திருப்திப்படுத்த முயன்றிருக்கிறார்கள்.
என்னைக் கைது செய்ததும் மீடியாவைப் பார்த்து, இந்தக் கைதை காமடியாகப் பார்க்கிறேன் என்று கூறிவிட்டுத்தான் வந்தேன்.
போலீஸைப் பார்த்து பயந்து ஓடிப்போய் விடவில்லை.
ஆனால் இன்றைய முதலமைச்சர் கரூரில் 41 பேர் இறந்தபோதும் அவர்கள் குடும்பத்தாரையும் பார்க்காமல், மீடியாவையும் பார்க்காமல் கைது செய்து விடுவார்களோ என்று அச்சத்தில் தலைதெறிக்க ஓடியதை நாடறியும்.
கரூரில் அத்தனை உயிர்கள் பலியான போதும் - அடுத்த ஒரு மாதத்தில் பட விளம்பரத்துக்காக மலேசியா போய் குத்தாட்டம் போட்டவர்தான் இவர்.
முதலமைச்சர் வேண்டுமானால் கைதுக்கு பயப்படலாம். நான் அதற்கெல்லாம் அஞ்சமாட்டேன். நான் கலைஞரின் பேரன். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் மகன்.
விவசாயிகளுக்காகப் போராடி கைதாவது என்றால், ஒருமுறை அல்ல 100 முறை கூட கைதாவேன்.
விவசாயிகளின் நலனுக்காக 300 கிலோ மீட்டர் அல்ல 3000 கிலோமீட்டருக்கு மேல் அழைத்துச் சென்றாலும், நான் செல்லத்தயார்.
உங்கள் அடக்குமுறை எங்கள் மக்கள் பணிகளை ஒரு நாளும் தடுக்காது!
என்னுடைய கைதை கண்டித்த தோழமை இயக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், தமிழ்நாடு முழுவதும் எனக்கு ஆதரவாக ஒற்றுமையை வெளிப்படுத்திய கழக உடன்பிறப்புகளுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@mkstalin@arivalayam
கழக @dmk_youthwing செயலாளர் - மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்களின் மீதான அடக்குமுறை மற்றும் கைதினை கண்டித்து ஆற்காடு அண்ணா சாலையில் கழக தோழர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டோம்.
கழக இளைஞர் அணிச் செயலாளர் - மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்களைக் கைது செய்த பாசிச #TVK அரசைக் கண்டித்து அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் தமிழ்நாடு முழுவதும் கழகத்தினர் - இளைஞரணியினர் சாலை மறியல் போராட்டம்!
#UdhayanidhiStalin#தொடைநடுங்கி_அரசு#TVKVijayFails
நிர்வாகத் திறனற்ற ஒரு டம்மி முதலமைச்சரால் தமிழ்நாட்டிற்கு இன்று இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது!
- மாண்புமிகு தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் திரு. @udhaystalin அவர்கள்
#விவசாயவிரோதிவிஜய்