தி.மு.க. தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு இந்தியக் குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவர் திரு செ.கு.தமிழரசன், Ex.M.L.A ஆதரவு!
கழகத் தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (10.9.2026) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் "இந்தியக் குடியரசுக் கட்சி"யின் மாநிலத் தலைவர் செ.கு.தமிழரசன், Ex.M.L.A அவர்கள் நேரில் சந்தித்து, நடைபெறவிருக்கும் 2026 சட்டப்பேரவை இடைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு இந்தியக் குடியரசுக் கட்சி முழு ஆதரவு அளிப்பதாகவும், இடைத் தேர்தல் நடைபெறும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள கழக வேட்பாளர்களின் வெற்றிக்கு இந்தியக் குடியரசுக் கட்சி நிர்வாகிகள் - தோழர்கள் முழுமையாக பாடுபடுவார்கள் என தெரிவித்தார்.
அதுபோது கழக பொருளாளர் டி.ஆர். பால���, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எ.வ. வேலு, செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.
புதுச்சேரி - சட்டப்பேரவைத் இடைத்தேர்தல் - 2026 தட்டாஞ்சாவடி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.கழக வேட்பாளர் - கழகத் தலைவர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு
சட்டப்பேரவைத் இடைத்தேர்தல் - 2026 மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.கழக வேட்பாளர்கள் - கழகத் தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு
சட்டப்பேரவையில் உடல் மொழிக்கு வேலையில்லை!
உரையாற்றுவது தான் உங்கள் வேலை மாண்புமிகு @actorvijay அவர்களே!
எல்லாவற்றையும் செய்துவிட்டு பின்பு வீட்டுக்குப்போய் #tweet போடுவது இன்னும் நீங்கள் மாண்புமிகு ஆகவில்லை என்பதையேக் காட்டுகிறது.
முதல்முறையாக நீங்கள் செய்திருந்தால் உங்களின் இந்த விளக்கத்தை உண்மையென மக்கள் ஏற்றுக்கொள��வார்கள்.
ஆனால் தமிழ்நாட்டு சட்டமன்ற வரலாற்றில் யாரும் இதுவரை செய்திராத கீழ்த் தரமான செயலை நீங்கள் முதல்வர் பொறுப்பை ஏற்றப்பிறகு இது இரண்டாவது முறையாக செய்திருக்கிறீர்கள்.
��னவே வேண்டும் என்றே திட்டமிட்டு உள்நோக்கத்துடன் தியாக வரலாற்றுக்கு சொந்தமான தலைவர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்திருக்கிறீர்கள்.
உழைப்பைத்தந்து, தியாகத்தை தந்து இந்த முதல்வர் பொறுப்புக்கு பல காலம் மக்கள் பணியாற்றிய பின் வந்திருந்தால் இதன் வலிமையை உணர்ந்திருப்பீர்கள்.
ஊதாரித்தனமான வசனங்கள் பேசி வலைதள பொய் பரப்புரை மூலம் பதவிக்கு வந்ததால் முதல்வர் பொறுப்பின் மாண்பும், சட்டமன்ற மாண்பும் இன்று தங்களால் கூனிக்குறுகியுள்ளது. இதனால் தமிழ்நாட்டு மக்கள் தலைகுனிந்துள்ளனர்.
காவல்துறை மானியத்தின் பதிலுரையில் பதிலே இல்லாத பதிலுரையை அளித்த வரலாற்றைப்படைத்த முதல்வர் தாங்கள்.
எதிர்காலத்தில் சட்டமன்ற நடவடிக்கைகளை அறிந்துக்கொள்ள குறிப்புகளை படிக்கயிருக்கும் அடுத்த தலைமுறையினருக்கு நீங்கள் பதில் அளிக்கத்தெரியாத பொம்மை முதல்வர் என உங்களை நீங்��ளே பதிவிட்டுவிட்டீர்கள்.
எனவே பழிப்பதற்கும், திமுகவை குற்றம் சுமத்துவதற்கும் நேரத்தை வீணாக்காமல் மாண்புமிகு முதல்வர் என்னும் உயரிய ப���றுப்புணர்ந்து பணியாற்றுங்கள்.
@CMOTamilnadu @TVKVijayHQ @ThanthiTV @PTI_News @PttvNewsX @sunnewstamil @polimernews @NewsTamilTV24x7 @Kalaignarnews @arivalayam @DMKITwing
அண்ணல் அம்பேத்கர் அளித்த சட்டத்திற்கு துறை அமைச்சராக காக்கி டவுசர் போட்டவர் இருக்கிறார். இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆரம்பம் முதலே உண்மைக்கு மாறான பொய்யை மட்டுமே நார்சிஸ்ட் மனநிலையில் பேசி வருகிறார்.
குரூர மனம் கொண்டவர்கள் மிசா கொடுமைமையை பற்றி பேச சிறித��ம் தகுதி இல்லாதவர்கள். மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தவர்களை தலைவனாக ஏற்றுக்கொண்டவர்தான் இன்றைய சட்டத்துறை அமைச்சர்! அவருக்கு தலைவன் எனும் சொல்லுக்கே அர்த்தம் தெரியாது!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று காவல்துறை மானிய கோரிக்கையின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பதிலுரை வழங்கினார். ஆனால் சட்டம் ஒழு��்கு, காவல்துறை உள்ளிட்ட உறுப்பினர்கள் எழுப்பிய எந்த கேள்விக்கும் இந்த 'பதிலுரையில்' எந்த பதிலும் இடம் பெறவில்லை.
மக்கள் பிரச்சனை பற்றி பேசுவதற்கு பதிலாக முழுக்க முழுக்க எதிர்க்கட்சியை குறிவைத்து அடுக்கிய குற்றச்சாட்டுகளே நிரம்பி இருந்தன. ஒன்றிய அரசின் பிடியில் அனைத்து ஜனநாயக அமைப்புகளும் உள்ள நிலையில் அமலாக்க துறையின் குற்றச்சாட்டுகளை மட்டும் சொல்லி அதை ஊழல் என வகைப்பட���த்துவது எந்த வகையிலும் பொருத்தமானது அல்ல.
முதலமைச்சர் ஆக இருந்த திரு.அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதும் சிறையில் அடைக்கப்பட்டதும் பின்னர் நீதிமன்றம் அந்தக் குற்றச்சாட்டுகளை உண்மை அல்ல என்று தள்ளுபடி செய்ததையும் நாடு அறியும். தோழர் பினராயி விஜயன் மீது தங்கக் கடத்தல் வழக்கு பதியும் அளவிற்கு ஆளும் கட்சியின் அடியாளாக அமலாக்கத்துறை நடந்து கொண்டிருப்பதை விபரம் அறிந்�� அனைவரும் அறிவோம். எனவே அமலாக்க துறையின் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களாக முன்வைப்பது பொருத்தமானது அல்ல.
அவசர நிலை காலத்தில் இந்தியா��ில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக மிகப்பெரிய போராட்டங்களும் அதன் காரணமாக அடக்குமுறைகளும் அத்துமீறல்களும் நடந்தது நாடறிந்த வரலாறு. ஆனால் அவசரநிலை காலத்தில் முன்னாள் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டு அவரது தாடை உடைக்கப்பட்டது. உருவக் கேலி செய்யும் விதமாக பேசுவது யாராக இருந்தாலும் கண்டனத்திற்குரியது. அதை முதலமைச்சரே செய்திருப்பது பொறுப்பற்ற செயலாகும்.
சட்டமன்றத்தை மக்கள் நலனுக்கு எந்த வகையிலும் எள்ளளவுக்கு கூட உதவாத தனிமனித தாக்குதல்களுக்கான இடமாகவோ அல்லது தங்கள் தலைவரை பாராட்டி பேசும் இடமாகவோ மாற்றுவது முற்றிலும் அறமற்ற செயலாகும். கடுமையான அரசியல் ரீதியான விமர்சனங்களை, அதுவும் கூட நாகரீகமாக சட்டமன்றத்திற்கு வெளியே வைப்பதில் யாருக்கும் ஆட்சேபனை இருக்க முடியாது.
ஆனால் ஏழை, எளிய மக்கள் உள்ளிட்ட தம���ழக மக்களிடமிருந்து பெறப்பட்ட வரிப்பணத்தில் நடைபெறும் சட்டமன்றத்தின் நேரத்தை மக்கள் நலனுக்காக அன்றி விரயம் செய்வது, அது யாராக இருந்தாலும் அதை ஏற்க முடியாது.
தலைவர் @mkstalin அவர்கள் முகத்தில் இருப்பது வெறும் தழும்பு அல்ல!
அதிகார வெறியில் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்த அவசரநிலைக் காலத்தில், #MISA சிறையில் அடக்குமுறையை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்ட ஒரு போராளியின் வீரத்தழும்பு அது!
சிறைவாசமும் அடக்கு முறையும் தந்த அந்தத் தழும்புக்குப் பின்னால் இருப்பது , ஜனநாயகத்திற்காக அவர் ஏற்றுக்கொண்ட வலி, எதற்கும் அஞ்சாத ஒரு போராளியின் மகத்தான அரசியல் வரலாறு.
ஒரு ஜனநாயக விபத்தில் இன்று முதலமைச்சர் ஆன நடிகர் ஜோசப் விஜய் போன்றவர்கள் என்றென்றும் எட்ட முடியாத அரசியல் வரலாற்று பெருஞ்சிகரத்தை எட்டியதற்கான அடையாளம்தான் நம் தலைவரின் அந்தத் தழு���்பு!
ஜனநாயகம் காக்கும் போராளியாக உறுதியுடன் நின்று, அடக்குமுறையில் பெற்ற காயத்தையே கேலி செய்வது அருவருப்பான அற்பத்தனம்!
சர்வாதிகாரத்தை எதிர்த்து தலைவர் பெற்ற காயங்களுக்கு வரலாறு விழுப்புண் என்று பெயர் சூட்டும்!
அந்தத் தழும்பு தலைவருக்கு அவமானமல்ல, பெருமிதம்.
தமிழ்நாட்டை காக்க அவர் சிந்திய இரத்தத்தின் அடையாளம்.
தியாக வரலாற்றை உணரத் தெரியாத அரசியல் அறிவற்றவர்களின் கேலிச் சிரிப்புதான் அழிக்க முடியாத அவமானத் தழும்பு🔥
#ShameOnYouCM
வரலாறு பேச வேண்டுமென்றால், நீதிக்கட்சி காலத்திலிருந்து தொடங்க வேண்டும். இந்தத் தமிழ்ச் சமூகத்துக்காக நாங்கள் என்ன செய்தோம் என்பதிலிருந்து தொடங்க வேண்டும். ஆனால், தவெகவிற்கும், அதன் முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கும் அந்த வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
தலைவர் கலைஞரைப் பற்றியோ, தி.மு.க.வைப் பற்றியோ அவதூறாகப் பேசுவதையே அரசி��ல் தகுதியாக இன்னும் எத்தனை காலத்திற்கு நினைத்துக் கொள்ளப்போகிறார்கள் என்று தெரியவில்லை. எல்லாவற்றையும் நம்புவதற்கு ஒரு கூட்டம் இருக்கும் வரை, எதை வேண்டுமானாலும் பேசுவதற்கு ஒரு கூட்டமும் இருந்துகொண்டுதான் இருக்கும்.
காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதிலுரை அளிக்க வ���ண்டிய முதலமைச்சர், எழுதிக் கொடுத்ததைப் படிப்பதைத் தவிர, கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் சொல்ல முடியாமல், நீண்ட சொற்பொழிவை நிகழ்த்திவிட்டு, எதிர்வினை வந்துவிடுமோ என்ற பயத்தில் விவாதத்தையே சபாநாயகர் தவிர்த்திருக்கிறார்.
கடந்த மூன்று நாட்களாக காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்க ஒத்திகை பார்த்தும், அந்த மானியக் கோரிக்கை தொடர்பாக முதலமைச்சர் பேசியது சொற்பமே. மற்றவை எல்லாம் காலம் காலமாகப் பரப்பப்பட்ட வதந்திகளையும், சமீபத்திய WhatsApp factory பொய்களையும் கலந்து, முதலமைச்சருக்கு ஒரு பிரதியைக் கொடுத்துவிட்டார்கள் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
சட்டம்-ஒழுங்கு குறித்தும், குழந்தைகள் & பெண்களின் பாதுகாப்பு குறித்தும், பிற மக்கள் பிரச்சனைகள் குறித்தும் பேச வேண்டிய சபை, இன்று சர்க்கஸ் கூடாரமாக மாறியிருக்கிறது.
ஒன்று மட்டும் சொல்���த் தோன்றுகிறது...
Not everything loud is true
@CMOTamilnadu
அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரி���்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு?
பதிலற்ற பதிலுரை - பழிபோடும் பேச்சு - diversion tactics - மொத்தத்தில் எந்த preparation-ம் இல்லாமல், Roll Camera, Action mode-ல் Cringe டயலாக் பேசி இருக்கிறார் dummy CM.
எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளியாமல், prepare well next time.Try to do better!
நாளை மாண்புமிகு முதலமைச்சர் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் மீது பதிலுரை அளிப்பதற்கு முன்பாக அவரது கட்சிப் பிரமுகர் ஒருவரே தலைநகரில் கொலைக்கு ஆளாகியுள்ளார்.
அதுவும், தனது உயிருக்குப் பாதுகாப்பு வேண்டி ஆளும் த.வெ.க.வில��� இணைந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி சாலையில் ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இதுதான் தமிழ்நாட்டின் ‘வெற்றி சட்டம்-ஒழுங்கு’ நிலை!
தலைநகரிலேயே சாலையில், இப்படி ஒரு கொலை நடக்கும் அளவு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயிருப்பதை நினைத்து வருந்துவதா?
இல்லை, சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டியாகத் த.வெ.க. இருப்பதை நினைத்து வருந்துவதா?
இதற்கும் தி.மு.க.வை எப்படி குற்ற��் சொல்லலாம் என யோசிப்பதை நிறுத்திவிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
#Murder
கழக மறுசீரமைப்புக்கான தலைமைக் கழகப் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டிருக்கின்ற நீங்கள், என்னுடைய கண்களாகவும் – காதுகளாகவும் மாவட்டங்களுக்குச் சென்று, எந்தவித பாகுபாடுகளும் பார்க்காமல் – எந்தவித அழுத்தங்களுக்கும் அடிபணியாமல், கொடுக்கப்பட்டிருக்கின்ற பணிகளைச் சரியாகச் செய்துவிட்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள்