இத்தனை ஆண்டுகளாக தமிழ்நாட்டின் தேர்தல் களம், தீயசக்தி vs தீர்ந்து போன சக்தி என்ற இரு துருவ அரசியலாகவே இருந்தது.
ஒருவரை ஒருவர் கடுமையான விமர்சனங்களால் சாடியவர்கள்… ஒருவரை ஒருவர் வீழ்த்துவோம் என்று களமிறங்கியவர்கள்… இன்று, தமிழ்நாட்டு மக்கள் பேராதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் சக்தி களத்தில் ��ந்தவுடன், பழைய அரசியல் கணக்குகள் அனைத்தையும் உடைத்தெறிந்து பங்காளிகளாகவும் அரசியல் வியாபாரம் செய்வதில் பங்குதாரர்களாகவும் வலம் வருகின்றனர்.
மாறி மாறி வசைபாடிக் கொண்டிருந்த இரு கூட்டங்களும், இன்று ஒரே கூட்டணியாக ஒன்று சேர்ந்து, மக்கள் சக்தியான தவெகவை ஆபாசம் எனும் ஒரே கோட்டில் நின்று விமர்சித்து வருகின்றன.
இருவரும் என்ன கத்தினாலும், கதறினாலும், இனி தேர்தல் கணக்கு வெற்றி��் தலைவர் எழுதப்போகும் கணக்காகத்தான் இருக்கும்.