எது மிகச் சரியானதோ அதை நோக்கி இந்தக் குர்ஆன் வழிகாட்டுகிறது. நற்செயல்கள் செய்யும் இறைநம்பிக்கையாளர்களுக்குப் பெரும் கூலி உண்டு என்றும், மறுமையை நம்பாதவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையைத் தயார்படுத்தியுள்ளோம் என்றும் நற்செய்தி கூறுகிறது.
அல் குர்ஆன் 17.9,10
(நபியே!) அல்லாஹ்வின் பாதையில் போரிடுவீராக! உம்மைத் தவிர (மற்றவருக்காக) நீர் சிரமப்படுத்தப்பட மாட்டீர். இறைநம்பிக்கையாளர்களுக்கு ஆர்வமூட்டுவீராக! இறைமறுப்பாளர்களின் வலிமையை அல்லாஹ் தடுப்பான். அல்லாஹ் மிக வலிமையானவன்; தண்டிப்பதிலும் மிகக் கடுமையானவன். '
' அல் குர்ஆன் - 4 : 84'
என்னையும், இச்செய்தியைப் பொய்யெனக் கூறுவோரையும் விட்டுவிடுவீராக! அவர்கள் அறியாத விதத்தில் அவர்களைச் சிறிது சிறிதாகப் பிடிப்போம். '
அல் குர்ஆன் - 68 : 44
நீங்கள் விரும்பினால், “அவர்கள் செய்து கொண்டிருந்த (நல்ல) செயல்களுக்குக் கூலியாக, அவர்களுக்கென மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண் குளிர்ச்சியை யாரும் அறிய மாட்டார்கள்” என்னும் (32:17) இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள்!
அவர்கள் வசதியிலும் வறுமையிலும் செலவிடுவார்கள்; கோபத்தை அடக்கிக் கொள்வார்கள்; மக்களை மன்னிப்பார்கள். நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான். '
அல் குர்ஆன் - 3 : 134
நல்லொழுக்கமுள்ள பெண்கள் எனப்படுவோர் பணிந்து நடப்போரும், அல்லாஹ் பாதுகாக்கச் சொன்ன விதத்தில் (கணவன்) மறைவாக உள்ள நேரத்தில் (தம்மைப்) பாதுகாத்துக் கொள்வோருமே ஆவர். (4:34)
இந்தக் குர்ஆனை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து இது வந்திருந்தால் அதிகமான முரண்பாடுகளை இதில் கண்டிருப்பார்கள். '
அல் குர்ஆன் - 4 : 82
ஷைத்தான் உங்களுக்குப் பகைவனாக இருக்கிறான். அவனைப் பகைவனாகவே எடுத்துக் கொள்ளுங்கள்! தனது கூட்டத்தார் கொழுந்து விட்டெரியும் நரகத்திற்குரியோராக ஆகவேண்டும் என்பதற்காகவே அவர்களை அவன் அழைக்கிறான். '
அல் குர்ஆன் - 35 : 6
யார் லைலத்துல் கத்ர்-கண்ணியமிக்க இரவில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்றுவணங்குகிறாரோ அவர் (அதற்கு) முன்பு செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி (2014), முஸ்லிம் (1393)
“என் சமுதாயத்தில் பின்னர் ஒரு கூட்டம் வரும். அவர்கள் தூய்மையிலும், துஆவிலும் வரம்பு மீறுவார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முக்கஃபல் (ரலி),
நூல்கள்: அபூதாவுத் (88), இப்னுஹிப்பான் (6763), அஹ்மத் (16194)
நோன்பு நோற்பதற்குச் சக்தியுள்ளவர் அதை விட்டுவிட்டால் பரிகாரம் செய்ய வேண்டும் என்று முதலில் சட்டம் இருந்தது. பின்னர் சக்தியுள்ளவர் கண்டிப்பாக நோன்பு நோற்றே ஆகவேண்டும் என அச்சட்டம் மாற்றப்பட்டு விட்டது.
(இரவு என்ற) கருப்புக் கயிற்றிலிருந்து அதிகாலை எனும் வெள்ளைக் கயிறு உங்களுக்குத் தெளிவாகும்வரை உண்ணுங்கள்; பருகுங்கள்! பிறகு இரவு (தொடங்கும்) வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள். நீங்கள் பள்ளிவாசல்களில் இஃதிகாஃப் இருக்கும்போது (உங்கள் மனைவியரான) அவர்களுடன் கூடாதீர்கள்.
உங்களில் ஒருவருக்கு மரணம் வருவதற்கு முன்பே உங்களுக்கு நாம் வழங்கியதிலிருந்து செலவிடுங்கள்! (மரணவேளை வந்து விட்டால்) “என் இறைவனே! சிறிது காலம் எனக்கு நீ அவகாசம் அளிக்கக் கூடாதா? நான் தர்மம் செய்து, நல்லோர்களில் ஆகிவிடுவேனே!” என்று அப்போது அவன் கூறுவான்.
அல் குர்ஆன் - 63 : 10
பெண்கள், ஆண்மக்கள், சேகரிக்கப்பட்ட தங்க வெள்ளிக் குவியல்கள், உயர்ரகக் குதிரைகள், கால்நடைகள், விவசாய நிலங்கள் ஆகிய ஆசைக்குரியவற்றை விரும்புவது மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்வின் இன்பங்கள். அல்லாஹ்விடமே அழகிய தங்குமிடம் உள்ளது. '
' அல் குர்ஆன் - 3 : 14'
(நபியே!) உமக்கு முன்னர் ஆண்களையே தவிர நாம் தூதராக அனுப்பவில்லை. அவர்களுக்கு வேத அறிவிப்பை வழங்கினோம். நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் (வேத) அறிவுடையோரிடம் கேளுங்கள்! '
அல் குர்ஆன் - 21 : 7