முத்தழறிஞரின் நினைவு நாளை முன்னிட்டு ராயப்பேட்டை YMCA மைதானத்தில் இன்று நடத்தப்பட்ட சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில்,
முதற்கட்டமாக தேர்வான 500 விண்ணப்பதாரர்களுக்கு பணி நியமன ஆணைகளை கலைஞரின் நினைவிடத்தில் இன்று மாலை வழங்கினோம். பணியில் சேரவுள்ள அனைவருக்கும் வாழ்த்துகள்.
உழைப்பால் உயர்வோம் ; பிறரையும் உயர்த்துவோம் என நாளும் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் முத்தமிழறிஞரின் நினைவு நாளான இன்று அவரது நினைவிடத்தில் குடும்பத்தோடு மரியாதை செலுத்தினோம். கலைஞரின் புகழ் ஓங்கட்டும்.
#RememberingKalaignar
கொரோனா தடுப்புக்காக திருவல்லிக்கேணி கற்பக கன்னியம்மன் கோயில் தெரு, ஞானவேல்-சுடர்மதி தம்பதியின் மகள் பவ்யாஸ்ரீ தனது உண்டியல் சேமிப்��ை மாண்புமிகு முதல்வர் அவர்களின் பொது நிவாரணநிதிக்காக முத்தமிழறிஞரின் 3ம் ஆண்டு நினைவு நாள் நலத்திட்ட நிகழ்ச்சியின்போது என்னிடம் வழங்கினார். நன்றி.
#ChepaukTriplicane MLAவாக கஸ்தூரிபா காந்தி தாய்-சேய் நல மருத்துவமனைக்கு
கலைஞர் அவர்கள் எண்ணற்ற திட்டப்பணிகளை செய்து கொடுத்துள்ளார். அவரது நினைவு நாளான இன்று அதே மருத்துவமனைக்கு என் பெயரிலான அறக்கட்டளை மூலம் ரூ.90 லட்சத்தில் முடிக்கப்பட்ட பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கினோம்.
கலைஞரின் 3-ம் ஆண்டு நினைவு நாளான இன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 30 பயனாளிகளுக்கு, காது கேட்கும் கருவிகள் 9, தையல் மெஷின், மூன்று சக்கர வண்டி, ரோலேட்டர் 6, வங்கி கடன் & மாத உதவித்தொகை 4 பேருக்கு , வங்கிக்கடன் பரிந்���ுரைகள் 8 பேருக்கு வழங்கினோம்.
#RememberingKalaignar
சேப்பாக்கம், கொய்யாத்தோப்பை சேர்ந்த மாற்றுத்திறனாளி தம்பி முகிலன் இனி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றிக்கான அடியாக இருக்கட்டும். கலைஞர் நினை���ு நாளான இன்று அவருக்கு செயற்கை கால்களை பொருத்தினோம். வழங்கிய @SRMC_official-க்கு நன்றி. தம்பிக்கு வாழ்த்துகள். #RememberingKalaignar