மதுரை மேலூர் பேருந்து நிலையம் அருகே அடையாளம் தெரியாத நபர்களால் இளைஞர் அடித்துக் கொலை - குற்றவாளிகள் அனைவருக்கும் தகுந்த தண்டனை கிடைப்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மதுரை புறநகர் மாவட்டம், மேலூர் மேற்கு ஒன்றிய கழக முன்னாள் இணைச்செயலாளர் மறைந்த திரு.இராம.சேகரன் அவர்களின் புதல்வர் திரு ராம்பிரகாஷ் அவர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் சரமாரியாக அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
பொதுமக்கள் அதிகளவில் கூடும் மேலூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றிருக்கும் இந்த படுகொலைச் சம்பவம் அப்பேருந்து நிலையத்தைப் பயன்படுத்தும் பயணிகள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த பொதுமக்கள் மத்தியிலும் அச்சத்தையும், பெரும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திரு ராம்பிரகாஷ் அவர்களின் கொலை வழக்கில் தொடர்புடையதாக இதுவரை மூ��்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவத்திற்குக் காரணமான அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி உறவினர்களும் பொதுமக்களும் பல்வேறுகட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
எனவே, பட்டப்பகலில் இளைஞர் ஒருவரை அடித்துக் கொலை செய்த குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தித் தகுந்த தண்டனையைப் பெற்றுத் தருவதோடு, சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாத காலமே உள்ள நிலையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளைக் களைந்து பொதுமக்களுக்குப் பாதுக���ப்பான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என காவல்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்திருப்பது மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
கடந்த ஆண்டு விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நடைபெற்ற மரணங்களுக்கு பின்பும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கவோ, ஒழிக்கவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத முதலமைச்சர் அவர்கள், தற்போது கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் ?
முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் மாவட்ட ஆட்சியர் மற்ற��ம் காவல்துறை அதிகாரிகள் மெத்தனப் போக்காக செயல்பட்டதாக கூறி அவர்களின் மீது எடுக்கப்பட்டிருக்கும் கண் துடைப்பு நடவடிக்கை அரசு நிர்வாகத்தின் ஒட்டுமொத்த தோல்வியையே வெளிப்படுத்துகிறது.
அரசு நிர்வாகத்தின் தவறை மூடி மறைக்க அதிரடி சோதனை மற்றும் கைது எனும் பெயரில் மேலும் ஒரு நாடகத்தை அரங்கேற்றாமல், கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொண்டு, அதில் தொடர்புடையவர்க���் யாராக இருந்தாலும் அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். @CMOTamilnadu
காகித அளவில் இருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலீடாக மாறு��து எப்போது ? – திமுக ஆட்சியில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் மற்றும் அதனால் உருவான வேலைவாய்ப்பு விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்!
திமுக அரசின் முன்னேற்றமில்லா மோசமான மூன்றாண்டு கால ஆட்சி – ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் தலைகுனிவை ஏற்படுத்தும் கொலை, கொள்ளை, பட்டிதொட்டியெங்கும் ப��தைப்பொருள் புழக்கம் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளே சாட்சி.
த��ிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆர்வத்துடன் வாக்களித்து தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றிய மக்கள் அனைவருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களின் வெற்றியை மட்டுமே இலக்காக நிர்ணயித்து த��ர்தல் களப்பணியாற்றிய அனைத்து கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் தொண்டர்கள் என அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தேனி மற்றும் திருச்சிராப்பள்ளி நாடாளுமன்றத் தொகுதி மட்டுமல்லாது தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்கள் மற்றும் அவரவர் சார்ந்த கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு தோளோடு தோள் நின்று தீவிர கள���்பணியாற்றி வெற்றியை உறுதி செய்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அனைத்து நிலையிலான நிர்வாகிகள் மற்றும் என் உயிரினும் மேலான கழக தொண்டர்கள் அனைவருக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.
மலையாளப் புத்தாண்டை விஷு திருநாளாக உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த விஷு திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பண்பாட்டையும், பாரம்பரிய மரபுகளையும் பேணிக்காப்பதில் முன்னுதாரணமாக திகழும் மலையாள மக்கள் அனைவருக்கும் அன்பு, அமைதி, இன��பம் மற்றும் வளத்தை கொடுக்கும் ஆண்டாக இப்புத்தாண்டு அமையட்டும்.
போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்க மறுத்து பேச்சுவார்த்தை என்ற பெயரில் அவர்களை அலைக்கழிக்கும் தமிழக அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது - போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான ��ோரிக்கைகளை நிறைவேற்றி நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும்.
15வது ஊதிய ஒப்பந்தம், மீண்டும் பழைய ஓய்வூ��ிய திட்டம், அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் இன்று அரசு நடத்திய முத்தரப்பு பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்திருக்கிறது.
பொங்கல் பண்டிகையின் போது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்களை நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி இடமாற்றம் செய்து பழிவாங்கும் நடவடிக்கையில் போக்குவரத்துத்துறை ஈடுபட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
போக்குவரத்துக் கழகங்களில் காலிப்பணியிடங்களை நிரப்பாமல், தற்காலிக பணியாளர்களை வைத்தே பேருந்துகளை இயக்குவதால் விபத்து ஏற்படும் அபாயமும் இருப்பதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
மேலும் சென்னை மாநகரப் பேருந்து ஒன்றில் பின்பக்க இருக்கையின் தரைதளம் உடைந்து பெண் ஒருவர் விழுந்த சம்பவம் அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் ப���துமக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.
எனவே, வரும் 21 ஆம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்பட்டு அவர்களுக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தி தருவதோடு, சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும��� இயங்கும் அரசுப் பேருந்துகளில் உரிய ஆய்வை மேற்கொண்டு பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.