உழைப்பு னா ஸ்டாலின்🥺🖤❤️ @mkstalin
மறக்க முடியாத நாள்….
2021... அந்த டைம்ல நம்ம எல்லாருமே வீட்டுக்குள்ளயே பயந்து போய் இருந்தோம். பக்கத்து வீட்டுக்காரங்களுக்கே உடம்பு முடியலன்னா கூட எட்டிப் பார்க்க பயந்த ஒரு காலம் அது.
ஆனா, அந்த இக்கட்டான நேரத்துல, ஒரு மாநிலத்தோட முதல்வரா மு.க. ஸ்டாலின் செஞ்ச இந்த விஷயம்….
'முதல்வருக்கே கொரோனா வந்துடாதா?'ன்னு பதறுனாங்க. ஆனா அவர், "என் மக்களுக்காக நான் வராம யாரு வருவா?"ன்ற மாதிரி கெத்தா உள்ள போனார்.
AC ரூமில உட்கார்ந்து order போடாம, களத்தில இறங்கி நிலைமையை ஆய்வு செய்ற அவர் அர்ப்பணிப்பு, ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு
🖤❤️🔥
#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும் #VoteForDMK
🔹‘தீபாவளி’யைக் கொண்டாடுபவர்களின் சிந்தனைக்குச் சில செய்திகள்!
🔹‘தீபாவளி’ வந்தது திருமலை நாயக்கன் காலத்தில்தான்–சோழர் காலத்தில் கிடையாது!
🔹ஒரே பண்டிகைக்குப் பல்வேறு கதைகள் ஏன்?
‘தினத்தந்தி’யின் ஞாயிறு இதழில் வெளிவரும் இணைப்பான ‘தேவதை’ (27.10.2024) பகுதியில் இடம்பெற்றுள்ள ஒரு கட்டுரையில் உள்ள சில தகவல்களைப் படியுங்கள். அதன் பிறகு, அதன்மூலம் சிறிதும் விருப்பு வெறுப்பற்று, பகுத்தறிந்து, பொங்கலைப் போல, கொண்டாடத்தக்க யோக்கியதை இதற்கு உண்டா? என்று முடிவுக்கு வாருங்கள்.
‘‘அறியாமை என்பதைவிட, உலகின் மானுட வர்க்கத்திற்கு மிக மோசமான நோய் வேறு இல்லை’’ என்றார் அமெரிக்க நாட்டுப் பகுத்தறிவு மேதை இங்கர்சால் அவர்கள்.
இந்தத் தீபாவளியே அதற்குச் சரியானதொரு எடுத்துக்காட்டு.
மேலும் கொடுமையானது இது. ‘‘அசுரர்கள்’’ என்று ஆரியர்களால் பெயர் சூட்டப்பட்டு, அவதூறு சேற்றை அவர்கள்மீது பூசி, ‘தேவர்கள் வென்றார்கள், கொன்றார்கள்’ என்று கதைகள் புனைவுமூலம் நம் திராவிட இனத்தின்மீது நிகழ்த்தப்பட்ட பண்பாட்டுப் படையெடுப்பினை அடிப்படையாகக் கொண்ட ஒரு கட்டுக்கதைப் புராணம்.
தீபாவளிபற்றி அவ்வேடு வெளியிட்டுள்ள ஒரு கட்டுரை இதோ:
//
‘‘தீபாவளியை முதன்முதலில் கொண்டாடியவர்!’’
‘‘தீபாவளியை முதன்முதலாகக் கொண்டாடியவன், நரகாசுரனின் மகனான பகதத்தன் என்கின்றன புராணங்கள்."
‘‘தமிழகத்தில் சோழர் காலம்வரை தீபாவளி கொண்டாடப்படவில்லை. திருமலை நாயக்கர் காலத்தில்தான் முதன்முதலாக தீபாவளி கொண்டாடப்பட்டது.’’
தீபாவளிப் பண்டிகை மிகத் தொன்மையான பண்டிகையாகும். வாத்சாயனர் எழுதிய நூலில் ‘யட்ஷ ராத்திரி’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இது கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று இரவில் கொண்டாடப்படுகிறது. இதை ‘சுகராத்திரி’ என்றும் சொல்வதுண்டு.
கைலாய மலையில் தீபாவளி நாளில் சிவனும், பார்வதியும் சொக்கட்டான் விளையாடியதாக ஒரு கதை உண்டு. அதை நினைவூட்டும் விதமாகவே குஜராத் மாநில மக்கள் தீபாவளி நாள் இரவில் சொக்கட்டான் ஆடும் பழக்கத்தை இன்றும் கடைப்பிடித்து வருகின்றனர்.
தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அதில் இருந்து முதலில் தோன்றியவர் தன்வந்திரி. ஆயுர்வேத மருத்துவத்தைத் தோற்றுவித்த இவர் தோன்றிய நாளே தீபாவளி என்ற கருத்தும் உண்டு.
சிவபெருமானின் உடலில் பாதியை அடைய திருக்கேதாரத்தில் தவம் செய்தார் பார்வதி. சதுர்த்தசி நாளில் சக்திக்கு தன் உடலில் பாதியைத் தந்து அர்த்தநாரீஸ்வரர் ஆனார் சிவன். அதன் அடிப்படையில், கணவனுடன் எந்நாளும் சேர்ந்தே இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு தீபாவளி நாளில் கேதாரகவுரி விரதம் இருக்கி்ன்றனர் பெண்கள். அப்போது அம்மியையும், குழவியையும் சிவசக்தியாக பாவித்து பூஜை செய்கின்றனர்.
தீபாவளியன்று விடியற்காலையில் நீராடி மகாலட்சுமியை பூஜை செய்து, தீபங்களை வீட்டில் பல இடங்களில் வைத்தால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்று விஷ்ணு புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
சிறீரங்கத்தில் சிறீரங்கநாதருக்கு மிகச் சிறப்பான தீபாவளி கொண்டாட்டம் உண்டு. அன்று அவருக்கு விசேஷமாக ‘ஜாலி அலங்கார’ நிகழ்ச்சி நடைபெறும். ஆயிரம் ஒரு ரூபாய் நாணயங்களை இரண்டு துணிகளில் மூட்டையாகக் கட்டி, மேளதாளங்கள் முழங்க, நாகஸ்வர இசை ஒலிக்க, வேத பாராயணத்துடன் பெருமாள் திருவடிகளில் சமர்ப்பிப்பதே ஜாலி அலங்கார நிகழ்ச்சி ஆகும்.
குஜராத் மாநிலத்தில் வியாபாரிகள் புதுக் கணக்கு துவங்கும் நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. அன்று சிறுவர்கள் பட்டம் பறக்கவிட்டு மகிழ்வார்கள்.
புத்த பிரான் முக்தி அடைந்த நாளாக பவுத்தர்களும், மகாவீரர் முக்தி அடைந்த நாளாக ஜைனர்களும் தீபாவளி திருநாளை கொண்டாடுகிறார்கள்.
வாரணாசியில் ‘கார்த்திகை பூர்ணிமா’ என்ற பெயரில் தீபாவளி கொண்டாடப்படுகிறது.
பீகார் மாநிலத்தில் தீபாவளிக்கு இரு தினங்களுக்கு முன்னர் தன்வந்திரி பகவானுக்கு விழா எடுக்கின்றனர். இந்த விழாவுக்கு ‘தந்தேராஸ்’ என்று பெயர்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில், தீபாவளியன்று குபேர பூஜை செய்வதை முக்கியமானதாக கருதுகி்ன்றனர். அன்று செல்வத்தின் அதிபதியான குபேரனை வழிபட்டால், ஆண்டு முழுவதும் பணத் தட்டுப்பாடு ஏற்படாது என்பது அவர்கள் நம்பிக்கை.
உத்தரப்பிரதேசத்தில், சீதாதேவியை ராமர் மீட்ட திருநாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.
மேற்கு வங்காளத்தில் காளிதேவி வழிபாடாக ‘மகாநிசா’ என்ற பெயரில் தீபாவளியை கொண்டாடுகி்ன்றனர்.
கொல்கத்தாவி்ல் தீபாவளியையொட்டி, ‘பூவாணப் போட்டி’ நடைபெறுகிறது. எவரது வாணம் (பட்டாசு) வானில் அதிக உயரத்தில் சென்று வெளிச்சப் பூக்களைக் கொட்டுகிறதோ, அவரே வெற்றி பெற்றவர்!’’
//
இதுவே அக்கட்டுரையாகும்.
தீபாவளிப் பண்டிகையை முதன்முதலாகக் கொண்டாடியவன் நரகாசுரனின் மகனான பகதத்தன் என்கின்றனவாம் புராணங்கள்!
ஆதாரம் எது? புராணம் – புராணங்களே புளுகு மூட்டைகள் என்பது பலரும் ஒப்புக்கொண்ட ஒன்று. (1/2)