தருமபுரி சட்டமன்றத் தொகுதி, நல்லம்பள்ளி ஒன்றியம், அதியமான் கோட்டையில் மாம்பழம் சின்னத்தில் பெருவாரியான வாக்குகளை வழங்கி, வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நேரில் நன்றி தெரிவித்த போது.!
#NDA | #PMK | #DHARMAPURI
மதுபோதையில் சக மாணவனை படுகொலை செய்து
காணொலியில் படம் பிடித்த சிறுவர்கள்: கஞ்சா, மது
போதையை ஒழிக்க போர்க்கால நடவடிக்கை தேவை!
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியை அடுத்த காட்டுவளவு என்ற இடத்தில் மது போதையில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரு மாணவர்கள் உள்ளிட்ட மூவர் ஒன்று சேர்ந்து கோகுல் என்ற சக மாணவரை சரமாரியாக கத்தியால் குத்தி படுகொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. மாணவன் கோகுலை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவன் கோகுல், அவருடன் பயிலும் மாணவர்கள் இருவர் உள்ளிட்ட மூவரும் இணைந்து மது அருந்திக் கொண்டிருந்த போது, சாதியின் பெயரை சொல்லி திட்டியதால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் மாணவன் கோகுலை மற்ற மூவரும் சேர்ந்து கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளனர். அதுமட்டுமின்றி, கொலை செய்யும் காட்சிகளை காணொலியாக பதிவு செய்து கொண்டாடியுள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் மூவரையும் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
மது மனிதர்களை எந்த அளவுக்கு மிருகமாக்குகிறது என்பதற்கு மிக மோசமான எடுத்துக் காட்டு இது தான் . தங்களுடன் ஒன்றாக பழகிய நண்பனை கொலை செய்தது மட்டுமின்றி, அதை காணொலியில் பதிவு செய்து கொண்டாடும் அளவுக்கு மது மனிதனை கொடூரனாக மாற்றியிருக்கிறது. மதுவை விட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் மனிதர்களை மேலும் மோசமாக்குகின்றன.
தமிழ்நாட்டில் மதுவும், பிற போதைப் பொருள்களும் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதைத் தான் இந்த நிகழ்வு உணர்த்துகிறது. தமிழ்நாட்டில் மது மற்றும் போதையின் சீரழிவுகள் ஏற்கனவே உச்சத்தை அடைந்து விட்டன. நிலைமை மேலும் மோசமாவதைத் தடுக்க தமிழ்நாட்டில் மது மற்றும் போதையை முற்றிலுமாக ஒழிக்க போர்க்கால அடிப்படையில் புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu
பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை
1/2
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை சந்தித்து, பொன்னாடை அணிவித்து, மலர்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.
#CMJosephVijay
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து!
அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் இன்று 72-ஆம் பிறந்தநாளை கொண்டாடும் வேளையில் அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். @EPSTamilNadu அவர்கள் உடல் நலத்துடன் நூறாண்டு வாழ்ந்து பொதுவாழ்வுப் பணியாற்ற எனது வாழ்த்துகள்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் பொறுப்பேற்ற பின்பு மூன்று முக்கிய அறிவிப்புகளை நிறைவேற்றிடும் வகையில் அரசாணை கோப்புகளில் கையொப்பமிட்டார்.
#CMJosephVijay
PMK Anbumani | விஜய்க்கு அன்புமணி கோரிக்கை
பெண்கள் பாதுகாப்பு, போதை ஒழிப்பு திட்டங்களுக்கு முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டதை வரவேற்கிறோம்
69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க சாதிவாரி சர்வே எனப்படும் சமூகநீதி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்
- அன்புமணி எக்ஸ் பதிவு
TVK Vijay | CM Vijay | ANBUMANI
#TamilnaduCM | #vijaypoliticalentry | #JosephVijay | #Newstamil24x7 | #Tamilnews | #TamilnaduPolitics | #TamilagaVetriKalagam | #VijayCM | #TVKMLA | #TVKCelebration
புதிய முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் பாமகவின் வாழ்த்துகள்: சமூகநீதி, நல்லாட்சிப் பாதையில் புதிய அரசு நடை போடட்டும்!
தமிழ்நாட்டின் 12-ஆம் முதலமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் அவர்களும், அவருடன் 9 பேர் கொண்ட அமைச்சரவையும் இன்று பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறது. புதிய முதலமைச்சருக்கும், அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்திருப்பது எந்தக் கட்சியாக இருந்தாலும், ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுத்த மக்களின் நோக்கமும், எதிர்பார்ப்பும் ஒன்று தான். எந்த வகையான போதையும் இல்லாத, பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் வாழக்கூடிய, இளைஞர்களுக்கு தரமான கல்வியும், வேலைவாய்ப்பும் வழங்கக்கூடிய, உழவர்களின் வருமானத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தக் கூடிய, அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தக் கூடிய, அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கூடிய, இவை அனைத்துக்கும் மேலாக சமூகநீதியை பாதுகாக்கக் கூடிய அரசு அமைய வேண்டும் என்பது தான் அது. இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற புதிய அரசு தீவிரமாக முயல வேண்டும்.
த.வெ.கவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முதல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான ஆணையில் புதிய முதலமைச்சர் முதல் கையெழுத்திட வேண்டும்; மற்ற வாக்குறுதிகளையும் விரைந்து நிறைவேற்ற வேண்டும். மக்கள் நலன் காப்பதற்கான விஜய் அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி அதன் முழு ஆதரவை அளிக்கும்; அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுவதிலும், அந்தத் தவறை திருத்தச் செய்வதிலும் பொறுப்புள்ள, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக பா.ம.க. செயல்படும்.
இது குதிரை பேரமாக இருக்கலாம் அல்லது ஆள் கடத்தலாக இருக்கலாம்: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நியூஸ்18க்கு பேட்டி
#TTVDhinakaran#Governor#AMMK#News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ