National President - @BJPMahilaMorcha | Former Member of Tamil Nadu Legislative Assembly - Coimbatore South | கோவை தெற்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் |
Delighted to meet Hon’ble PM Shri @narendramodi ji today.
Presented him the book on 4 years journey of Mahila Morcha—covering initiatives, State visits & experiences—and the Veerangana coffee table book on 75 women freedom fighters.
Shared how innovative outreach programmes have connected women across the nation with the Party & Govt., bringing positive change in their lives. Hon’ble PM listened keenly and gave invaluable guidance.
Truly grateful for this opportunity & blessings.
கோவை மாவட்டம், காளம்பாளையம் பகுதியில் வசிக்கும் ஏழ்மையான குடும்ப பின்னணியை சார்ந்த செல்வி. காவியஶ்ரீ என்ற மாணவி அண்மையில் நடந்து முடிந்த நீட் தேர்வில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இன்று அவரை நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
இப்படி பல ஏழை மாணவர்களின் மருத்துவப் படிப்பு கனவு நீட் என்ற ஒன்றால் மட்டுமே சாத்தியமாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
#Neet
மத்திய அமைச்சர் திரு. @dpradhanbjp ஜி அவர்களின் பதவி விலகல் என்பது, போராட்டக்காரர்கள் கூறுவது போல நீட் எதிர்ப்பு அரசியலுக்குக் கிடைத்த வெற்றி அல்ல.
மாறாக, நாட்டின் கல்வி அமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தவும், பொறுப்புணர்வை உயர்த்திக் காட்டவும், தனிப்பட்ட பதவியை விட தேச நலனையே உயர்வாகக் கருதி எடுக்கப்பட்ட ஒரு உயர்ந்த அரசியல் முடிவாக இதை பார்க்க வேண்டும்.
இந்திய அரசியல் வரலாற்றில் பல்வேறு காலங்களில் போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள், வினாத்தாள் கசிவுகள் போன்ற காரணங்களால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும், மறுதேர்வுகள் நடத்தப்பட்டும் உள்ளன. அத்தகைய சூழல்களில், மாணவர்களின் உண்மையான உழைப்பே பாதுகாக்கப்பட்டது.
அதேபோல, நீட் தேர்விலும் முறைகேடுகள் கண்டறியப்பட்டு உடனடியாக விசாரணை நடத்தப்பட்டு, தேவையான நடவடிக்கைகள் மூலம் லட்சக்கணக்கான மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவு பாதிக்கப்படாமல் மறுதேர்வு நடத்தப்பட்டது.
ஆனால், நீட் விவகாரத்தை மையமாகக் கொண்டு சில அரசியல் மற்றும் தேச விரோத நோக்கங்களுடன் செயல்பட்ட சக்திகள், மாணவர்களின் உணர்வுகளைத் தூண்டி, இந்தியாவின் கல்வி அமைப்பின் மீதான நம்பிக்கையை சீர்குலைக்க முயன்றன.
கல்வியை அரசியலாக்கும் இத்தகைய முயற்சிகள் எந்த வகையிலும் மாணவர்களின் எதிர்காலத்திற்கு நன்மை பயப்பதில்லை.
திரு. தர்மேந்திர பிரதான் ஜி அவர்களின் பதவிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கல்வி சீர்திருத்தங்களில் சில.
• தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 – கட்டமைப்பு சீர்திருத்தம்
3 முதல் 18 வயது வரையிலான மாணவர்களுக்காக பழைய 10+2 கல்வி முறையை மாற்றி 5+3+3+4 கல்வி அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆரம்பக் கல்வியில் (3–8 வயது) அடிப்படைத் திறன்கள் மற்றும் அனுபவ அடிப்படையிலான (Experiential Learning) கற்றலுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது.
• பிஎம் ஸ்ரீ (PM SHRI) பள்ளிகள்
13,000-க்கும் மேற்பட்ட பள்ளிகள் ஸ்மார்ட் வகுப்பறைகள், தகவல் தொழில்நுட்ப (ICT) வசதிகள் மற்றும் அறிவியல் ஆய்வகங்களுடன் மேம்படுத்தப்பட்டன.
மாணவர்கள் இடைநிறுத்திய கல்வியை பின்னர் மீண்டும் தொடரவும், சான்றிதழ், டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பை நெகிழ்வான முறையில் முடிக்கவும் வசதி ஏற்படுத்தப்பட்டது.
உலகத் தர பல்கலைக்கழகங்கள்: டீகின் (Deakin), வொல்லொங்கொங் (Wollongong) போன்ற வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் வளாகங்களைத் தொடங்க அனுமதிக்கப்பட்டன. அதேசமயம், ஐஐடி (IIT) வளாகங்கள் வெளிநாடுகளிலும் விரிவுபடுத்தப்பட்டன.
மொழி அணுகல்: பி.டெக் பாடப்புத்தகங்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்வி 12 இந்திய மொழிகளில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
நுழைவுத் தேர்வுகள்: NEET, JEE, CUET ஆகியவை 12 இந்திய மொழிகளிலும், CTET 19 மொழிகளிலும் நடத்தப்படத் தொடங்கியது.
இந்திய மொழி விழா: ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4 முதல் 11 வரை "இந்திய மொழி உற்சவ்" கொண்டாடப்படத் தொடங்கியது.
கோடைக்கால முகாம்கள்: கூடுதலாக ஒரு இந்திய மொழியைக் கற்பதற்கான இயக்கத்தில் 4.7 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் இணைக்கப்பட்டனர்.
நிறுவன ஆதரவு: UGC, CBSE மற்றும் NCERT ஆகியவற்றின் கீழ் உள்ள தேர்வுகளை உள்ளூர் மொழிகளில் எழுத அனுமதி வழங்கப்பட்டது.
பூஜ்ஜிய சகிப்புத்தன்மை: தேர்வுத் தாள் கசிவு (Paper Leak) சம்பவங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் மற்றும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கும் கொள்கை பின்பற்றப்பட்டது.
ஒரு தலைவரின் மதிப்பு அவர் பதவியில் இருப்பதாலல்ல; அவர் நாட்டிற்காக செய்த சீர்திருத்தங்களாலும், எதிர்கால தலைமுறைக்காக உருவாக்கிய கொள்கைகளாலும் அளவிடப்படுகிறது. அந்த வகையில், திரு. தர்மேந்திர பிரதான் ஜி அவர்களின் பணிகளுக்கு நாட்டின் கல்வித் துறை வரலாற்றில் ஒரு முக்கியமான இடம் உண்டு.
A proud moment for every Indian!
Delighted that Sarnath in Uttar Pradesh has been inscribed on the UNESCO World Heritage List.
Sarnath has a close association with Lord Buddha, whose timeless message of wisdom, compassion and harmony inspires the world.
This recognition celebrates India’s profound civilisational and spiritual heritage. It will also inspire more people across the world to come to Sarnath and connect with the ideals of Lord Buddha.
@UNESCO
Thank you, Shri Dharmendra Pradhan ji, for your tireless service to India's education sector and your unwavering faith in the potential of our youth. Your vision, dedication and commitment to transformative reforms will continue to inspire generations. Wishing you strength and success in your future journey.
A spectacular performance by Jhandu Kumar, who has opened India’s medal tally at the #CWG2026 by winning a Bronze in the Men’s Heavyweight Para Powerlifting event! Congratulations to him. His achievement is a powerful reflection of immense strength, unwavering determination and years of disciplined effort. By overcoming every challenge and excelling on the international stage, he has made the entire nation proud and inspired countless Indians.
இன்னும் ஒரே ஒரு நாள் தான்!
மனதின் குரல் நிகழ்ச்சியின் 136வது அத்தியாயத்தில், பிரதமர் @narendramodi அவர்களுடன் இணையுங்கள்.
🗓️ ஜூலை 26 | காலை 11:00 மணி (IST)
📺 நேரலையில் காண: https://t.co/obIVtAywq5
#MannKiBaat#மனதின்_குரல்
பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் திரு. சக்கரவர்த்தி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
தாங்கள் நீண்ட ஆயுளுடனும், நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், மக்கள் பணியிலும் கட்சிப் பணியிலும் தொடர்ந்து சிறப்புடன் சேவையாற்றிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
தேனி மாவட்டம், தேனி நகர் பகுதியில் இன்று அதிகாலை 60 வயது பெண் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டு, அவரது வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டதாகக் கூறப்படும் செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
முந்தைய திமுக ஆட்சியில்கூட தனியாக வீட்டில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பு குறித்து கவலைகள் எழுந்தன. ஆனால் தற்போதைய தவெக ஆட்சியிலோ குற்றச் சம்பவங்கள் ஒருபடி மேலே சென்று தனியாக வசிக்கும் முதியவர்களை கொலை செய்து பணம், நகைகளைத் திருடும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது.
@TVKVijayHQ ஆட்சி சிறப்பாக இருக்கும் என்று மக்கள் எதிர்பார்த்தபோதும், மாற்றாக தொடர்ந்து குற்றங்கள் பெருகி வருவதே நிஜம்.
பொதுவாக சிங்கங்கள் அதிக நேரம் தூங்கும் இயல்புடையவை; பசித்தால் மட்டுமே இரை தேடும். அதுபோலத்தான் பெண்களின் பாதுகாப்பிற்காக ஆரம்பித்து வைத்த சிங்கப் பெண் படையும் கும்பகர்ணத் தூக்கத்தில் இருக்கிறது போலும். கணக்கு காட்ட வேண்டுமே என்பதற்காக அங்கொன்றும் இங்கொன்றுமாக வழக்குகளைப் பதிந்து “நாங்களும் இருக்கிறோம்” என்று காட்டிக்கொள்ளும் அளவில்தான் அவர்களின் செயல்பாடு உள்ளதாகத் தெரிகிறது.
எனவே சிங்கப் பெண் படையை முழுவீச்சில் களமிறக்கி, சுறுசுறுப்புடன் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்து குற்றங்களைத் தடுக்க வேண்டும் என தமிழக காவல்துறையை வலியுறுத்துகிறேன்.
நமது இந்திய இளைஞர்களிடமிருந்து கிடைத்த அபாரமான வரவேற்பிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!
நேற்றிரவு வெளியான காணொளிக்குக் கிடைத்த அளப்பரிய அன்பிற்கும் நேர்மறையான கருத்துகளுக்கும் நாட்டின் இளைஞர்களுக்கு நம் பிரதமர் @narendramodi அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார். அந்த காணொளி தற்போது 303 Million-க்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளதுடன்; முந்தைய சாதனையான 300 மில்லியன் பார்வைகளை முறியடித்து, வெளியான முதல் 24 மணி நேரத்திற்குள் அதிகப் பார்வையாளர்களைப் பெற்ற 'காணொளி' என்று பரவலாகக் குறிப்பிடப்படுகிறது.
#YouthPower #YuvaSathiWithModi #modivideo
தமிழக பாஜக-வின் மூத்த தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஐயா திரு. @MRGandhiNGL காந்தி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் நல்ல உடல் நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் தொடர்ந்து மக்கள் பணியாற்றிட இறைவனை வேண்டிக் கொள்கிறேன். See less
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரும், மூத்த அரசியல் தலைவருமான ஐயா. @drramadoss அவர்ளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் நீண்ட ஆயுளுடனும் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற இறைவனை வேண்டுகிறேன்.
PM Shri @narendramodi thanked India’s youth for the response and suggestions following his video and expressed his gratitude for the overwhelming support.
Watch ⬇️
தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கோவை மக்கள் சேவை மையம் மற்றும் Ideamax இணைந்து நடத்தும் கைத்தறி ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி PSGR கிருஷ்ணம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
#VanathiSrinivasan l #HandloomDay l
#Handloom2026
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்ட நமது பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், வினாத்தாள் கசிவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை அறிவித்ததன் தொடர்ச்சியாக, தேர்வு முறைகேடு வழக்குகளை விரைந்து விசாரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கோவை மக்கள் சேவை மையம் மற்றும் Ideamax இணைந்து நடத்தும் கைத்தறி ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி Dr.G.R தாமோதரன் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
#VanathiSrinivasan l #HandloomDay l
#Handloom2026
தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கோவை மக்கள் சேவை மையம் மற்றும் Ideamax இணைந்து நடத்தும் கைத்தறி ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி கோவை நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
#VanathiSrinivasan l #HandloomDay l
#Handloom2026
தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கோவை மக்கள் சேவை மையம் மற்றும் Ideamax இணைந்து நடத்தும் கைத்தறி ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி கோவை கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
#VanathiSrinivasan l #HandloomDay l
#Handloom2026
இதெல்லாம் என்ன மனநிலை என்று தெரியவில்லை..?
திருச்சியில், தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஜனநாயகன் திரைப்படம் காண வந்த ரசிகர் ஒருவர் கட்அவுட் முன்பாக சேவலை அறுத்து இரத்தம் தெறிக்க அதனை பேனரில் படும்படி செய்த காணொளியானது கடும் அதிர்ச்சியை அளிக்கிறது.
தவெக அரசு பதவியேற்ற நாளிலிருந்து நடைபெறுகிற சம்பவங்களைப் பார்த்தால் இதுபோன்ற செய்கைகளில் ஈடுபடுவர்கள் எல்லாம் உண்மையாகவே அறிவு முதிர்ச்சி பெற்றவர்கள்தானா என்ற சந்தேகம் எழுகிறது. தமிழ்நாட்டில் சினிமா நடிகர்களுக்கு பால் அபிஷேகம் செய்வது, மதுபானத்தில் அபிஷேகம் செய்வது போன்ற செயல்கள் காலங்காலமாக தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில் நேற்று கொண்டாட்டத்தின் உச்சமாக சேவலை அறுத்து குருதி தெறிக்க பலியிடுவது கடும் கண்டனத்திற்குரியது.
ரசிகர்கள் தங்கள் அபிமான நட்சத்திரங்களின் படங்களைக் கொண்டாடுவதற்கு மரம் நடுவது, ஏழைகளுக்கு உதவுவது, அன்னதானம் கொடுப்பது என எத்தனையோ வழிகள் உள்ளன. ஆனால் அதையெல்லாம் விடுத்து தமிழ்நாட்டு கலாச்சாரத்தில் கடவுள்களுக்கு உகந்த சில செயல்களை, நம்பிக்கைகளை நடிகர்கள் முன் திணிப்பது நாளடைவில் மற்றவர்களும் பின்பற்றத் தொடங்கும் தவறான உதாரணமாகி விடும்.
இவர்களைப் போன்றவர்கள் சினிமா வேறு, நிஜம் வேறு என்பதை எப்போது உணரப் போகிறார்களோ? இனி இதுபோன்ற செயல்களை அனுமதிக்கா வண்ணம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க அரசையும், திரைத்துறை சார்ந்தவர்களையும் வலியுறுத்துகிறேன்.
*"Our PM has taken the initiative of establishing fast-track courts to protect the dreams of youth and fair and transparent results, so looking forward to it."*
Listen to a student who appreciates PM Modi's proposal to establish fast-track courts for the speedy resolution of paper leak cases.