2026 ஆம் ஆண்டு ஈரான் மீது நடத்தப்படும் போருக்காக அமெரிக்கா சுமார் 35 பில்லியன் டாலர்களைச் செலவிட்டுள்ளது. இந்தத் தொகையை பயன்படுத்தி உலக அளவில் பண ரீதியிலான வறுமையில் பாதியை ஒழித்திருக்க முடியும்.
தொழிலாளர்களுக்கான நல்வாழ்விற்கு நிதி ஒதுக்காமல் வெட்ட வேண்டுமென பிரசங்கம் செய்யும் அதே அரசியல் பிரிவினர், இஸ்ரேலுக்கான பில்லியன் கணக்கிலான ராணுவ நிதிக்கு எந்தத் தயக்கமும் இன்றி ஆதரவு அளிக்கின்றனர்.
@vijayprashad
#leftunity
https://t.co/IIB1WfXUwV
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 100 சதவிகிதம் வரை வரி விதிப்பதற்கு டிரம்புக்கு அதிகாரம் கொடுக்கும் வகையிலான மசோதா அமெரிக்க செனட் அவையில் நிறைவேறியுள்ளது..
‘லிண்ட்சி ஓ. கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026’ என்ற இந்த மசோதாவுக்கு 100 பேர் கொண்ட செனட் அவையில் 86 வாக்குகள் ஆதரவாகவும் 11 வாக்குகள் எதிராகவும் கிடைத்துள்ளன. 3 பேர் வாக்களிக்கவில்லை. சென்ட் சபையில் நிறைவேற்றப்பட்ட இந்த அம்மசோதா தற்போது பிரதிநிதிகள் சபைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த மசோதா சட்டமாக மாறினால் மீண்டும் இந்தியா மீது அதிக வரிகளை டிரம்ப் விதிப்பார்.
#Russia #US #India #Oil
அசாமில் கடந்த இரு வார காலமாக பெய்து வரும் கனமழை பெருவெள்ளம் காரணமாக 100 க்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர். மாநிலம் முழுவதும் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டதில் பெரும் பகுதியான மக்கள் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
#Assam #Flood
98 கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற பெரும் போராட்டம்.
மேகமலை, வருசநாடு உள்ளிட்ட 9 ஊராட்சிகளில் உள்ள 98 கிராமங்களில், கடந்த 100 ஆண்டுகளாக வன நிலங்களில் குடியிருந்து விவசாயம் செய்து வரும் குடும்பங்களுக்கும் பழங்குடியின மக்களுக்கும், 2006-ஆம் ஆண்டின் வன உரிமைச் சட்டத்தின்படி வீட்டுமனைப் பட்டா மற்றும் நிலப்பட்டா வழங்கக் கோரியும், விவசாயிகளை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி வெளியேற்ற வனத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் மூலம் எடுக்கப்பட்டு வரும் நிர்வாக நடவடிக்கைகளை ரத்து செய்ய வலியுறுத்தியும், நீதிமன்ற உத்தரவிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கத் தமிழக அரசு தலையிட வலியுறுத்தியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் வன உரிமைக் குழுக்கள் (கடமலை-மயிலை) சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.
@Shanmugamcpim
#AIKS #Theni #CPIM
#MSME மசோதா இன்று எந்த ஒரு விவாதங்களும் இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்று மதியம் 12.11 க்கு சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு 12.14 க்கு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜந்தர் மந்தர் போராட்டத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு அமித்ஷா விளக்கம் கொடுக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் நாடாளுமன்ற அவையில் கோஷம் எழுப்பிவந்த நிலையில் அந்த நேரத்தில் இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
எந்த விவாதமும் நடக்காததால் இந்த மசோதாவின் சாதகம் பாதகம் என்னவென்றே தெரியாமல் போய் விட்டது.
'குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு (திருத்தம்) மசோதா, 2026' ஆகஸ்ட் 3 அன்று மாநிலங்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது மக்களவையிலும் ஒப்புதல் பெறப்பட்டு நாடாளுமன்றத்தில் முழுமையாக நிறைவேறியுள்ளது.
நிர்வாகக் கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் பணப்பரிவர்த்தனை நடைமுறைகளை எளிதாக்குதல் மூலம் இத்துறை தற்போது எதிர்கொண்டு வரும் சவால்களுக்குத் தீர்வு காண்பதை இம்மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது என கூறப்படுகின்றது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 31சதவீதமும் , நாட்டின் உற்பத்தித் துறையில் 36 சதவீதமும் ஏற்றுமதியில் 41 சதவீத பங்களிப்பையம் இந்த நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
இப்படிப்பட்ட மிக முக்கியமான துறையில் முக்கிய பொருளாதார மாற்றங்களைக் கொண்டுவருகின்ற இந்த மசோதா, நாடாளுமன்றக் குழுக்களின் விரிவான ஆய்வோ அல்லது முறையான விவாதங்களோ இன்றி அவசரமாகக் கொண்டு வரப்பட்டுள்ளது.
புதிய திருத்தத்தின்படி 'குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை வகைப்படுத்துவதற்கான முதலீட்டு வரம்புகளை நீக்கி, அதை ஒன்றிய அரசே அறிவிப்பு மூலம் தீர்மானிக்கலாம் என மாற்றியமைப்பது கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் இந்த சட்டம் சாதகமாக அமையலாம் என்ற அச்சமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
#Parliment
மங்கோலிய இனத்தின் வரலாறு பழமையானது. அவர்கள் “நித்திய நெருப்பு” என்று பொருள்படும் “மங்கோல்” என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஒரு பாரம்பரிய நாடோடி இனமாகும். 1206 ஆம் ஆண்டு தெமுஜின் (Temujin) ஓனோன் நதிக்கரையில் ஒரு குல மாநாட்டை நடத்தினார்.
அதில் தெமுஜினுக்கு செங்கிஸ்கான் என்ற பட்டம் சூட்டப்பட்டது. கான் என்பது அரசன் அல்லது தலைவன் என்று பொருள்படும். செங்கிஸ் என்பது பெருங்கடல் அல்லது அகண்ட விரிந்த எனப் பொருள்படும். ‘தெங்கிஸ்’ எனும் மங்கோலிய வார்த்தையிலிருந்து உருவானது. அனைத்து மங்கோலிய இனக்குழுக்களின் மாபெரும் கானாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
https://t.co/VyS8uUsvvO
ஆற்று வெள்ளத்துக்கு நடுவே மூன்று முதல் நான்கு அடி இடைவெளியில் உள்ள இந்த கான்கிரீட் தூண்கள் மீது ஆபத்தான முறையில் குதித்துச் செல்லக்கூடிய இந்த மாணவர்களின் பயணம் இன்று நேற்று அல்ல நீண்ட காலமாகவே இப்படி தான் உள்ளது.
பாஜக ஆளு மத்தியபிரதேசத்தில் இப்படித்தான் மாணவர்கள் உயிரை பணயம் வைத்து பள்ளிக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.
மத்திய பிரதேசம் மட்டுமல்ல தமிழ்நாட்டின் மலை கிராமங்கள் துவங்கி இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான கிராமங்களில் உள்ள மாணவர்கள் முதியவர்கள் நோயாளிகள் அத்தியாவசிய மற்றும் அவர தேவைகளுக்கு எளிமையான முறையில் சமவெளிப்பகுதியை அடைய முடியாத நிலை தான் உள்ளது.
#Madhyapradesh #BJP
பாலஸ்தீனர்கள் துளி அளவு கூட மகிழ்ச்சியாக இருந்து விடக்கூடாது என்பது தான் இஸ்ரேலின் நோக்கம்.
இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் நடைபெற்ற பாலஸ்தீன குடும்பத்தின் திருமண நிகழ்வில் புகுந்த இஸ்ரேல் ராணுவம் கொடூரமாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.
#Gaza#Israel
மோடி அரசின் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்காற்று சட்டம் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல் என அமெரிக்கா எம்பி எதிர்ப்பு
தொண்டு நிறுவனங்கள் (#NGO க்கள்), அறக்கட்டளைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மத அமைப்புகள் பெறும் வெளிநாட்டு நன்கொடைகளைக் கட்டுப்படுத்தும் வகையிலான சட்டத்தை அமல்படுத்துவதற்கு மோடி அரசு முயற்சித்து வருகிறது.
இந்தத் திருத்தங்களின் படி பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனத்தை உரிய காலத்தில் புதுப்பிக்கத் தவறினாலோ, அல்லது காலதாமதம் ஏற்பட்டாலோ அல்லது பதிவைப் புதுப்பிக்க மறுக்கப்பட்டாலோ அந்நிறுவனம் தனது செயல்பாட்டை இழந்து விடும். உடனடியாக அந்நிறுவனத்தின் அசையும் சொத்துக்கள், அசையா சொத்துக்கள், அதன் கையிருப்பில் உள்ள நிதி உட்பட அனைத்தும் அரசின் வசம் தானாகவே சென்று விடும்.
அதற்கான சட்ட நடைமுறைகளை அரசு பின்பற்றத் தேவையில்லை. அப்படி அவற்றைப் பறிமுதல் செய்யும் அதிகாரம் அரசால் நியமிக்கப்படும் அதிகாரிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இச்சட்டதிருத்தங்கள் அரசுக்கு வரையறையற்ற அதிகாரத்தை வழங்குவதோடு மாநில அரசுகள் தலையிடுவதற்கான உரிமையையும் மறுக்கிறது. இப்படி கைவசப்படுத்தப்படும் அசையா சொத்துக்கள், அசையும் சொத்துக்களை விற்றுக் கிடைக்கும் பணத்தையும் மற்றும் கணக்கில் உள்ள பணம் முழுவதையும் அரசின் கஜானாவில் சேர்க்கவும் இச்சட்டம் வழிவகை செய்கிறது.
இந்நிலையில் மோடி அரசின் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்காற்று சட்ட திருத்தங்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல் என டிரம்ப்பின் குடியரசுக்கட்சி எம்.பி.,யான ரிலே மூர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளைப் பாதிக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்காற்று சட்டத்தில் (#FCRA) கொண்டுவரப்படும் திருத்தங்கள், தேவாலயங்கள் மற்றும் மத தொண்டு நிறுவனங்களை இந்திய அரசு கட்டுப்படுத்த வழிவகுக்கும் என கூறியுள்ளார்.
மனித மனங்களை உலுக்கிய இறுதி நிகழ்ச்சி
2023 நவம்பர் 23 அன்று காஸாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பால்ஸ்தீனர்களை இஸ்ரேல் படுகொலை செய்தது. அவர்களது உடல்களுக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு 2026 ஆகஸ்ட் 4 அன்று இறுதி நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நடத்திய இத்தாக்குதலில் கிட்டத்தட்ட 300 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 114 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்களது உடல்களும் முழுமையாக கிடைக்கவில்லை. குண்டு வீச்சில் உடல்கள் மிக மோசமாக சிதறி கிடந்துள்ளது. அவற்றை வைத்து தான் இறுதி நிகழ்வுகள் நடந்துள்ளது.
மேலும் பலரது உடல் கிடைக்கவில்லை. இதற்கு காரணம் அன்று இஸ்ரேல் மிக அதிக சக்திவாய்ந்த குண்டுகளைவீசியுள்ளது. அதில் சிமெண்ட் மற்றும் இரும்பு கம்பிகளுடன் உடல்களும் உருகி அழிந்து போயிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
#Gaza
குறைந்தபட்ச ஊதியத்தை உடனடியாக வழங்கக் கோரி ஹரியானாவில் மதிய உணவுத் திட்டப் பணியாளர்கள் போராடி வருகின்றனர்.
மேலும் தங்கள் கோரிக்கைகள் குறித்து விவாதிக்க, ஆகஸ்ட் 17-ஆம் தேதியன்று ஒரு கூட்டத்தை நடத்த வேண்டும் என அவர்கள் அம்மாநில முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
#Hariyana #CITU
ஜூலை 30 மற்றும் 31 ஆகிய நாட்களில் மொராக்கோவில் இருந்து ஸ்பெயின் நாட்டின் செயுடா பகுதிக்கு 60 ஆயிரத்துக்கும் அதிகமான அகதிகள் கடல் வழியாக நீந்திச் சென்ற செய்திகளை நாம் பார்த்தோம்.
ஆப்பிரிக்க மக்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்கு காரணமாக தீவிரமான வறுமை பஞ்சம் என்பது உண்மைதான் என்றாலும் இந்த குறிப்பிட்ட நிகழ்வில் மொராக்காவின் புவிசார் அரசியல் சூழ்ச்சிகள் உள்ளது என தெரியவந்துள்ளது.
இது சூழ்ச்சி நடவடிக்கை தான் என்று ஸ்பெயின் தொழிலாளர் கம்யூனிஸ்ட் கட்சியும் (PCTE) குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் இவ்வாறு நாட்டுக்குள் வரும் அகதிகளை அரசியல் அழுத்தங்களை ஏற்படுத்துவதற்காகப் பயன்படுத்துவதையும், அதைப் பயன்படுத்தி இனவெறியைத் தூண்டும் வலதுசாரி சக்திகளின் முயற்சிகளையும் அக்கட்சி தனது அறிக்கையில் வன்மையாகக் கண்டித்துள்ளது.
ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள செயுடா ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் ஆப்பிரிக்காவில் இருக்கும் இந்த பகுதி மொராக்கோ நாட்டையொட்டியே அமைந்துள்ளது. எனவே, மொராக்கோவிலிருந்து தரை வழியாகவோ அல்லது கடல்வழியாகவோ மிக எளிதாக இந்த எல்லைக்குள் நுழைந்துவிட முடியும்
.ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தப் பகுதியைத் தன் வசப்படுத்த வேண்டும் என்பது மொராக்கோவின்நீண்டகால திட்டமாக உள்ளது என ஏற்கெனவே பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும் இரு நாடுகளுக்கும் இடையே சில மோதல்களும் உண்டு. இந்தச் சூழலில் தான் மொராக்கோ அரசாங்கம் தனது நாட்டின் எல்லைப் பாதுகாப்புப் படையின் சோதனைகளைக் கண்டும்காணாமல் இருந்து, ஒரே இரவில் சிறுவர்கள் உட்பட சுமார் 60,000 க்கும் மேற்பட்ட மக்களை செயுடா எல்லைக்குள் செல்ல மறைமுகமாக உதவி செய்துள்ளது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதாவது தன் நாட்டுடன் முரண்படும் ஸ்பெயின் அரசுக்கு சர்வதேச அளவில் நெருக்கடி கொடுக்க அகதிகளை ஒருஅரசியல் ஆயுதமாக மொராக்கோ அரசு பயன்படுத்தியுள்ளது என்பதே குற்றச்சாட்டுகள்.
சமீபகாலமாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவற்றுடன் மொராக்கோ தனது ராணுவம் மற்றும் வணிக உறவுகளை அதிகரித்து வருகிறது. மறுபுறம், மொராக்கோவின் அண்டை நாடான அல்ஜீரியாவுக்கும், ஸ்பெயினுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு இருந்து வந்த நிலையில் சமீப நாட்களாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகையபின்னணியில் தான் இந்த அகதிகள் வருகை நடந்துள்ளது என ஸ்பெயின் தொழிலாளர் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தச் சிக்கலில் ஸ்பெயினில் ஆட்சியில் உள்ள கூட்டணி அரசு எல்லையில் இவ்வளவு பெரிய மனிதப் பேரழிவு நடக்கக் காரணமான தனது சொந்த வெளியுறவுக் கொள்கைகளையோ, மொராக்கோவுடன் தனக்குள்ள முரண்பாடுகளையோ வெளிப்படையாகப் பேச மறுத்து வருகிறது. அதுமட்டுமின்றி எல்லாவற்றுக்கும் காரணம் “மனிதக் கடத்தல்கும்பல்கள் தான்” என்று ஒட்டு மொத்த பிரச்சனைகளையும் திசைதிருப்பி உண்மையை மூடிமறைக்கப் பார்க்கிறது எனவும் குற்றம் சாட்டியுள்ளது.
#Morocco #Ceuta #Migrants #Europe
அரசு என்பது ஒரு வர்க்கத்தை மற்றொரு வர்க்கத்தினரால் ஒடுக்கும் கருவியே தவிர வேறில்லை. ஜனநாயக குடியரசில் முடியாட்சி அமைப்பை காட்டிலும் குறைவாக ஏதும் இருப்பதில்லை.
- பிரெட்ரிக் ஏங்கல்ஸ்
இன்று தோழர் ஏங்கல்ஸ் நினைவு தினம்
#quotes#engels#marxism#OTD
தெலுங்கானாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் #SFI தலையில் இன்று பேரணி சென்றுள்ளனர்.
நிலுவையில் உள்ள கல்வி உதவித்தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி இப் பேரணி நடைபெற்றுள்ளது.
@SFI_CEC@Adarshmsaji#Telangana