நம் வாழ்வின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்கும் கருவிகள், வாகனங்கள் மற்றும் நாம் செய்யும் தொழில் என அனைத்தையும் இறைவனாகப் போற்றி, உழைப்பின் உயர்வையும், தொழிலின் மேன்மையையும் போற்றும் ஆயுத பூஜை நன்னாளையும், கல்வி, கலை, தொழில் என புதிதாகத் தொடங்கும் அனைத்து முயற்சிகளையும் சிறக்கச் செய்யும் வெற்றித் திருநாளாம் விஜயதசமி நன்னாளையும் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்திருநாட்கள், அனைவரின் வாழ்விலும் புதிய நம்பிக்கையையும், வளத்தையும் கொண்டு சேர்க்கட்டும்! நன்மைதரும் புதிய முயற்சிகளை முன்னெடுத்து, கல்வியிலும், தொழில் வளர்ச்சியிலும் மேன்மையுற்று, வெற்றித் தமிழகத்தைப் படைத்திடுவோம்!
ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கட்டும்! அனைவரது வாழ்விலும் நலமும், வளமும் பெருகட்டும்!
#CMJosephVijay
சென்னை மாநகரில் பெய்து வரும் கனமழை மற்றும் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை ஆகியவற்றை எதிர்கொள்ளத் தேவையான முன்னேற்பாடுகள் குறித்து மாண்புமிகு முதல்வர் அவர்கள் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் பல்வேறு துறைகள் சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.
தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் மரணம் ஏற்றுக்கொள்ள முடியாத தவிப்பையும், தாங்கிக்கொள்ள முடியாத துயரத்தையும் தருகிறது.
தமிழ்த் திரையிசையில் தனக்கென ஒரு தனித்துவமான இசை அடையாளத்தை உருவாக்கி, கானா பாடல்களுக்கு வெகுஜன அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்ததில் அவரது பங்களிப்பு அளப்பரியது.
மனித உணர்வுகளின் அத்தனை பரிமாணங்களையும் தனது இசையால் உயிர்ப்பித்தவர், இன்று உயிரிழந்தார்.
அன்னாரின் இழப்பை ஏற்றுக்கொள்ளும் மனவலிமை இல்லை. அவரது குடும்பத்தினருக்கும், இசை உலகத்தினருக்கும், கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
#RIPDevaSir