சட்டமன்ற தேர்தல் 2026 மேலாண்மைக் குழு
அன்புள்ள சகோதர,சகோதரிகளுக்கு வணக்கம்!
வருகின்ற சட்டமன்ற தேர்தல் 2026 சிறப்பாக எதிர்கொண்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியானது பெருவாரியாக வெற்றி பெற்று, தமிழகத்தில் ஆட்சி அமைத்திடும் வகையில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் களப்பணியில் முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறார்கள்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த சட்டமன்ற தேர்தலில், நமது கட்சியின் தேர்தல் பணிகளை கடந்த காலங்களைப் போல சிறப்பாக வழிநடத்திட, எனது தலைமையில் சட்டமன்ற தேர்தல் மேலாண்மைக் குழுவானது அமைக்கப்படுகிறது.
- மாநில தலைவர் திரு.@NainarBJP அவர்கள்
திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற
'மோடி பொங்கல் விழா' நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் திரு.@AmitShah அவர்கள் மக்களுடன் பொங்கல் பண்டிகை கொண்டாடினார்.
பொங்கல் பண்டிகை இயற்கையுடனும், நமது சமூகங்களுடனும் நமது ஆழமான பிணைப்பு, நன்றியுணர்வு மற்றும் நல்லிணக்கத்தின் மூலம் புதுப்பிக்கும் ஒரு புனிதமான பண்டிகை எனவும், இது அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும் மற்றும் நல்ல ஆரோக்கியத்தையும் வழங்கட்டும் எனவும் உள்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருச்சிராப்பள்ளியில் உள்ள அருள்மிகு ஜம்புகேஸ்வரர் மற்றும் அருள்மிகு அரங்கநாத சுவாமி கோயிலில் உள்துறை அமைச்சர் திரு.@AmitShah அவர்கள் பிரார்த்தனை செய்தார். இந்த பழங்கால கோயில்கள் இந்தியாவின் புகழ்பெற்ற கலாச்சார பாரம்பரியம் மற்றும் பிரமாண்டமான கட்டிடக்கலையின் உயிருள்ள உருவகங்கள் என்றும், இங்கு பிரார்த்தனை செய்ததால் தான் அதிர்ஷ்டசாலி என்றும் உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
Offered prayers at the Arulmigu Jambukeswarar and Arulmigu Aranganatha Swamy Temple in Tiruchirappalli, Tamil Nadu. These ancient temples are living embodiments of India’s glorious cultural heritage and grand architecture. Fortunate to have prayed here.