மக்களின் நம்பிக்கை… இளைஞர்களின் எழுச்சி…! 🔥🚩
மக்களின் பிர���்சினைகளுக்காகத் துணிச்சலுடன் குரல் கொடுத்து, கொள்கையில் உறுதியுடன் பயணிக்கும் அண்ணன் அண்ணாமலை!
விமர்சனங்கள் எத்தனை வந்தாலும் மக்கள் நலன் சார்ந்த குரல் தொடர்ந்து ஒலிக்கட்டும்!
மக்கள் பணி… கொள்கைப் பயணம்… இளைஞர்களின் நம்பிக்கை! ❤���🚩
#Annamalai #WeTheLeaders #VoiceOfTrueNationalist #Anna4TN
இந்திய சுத��்திரப் போராட்ட வரலாற்றில் தனக்கெனத் தனி அத்தியாயம் படைத்த கப்பலோட்டிய தமிழன், ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் நினைவு தினம் இன்று.
ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக, சுதேசி இயக்கத்தின் அடையாளமாகச் சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி, இந்தியர்களின் தொழில் வலிமையையும் தன்னம்பிக்கையையும் உலகறியச் செய்தவர். தியாகத்தையும், துணிச்சலையும், தேசப்பற்றையும் தனது வாழ்வின் அடையாளமாகக் கொண்டிருந்தவர்.
அந்நிய ஆதிக்கத்திற்கு அடிபணியாமல், நாட்டின் விடுதலைக்காகத் தனது உடைமைகளையும், வாழ்வ���யும் அர்ப்பணித்த ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் துணிச்சலையும், தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம்.
அன்றும் இன்றும் என்றும் ஒரே கொள்கை! 🚩
சூழ்நிலைகள் மாறலாம், காலங்கள் மாறலாம்; ஆனால் கொள்கையிலும், நம்பிக்கையிலும், உறுதியிலும் என்றும் மாற்றமில்லை!
தனக்கென ஒரு பாதை, அந்தப�� பாதையில் சமரசமில்லாத பயணம்…
அண்ணன் அண்ணாமலை! 🕉️🚩
#Annamalai #அண்ணாமலை #Ideology #NationFirst @annamalai_k
வீ த லீடர்ஸ் (We The Leaders) சார்பில், நமது அன்பு அண்ணன் திரு. அண்ணாமலை அவர்களின் வழிகாட்டுதலில், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் இளைஞர்களின் எதிர்காலத்திற்கும் மற்றுமொரு சிறப்பான முன்னெ���ுப்பு! ❤️
TNPSC குரூப் 4 மற்றும் NMMS தேர்வுகளுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் மூலம் மாணவர்களும் தேர்வர்களும் வீட்டிலிருந்தே தரமான பயிற்சி பெ��்று தங்களது இலக்கை நோக்கி முன்னேறலாம்.
கல்வி அனைவருக்கும் சென்றடைய வேண்டும்; திறமையான மாணவர்களுக்கு சரியான வாய்ப்பும் வழிகாட்டுதலும் கிடைக்க வேண்டும் என்பதே இந்த முயற்சியின் நோக்கம்.
வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்… உங்கள் வெற்றிப் பயணத்தை இன்றே தொடங்குங்கள்! ❤️
கல்வியே வளர்ச்சி! இளைஞர்களே நாட்டின் எதிர்காலம்!
#WeTheLeaders #Annamalai #TNPSCGroup4 #NMMS #FreeOnlineCoaching #EducationForAll
மன்னிப்பு கேட்டுவிட்டால் மட்டும் பிரச்சினை முடிந்துவிடாது!
பக்தர்களின் மத உண��்வுகளும், இறை நம்பிக்கையும் புண்படுத்தப்பட்டுள்ளன. இதை ஒரு சாதாரண மன்னிப்புடன் கடந்து செல்ல முடியாது.
முதலமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மன்னிப்பு மட்டுமல்ல, நடவடிக்கையும் வேண்டும்! 🙏🚩
#TamilNadu #Devotees #Annamalai #hrnce
பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆட்சேபனைக்குரிய குறுஞ்செய்திகள் அனுப்பியதாகக் கூறப்படும் கள்ளக்குறிச்சி TVK சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீதான புகாரில், தேசிய மகளிர் ஆணையம் (NCW) தலையிட்டு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதை அண்ணன் கே. அண்ணாமலை அவர்கள் வரவேற்றுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக காவல்துறை தலைமை இயக்குநரிடம் (DGP) தேசிய மகளிர் ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது. ஒரு பெண் உயர் அதிகாரியின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் பாதிக்கும் வகையிலான புகார்கள் எழுந்துள்ள நிலையில், அவற்றை சாதாரணமாகக் கடந்து செல்ல முடியாது.
அரசியல் அதிகாரம் என்பது பொறுப்புணர்வுடன் செயல்படுவதற்கானது; தனிப்பட்ட செல்வாக்கை வெளிப்படுத்துவதற்கானது அல்ல. குறிப்பாக, பெண்களின் கண்ணியம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான புகார்களில் எவ்வித அரசியல் தலையீடும் இன்றி, பாரபட்சமற்ற விசாரணை நடைபெற வேண்டும்.
பெண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் தேசிய மகளிர் ஆணையத்தின் தலையீடு வரவேற்கத்தக்கது. குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மை முழுமையாக விசாரிக்கப்பட்டு, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
பெண்களின் கண்ணியமும் பாதுகாப்பும் அரசியலுக்கு அப்பாற்பட்டவை!
#KAnnamalai #NCW #WomenSafety #TamilNaduPolitics #TVK #Justice #WomenRights
நேற்று, திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவின்போது, இந்து சமய அறநிலையத்துறை குழு உறுப்பினரான திரு.வேல்முருகன், தமிழக முதலமைச்சருக்கு “அரோகரா”, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு "அரோகரா" என முழக்கமிட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. முருகப்பெருமானின் திருவிழாவையும், பக்தி முழக்கங்களையும் அரசியல் புகழ்ச்சிக்குப் பயன்படுத்துவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.
“அரோகரா” என்பது முருகப்பெருமானை போற்றிப் பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் எழுப்பும் புனிதமான முழக்கம். அந்த இறை முழக்கத்தை அரசியல் தலைவர்களுக்காகப் பயன்படுத்துவது ஆன்மிக மரபுகளைக் கொச்சைப்படுத்துவதுடன், முருகப்பெருமானை வழிபடும் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் செயலாகும்.
இந்து சமய அறநிலையத்துறையின் குழு உறுப்பினராக இருப்பவரே இத்தகைய செயலில் ஈடுபடுவது மு��்றிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. பக்தர்களின் நம்பிக்கையையும் வழிபாட்டு மரபுகளையும் அவமதிக்கும் வகையிலான இதுபோன்ற செயல்களைத் தவிர்க்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு தமிழக முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் அறிவுறுத்த வேண்டும்.
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது என்பது காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் வழிபாட்டு மரபு. மக்களின் மத நம்பிக்கையோடும், பாரம்பரியத்தோடும் தொடர்புடைய இந்த நடைமுறையை, அரசியல் காரணங்களுக்காகத் தடுத்து நிறுத்துவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
கடவுள் மறுப்பு என்ற போலியான பிம்பத்தைக் கட்டமைப்பதற்காக, முந்தைய திமுக அரசு கையாண்ட அதே அணுகுமுறையை தற்போதைய தவெக அரசும் தொடர்வது முற்றிலும் ஏற்புடையதல்ல.
மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெளிவான உத்தரவு பிறப்பித்த பிறகும், அந்த உத்தரவைச் செயல்��டுத்துவதற்குப் பதிலாக மேல்முறையீடுகள் மூலமும் நிர்வாகத் தாமதங்கள் மூலமும் விவகாரத்தைத் தொடர்ந்து இழுத்தடிப்பது நீதித்துறையின் உத்தரவுகளுக்கும், பக்தர்களின் உரிமைகளுக்கும் எதிரானது. அரசின் பொறுப்பு பிரச்சனையை நீட்டிப்பதல்ல, சட்டத்தின் அடிப்படையில் தீர்வை உறுதிப்படுத்துவதே.
அனைத்து மதங்களையும் சேர்ந்த மக்கள் சகோதரத்துவத்துடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து வரும் த���ருப்பரங்குன்றத்தில், தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கி அமைதியைக் குலைக்கும் நடவடிக்கைகளுக்கு மாநில அரசே காரணமாகிவிடக் கூடாது. வருடம் ஒரு நாள், பக்தர்கள் ஒரு குழுவாக அமைதியாகச் சென்று, தீபம் ஏற்றுவதில், யாருக்கு என்ன பிரச்சனை வந்துவிடப் போகிறது.
காலங்காலமாகத் தொடரும் வழிபாட்டு உரிமையை இனியும் அரசியல் மற்றும் நிர்வாகக் காரணங்களைக் கூறி முடக்காமல், உயர்நீதிமன்ற உத்தரவை மதித்து, இந்த விவகாரத்திற்கு தவெக அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
தீமையை அழித்து நன்மையை நிலைநாட்டிய முருகப்பெருமானின் அருளால், சஷ்டி விர���த்தை சூரசம்ஹார தினமாகிய இன்றுடன் நிறைவு செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
நாளை நடைபெறவிருக்கும் திருக்கல்யாணத்தை முன்னிட்டு, சஷ்டி விரதத்தை நிறைவு செய்யும் பக்தர்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகள். முருகப்பெருமானின் அருள் அனைவருக்கும் என்றும் துணை நிற்கட்டும்!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
வீரவேல் முருகனுக்கு அரோகரா!
தீமையை அழித்து நன்மையை நிலைநாட்டிய முருகப்பெருமானின் அருளால், சஷ்டி விரதத்தை சூரசம்ஹார தினமாகிய இன்றுடன் நிறைவு செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
நாளை நடைபெறவிருக்கும் திருக்கல்யாணத்தை முன்னிட்டு, சஷ்டி விரதத்தை நிறைவு செய்யும் பக்தர்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகள். முருகப்பெருமானின் அருள் அனைவருக்கும் என்றும் துணை நிற்கட்டும்!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
வீரவேல் முருகனுக்கு அரோகரா!
கந்த சஷ்டி கடுமையான விரதம் மேற்கொள்ளும் அனைத்து முருக பக்தர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்! 🙏🏻
அனைவரின் வேண்டுதல்களும் நிறைவேறி, நினைத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்க ��ண்ணன் அண்ணாமலை அவர்களின் அன்பான வாழ்த்துகள்! 🚩
வெற்றி வேல்! வீர வேல்! ❤️
#Annamalai #KandaSashti #Muruganthunai
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது காலங்காலமாகத் தொடரும் ஆன்மிக மரபு. பக்தர்களின் மத நம்பிக்கையையும் பாரம்பரியத்தையும் அரசியல் காரணங்களுக்காகத் தடுப்பது ஏற்க முடியாதது!
நீதிமன்ற உத்தரவுகளை மதித்து, பக்தர்களின் உரிமைகளை அரசு உறுதி செய்ய வேண்டும். 🙏
#Thiruparankundram #KarthigaiDeepam #TamilNadu #Annamalai