திரையுலகின் திசைவழிப் போக்கை மடைமாற்றம் செய்த பேராளுமை இயக்குநர் பாரதிராஜா!
-----------------------------------------
இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் மறைவு பெரும் துயரமளிக்கிறது. தவிர்க்க இயலாத நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக நான் புது தில்லியில் இருப்பதால், அண்ணன் பாரதிராஜா அவர்களின் திருவுடலுக்கு அஞ்சலி செலுத்த இயலாத நிலையில் உள்ளேன். அதற்காகப் பெரிதும் வருந்துகிறேன்.
என்மீது பேரன்பைச் செலுத்தியவர். 'என்னைவிட என் தந்தை தான் உங்களை மிகவும் நேசிப்பவர்' என்று அவரது இல்ல நிகழ்ச்சி ஒன்றில் தனது தந்தையிடம் அறிமுகப்படுத்தினார். 'நீயும் என் பிள்ளை தான் தம்பி' என்று இயக்குநரின் தந்தை என்னிடத்தில் நெகிழ்வுடன் கூறிய அந்த நிகழ்வு இன்னும் எனது நெஞ்சில் நிழலாடுகிறது.
திரையுலகின் திசைவழி போக்கை மடைமாற்றம் செய்த பேராளுமை இயக்குநர் பாரதிரஜா. அரை நூற்றாண்டுக்கு முன், ஆயிரத்து தொளாயிரத்து எழுபதுகளில் திரைக்கலையை அதீத ஒப்பனைகளிலிருந்து மீட்டு, எளிய மக்களின்இயல்பான வாழ்வியலை புதிய மரபாக நிலைநாட்டியவர். சாதியத்துக்கு எதிரான புரட்சிகர சிந்தனைகளை விதைக்கும் 'வேதம்புதிது' என்னும் திரைக் காவியத்தைத் தமிழுலகுக்குக் கொடையளித்தவர். அப்படத்தில் இனமுரசு சத்யராஜ் அவர்களைக் கொண்டு சாதி ஆதிக்கத்துக்கு எதிராக கர்ஜனை செய்தவர்.
"பாலுத்தேவர் என்பதில், 'பாலு' ஒங்க பேரு; 'தேவர்' என்ன நீங்க படிச்சு வாங்குன பட்டமா ?" - என்று அவர் ஒரு குழந்தையின் மூலம் எழுப்பிய கேள்வி, மனசாட்சியுள்ள ஒவ்வொருவரின் நெஞ்சையும் உலுக்கியது.
அப்படத்தின் கடைசி காட்சியில், 'இளம்பிஞ்சுகளையாவது சுதந்திரமாக வாழவிடுங்கள்'- என்று அறிவுறுத்தும் வகையில் மூத்தோரிடமிருந்து இளையோரைப் பிரித்துக் காட்டுவது இன்றும் கண்ணிலேயே நிற்கிறது.
'இளந் தலைமுறையினரின் நெஞ்சில் சாதி நஞ்சைப் பாய்ச்ச வேண்டாம்' என்கிற அவரது கருத்து, தமிழ்நாட்டில் அம்பேத்கர் இயக்கங்கள் வலுப்பெறாத காலத்தில் தெறித்துத் திரையுலகை அதிரவைத்த ஒன்றாகும்.
'சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை' என்னும் சிறுத்தைகளின் கருத்தை எமது மேடைகளில் வழிமொழிந்தவர். அவரது மறைவு தமிழ்ச் சமூகத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும்.
அவருக்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் கலையுலகத்தைச் சார்ந்தோருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர்-தலைவர், விசிக.
நடிகர் அஜித்குமார் தாயாரின் இறுதிச் சடங்கு நடைபெற்ற பெசன்ட் நகர் மின் மயானத்தில் 200க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் இருந்து வழிநெடுகிலும் உரிய பாதுகாப்பு அளித்த போலீஸாருக்கு நடிகர் அஜித் குமார் நன்றி தெரிவித்தார்.
திரு.அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி மணி அம்மையார் அவர்கள் காலமானதையறிந்து வேதனையடைகிறேன்.
அம்மாவை இழந்துவாடும் அஜித்குமார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்!
திருமதி மோகினி மணி அம்மையார் அவர்களுக்கு விசிக சார்பில் அஞ்சலி செலுத்துகிறோம்!
இவண்
தொல்காப்பியன் திருமாவளவன்,
நிறுவனர் - தலைவர்,
விசிக.
@official_ajith
உடல்நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி நடிகர் #தல அஜித் குமார் அவர்களின் #தாயார் இறந்தார்.
ஆழ்ந்த இரங்கல் அம்மா...
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தம்பி வன்னிஅரசு அவர்கள் இன்று அமைச்சராகப் பொறுப்பேற்றார். மாண்புமிகு அமைச்சர் வன்னிஅரசு அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
Company Name: Bhagya Housing Properties
Title: தக்கோலம் ரயில் நிலையம் அருகில்
Approved Logo: Dtcp and Rera
Per Sqft: 850 Rs
Location Advantages:
1.Kanchipuram to Tirupati Highway
2.Parandur Greenfield Airport
3.Arakonam Junction
Free Site Visit Available
Call:7092953002
கரூரில் நேற்று விஜய் அவர்களின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மிதிப்பட்டு காயம்பட்டு கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பவர்களை நேரில் சந்தித்து உடல்நலன் குறித்து விசாரித்து ஆறுதல் கூறிய பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்...
சமூகநீதி நாள்:
---------------
சமத்துவத்தை வென்றெடுக்க தனது வாழ்வை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட சமூகநீதிப் போராளி தந்தை பெரியாரின் மகத்தான பங்களிப்பை நினைவு கூர்ந்து நன்றிப் பெருக்கோடு அவரது பிறந்தநாளான சமூகநீதிநாளில் அவருக்கு எமது வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.
இலண்டன் மாநகரம் LEAKE STREET என்னும் வீதி முழுவதும் இருபுறமும் உள்ள சுவர்களில் ஓவியர்கள் தாம் விரும்பும்படி ஓவியங்களை தீட்டியுள்ளனர். அவ்வீதி முழுவதும் வண்ணமயமாக உள்ளது. கண்கவரும் கவின்கலை வீதி.
சில ஓவியர்கள் சுவரில் வண்ண ஓவியங்களை தீட்டிக் கொண்டிருந்தனர். 'டெய்லர்' என்னும் ஓவியர் RAST என எழுதிக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த மராட்டியத்தைச் சார்ந்த தோழர் ஒருவர் எம்மைப் பார்த்ததும் 'ஜெய்பீம்' என கூறினார். அதனைப் பற்றிக் கேட்ட அந்த ஓவியர் அச்சுவரில் JAI BHIM என எழுதினார். அவரிடம் புரட்சியாளர் அம்பேத்கர் பற்றி சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்டோம். பெருமகிழ்வான இனிய நொடிப்பொழுதுகள்.
#London #StreetPainting
ஆக-17 தமிழர் எழுச்சி நாள்.
இதனை முன்னிட்டு ஆக -16 இரவு "மதச்சார்பின்மை காப்போம் " என்னும் பொருளில் ஒருங்கிணைக்கப்படும் நிகழ்வின் இறுதி அமர்வாக வாழ்த்தரங்கம் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் மக்கள் நீதி மையத்தின் நிறுவனர் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களும், திண்டுக்கல் லியோனி அவர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்கவுள்ளனர்.
எனவே, இயக்கத் தோழர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுகிறன்.
@ikamalhaasan
இன்று மாநிலங்களவைக்கு முதல் முறையாகச் செல்லும் வாய்ப்புக் கிட்டியது.
தோழர் ரவிகுமார், திரு. அப்துல்லா ஆகியோருடன் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து கலைநாயகன் @ikamalhaasan அவர்களும், திமுக உறுப்பினர்கள்
திரு. #வில்சன், திரு. #சிவலிங்கம்,
#கவிஞர்_சல்மா ஆகியோரும் மாநிலங்களவை உறுப்பினர்களாகப் பதவி ஏற்றுக்கொண்ட நிகழ்ச்சியைக் கண்டு பேருவகையுற்றேன்.
திரு. கமல் அவர்களின் அன்பு மகள் ஸ்ருதிஹாசன், திரு. அருணாசலம்,
திரு. மௌரியா உள்ளிட்ட மக்கள் நீதி மையத்தின் முன்னணி தலைவர்கள் பலரும் அடுத்த மாடத்தில் அமர்ந்திருந்தனர்.
பிற மூன்று உறுப்பினர்களின் குடும்பத்தினரும் வருகை தந்திருந்தனர்.
அவையில் திரு. மல்லிகார்ஜூன்கார்கே, சரத்பவார், திருச்சி சிவா, ஜெயராம்ரமேஷ், அமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
பதவியேற்புக்குப் பின்னர் சில நிமிடங்கள் அவை நடவடிக்கைகள் அமைதியாக நடந்தேறின. பின்னர் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விருட்டென எழுந்து
'பீகாரில் நடக்கும் வாக்காளர் பட்டியல் மோசடிகள்' குறித்து விவாதிக்க வேண்டுமென வலியுறுத்தி குரலெழுப்பினர்.
மக்களவையிலும் இதேகோரிக்கையை வலியுறுத்தி ஐந்தாவது நாளாக எதிர்க்கட்சிகள் குரலெழுப்ப அந்த அவை ஒத்தி வைக்கப்பட்டிருத்தது.
மாநிலங்களவையும் உடனே ஒத்திவைக்கப்பட்டது.
அதன்பின்னர் மாநிலங்களவை துணை தலைவரின் அறையில் திரு.கமல் அவர்களைச் சந்தித்து அவருக்கு ஆடைபோர்த்தி விசிக சார்பில் மனம்நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்தோம்.
@PWilsonDMK@tiruchisiva@kharge