Hi Yaadeesh.
Thanks for bringing it to my attention. My office will be in touch with you and do the needful. Will speed up the process after the elections. Please be in touch. 🙏🏽
I have been waiting for your help for two years. I have faith in you sir. I request you to help me, a disabled woman🙏
நான் இரண்டு வருடங்களாக உங்கள் உதவிக்காகக் காத்திருக்கிறேன். உங்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது ஐயா. மாற்றுத்திறனாளிப் பெண்ணான எனக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்
நமது கழகத் தலைவர் அவர்கள் கொளத்தூர் பகுதிக்குப் பிரசாரத்திற்குச் சென்றபோது சென்னை மாநகர காவல்துறையின் ஏற்பாடுகள் போதிய அளவில் இல்லாததால் முறைப்படுத்துதல் போன்ற பணி முற்றிலும் முடங்கியது. இதனால், மக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியானதைத் தொடர்ந்து கழகத் தலைவர் அவர்கள் பிரசாரத்தைப் பாதியிலேயே ரத்து செய்யும் நிலை ஏற்பட்டது.
நேற்று, வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம் நடந்தபோது, திமுக-வால் ஏவப்பட்ட குண்டர்கள் பாட்டில்களை உடைத்து பெண்கள் மீது வீசி அச்சுறுத்தும் ரவுடியிச செயல்களில் ஈடுபட்டார்கள்.
பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில் இதுபோன்ற ரவுடியிச அச்சுறுத்தல்கள் நடைபெறும் வரை காவல்துறை வேடிக்கை பார்த்ததா?
காவல்துறை அதிகாரிகள் இருவரைக் கைது செய்த நிலையில், அவர்கள் எதற்காக இதனைச் செய்தார்கள்? அவர்களைத் தூண்டிவிட்டவர்கள் யார்? போன்ற காரணங்களுடன் நேர்மையாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
"தவெக கூட்டத்தில் கலந்துகொள்ளும் பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் ஆகியோர் ஒவ்வொரு நிமிஷமும் பதற்றத்தோடு இருக்க வேண்டும். தவெக-வை ஆதரிப்பவர்களுக்கு இதுதான் எங்கள் செய்தி" என்று அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்த பொதுமக்கள் மீது வன்முறையில் இறங்கிவிட்டதா திமுக?
தமிழக வெற்றிக் கழக பிரசாரத்திற்கு எதிராகத் தொடர் அடாவடி போக்குகளில் ஈடுபட்டுவரும் சமூகவிரோத கும்பல் மீது மதிப்பிற்குரிய தேர்தல் அதிகாரி அவர்கள் உரிய நடவடிக்கைகளை எடுத்து, மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கொளத்தூரில் கழகத் தலைவர் அவர்களுக்கு மக்கள் கொடுத்த எழுச்சியான வரவேற்பைப் பார்த்து திமுக தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அடைந்த பயமே, வில்லிவாக்கத்தில் இவ்வாறு எதிரொலித்துள்ளது. முதலில், நமக்கு பாதுகாப்பு கொடுக்காமல் மறைமுக மிரட்டலில் ஈடுபட்டவர்கள், இப்போது நேரடி வன்முறையில் இறங்கிவிட்டார்கள். அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கும் தமிழக பெண்களும், பொதுமக்களும் அராஜக திமுக ஆட்சிக்குத் தக்க பதிலடி கொடுப்பார்கள்.
1/4
தமிழக வெற்றிக் கழகத்தின் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கான செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. நான் பிறந்து வளர்ந்த ஊரான திருவெறும்பூரில் நடைபெற்ற இந்த நிகழ்வில், 'சொந்த ஊர்க்காரன்' என்ற உரிமையோடு பங்கேற்று சிறப்புரை ஆற்றினேன்.
ஒருபக்கம் பொருந்தா கூட்டணியை அமைத்துவிட்டு கொள்கை கூட்டணி என்று போலி பிம்பத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் திமுக, இன்னொருபக்கம் பாஜக-வுடன் மறைமுக கூட்டணி வைத்து சுதந்திரமாகக் கொள்ளையடித்தும் சிறுபான்மையின சகோதரர்களை ஏமாற்றியும் வருகிறது.
இதனால், மக்கள் செல்வாக்கையும் கொள்கையையும் இழந்துவிட்டது திமுக. ஆனால், மக்களுடனான கூட்டணியை மட்டுமே ஏற்று, மதச்சார்பற்ற சமூகநீதி கொள்கைகளுடன், மக்களின் ஒரே நம்பிக்கையாக, மக்களில் ஒருவராக களத்தில் நிற்கிறார் வெற்றித் தலைவர் அவர்கள்.
திருச்சி முதல் தமிழ்நாடெங்கும் பண்ணையார் ஆதிக்கமும், வாரிசு அரசியலும் அதிகாரமாகக் கோலோச்ச, சாமானிய மக்களுக்கான அரசியல் அடையாளத்தோடு விரைவில் புதிய சரித்திரம் படைக்கக் காத்திருக்கிறார் கழகத் தலைவர் அவர்கள்.
திமுக கட்சிக்குள் உள்ள குழப்பம், கூட்டணிக் கட்சிகளின் அதிருப்தி, செல்லும் இடங்களிலெல்லாம் மக்கள் ஆதரவு இல்லாதது என கடும் நெருக்கடியில் இருக்கிறார் முதல்வர். இதனால், முதல்வர் ஸ்டாலின் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் தோல்வி பயத்தில் இருக்கிறார்கள்.
நம் கழகத்தின் திருவெறும்பூர் வெற்றி வேட்பாளர் சகோதரர் திரு. நவல்பட்டு விஜி அவர்கள் உறுதியாக சட்டமன்ற உறுப்பினராக வெற்றிப்பெறுவார்.
நம் கழகத் தலைவர் அவர்களுக்கு மக்கள் கொடுத்துவரும் பேராதரவு, மக்களாட்சியில் புதிய வெற்றி வரலாற்றை உருவாக்கப்போகிறது. கழகத் தலைவர் அவர்கள் தமிழக முதல்வராக வென்று, அனைவருக்குமான நல்லாட்சியை வழங்கப்போகிறார்.
1/2
'சக மனிதர்களை அன்பு மற்றும் கருணைக் கொண்டு நேசிப்பதே வாழ்வின் அடிப்படை' என்று போதித்தவர். ஏழை மக்களின் துன்பத்தைப் போக்கத் துணை நில்லுங்கள், அநியாயங்களை எதிர்த்துப் போராடுங்கள், நல்லிணக்கமும் சகோதரத்துவமும் நிறைந்த நல்வாழ்வைப் பின்பற்றுங்கள் போன்ற உயரிய மானுட அறத்தைப் பிரசாரம் செய்தவர் இயேசு கிறிஸ்து.
அவரது உன்னத வாழ்வையும் அற்புத போதனைகளையும் கடைப்பிடிக்கும் கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் மற்றும் அனைவருக்கும் தியாகமும் சிறப்பும் வாய்ந்த ஈஸ்டர் பெருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
புதுச்சேரி மாநிலத்தில் வரலாறு காணாத மக்கள் எழுச்சிக்கு மத்தியில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார் நம் வெற்றித் தலைவர் அவர்கள். தமிழகத்தில் மட்டுமல்லாமல், புதுவையிலும் பொருந்தா கூட்டணி அமைத்து, கூட்டணிக்கும் நேர்மையில்லாமல் மக்களுக்கும் நேர்மையில்லாமலேயே ஆண்ட, ஆளும் கட்சிகளின் அரசியல் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், கூட்டணி போன்ற போலி பிம்பங்களைப் புதுவை மக்கள் நம்பத் தயாராக இல்லை. மக்களுக்காக நேரடியாகக் குரல் கொடுக்கும் ஒருவர், மக்களோடு என்றும் நிற்கும் நம்பிக்கையான தலைவர், மக்களுடனான கூட்டணியை மாபெரும் மதிப்பாக ஏற்றுள்ள நம் வெற்றித் தலைவர் அவர்கள் வழிகாட்டும் தவெக-வை தேர்ந்தெடுக்கப் புதுவை மக்கள் தயாராகிவிட்டார்கள்.
புதுச்சேரியில் பேரழுச்சியுடன் மக்கள் திரண்டிருந்த காட்சி, நடக்கவிருக்கும் மக்களாட்சி மாற்றத்திற்கான சாட்சியாக மாறியுள்ளது. "எல்லோருக்கும் எல்லாம்" என்று நினைக்கும் நம் மக்கள் தலைவர் அவர்கள் வழிகாட்டும் தவெக தலைமையிலான ஆட்சி புதுச்சேரியிலும் அமையப்போவது உறுதி.
1/2
வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி 104-வது வார்டில் இன்று தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டோம்.
ஒவ்வொரு வீட்டிலும் ஒரு அண்ணனாக, தம்பியாக, அவர்கள் வீட்டுப் பிள்ளையாக மக்கள் என்னை வரவேற்று வாழ்த்தினார்கள். கழகத் தலைவர் அவர்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை, கழகத்தின் வெற்றி வேட்பாளராக என் மீது மக்கள் காட்டிவரும் அன்பு ஆகிய அனைத்தும் சந்தேகத்துக்கு இடமின்றி கழக ஆட்சி அமையப்போவதைக் கூறுகிறது.
ஏழை, எளிய மக்கள் வாழும் வில்லிவாக்கம் தொகுதிக்கு திமுக ஆட்சி காட்டிவந்த பாரபட்சத்தை மக்கள் உணர்ந்துவிட்டார்கள். மக்கள் மீது உண்மையாக அக்கறை வைத்திருப்பவர்கள் யார் என்று மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள்.
விசில் சின்னத்திற்கு வாக்களிப்போம்!
வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கான நலனை வென்றெடுப்போம்!!
நம்மால் முடியும்!!!
1/3
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் தேர்தல் பிரசாரத்தை முடக்கும் செயல்களில் சென்னை மாநகர காவல் ஆணையர் தொடர்ந்து ஈடுபட்டுவருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
நேற்று சென்னையில் கழகத் தலைவர் அவர்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள மாலை 2 மணியிலிருந்து 6 மணிவரை அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. தேர்தல் நடத்தும் அலுவலர் முதலில் நான்கு மணிநேரம் அனுமதி கொடுத்திருந்த நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் திரு. அருண் அவர்களின் அழுத்தத்தாலும் மிரட்டலாலும் அடுத்த ஒருமணி நேரத்தில் அது ஒரு மணிநேரமாகக் குறைக்கப்பட்டது. கழகத் தலைவர் அவர்கள் பிரசாரம் செய்யக்கூடாது என்றே இதனைத் திட்டமிட்டுச் செய்துள்ளனர்.
தமிழக மக்களின் பேராதரவு பெற்ற ஒரு தலைவருக்கே இந்த நிலைமை என்றால், சாமானிய மக்களின் ஜனநாயக நிலை இங்கு என்ன என்ற கேள்வி எழுகிறது.
நமது கழகத் தலைவர் அவர்களுக்கு மக்கள் மத்தியில் உள்ள பேராதரவைக் கண்டு தோல்வி பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கிறது தீயசக்தி திமுக. 'நமது தலைவரை எப்படியாவது முடக்கிவிட வேண்டும்; மக்களைச் சந்திக்காமல் செய்துவிட வேண்டும்' என்ற நோக்கத்தில் தேர்தல் நடத்தை விதிகளையும் ஜனநாயக உரிமைகளையும் பொருட்படுத்தாமல் அதிகாரிகள் மூலம் சதிச்செயல்களில் ஈடுபட்டுவருகிறது திமுக.
ஏற்கனவே, இதனை தலைமைத் தேர்தல் அதிகாரியைச் சந்தித்து கழகத் தலைவர் அவர்கள் முறையிட்டுள்ளார். தொடர்ந்து, சட்டப்படி ஜனநாயக வழியில் நமக்கான பிரசார உரிமையை மீட்டெடுப்போம். நமக்கு எதிரான சதிச்செயல்களை முறியடிப்போம்.
அதிகாரத்துக்காக எந்த எல்லைக்கும் போகும் சர்வாதிகாரத்தனத்தில் இறங்கியுள்ள திமுக-வின் தீய செயல்களை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். தங்கள் மக்களாட்சி வாக்கு மூலம் அதற்குத் தக்க பதிலடி கொடுப்பார்கள்.
#DMKScaredOfTVK
வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள தந்தை பெரியார் நகர், திரு.வி.க நகர், முத்தம்மன் கோவில் தெரு, வெள்ளாளர் தெரு, குஞ்சுதம் குருசாமி தெரு, சிவலிங்கம் தெரு, குப்புசாமி தெரு ஆகிய பகுதிகளில் இன்று தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டோம்.
செல்லும் இடங்களில் எல்லாம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்கள் கொடுக்கும் உற்சாக வரவேற்பும், கழகத் தலைவர் அவர்கள் மீது கொண்ட நம்பிக்கையும், கழகத்தின் வெற்றி வேட்பாளரான என் மீது காட்டிவரும் பாசமும் நமது வெற்றியை உறுதியாகக் கூறுகிறது.
தாய்மார்கள், தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், மூத்த குடிமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் நம்மை வாழ்த்தி வரவேற்கிறார்கள். 'தவெக-விற்குதான் எங்கள் ஓட்டு' என்று மனதார சொல்கிறார்கள்.
வில்லிவாக்கம் தொகுதி கழகத்தின் வெற்றி வேட்பாளராக மக்கள் என் மீது காட்டும் அன்புக்கு என்றும் உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பேன் என்று வாக்குறுதி அளித்தேன்.
விசில் சின்னத்திற்கு வாக்களிப்போம்!
வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கான நலனை வென்றெடுப்போம்!!
நம்மால் முடியும்!!!
1/2
வெற்றித் தலைவர் அவர்களின் பிரதிநிதியாக, வில்லிவாக்கம் மக்களின் நம்பிக்கையைப் பெற்று களத்தில் நிற்கிறோம். விரைவில் வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியின் மக்கள் பிரதிநிதியாக வாகை சூடுவது உறுதி.
நம்மால் முடியும்!
வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி தெருமுனை பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
பணத்தையும், வாரிசு பகட்டையும் மட்டுமே நம்பி மக்களை ஏமாற்றிவிடலாம் என்று நினைக்கும் திமுக-வினரின் பகல் கனவு இனி பலிக்காது. ஏனெனில், மக்களோடு மக்களாக நாம் தெருக்களில் பிரசாரம் செய்யும்போதும், எளிமையாகத் தெருமுனைக் கூட்டம் நடத்தும்போதும் தாய்மார்களும், அக்கா - தங்கைகளும், வில்லிவாக்கம் பொதுமக்களும் நமக்கு வழங்கிவரும் ஆதரவு அதைத் தெளிவாக உணர்த்துகிறது.
வில்லிவாக்கம் 98-வது வார்டில் உள்ள மேட்டுத் தெருவில் கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக தொடர் மின்தடை இருந்து வருகிறது. சொல்லப்போனால், கடந்த ஞாயிறு அன்றுகூட இரவு 5 மணிநேரத்திற்கும் மேலாக மின்தடை இருந்த நிலையில், 500-க்கும் மேற்பட்ட மக்கள் சாலையில் இறங்கிப் போராட்டம் நடத்தியுள்ளனர். பின்னரே, தற்காலிகமாக மின்சார வசதி வழங்கியுள்ளனர். இவ்வாறு, அவசிய மின்சாரத் தேவைக்கே இங்கு மக்கள் ஒவ்வொருமுறையும் போராட வேண்டியுள்ளது.
இதுபோல், அடிப்படை வாழ்வாதார தேவைகளுக்கே வில்லிவாக்கம் மக்களை வஞ்சித்து வந்துள்ளது திமுக ஆட்சி. இரவுகளில் இங்குள்ள தெருக்கள் இருள் சூழ்ந்துள்ளது. தெருவிளக்கு போன்ற அவசியத் தேவைகளைக் கூட செய்துதராத அவல ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வில்லிவாக்கம் மக்கள் முடிவெடுத்துவிட்டனர்.
மக்களுக்கான தேவைகளிலும், மக்கள் நலனிலும் அக்கறைகொண்ட நம் வெற்றித் தலைவர் அவர்கள் தலைமையிலான ஆட்சியைத் தேர்ந்தெடுக்க மக்கள் முடிவெடுத்துவிட்டனர்.
1/2