தமிழ்த்திரையிசை உலகில் தனக்கெனத் தனித்துவமான இசை முத்திரையைப் பதித்து, தமிழ் மக்களின் இல்லங்களில் நீங்கா இடம்பிடித்த இசையமைப்பாளர் அன்பிற்குரிய ஐயா ‘தேனிசைத் தென்றல்’ தேவா அவர்களின் மறைவுச் செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
தேவ கானம் என்று போற்றப்பட்ட தனித்துவமிக்க ‘கானா’ பாடல்களாலும், துள்ளல் இசையாலும், இனிமையான மெட்டுகளாலும், மண்ணின் மணம் கமழும் பாடல்களாலும் மக்களின் இதயத்தோடு இரண்டறக் கலந்த ஐயா தேவா அவர்களின் மறைவு இசையுலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். அவருடைய இன்னிசையில் வெளிப்பட்ட நாட்டுப்புறத் தன்மையும், எளிய மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்திய பாடல்களும் தமிழ்த் திரையிசை வரலாற்றில், காலத்தால் அழியாத தடங்களாக என்றும் நிலைத்திருக்கும்.
என்னுடைய முதல் படமான பாஞ்சாலங்குறிச்சியை தம்முடைய இன்னிசையால் வெற்றி காவியமாக்கிய ஐயா தேவா அவர்களின் மறைவு தனிப்பட்ட முறையில் என் மனதை மிகவும் கனக்கச் செய்கிறது. தமிழ் மண்ணின் மகத்தான இசைக்கலைஞன் ஐயா தேவா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரையுல நண்பர்களுக்கும், இசை ரசிகர்களுக்கும் என்னுடைய ஆறுதலை தெரிவிப்பதோடு, துயரினை பகிர்ந்துகொள்கிறேன்.
போற்றுதற்குரிய பெருமகன் ஐயா தேவா அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!
‘தேனிசைத் தென்றல்’ தேவா அவர்களின் மூச்சக்காற்று நின்றபோதும் அவர் படைத்தளித்த இசை காற்று தமிழர் உள்ளங்களில் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தமிழினத்தின் உயர்வுக்காகவும், தமிழர்களின் நலவாழ்வுக்காகவும் தனது வாழ்வையே முழுவதுமாக ஒப்படைத்துக்கொண்டு, அதற்காகவே அரும்பாடாற்றி உழைக்கும் பெருந்தகை!
தமிழ்த்தேசிய இனத்தின் உரிமை மீட்புப்போராட்டங்களிலும், தமிழர் நலன் சார்ந்த சிக்கல்களிலும் எப்போதும் முதன்மையாகக் களத்தில் நிற்கும் களப்போராளி!
தனது கூர்மையான மதிநுட்பத்தாலும், அளப்பெரிய தர்க்க அறிவாலும் தமிழ்த்தேசியம் எனும் ஒப்பற்ற கருத்தியலை அறிவுத்தளத்திலும், மக்கள் மனத்திலும் நிலைநிறுத்தும் பேரறிவாளர்!
தமிழ்த்தேசிய அரசியலில் எங்களுக்கு முன்னத்தி ஏராக திகழ்கின்ற பெருமகன் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் பெருமதிப்பிற்குரிய எங்கள் ஐயா கி.வெங்கட்ராமன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
தகுதிநீக்கம் செய்தால் 5 ஆண்டுக்கு தேர்தலில் நிற்க முடியாது. வெற்றிபெற்ற இரண்டு எம்எல்ஏக்கள் பதவிமீண்டும் போகும். மறுதேர்தல்.
சபாநாயகர் தகுதிநீக்கம் செய்ய வாய்ப்பில்லை. அவர் முடிவெடுக்கும் வரை மற்ற மூன்று இடைத்தேர்தல் நடக்காது.
அன்பையும், இரக்கத்தையும் போதிக்கும் மகத்துவம் மிக்க மனிதநேய மார்க்கமான இசுலாத்தை அரச மதமாக ஏற்றிருக்கும்,
இறைதூதர் நபி பெருமானார் பிறந்த பெருமைமிக்க சவுதி அரேபிய நாடு மரணத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர் சிவராசா அனோஜனை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்!
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி
அன்பையும், இரக்கத்தையும் போதிக்கும் மகத்துவம் மிக்க மனிதநேய மார்க்கமான இசுலாத்தை அரச மதமாக ஏற்றிருக்கும், இறைதூதர் நபி பெருமானார் பிறந்த பெருமைமிக்க சவுதி அரேபிய நாடு மரணத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர் சிவராசா அனோஜனை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்!
சவுதி நாட்டில் பணிபுரிந்து வந்த ஈழத்தமிழரான தம்பி சிவராஜா அனோஜனுக்கு அந்நாட்டு அரசு மரணத்தண்டனை விதித்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தனது தாய்நிலத்தைவிட்டுப் புலம்பெயர்ந்து பொருளாதாரத்தேடலுக்காக சவுதி நாட்டுக்குச் சென்ற தம்பி அனோஜன், மதம் சார்ந்தும், இறைக்கோட்பாடுகள் சார்ந்தும் விமர்சனத்தை வைத்து, சமூக வலைத்தளத்தில் விவாதித்ததற்காக அந்நாட்டு அரசால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். தம்பி அனோஜன் சமூக வலைத்தளத்தில் தான் எழுதியவைகளை உடனடியாக நீக்கியதோடு, அத்தவறுக்காக வருந்தி மன்னிப்பும் கோரியிருக்கிறார்.
விளைவை அறியாது, மற்றவர் உணர்வை காயப்படுத்தும் விதமான தன்னுடைய புரிதலற்றச் செயல்பாட்டுக்கும், பெருந்தவறுக்கும் முழுமையாக வருந்தித் திருத்திக் கொள்ள வாய்ப்புக் கோரும் தம்பி அனோஜனைத் தண்டிப்பது என்பது ஏற்புடையதல்ல! அதுவும் உச்சபட்ச தண்டனையாக மரணத்தண்டனை விதித்திருப்பது துளியும் நியாயமில்லை. சிறுபிள்ளைத்தனமாக தம்பி அனோஜன், சமூக வலைத்தளத்தில் மதம் சார்ந்து தவறாக எழுதியிருந்தாலும் தன்னுடைய கருத்தின் விளைவை உணர்ந்து, பதிவுகளை நீக்கி, சவூதி அரேபிய அரசிடமும், இசுலாமிய உறவுகளிடமும் மனம்திறந்து மன்னிப்புக் கோரியபோதே அச்சிக்கல் முற்றுப்பெற்றுவிட்டதாக ஆகிவிடுகிறது. அப்படியிருக்க, அவருக்கு மரணத்தண்டனை அளிப்பது என்பது எவராலும் ஏற்க முடியாதது. மனித உரிமை குறித்துப் பெரிதும் விவாதிக்கப்பட்டுப் பேசப்படும் இருபத்தோறாம் நூற்றாண்டில் வாழும் தற்காலச்சூழலில் இணையதளத்தில் எழுதிய அவதூறானக்கருத்துக்கு மரணத்தைத் தண்டனையாக விதிப்பது என்பது மிக மோசமான முன்னுதாரணமாகும். அன்பையும், இரக்கத்தையும், கருணையையும், பரிவையும் போதிக்கும் மகத்துவம் மிகுந்த மனிதநேய மார்க்கமான இசுலாத்தை அரச மதமாக ஏற்றிருக்கும், மக்களை நன்னெறிப்படுத்தி வழிகாட்டிய போற்றுதற்குரிய இறைதூதர் நபி பெருமானார் பிறந்த பெருமைமிக்க சவுதி நாடு இத்தகையத் தவறை செய்து, வரலாற்றுப்பிழையை நிகழ்த்திவிடக்கூடாது. ஒரு தவறுக்கு அதனைவிடப் பெருந்தவறு என்பது ஒருபோதும் நீதியாகாது என்பதை சவுதி நாட்டின் ஆட்சியாளர் பெருந்தகைகள் உணர வேண்டும்.
‘நீங்கள் பூமியில் உள்ளவர்கள் மீது கருணை காட்டுங்கள். வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான்’ எனவும், ‘பிறரை மன்னிப்பதன் மூலம் நம்முடைய பாவங்களுக்கு இறைவனின் மன்னிப்பைப் பெற முடியும்’ என்று போதித்த போற்றுதற்குரிய பெருமகனார் இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள், தமது இறுதிப் பேருரையில், “தனது நாவாலும், கைகளாலும் சக மனிதர்களுக்குத் தீமை விளைவிக்காதவரே மனிதர்களில் சிறந்தவர்!” என்கிறார். மேலும், மன்னிப்பை இறைவனின் உயர்ந்த பண்புகளில் ஒன்றாகவும், மனிதன் தன்னுள் வளர்த்துக் கொள்ள வேண்டிய குணாதிசயமெனவும் உலகுக்கு உரைக்கிறார். நபி பெருமானார் காட்டிய அத்தகைய உயர்ந்த அன்பு வழி நின்று, அந்த மன்னிப்பை தம்பி அனோஜனுக்கு சவுதி நாட்டின் அரசு வழங்க வேண்டும் என்பதுதான் உலகெங்கும் வேர்பரப்பி வாழும் தமிழ்த்தேசிய இனத்தின் எதிர்பார்ப்பும், கனிவானக் கோரிக்கையுமாகும்.
ஆகவே, உலகம் தழுவி வாழும் மானுடப்பற்றாளர்களும், சனநாயகவாதிகளும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் தம்பி அனோஜனுக்கு விதிக்கப்பட்டிருக்கும் இம்மரணத்தண்டனைக்கு எதிராகக் குரலெழுப்ப வேண்டும் எனவும், தம்பி சிவராசா அனோஜனை மரணத் தண்டனையிலிருந்து விடுவிக்க உலக நாடுகளும், ஐக்கிய நாடுகள் அவையும் சவூதி அரசோடு பேசி, தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தமிழ்தேசிய மூதாதை..
எங்க தமிழரசன் ஒரு சாதி மறுப்பாளர். சாதி பார்த்து பறையர் குடியினர் வீட்டில் தான் தங்குவார் என்பதுஎவ்ளோ பெரியமடத்தனம்.
வன்னியன் காட்டிக்கொடுத்திடுவான் ..என தமிழரசனையே அசிங்கப்படுத்துரார். சீமான் இவரைதனது ஆசான்என்பதைநிறுத்தனும். அசிங்கமா கீது.