••> சீமான்4000 வருட தமிழர் வரலாற்றில் 'ஆகச்சிறந்தவன்' தான்மட்டுமே என்கிற வடிகட்டிய மூடத்தனம், வெட்டித்தம்பட்டம், வேசம் கட்டிய நடிப்பு.
••> இந்த வேசம்கட்டிய நடிப்பில், ஆட்சியில் அமரத்துடிக்கும் சுயநலம், அதிகாரவெறி கொண்ட துரோககுணம். —2️⃣👣
பாரியின் பித்தலாட்டம்...
வழக்கறிஞர் பாசறை தன்னிடம் உள்ளது என்று பனை திருவிழாவில் வாய்சவடால் விட்ட பாரிசாலன் இப்பொழுது தன்னிடம் வழக்கறிஞர் பாசறை இல்லை என்று பொய் கூறுகிறார் 🤧
#ola_files
சீமான் மேடையில் இப்படியா பேசுவார் 3 ஆம்பளை நடுவே ஒரு பொம்பளை படுத்து இருக்கிறாள் என்று (மெரினா சமாதி)
சீமான் என்பவர் அற்புதமான கட்டு கதை சொல்ல கூடியவர்
ஏங்க இது இப்படி இருக்கு.. யாரவது கை வச்சா என்ன ஆகுறது.. ? காட்பாடியில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக கிடங்கை ஆய்வு செய்த தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் லயோலோ மணி.. நான்கு ஆண்டுகளாக மின்சார வசதி இல்லாமல் செயல்பட்டு வருவதை அறிந்து அதிகாரிகளை கடிந்து கொண்டார்...
#Vellore | #Textbook | #EducationalServices | #LoyolaMani | #PolimerNews
தமிழ் தேசியம்! தமிழ் தேசியம்! என்று இவனாக ஏதோ ஒன்றை பிதற்றிக் கொண்டிருக்கிறான்.
இவன் சட்டையை பிடித்து,
கேள்வி கேட்டு, இவன் பேசுகிற போலித் தமிழ் தேசியத்தின் பொய் முகத்தை, உறித்தெடுக்கிற நாள்! இன்னும் வரவில்லை…
கலைஞரின் இடத்திற்கு குறி வைத்த வைகோ!
’’ரகசியத்தைக் காப்பாற்றுவதில் துரைமுருகன் இரும்புப்பெட்டி'' என்று மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி 2009-ஆம் ஆண்டு ஒரு கவிதையில் குறிப்பிட்டிருந்தார். அரசியல்வாதிகள் பொதுவாக ரகசியங்களைக் காப்பார்கள். ஆனால், துரைமுருகன் அதற்கு மேலானவர் என்பதால்தான் `இரும்புப் பெட்டி' என்றார் கலைஞர் கருணாநிதி.
அவர் ஏன் இப்படிச் சொன்னார்? என்பதற்கு ஒரு வரலாறு உண்டு. அது 2009 தேர்தல் பரபரப்புக்கிடையே கவிதையாக வெளிப்பட்டது. ’தம்பி ஒருவர் திமுக-வில் இருந்தபோது, என் பதவிக்குக் குறி வைத்தார். நான் நீண்ட காலம் உயிரோடு இருந்தால், தலைவர் பதவியை அடைய முடியாதே என்றும் கவலைப்பட்டார்'' என அந்தக் கவிதையில் ஒருவரைச் சுட்டிக் காட்டினார் கலைஞர் கருணாநிதி.
சில ஆண்டுகளுக்கு முன்பு குமரிமுனைக் கடற்கரை விருந்தினர் மாளிகையில் நடந்த ஒரு சம்பவத்தைக் கவிதையில் விவரித்திருந்தார் கலைஞர் கருணாநிதி. கலைஞர் தூங்கிக் கொண்டிருந்தபோது துரைமுருகனும், ஆற்காட்டாரும் அந்தத் தம்பியும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் அந்தத் தம்பி கலைஞர் கருணாநிதியின் இடத்துக்குக் குறிவைத்து கருத்துகளை வெளியிட்டார். அந்தத் தம்பியின் பெயரைக் கலைஞர் கருணாநிதி குறிப்பிடவில்லை. ஆனால், அவர் யார்? என்பதைத் தமிழ்கூறும் நல்லுலகம் அறிந்திருந்திருந்தது. அந்தத் தம்பி வைகோதான்!
குமரிமுனைக் கடற்கரை விருந்தினர் மாளிகையில்
குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தேனாம்;
அந்த நள்ளிரவில் அப்போது நமது தம்பிமார்கள்
ஆற்காட்டார் துரைமுருகன் இன்னொருவர் இப்போது நான்,
பெயர் சொல்ல விரும்பாதவர்: இவர்கள் மூவரும்
மாடித் தாழ்வாரத்தில் தேடக் கிடைக்காத திரவியமாய்த்
திராவிடர்க்குக் கிடைத்த திமுகழகத்தின் வளர்ச்சி,
வலிமை, வற்றாத பாச உணர்வு இவை பற்றியும் அதன்
வருங்காலம் பற்றியும் வானம் வெளுக்கும் வரையில்
உரையாடினார்களாம்.
அப்போது, அந்தத் தம்பி - நான் பேர் சொல்லாப் பெருமகன்;
என் தம்பிகள் ஆற்காட்டாரையும், துரைமுருகனையும் பார்த்து
“சரி, கலைஞருக்கு அடுத்து கழகத்தின் தலைவர்
ஸ்டாலின்தானா?" என வெகுண்டெழுந்து கேட்டாராம்
எப்படி அதைச் சொல்கிறாய் என அந்தத் தம்பியர்
கேட்டவுடன் "பேராசிரியர் அவர்கள், கூட்டங்கள் - மாநாடுகளில்
கூறுகின்ற புகழுரைகள் ஸ்டாலினைப் பற்றி
மழையாகப் பொழிகிறதே
என ஆயாசப்பட்டாராம்; அந்த அருமைத் தம்பி!
உடன்; ஆற்காட்டாரும், துரைமுருகனும்; "அன்பழகனார்
அப்படிப் பேசுவதில் என்ன தவறு? அந்தப் பிள்ளையாண்டான்
செய்துள்ள தியாகம் இளைஞர் அணியை வளர்க்கும்
இணையற்ற ஆற்றல் இவற்றைப் பேராசிரியர் பாராட்டுவதில்
என்ன குறை - யாரையும் எடை போட்டுத்தான்
பேராசிரியர் ஏற்றுக் கொள்வார்
கலைஞரையே உறைத்துப் பார்த்து உண்மைத்திறனை உணர்ந்த
பிறகுதான் ஒப்புக் கொண்டார்; தனக்கே தலைவராக!
எனவே இப்போது கலைஞருக்குப் பிறகு ஸ்டாலின்தான்
என்ற பேச்சுக்கு என்ன அவசரம்? நீர் ஏன் நெருப்பைத்
தொட்டது போல் துடிக்க வேண்டும்? கலைஞரே இப்போது
உம்மைத் தானே "போர்வாள்" என்று புகழ்கிறார் - போற்றுகிறார்
மாநிலங்களவை உறுப்பினர் பதவியை உமக்கு வழங்கியது போல
வேறு யாருக்கு இப்படித் தொடர்ந்து வழங்கியிருக்கிறார்.
கவலைப்படாமல் இருந்திடுக! கலைஞர் அவர்கள்; தனக்குப் பிறகு
உம்மைத்தான் தலைவராக்குவார் இயக்கத்திற்கு" என்று நம்பிக்கை
தெரிவித்து அந்த நள்ளிரவிலும் நமது பேர் சொல்ல விரும்பாத
பெருமை மிகு தம்பியின் முகத்தில் ஒளி பிறக்கச்
செய்திருக்கிறார்கள்.
புன்னகை தவழ்ந்த அந்தத் தம்பியின் முகத்தில்
புதியதோர் சிந்தனை அது ஒரு கேள்வியாகவும் மாறியது!
’’ஏன் துரைமுருகன்; நான் கலைஞருக்குப் பிறகு
தலைவனாவேன் என்கிறீர்களே? ஒரு வேளை நமது
கலைஞர், பெரியார் போல ராஜாஜி போல - தொண்ணூறு
வயதுக்கு மேல் வாழ்ந்து விட்டால்; நான் தலைவனாவதற்கு
எத்தனை வருடம் காத்திருப்பது?"
இதைக் கேள்வியாகக் கருதாமல், மற்ற இரு தம்பியரும்
தேன் பிலிற்றும் விஷமாக எண்ணிக் கலங்கி
இருவரும் இரகசியமாகச் சத்தியம் செய்து கொண்டார்களாம்
இந்தச் செய்தியை இருவரும் தலைவரிடம்
எப்போதும் சொல்வதில்லையென்று !
ஆனால்
துரைமுருகன் ரகசியத்தைக் காப்பாற்றுவதில் இரும்புப் பெட்டி!
ஆற்காட்டாரோ அசல்; கண்ணாடிப் பேழை எனினும்
ஆண்டுகள் சில பல கடந்த பிறகே:
அன்றைய குமரிமுனையில் குமுறிய எரிமலையின்
குட்டை மனப் பேராசையின் வெளிப்பாட்டைக் கூறினர் எனக்கு!
குறளின் அமுத மொழியாம்;
"செப்பின் புணர்ச்சிபோற் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி'
(செப்பு எனப்படும் சிமிழில் அதன் மூடி பொருந்தியிருப்பது போல வெளித் தோற்றத்துக்கு மட்டுமே தெரியும். அவ்வாறே உட்பகை உள்ளவர்கள் உளமாரப் பொருந்தியிருக்கமாட்டார்கள்)
உடன்பிறப்பே,
குறளோவியம் நூல் தொகுப்பில் நான்
குறிப்பிடாமல் விட்டுப் போன இந்தக் குறட்பா, இந்த நேரத்தில் நினைவுக்கு வந்ததே
அந்த நினைவுக்கு ஒரு நன்றி!
என அந்த கவிதையை முடித்திருந்தார். இந்தக் கவிதை எழுதப்பட்ட காலத்தில்தான் மதிமுகவில் இருந்த எம்.எல்.ஏ-கள் மு.கண்ணப்பன், கம்பம் ராமகிருஷ்ணன் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் சேர்ந்தார்கள். அடியொட்டிதான் நினைவலைகளைக் கவிதையாக வடித்தார் கலைஞர் கருணாநிதி.
இப்போது 2026 சட்டமன்றத் தேர்தல் காலத்திற்கு வருவோம். திமுக கூட்டணியிலிருந்து தவெக கூட்டணிக்கு முகாம் மாறியிருக்கும் வைகோ, ’’பதவியை ராஜினாமா செய்துவிட்டு மற்றொரு கட்சியில் சேர்வது குதிரைப் பேரம் அல்ல’’ என தவெகவிற்கு ஆதரவாகப் பொழிப்புரை எழுதினார்.
மு.கண்ணப்பனும் என்.ராமகிருஷ்ணனும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்த போது ’’மு.கண்ணப்பனின் இந்தச் செயல் கட்சிக்குச் செய்த பெரும் துரோகம்’’ எனக் குற்றம் சாட்டினார் வைகோ. தன்னுடைய கட்சி எம்.எல்.ஏ-கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சியில் சேர்ந்தால் துரோகம், சதிவலை எனச் சொன்ன வைகோ, தவெகவில் சேர்வதற்காக எம்.எல்.ஏ பதவிகளை அதிமுகவினர் ராஜினாமா செய்வதைக் குதிரைப் பேரம் அல்ல என்கிறார்.
- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி
விஜயை தூக்கிப்பிடித்ததில் ஊடகங்களுக்கு முக்கிய பங்குண்டு! அதே நேரத்தில
தவெக அவர்களை மயிறுக்கு கூட மதிப்பதில்லை! இது முதன்முறையல்ல!
இதே நிலைதான் வைகோ, திருமா, கம்யூனிஸ்ட்கள், காதர்மைதீன் போன்றோருக்கும் விரைவில் ஏற்படும்!
@sunnewstamil What’s happening inside VCK
Too many opinions on same issues
The party is having serious problems within their own cadres
@thirumaofficial
#அரசியல்POST | ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சமூக நீதித் துறை என பெயர் மாற்றம் செய்யப்படுவதற்கு விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் எதிர்ப்பு
#SunNews | #SocialJustice | #TVKVijay