‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே..’ என்ற காந்தக் குரலால், நம்மை நிறைத்த முத்தமிழறிஞர் கலைஞர் வழிநின்று, அவதூறுகளையும் அடக்குமுறைகளையும் துணிந்து எதிர்ப்போம், எளிய மக்களின் உயர்வுக்கு உடன் நிற்போம், ஆதிக்கத்தை உறுதியுடன் எதிர்த்து, கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டின் உரிமைகளை வென்றெடுப்போம்!
#KalaignarForever
தமிழ்நாடு சட்டப்பேரவையில் #SofaModel அரசு அளித்த அறிக்கையை Comma, Full Stop கூட மாறாமல் ஆளுநர் அப்படியே வாசித்திருப்பது பாஜக - த.வெ.க-வின் மறைமுக கூட்டணியை அம்பலப்படுத்தி இருக்கிறது.
ஆளுங்கட்சியினர் Reels போடுவதற்கான Content Material-ஆக அமைந்துள்ள ஆளுநர் உரையில் வளர்ச்சிக்கான திட்டங்கள் ஏதும் இல்லை.
தொடர் மின்வெட்டு - பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கெடு - விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றிற்கு எந்த தீர்வும் ஆளுநர் உரையில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
கழகத்தலைவர் @mkstalin அவர்கள் ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட சாதனைகளுக்கு Sticker ஒட்டியும், த.வெ.க அரசின் சறுக்கல்களுக்கு கழகத்தின் மீது பழிபோடும் வகையிலும் அமைந்துள்ள ஆளுநர் உரையை கண்டிக்கிறோம். #TNAssembly
திருச்சி மாவட்டம் கருங்குளம் அரசு மேனிலைப்பள்ளி மாணவி சத்யபிரியா சமீபத்தில் 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினார்.
அதே போல திருச்சி தேனேரிப்பட்டி அரசு மேனிலைப்பள்ளியை சேர்ந்த மாணவி சாலினி 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினார்.
தங்கை சத்யபிரியா கணிதத் தேர்வு எழுத செல்லும் போதும், தங்கை சாலினி கணினி அறிவியல் பொதுத் தேர்வுக்குச் செல்லும் நாளன்றும் அவர்களுடைய தந்தையாரை இழந்தனர்.
தந்தையை இழந்த சூழலிலும், இறுதி சடங்கை முடித்துவிட்டு, கல்வியே முக்கியமென்று நம் தங்கைகள் இருவரும் அன்றைய தினம் பொதுத்தேர்வை எழுதினர்.
நல்ல மதிப்பெண்களை எடுத்து தேர்வில் வென்றனர்.
அவர்களை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் கேடயங்கள் மற்றும் கல்வி நிதி உதவியை திருச்சியில் இன்று நேரில் வழங்கினோம்.
அவர்களின் உயர்கல்விக்கும் - எதிர்காலத்துக்கும் துணை நிற்போம் என்று அவர்களை வாழ்த்தினோம்.
@KN_NEHRU@Anbil_Mahesh
கரூரில் நடைபெற்ற திருமண விழாவுக்கு இன்று சென்ற போது வழியெங்கும் திரண்டு வந்து உற்சாக வரவேற்பை அளித்த கரூர் மாவட்ட - ஒன்றிய - நகர - பேரூர் கழக நிர்வாகிகள் - இளைஞரணி தம்பிமார்கள் - முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் என் அன்பும், நன்றியும்.
@V_Senthilbalaji
தொமுச-வின் கரூர் மாவட்டத் தலைவர் அண்ணன் V.R.அண்ணா வேலு அவர்களுடைய அன்பு மகள், தங்கை அ.காய்வா - ர.சிவராம்பிரசாந்த் இணையரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கரூரில் இன்று நடைபெற்ற போது, அதில் பங்கேற்றோம்.
மணமக்கள் இருவரும், கலைஞரும் - கழகமும் போல, நம் முதலமைச்சர் அவர்களும் - தமிழ்நாடும் போல, உதயசூரியனும் - கருப்பு, சிவப்பும் போல பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தி மகிழ்ந்தோம்.
@V_Senthilbalaji@Anbil_Mahesh
எல்லாவிதமான நெருக்கடிகளையும் அடக்குமுறைகளையும் முறியடித்து, 2026-சட்டமன்றத் தேர்தலில் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் தலைமையில் மீண்டும் #திராவிடமாடல் ஆட்சி அமைக்க உறுதி ஏற்போம்!
வெல்வோம் இருநூறு! படைப்போம் வரலாறு!!
@dmk_youthwing #கழக_இளைஞர்_அணி
தமிழ்நாட்டு இளைஞர்களின் ஒன்றிய அரசு குடிமைப்பணித் தேர்வு எனும் கனவை நனவாக்கும் தலையாய பணியை ‘நான் முதல்வன்’ திட்டம் செய்து வருகிறது.
#நான்_முதல்வன் திட்டத்தின் கீழ் பயன் பெற்று Indian Forest Service தேர்வில் வெற்றி பெற்று இருக்கும் நம் இளைஞர்களை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமைச் செயலகத்தில் இன்று நேரில் பாராட்டிய போது நாம் உடனிருந்து வாழ்த்தினோம்.
‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் அரசு அதிகாரிகளாக தங்களுடைய career-ஐ தொடங்கவிருக்கும் தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலம் சிறக்கட்டும்.
அவர்களின் வெற்றி, இன்னும் பல நூறு இளைஞர்களுக்கு வழிகாட்டட்டும்!
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் #திராவிட_மாடல் ஆட்சியில், உயர்கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக இருக்கிறது.
இந்த சாதனையை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்லவும், இன்னும் அதிகமான மாணவ - மாணவிகள் உயர்கல்வி சேருவதை உறுதி செய்யவும், பண்ருட்டி - குன்னூர் - நத்தம் - ஆலந்தூர் - விக்கிரவாண்டி - செய்யூர் - மானாமதுரை - முத்துப்பேட்டை - திருவிடைமருதூர், பெரம்பலூர் மாவட்டம் - கொளக்காநத்தம் மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய 11 இடங்களில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இன்று தொடங்கி வைத்த போது, நாம் உடன் இருந்தோம்.
2025-2026 கல்வி ஆண்டில் செயல்பாட்டுக்கு வரவிருக்கும், இப்புதிய அரசுக் கல்லூரிகள், ஏழை - எளிய - விளிம்பு நிலை குடும்பங்களைச் சார்ந்த பிள்ளைகளின் கல்விக்கனவை சாத்தியமாக்கட்டும்.
அழியாத செல்வமான கல்வியை அனைத்து தரப்பிற்கும் கொண்டு சேர்ப்போம். கல்வியால் தமிழ்நாடு தொடர்ந்து வெல்லட்டும்!
@Govichezhian@TRBRajaa
The most anticipated Brazil Legends Tour kicked off today at the Jawaharlal Nehru Indoor Stadium in Chennai, and I had the privilege of witnessing the exciting exhibition match between the Indian All-Stars and Brazil Legends.
It was a fantastic atmosphere, with fans and football lovers from all over the country filling up the stadium. Seeing legendary players like Ronaldinho, Rivaldo, Lucio, IM Vijayan, Mehtob Hussain, and Karanjith Singh play was truly special.
This will be a remarkable initiative for the development of football in India. We are happy that Tamil Nadu is part of this historical event.
My best wishes for the success of the football summit to be held on March 31 and April 1, 2025, featuring workshops and discussions with Brazil’s FIFA World Cup-winning legends.
#IndianAllStars #BrazilLegends @SportsTN_@Atulyamisraias #JMeghanathaReddyIAS
கழகத் தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு @dmk_youthwing சார்பில், நடத்தப்பட்ட @uyirinummelana பேச்சுப்போட்டியில், தேர்வான இளம் பேச்சாளர்களைக் கருத்தியல் ரீதியாகப் பட்டை தீட்டும் நோக்கில் அவர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம், சமீபத்தில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது.
இந்த முகாமில் மிகச் சிறந்த பேச்சாளர்கள் வழங்கிய பயிற்சிகளின் காணொலித் தொகுப்பை வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி புதன்கிழமை முதல் தினமும் மாலை 6:30 மணிக்கு நம் @Kalaignarnews தொலைக்காட்சியில் காணலாம்.
கழக மேடைகள்-சமூக வலைத்தளங்கள்- செய்தித் தொலைக்காட்சிகள் என பல்வேறு தளங்களில் கழகக்கொள்கைகளைப் பரப்ப இளம் பேச்சாளர்கள் திறம்பட செயல்பட்டு வருவது, மன நிறைவையும் பெருமிதத்தையும் அளிக்கிறது.
#கழக_இளைஞர்_அணி
உலக பள்ளி விளையாட்டு சம்மேளனம் சார்பில் செர்பியா நாட்டில் வரும் 4-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள "ISF World School U15 Gymnasiade 2025" போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு விளையாட்டு வீரர், வீராங்கனையர் பங்கேற்கவுள்ளனர்.
இவ்வீரர்களின் பயணம், விமானக்கட்டணம், தங்குமிடம் உள்ளிட்ட செலவினங்களுக்காக தலா ரூ.2.50 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.15 இலட்சத்திற்கான காசோலையினை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து தலைமைச் செயலகத்தில் இன்று வழங்கினோம்.
தமிழ்நாடு விளையாட்டு வீரர்கள் உலகின் எட்டுத்திக்கிற்கும் சென்று சாதனைகளை படைக்க, நம் #திராவிட_மாடல் அரசு என்றும் துணை நிற்கும் என்று அவர்களை வாழ்த்தி மகிழ்ந்தோம்.
@SportsTN_@Atulyamisraias #JMeghanathaReddyIAS
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களால், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அன்புச் சகோதரர் @ilaiyadmk அவர்கள், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள TAHDCO தலைமையகத்தில் இன்று பொறுப்பேற்ற போது உடனிருந்து அவரை வாழ்த்தினோம். புதிய பொறுப்பை ஏற்றுள்ள அவரது பணிகள் சிறக்கட்டும்.
@MMathiventhan@mylaivelu71
நம்முடைய #ChepaukTriplicane தொகுதியில் செயல்பட்டு வரும் கலைஞர் நடமாடும் நூலகத்தில் உறுப்பினர்களாக உள்ள மாணவ - மாணவியரை நம்முடைய ஏற்பாட்டில், @ChennaiIPL Vs @mipaltan இடையே இன்று நடைபெற்ற @IPL போட்டியை #ChepaukStadium-ல் நேரில் காணச் செய்தோம். விறுவிறுப்பான இந்தப் போட்டியை கண்டு மகிழ்ந்த நம் தொகுதியைச் சேர்ந்த விளையாட்டுப் பிரியர்களுக்கு என் அன்பும், வாழ்த்தும்.
I am thrilled to have inaugurated the highly anticipated WTT Star Contender Chennai table tennis event at the Jawaharlal Nehru Indoor Stadium.
158 top players from 25 countries are participating in this game. Our Dravidian Model Government continues to host prestigious international sporting events in Tamil Nadu, which serves as inspiration to our budding sportspersons.
We thank our Hon’ble Chief Minister @mkstalin for providing financial support of Rs.3.20 crores for this event.
Wishing the tournament great success, and may our players continue to reach new heights.
@SportsTN_@Atulyamisraias #JMeghanathaReddyIAS #WTT
கழக சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு சார்பில் ‘பேரன்பின் பெருவிழா’ எனும் முழக்கத்தோடு நடைபெற்ற புனித ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் சென்னை இராயப்பேட்டையில் இன்று கலந்து கொண்டோம்.
திராவிட முன்னேற்றக் கழகமாகட்டும் – நம் திராவிட மாடல் அரசாகட்டும், இஸ்லாமிய பெருமக்களின் உரிமைகளையும், நலன்களையும் பாதுகாக்கின்ற வகையில் என்றும் உறுதியோடு செயல்படுவோம் என்று உரையாற்றினோம்.
சிறுபான்மை மக்களின் நலனுக்காக கழகத்தின் முகமாக சிறுபான்மை நல உரிமைப்பிரிவு ஆற்றி வரும் பணிகளையும், இஸ்லாமியர்களின் சமூக - பொருளாதார - கல்வி முன்னேற்றத்துக்காக கழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களையும் எடுத்துரைத்து, ரமலான் வாழ்த்துகளை தெரிவித்தோம்.
@PKSekarbabu@nchitrarasu@DrSubair_Khan
`முஸ்லிம் சமுதாயத்துக்கு நீங்கள் செய்த உதவிக்கெல்லாம் என்னுடைய நன்றி’ என்று காயிதேமில்லத் அவர்கள் மறைவதற்கு முன், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கையைப் பற்றிக்கொண்டு சொன்னார்.
முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிகாலம் தொடங்கி, நம் கழகத் தலைவர்-மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் ஆட்சிகாலம் வரை, எப்போதும் இஸ்லாமியரின் அரசியல் உரிமைகளை நிலைநிறுத்தி, மத சிறுபான்மையினரின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளைப் பாதுகாக்கும் பேரியக்கமாக இருந்து வருகிறது நம் கழகம். அந்தப் பணி எந்நாளும் தொடரும்.
#பேரன்பின்_பெருவிழா
திரைப்பட நடிகரும் - இயக்குநர் இமயம் பாரதிராஜா சாரின் அன்பு மகனுமான சகோதரர் மனோஜ் கே.பாரதி அவர்கள், உடல்நலக்குறைவால் மறைந்த நிலையில், நீலாங்கரையில் உள்ள அவர்களது இல்லத்துக்கு சென்று, மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களுடன், மனோஜின் திருவுடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
அவரைப்பிரிந்து வாடும் பாரதிராஜா சார் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆறுதலையும் - இரங்கலையும் தெரிவித்தோம்.
@Subramanian_ma
தமிழ்நாடு காவல்துறையின் ஏற்பாட்டில் நடைபெற்ற 25TH ALL INDIA POLICE SHOOTING (AIPDM) COMPETITION 2025-இன் நிறைவு விழாவில் பங்கேற்று, பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற காவல்துறை உள்ளிட்ட படை வீரர்களுக்கு பரிசுகள் - பதக்கங்கள் - சான்றிதழ்களை சென்னை எழும்பூர் இராஜரத்தினம் மைதானத்தில் இன்று வழங்கினோம்.
நம் காவல்துறையினரின் தீரமிக்க பணிகள் சிறக்கவும் - அவர்களின் திறன் மென்மேலும் உயரவும் வாழ்த்தி மகிழ்ந்தோம்.
@PKSekarbabu@PriyarajanDMK@iparanthamen