கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து புதரில் வீசப்பட்டதில் அக்குழந்தை உயிரிழந்தது அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
இச்சம்பவத்தில் உண்மையான கு��்றவாளிகளைக் கண்டுபிடித்துக் கடுமையான தண்டனையைக் காவல்துறை பெற்றுத்தர வேண்டும்.
வடக்கே எங்கோ தூரத்தில் நடந்ததாக நாம் செய்திகளில் படித்த குற்றச் சம்பவங்கள் எல்லாம், இந்த #SofaModel ஆட்சியில் தமிழ்நாட்டில் தினசரி தொடர்கதை ஆவது கண்டிக்கத்தக்கது.
தேர்தல் பிரச்சாரத்தில் சட்டத்துக்குப்புறம்பாக வாக்குக்கேட்பதற்கான tool ஆக குழந்தைகளைப் பயன்படுத்திய முதலமைச்சர், குழந்தைகள் - பெண்கள் பாதுகாப்பில் தொடர்ந்து கோட்டை விடுகிறார்.
சேலத்தில் 50 மேற்பட்ட பெண்களுக்கு அவருடைய கட்சியைச் சேர்ந்தவர் பாலியல் தொல்லை கொடுத்தது - ஆலந்தூரில் அவரது கட்சி பிரமுகர் கணவனை இழந்த பெண்ணிடம் அத்துமீறியது - சிங்கப்பெண் படையை உருவாக்கிய சில தினங்களில் சிவகங்கையில் பெண் காவலருக்கே பாலியல் தொல்லை..
இப்படி தமிழ்நாடு முழுக்க சட்டம் ஒழு��்கு, வெண்டிலேட்டரில் வைக்கும் அளவுக்கு செத்துக் கொண்டிருக்கிறது.
ஆட்சி அமைத்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் எந்த ஓர் உறுதியான நடவடிக்கையையும் எடுப்பது போல தெரியவில்லை.
அடுத்த கட்சி ஆட்களை Purchase செய்யும் நேரத்தில், கொஞ்சமாவது சட்டம் ஒழுங்கை protect செய்ய முதலமைச்சர் அக்கறை காட்ட வேண்டும்.
தமிழ்நாட்டில் சீரழியும் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற உடனே காவல்துறை அதிகாரிகள் அளவில் உயர்நிலைக் கூட்டத்தை நடத்தி, மண்டல - மாவட்ட அளவிலான காவல்துறை அதிகாரிகளுக்கு குற்றங்களைத் தடுப்பதற்கான கடுமையான உத்தரவுகளை முதலமைச்சர் பிறப்பிக்க வேண்டும்.
இனியும் இது மாதிரியான குற்றச்சம்பவங்கள் தொடர்ந்தால், எங்கள் தலைவர் அவர்களின் அனுமதியைப் பெற்று, மக்களைத் திரட்டி வீதியில் இறங்கி போராடவும் தி.மு.கழகம் தயங்காது.
#StopSexualHarassment #LawAndOrder
சென்னை -காஞ்சிபுரம்- செங்கல்பட்டு- திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த கழக இளம் பேச்சாளர்களுக்கான சமூக வலைதளப் பயிற்சியை, அன்பகத்தில், இன்று நடத்தினோம்.
சமகால அரசியல் சூழலி��் சமூக வலைதளத்தின் வாயிலாக, கழகப் பணி-மக்கள் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்வது குறித்து,
கலந்துரையாடினோம்.
மேடைப்பேச்சு தொடங்கி, சமூகவலைதளம் வரை திறன் வாய்ந்த செயற்பாட்டாளர்களாக இளம் பேச்சாளர்கள் விளங்குவார்கள் என்ற நம்பிக்கையை, இந்தச் சந்திப்பு மீண்டும் உறுதி செய்தது.
@dmk_youthwing @uyirinummelana
#குறளிசைக்காவியம் படைத்துச் சாதனை படைத்த நமது @lydian_official, இப்போது #Symphony இயற்றியுள்ளார்!
வாழ்த்துகள் இந்த இளைஞனுக்கு - சாதனைகள் இன்னும் ப��� படைக்கவிருக்கும் திறமைமிகு கலைஞனுக்கு!
2021 - தி.மு.கழக ஆட்சியின் முதல் 30 நாட்களின் சாதனைகள்!
குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 4000 கொரோனா நிவாரண நிதி!
ஆவின் பால் லிட்டருக்கு ரூ. 3 குறைப்பு!
பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா விடியல் பயணம்!
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைப் பெறும் மக்களின் கட்டணத்த��� காப்பீடு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசே ஏற்கும்.
மக்களின் புகார்கள் மீது 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் & அதற்கென தனித்துறை
முன்களப்பணியாளர்களாக பத்திரிகையாளர்கள் அறிவிப்பு!
கொரோனா சிகிச்சை பணிகளை சிறப்பாக மேற்கொள்ள ஒருகிணைந்த கட்டளை மையம்.
கோவில்பட்டியில் எழுத்தாளர் கி.ரா. வுக்கு சிலை!
இந்த சாதனை பட்டியல் மிக நீளமானது..
https://t.co/CnKB61nEm6
“மாற்றத்தைத் தருகிறேன்” என்று சொல்லி மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்ற தவெக அரசு, தனது ஒரு மாத கால ஆட்சியில் வாக்களித்த மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே தந்திருக்கிறது..
6 மணி நேரம், 12 மணி நேரம் மின்வெட்டு என தா��்கமுடியாத துயரத்தில், நள்ளிரவிலும் பொதுமக்கள் நடுத் தெருவிற்கும், சாலைகளுக்கும் வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்..
“சாலை மறியல் இல்லாத இரவுகள் இல்லை” என்ற நிலை, மாநிலத்தின் தலைநகரிலும், மற்ற பகுதிகளிலும், இந்த ஆட்சியின் நிர்வாக அவலத்தை வீதிக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
“பதவியேற்றவுடன் மாற்றத்தைத் தருவேன்” என்ற பஞ்ச் டயலாக் பேசிய மாண்புமிகு முதலமைச்சர் மவுன���ாக இருக்கிறார்.. மின்வெட்டுக்குப் பதிலும் சொல்வதில்லை. பத்திரிகையாளர்களையும் சந்திப்பது இல்லை..
பொறுப்பாக பதில் சொல்ல வேண்டிய மின்துறை அமைச்சரோ தினம் ஒரு Conspiracy theory எழுதி அதை ஊடகங்களிடம் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார்..
தங்கள் நிர்வாகத் திறமையின்மையை மறைக்க “Fake Reels” போடுவது போல், தினமும் திசை திருப்பும் வேலையை மட்டும் செய்கிறார்..
“ஃபியூஸ் கேரியரை திருடுகிறார்கள்” என்று ச��ல்லி ஒரு சிசிடிவி கேமரா வீடியோவை பதிவிடுகிறார் அமைச்சர்.. பகலில் நடக���கும் திருட்டுக்கு இரவில் எப்படி மின் தடை ஏற்படுகிறது? என்று சாதாரண பாமரனுக்கும் கேள்வி எழும் என்பதை அமைச்சர் யோசிக்கவில்லையா? ஃபியூஸ் திருடு போனால் மொத்தமாக தானே மின்சாரம் போக வேண்டும்? விட்டுவிட்டு போவது எப்படி? பிரச்சினையை தீர்ப்பதற்குப் பதில் அமைச்சர் கதை அளக்கிறார். கஷ்டப்படும் மக்கள் காதில் பூ சுத்துகிறார்.
அடுத்து “ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்” என்றார். காவல்துறையே வி��ாரித்து அப்படி காணாமல் போன “ஹார்ட் டிஸ்குகளில்” முக்கியத் தகவல்கள் ஏதும் இல்லை என்று கூறிவிட்டது. “ஹார்ட் டிஸ்க்” திருட்டுக்கும் “கரன்ட் கட்டுக்கும்” என்ன சம்பந்தம்?
மூன்றாவதாக “மின்வாரியப்பணியாளர்கள் சதி செய்கிறார்கள்” என்கிறார்.. எப்பொழுதும் அர்ப்பணிப்புடன் களத்தில் நிற்கும் தனது பணியாளர்கள் மீதே பழி போட்டார்..
மக்களும் குழந்தைகளும் துன்பத்தில் இருப்பதை ரசிக்க, மி��் துறை பணியாளர்கள் என்ன அவர்களின் தலைவர் போன்றவர்கள் என்று நினைக்கிறாரா அமைச்சர்? தன் கையாலாகத்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட கரன்ட் கட் காரணம் குறித்து இப்படியா கப்சா விடுவது?
தவெக ஆட்சியில் ஏற்பட்டுள்ள மாற்றம் “மின்வெட்டால் பள்ளிக்கு விடுமுறை விடும்”அவலம் தான்! தங்கள் பயிர்கள் தண்ணீர் இன்றி காய்வதால் விவசாயிகள் போராடும் துயரம்தான்! பத்திரிக்கையாளர்களை பார்த்தவுடன் பவர் கட்குறித்து அமைச்சர் சொல்லும் காரணங்கள் எல்லாமே இந்த தவெக அரசு சீரான மின்சாரத்தை அளிக்க முடியாமல் திணருகிற���ு என்பதுதான்!
ஆனால் எதனால் மின்வெட்டு நடக்கிறது? என்பதுபற்றி அதிகாரிகளை வைத்து அமைச்சரோ, அமைச்சரை வைத்து முதலமைச்சரோ ஒரு ரிவ்யூ மீட்டிங்காவது நடத்தியிருக்கிறார்களா? இல்லை! எதுவுமே இல்லை!
இதுவும் தவெக ஆட்சியில் நடத்துள்ள மாற்றம்தான்! ஒரே மாதத்தில் மின்வாரியத்தில் ஏற்பட்டுள்ள படு மோசமான நிர்வாக தோல்வி இந்த ஆட்சியின் மாற்றம்தான்!
தமிழ்நாட்டின் மின் தேவை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது என்பது எந்த அரசும் உணர வேண்டிய உண்மை.. அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப திறமையாக நிர்வகித்து- மக்களை இன்னலுக்கு உட்படாமல் காப்பது தான் ஆட்சியின் நிர்வாகத் திறமை. அதைத்தான் எங்கள் கழகத் தலைவர் ��வர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு செய்தது..
புள்ளி விவரங்களுடன் சொல்ல வேண்டுமென்றால், 2021ல் அதிகபட்ச உச்சமாக 16,481 மெகாவாட் மின்சாரம் தேவைப்பட்டது. 2022ல் 17,196 மெகாவாட், 2023ல் 18,053 மெகாவாட், 2024ல் 19,049, 2025ல் 20,148 மெகாவாட், 2026 ஏப்ரலில் 20,974 மெகாவாட் உச்சத்தைத் தொட்டிருக்கிறது.. ஒவ்வொரு ஆண்டும் மின் தேவை அதிகரித்தாலும், திராவிட மாடல் ஆட்சி இருந்தவரை சீரான மின்சாரத்தை பொது மக்களுக்கு வழங்கியிருக்க��றோம்..
சென்னையைப் பொருத்தவரை கடந்த ஆண்டு மின்தேவை 4,663 மெகாவாட் உச்சத்தைத் தொட்டது. 2024ல் 4,769 மெகாவாட் உச்சத்தைத் தொட்டது. அப்படி இருந்தாலும் மின்வெட்டு எங்குமே நடக்கவில்லை. பொதுமக்கள் நள்ளிரவில் கைக் குழந்தைகளுடன், வயதானவர்களுடன், நோயாளிகளுடன் தெருவுக்கு வந்து போராடும் நிலை ஏற்படவில்லை.. அது மட்டுமா?
இந்தியாவிலேயே மிக குறைவான மின்வெட்டு கொண்ட மாநிலம் தமிழ்நாடு. வளர்ந்த நாடுக��ுக்கு இணையான சேவையை வழங்குகிறது என்று ஒன்றிய அமைச்சரே தமிழ்நாட்டைப் பாராட்டினார்..
(1/2)
நம் #ChepaukTriplicane தொகுதியில் அயராது உழைத்து மீண்டும் நம்மை வெற்றி பெற வைத்த கழக உடன்பிறப்புகளுக்கு இன்று நன்றி தெரி���ித்தோம்.
“எது நடந்தாலும், ‘தி.மு.க.தான் காரணம்’ என்ற Template-ஐ, Tool Kit-ஆக தூக்கிக் கொண்டு அலையும் #SofaModel அரசின் அவலங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம்.
தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் கலைஞர் ஆட்சியை அமைக்க, ஒற்றுமையோடு உழைப்போம்” என்று உரையாற்றினோம்.
@Dayanidhi_Maran @nchitrarasu
தெற்கில் தோன்றி, வடக்கில் ஒளிர்ந்த “கண்ணியத் தென்றல்” காயிதே மில்லத் அவர்களின் 131-ஆவது பிறந்தநாளில் அவரது புகழைப் போற்றுகிறேன்!
"தமிழ் ஆட்சிமொழியாக வேண்டும்" என அரசியல் நிர்ணய சபையில் முழங்கிய மாண்பாளர்; கல்வி வளர்ச்சிக்காக அரும்பணிகளைச் செய்த தகைமையாளர்.
பேரறிஞர் அண்ணா காலம் தொட்டு, தேர்தல் அரசியலைக் கடந்து உருவான உறவின் உரிமையோடு, இசுலாமியப் பெருமக்களுக்கு என்றும் துணை நிற்போம்! சமூக நல்லிணக்கத்தைப் பேணிப் பாதுகாப்போம்!
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்!
உங்க Career-ஐ உருவாக்கிக்கொள்ளத் தேவையான அடித்தளத்தைச் சரியா அமைச்சுக்க வேண்டிய தருணம் இது.
இந்த முறை தேர்ச்சி பெறத் தவறியவர்கள், அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் கல்வியை விட்டு விலகிடாமல், நல்லா படிச்சு, நல்ல நிலைக்கு முன்னேறிடணும்னு வாழ்த்துகிறேன்.
#10thResult #ExamResult
நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்கிறேன்..
கோவை மாவட்டத்தில், 509 பள்ளிகளில், 10ம் வகுப்பு தேர்வு எழுதிய 18506 மாணவர்கள் மற்றும் 19338 மாணவியர்களில், 17760 மாணவர்களும், 18982 மாணவியர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.. 95.97 சத��ீதம் மாணவர்களும், 98.16 சதவீதம் மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தின் வெற்றி விகிதம் 97.07% ஆகும். கழகத் தலைவர் @mkstalin அவர்களின் சீரிய வழிகாட்டுதலின்படியும் நலத்திட்டங்கள் வாயிலாகவும் இந்த வளர்ச்சி சாத்தியமாகி உள்ளது.
மேலும் 251 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது..
தேர்ச்சி பெறத் தவறிய மாணவர்கள் சிறிதும் மனம் தளராமல் அடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி வெற்றியடைய வாழ்த்துகிறேன்..
#NamakkalEastDMK#ExecutiveBodyMeet திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம், அவைத் தலைவர் அண்ணன் திரு. C. மணிமாறன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு. KRN Rajeshkumar MP., அவர்கள், நடந்து முடிந்த தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பது தொடர்பாகவும், வரும் ஜூன் திங்கள் 3ம் நாள் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் ��வர்களின் 103வது பிறந்தநாளை எழுச்சியோடு கொண்டாடுவது தொடர்பாகவும், அண்ணா அறிவாலயத்தில் கழக தலைவர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் உட்கருத்தையும் எடுத்துக் கூறி, சிறப்புரையாற்றினார். அதனை வழிமொழிந்து, கழகத்தின் ஆட்சி மீண்டும் உதிக்க, தொடர்ந்து பணியாற்ற உறுதியேற்றி வந்தோம்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக செயற்குழுக் கூட்டம் மோகனூர் சாலை, முல்லை நகரில் உள்ள மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் இனமான பேராசிரியர் அரங்கத்தில் மாவட்ட அவைத்தலைவர் திரு.சி.மணிமாறன் அவர்கள் தலைமையில், எனது முன்னிலையில் நடைபெற்றது.
மேனாள் முதல்வர் @mkstalin மற்றும் மேனாள் துணை முதல்வர் @Udhaystalin உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்துகளைப் பெறும் முதல்வர் @actorvijay அவர்களின் இந்த அணுகுமுறை அரசியல் நாகரிகத்தின் முதிர்ச்சிக்கு அடையாளம். முதல்வருக்கும் அவரை ஆரத்தழுவி வரவேற்ற மேனாள் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோருக்கும் எமது மனம் நிறைந்த பாராட்டுகள்.
#DMK #TVK
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்கள் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்.
@TVKVijayHQ@Udhaystalin
வந்தே மாதரம் பாடலுக்கு முதன்மைத்துவம்:
---------------------
தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க வேண்டும்!
----------------------
விடுதலைச் சிறுத்தைகள் அறிக்கை!
-----------------------
தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்ட தவெக தலைவர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கும் மற்றும் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக் கொண்ட ஒன்பது பேருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது மனமுவந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
போதை ஒழிப்பு, மகளிர் பாதுகாப்பு, 200 யூனிட் வரை மின் கட்டணம் இல்லை என மூன்று அறிவிப்புகளை இன்று ��ுதலமைச்சர் வெளியிட்டுள்ளார். இதை வரவேற்கிறோம்.
தமிழ்நாடு அரசின் கஜானா காலியாக இருப்பதாகவும், 10 இலட்சம் கோடி கடன் சுமையை வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். அதுகுறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படுமெனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் கடன் அளவு ₹10 இலட்சம் கோடி என்று வெறுமனே குறிப்பிடுவது தவறான புரிதலை ஏற்படுத்தும்; ஏனெனில், கடனை எப்போதும் ஒரு குறிப்பிட்ட அளவுகோலோட��� ஒப்பிட்டே மதிப்பிட வேண்டும். கடனை மதிப்பிடுவதற்கான சரியான முறை, அதனை மாநிலத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியோடு (GSDP) ஒப்பிட்டுப் பார்ப்பதே ஆகும்.
தமிழ்நாட்டின் கடன் அளவு, 15-ஆவது நிதிக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்குள்ளேயே உள்ளது. கடனின் முழுமையான அளவுகளை மட்டும் சுட்டிக்காட்டி அச்சமூட்டுவது, அரசியல் நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படும்.
இன்றைய நிகழ்வில் 'தமிழ்த்தாய் வாழ்த்து'ப் பாடல் மூன்றாவதாக ஒலிக்கப்பட்டிருக்கிறது. வழக்கமாக, அரசு விழாக்களி��்போது தொடக்கத்தில் 'தமிழ்த்தாய் வாழ்த்தினை' ஒலிக்கச் செய்வது நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டுவரும் ஒரு மரபாகும். ஆனால். இன்று அம்மரபினை மீறி, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மூன்றாவதாகப் பாடியுள்ளனர். அதாவது, வழக்கத்திற்கு மாறாக 'வந்தே மாதரம்' பாடலை முதலாவதாகவும், தேசிய கீதத்தை இரண்டாவதாகவும் இசைத்த பின்னரே, கடைசியாக தமிழ்த்தாய் வாழ்த்தினைப் பாடியுள்ளனர். இந்த அணுகுமுறை மிகவும�� அதிர்ச்சயளிப்பதாக உள்ளது. இது அதிகாரிகளின் கவனக்குறைவால் நிகழ்ந்ததாகக் கருத இயலவில்லை. மாறாக, மாண்புமிகு ஆளுநரின் விருப்பப்படியோ அல்லது ஆளுநரை மகிழ்விக்கவோ செய்யப்பட்டதா என்கிற கேள்வி இயல்பாகவே எழுகிறது. இது குறித்து விளக்கமளிக்க வேண்டியது முதலமைச்சரின் கடமையாகும்.
இனிவரும் காலங்களிலும் அரசு விழாக்களில் 'வந்தே மாதரம்' பாடல் ஒலிக்கப்படுமா? அதுவும் முதலில் இடம்பெறுமா? ��ல்லது அப்பாடல் இனி ஒலிக்கப்படாமல் தவிர்க்கப்படுமா? அடுத்து, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு வழக்கம்போல முதலிடம் தரப்படுமா? இது தொடர்பாகவும் அரசு விளக்கமளிக்க வேண்டும்.
மதசார்பற்ற அரசமைக்கவே காங்கிரசு, இடதுசாரிகள், முஸ்லீம் ��ீக் மற்றும் விசிக ஆகிய கட்சிகளின் ஆதரவைக் கோரியதாக தவெக தரப்பில் சொல்லப்பட்டது. அதனடிப்படையில்தான் திமுக கூட்டணியில் அங்கம் வகித்தாலும் அக்கட்சிகள் ஆதரவளிக்க முன்வந்தன. ஆனால், மதசார்புடைய கருத்தைக் கொண்டது என்கிற விமர்சனத்துகுள்ளாகும் வந்தே மாதரம் பாடலை பதவி ஏற்புவிழாவில் இசைக்கச் செய்த நிகழ்வு நெருடலை ஏற்படுத்தியுள்ளது. இது ஆதரவளித்த கட்சிகளுக்கும் எதிரான விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. எனவே, இதற்கு உரிய விளக்கமளிக்க வேண்டியது தவிர்க்க இயலாததாக மாறியுள்ளது.
'மாற்றம்' என்னும் முழக்கத்தை முன்னிறுத்தி மக்களின் பேராதரவைப் பெற்று முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள திரு. ஜோசப் விஜய் அவர்கள், அவரது அரசு மதச்சார்பற்ற அரசாகவே இருக்கும் என்ற உறுதிமொழியைத் தமிழ்நாட்டு மக்களுக்கு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்:
தொல்.திருமாவ���வன்,
நிறுவனர் - தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.