Tamilnadu Boxoffice opening weekend #JanaNayagan vs #Jailer2
Jana Nayagan : ₹88 Cr
Jailer 2 : ₹81.35 Cr
Bro with a leaked remake movie and mixed reviews 🙏🏻🔥
ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் ஆண்கள் ஒற்றையர் கிளாஸ் 1 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள வீரர் ஜெஹான் டொரப் மதன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.
அவரது சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தையும், உத்வேகத்தையும் அளிக்கும் வகையில் இவ்வெற்றி அமைந்துள்ளது.
வீரர் ஜெஹான் டொரப் மதன் அவர்கள் வருங்காலங்களிலும் வெற்றிகளைப் பெற்று மேலும் பல உயரங்களை எட்ட வாழ்த்துகிறேன்.
#CMJosephVijay
#AsianParaGames2026
Copy this and ask ChatGPT 👇🏻
" Based on your personal experience while talking to me, please name a Tamil movie character who resembles me. only give a name. "
Come back and tell me your answer in the replies. Be honest 😂
நடந்து முடிந்த தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின்போது தொடரப்பட்ட வழக்கு காரணமாக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் திருமதி கார்த்திகா அவர்களைத் த.வெ.க. அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதை, கொள்கை மாறுபாடுகளுக்கு அப்பால் வரவேற்று ஊக்கமளிக்க வேண்டும். அத்தகையோரைக் கைது செய்து அச்சுறுத்துவதன் மூலமாக இந்த அரசு எதைச் சாதிக்கப் போகிறது?
கடந்த காலங்களில் திருமதி கார்த்திகா அவர்கள் தி.மு.கழகத்தையும் அதன் கொள்கைத் தலைவர்களையும் விமர்சனம் செய்த தருணங்களில், அதைக் கொள்கை வழிநின்று தக்க பதிலளித்து தெளிவை ஏற்படுத்துவோம் என்ற வகையில் அணுகினோமே தவிர, பெண் தலைவர்களைச் சிறையில் அடைத்து வாய்ப்பூட்டு போட நாங்கள் நினைத்தது இல்லை. ஆனால், சகிப்புத்தன்மையும் ஜனநாயக உணர்வும் இல்லாத சர்வாதிகார அரசாகத் த.வெ.க. அரசு நடந்துகொள்கிறது.
இடைத்தேர்தலில் த.வெ.க. அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்ததை நாடே பார்த்தது. அதைத் தட்டிக் கேட்டதற்காக நா.த.க. நிர்வாகிகளைக் கைது செய்து அலைக்கழிப்பது கொடுங்கோன்மையும் குறுகிய மனப்பான்மையும் ஆகும்.
ஜாமீனில் வெளிவரத்தக்க சாதாரண வழக்குகளுக்காக, கைது நடவடிக்கையில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றக் கண்டனத்துக்கு ஆளாவார்கள். த.வெ.க.வின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்குக் காவல்துறை அதிகாரிகள் துணைபோகக் கூடாது.
நாட்டையே உலுக்கியுள்ள கொடிய போதை மருந்து கடத்தல் வழக்கில் த.வெ.க. நிர்வாகியும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் திசைதிருப்பவும் தனது நிர்வாகத் தோல்விகளை மறைக்கவும் இத்தகைய கைது நடவடிக்கையில் த.வெ.க. அரசு ஈடுபடுகிறது. மறுபுறம், செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர்களும், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குத் துணைபோனவர்களும் த.வெ.க.வில் இருப்பதாலேயே வெளியில் சுற்றித் திரிகிறார்கள்.
குற்றவாளிகளைக் காப்பாற்றி, போராடுவோரைக் கைது செய்வதில் தற்போது ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவில்தான் போட்டியே. ஒன்று டெல்லி பா.ஜ.க., இன்னொன்று தமிழ்நாட்டில் த.வெ.க.! உங்கள் பாசிசம் பாயாசம் நாடகம் எல்லாம் நாளுக்கு நாள் பல்லிளித்துக் கொண்டே வருகிறது.
திருமதி கார்த்திகா அவர்களையும் அவரது கட்சியினரையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும்!
ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் பெண்கள் கிளாஸ் 9 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள வீராங்கனை பேபி சஹானா ரவி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும்.
வீராங்கனை பேபி சஹானா ரவி அவர்கள் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் இந்த சாதனையைப் படைத்துள்ளார். அவரது வெற்றி தமிழ்நாட்டின் இளம் பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும்.
அவர், எதிர்காலத்திலும் பல வெற்றிகளைப் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துகள்!
#CMJosephVijay
#AsianParaGames2026
Wishing everyone a very Happy Ayudha Pooja! ❤️🙏🏻
May God's blessings guide our hard work, efforts, and dreams towards success. May everyone's life be filled with happiness, peace, and prosperity.
பாராகுவே நாட்டின் அசுன்சியோன் நகரில் நடைபெற்ற உலக ஸ்கேட்டிங் விளையாட்டுப் போட்டிகள் 2026 தொடரின் ஆண்கள் மாரத்தான் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழ்நாடு ஸ்கேட்டிங் வீரர் ஆனந்த்குமார் அவர்களுக்கும், ஜூனியர் பெண்களுக்கான 3000 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஸ்கேட்டிங் வீராங்கனைகள் லட்சிதா, பிரகதி மற்றும் ருத்வ ஆகியோருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்!
இந்தப் போட்டிகளில் ஸ்கேட்டிங் வீரர் ஆனந்த்குமார் அவர்கள் ஏற்கனவே 500 மீட்டர் பிரிவில் வெண்கலமும், 1000 மீட்டர் பிரிவில் வெள்ளியும் வென்றிருப்பதோடு, தற்போது மூன்றாவதாகத் தங்கப் பதக்கத்தையும் வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சாதனைகள் விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கத் துடிக்கும் இளைய தலைமுறையினருக்குப் புதிய ஊக்கத்தையும், உத்வேகத்தையும் அளிக்கிறது.
பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த ஸ்கேட்டிங் வீரர் ஆனந்த்குமார், வீராங்கனைகள் லட்சிதா, பிரகதி மற்றும் ருத்வ ஆகியோர் மேலும் பல உயரங்களை எட்ட வாழ்த்துகிறேன்!
#CMJosephVijay