'நீராரும் கடலுடுத்த...' எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு நூற்றாண்டு கடந்த வரலாற்றுப் பெருமிதம் உள்ளது. இந்தப் பாடல் 'உலகெங்கும் பரவ வேண்டும்...' என்ற இலட்சியத்தின் தொடர்ச்சியாகவே, தமிழ்நாடு அரசு மாநிலப் பாடலாக அதை அறிவித்தது. இத்தகைய பெருமைமிக்க தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலே, தமிழ்நாட்டில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முதலில் ஒலிக்கப்படும்.
நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படும். அதுதான் வழக்கமான நடைமுறை; பொருத்தமான நடைமுறை.
தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் புதிய அரசுக்கும் வழக்கமாக உள்ள இந்த நடைமுறையில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. இப்படியான சூழலில், இன்று தமிழக பொறுப்பு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் தலைமையில் ந��ைபெற்ற முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில், முதலில், வந்தே மாதரமும், பிறகு தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது. இந்தப் புதிய நடைமுறை தமிழ்நாட்டிற்கு ஒவ்வாதது. தாய்த் தமிழ்நாட்டில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாக இசைக்கப்படுவதில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் தமிழ்நாடு அரசுக்கு உடன்பாடில்லை.
இது��ுறித்து நாங்கள் ஆளுநர் தரப்பிடம் வலியுறுத்தியபோது, ஒன்றிய அரசின் புதிய சுற்றறிக்கையின்படி செயல்படவேண்டிய ��ொறுப்பு ஆளுநருக்கு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதையொட்டி தவிர்க்க முடியாத சூழலில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவது பாடலாக ஒலிக்கப்பட்டது. ஆனால், இனிவரும் காலங்களில் இந்தப் புதிய நடைமுறை பின்பற்றப்படாது. மாறாக, இதற்கு முன்பிருந்த நடைமுறைப்படியே, நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படும்!
தமிழ்நாட்���ில் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், அந்தந்த மாநில மொழி வாழ்த்துப் பாடலே நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இசைக்கப்பட வேண்டும். அதற்கு ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வும் ஒருமித்த எண்ணமும் அதுதான். எங்களுடைய உறுதியான நிலைப்பாடும் அதுதான்.
வாய்மையே வெல்லும்!
வாழ்க தமிழ்!
🚨Big News : DMK wanted us to back ADMK like them, had to leave DMK before they got numbers to claim, backing ADMK was unacceptable for us
— CPI(M) General Secretary M A Baby
தோல்வி பயத்தில் காங்கிரஸ்?
காரைக்குடியி��் இன்று தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், முதியவர்கள் விசில் சின்னத்திற்கு வாக்களிக்க முயன்ற போது அரசு அதிகாரிகள் அதை மாற்றி காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டுகள் செல்லும் வகையில் மாற்றி உள்ளனர். இதனை எதிர்த்து குடும்பத்தினர் கேள்வி எழுப்பியபோதும், அதிகாரிகள் தரப்பில் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தோல்வி நிச்சயம் என்று உணர்ந்த காங்கிரஸ், இது போன்ற உள்ளடி வேலைகளை பார்க்கத் தொடங்கியுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மக்களின் ஆதரவு இருந்தால், நல்லாட்சி வழங்கியிருந்தால், கடந்த 5 வருடங்களில் ஏதாவது நல்லது செய்து இருந்தால் இது போன்ற எந்த சதி முயற்சியும் தேவையில்லை. ஆனால் ஐந்து ஆண்டுகள் மக்கள் நலனில் செயல்படாமல், தேர்தல் நேரத்தில் ஓட்டுகளை திருப்ப முயல்வது ஜனநாயகத்திற்கு எதிரான செயல்.
ஒரு வாக்காளரின் ஓட்டு என்பது அவரது அடிப்படை உரிமை. அந்த உரிமையை பறிப்பது, குறிப்பாக முதியவர்களின் வாக்குகளை மாற்றுவது மிக கடுமையான குற்றம். இது வெறும் தேர்தல் முறைகேடு மட்டுமல்ல; இந்திய அரசியலமைப்பின் அடிப்படை மதிப்புகளை மீறும் செயல்.
இதனை தட்டிக் கேட்ட குடும்பத்தினரையே மிரட்டுவது, அதிகாரத்தின் துஷ்பிரயோகம் என்பதற்கே எடுத்துக்காட்டு. இந்த சம்பவம் தொடர்பாக உடனடி, வெளிப்படையான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இல்லையெனில், இது போன்ற செயல்கள் மற்ற இடங்களிலும் நடைபெற வழிவகுக்கும் என்பதால், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் தலைவர் தளபதி, பொதுச்செயலாளர் என். ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகள் மட்டுமல்லாமல், மக்களுடன் இணைந்து ஜனநாயகத்தை பாதுகாக்கும் போராட்டமும் முன்னெடுக்கப்படும்.
டாக்டர். TK.பிரபு,
சிவகங்கை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்,
தேர்தல் அறிக்கைக் குழு உறுப்பினர்,
தமிழக வெற்றிக் கழகம்.