Dr. Shalini’s Fb post!💔
விஜய் இந்த வஞ்சகத்த��� எதிர்பார்த்திருக்க மாட்டார். மனிதர்கள் எவ்வளவு சுயநலவாதிகள், தங்களின் சிறு ஆதாயத்திற்காக எவ்வளவு பெரிய அநீதிகளையும் கொஞ்சமும் தயங்காமல் செய்யும் கொடூரம் கொண்டவர்கள் என்பதை காலம் அவருக்கு காட்டி இருக்கிறது.
In all probability, he might be reeling in severe trauma response. அதுவும் அவர் மீது நடத்தப்படும் இந்த blame game, எப்பேற்பட்ட வீரனையும் freeze modeடுக்குள் தள்ளி விடும்!
இந்த ஆட்டமே உங்களை முடக்கத்தான் விஜய். நீங்கள் முடங்கினால், அது எதிராளிக்கு வெற்றி. உங்களுக்கு வலிக்க வலிக்க எங்களுக்காக வந்து தலையை காட்டி விடுங்கள் என்று மக்கள் கேட்பது கூட அவர்கள் சுயநலம் தான். மக்களுக்கு தேவை ஒரு saviour.
எல்லா saviourகளுக்கும் கதி ஒன்று தான்: புரட்சி ->நம்பிக்கை-> மக்கள் ஆதரவு-> துரோகம்-> சூழ்ச்சி ->வீழ்ச்சி -> மீட்டுருவாக்கம் -> மேல் நிலையாக்கம் -> தெய்வத்துள் வைத்தல்
இன்று நீர் சிலுவையில் அறையப்பட்டு உள்ளீர்.
நாளை என்ன நடக்கும் எனும் காட்சி மாறுதலுக்காக வழக்கம் போல மக்கள் காத்திருக்கிறார்கள். அந்த மந்தைக்கு ஒரு நல்ல மேய்ப்பன் அமையட்டும்.😭
“வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்” எனும் நமது மக்கள் சந்திப்புப் பயணம், தித்திப்புடன் திருச்சியில் நேற்று தொடங்கியது. தொடர்ந்து நம் மக்கள் சந்திப்பானது அரியலூர், குன்னம் வரை நீண்டது. அனைத்து இடங்களிலும் மக்களின் தன்னெழுச்சியான பேரன்பும் பேராதரவும் மனம் நெகிழச் செய்தது. உங்கள் அனைவருக்கும் கோடானு கோடி நன்றி.
இத்துணை உணர்வு மிக்க மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் சார்ந்த பல்வேறு பணிகளை மேற்கொண்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகின்றேன்.
வழிநெடுக மிக நீண்ட தூரம் கூ���ியிருந்த மக்கள் திரளைக் கடந்து செல்லவே இயலாத நிலையால், நேற்று நள்ளிரவு கடந்தும் பெரம்பலூரில் நம்மைச் சந்திக்கக் கூடி இருந்த பல்லாயிரக்கணக்கான நம் உறவுகளைக் கா�� இயலாத ஒரு சூழல் ஏற்பட்டது. எனவே அனைவரது நலன் கருதி, மிகுந்த மன வருத்தத்துடன், மீண்டும் இன்னொரு நாள் பெரம்பலூர் வருவதென முடிவெடுக்க வேண்டிய நிலை உண்டானது. பேரன்பு கொண்டு காத்திருந்த பெரம்பலூர் மக்களிடம் என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். நிச்சயமாக உங்களைச் சந்திக்க, மீண்டும் வருவேன்.