25.06.2026 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில், மாநகரப் போக்குவரத்துச் கழகம் (MTC) மற்றும் இதர 6 அரசுப் போக்குவரத்து கழகங்களைச் சார்ந்த 300 புதிய பேருந்துகளை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்தார். மேலும், TN 01 AN 6303 என்ற எண் கொண்ட மாநகரப் பேருந்தில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் பயணமும் மேற்கொண்டார்.
அப்பொழுது, அந்தப் பேருந்தில் பணிபுரிந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் விவரங்கள் 👇
ஓட்டுநர்: திரு. டெல்லிபாபு. B (பணி எண்: D57694)
நடத்துனர்: திரு. சாமுவேல் (பணி எண்: C58802)
இவர்கள் இருவரும் அம்பத்தூர் பணிமனையைச் சேர்ந்த நிரந்தரப் பணியாளர்கள் (Regular Employees) ஆவர். இவர்களின் அடையாள அட்டைகளும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
எனவே, இது குறித்து சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பான, தவறான செய்தியாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பேப்பர் வைத்து பேசுவது குற்றமில்லை. ஆனால் இரண்டு வரிக்கு ஒருமுறை கீழே பார்த்து, அதையும் தப்பு தப்பாக படித்து பேசுறதை பார்த்தா, அரசியல் பிரஸ் மீட்டா இல்ல படப்பிடிப்பு ஸ்பாட்ல டயலாக் ரிகர்சலா என்ற சந்தேகம் வருகிறது. எங்கள் தலைவர் @TVKVijayHQ "வசனம் பேசுறார்" என்று விமர்சனம் செய்தவர்கள், இப்போது தாங்களே பேப்பரை பார்த்து வசனம் படிக்கிற நிலைக்கு வந்திருப்பது தான் காலத்தின் நகைச்சுவை. சினிமாவை விட்டு அரசியலுக்கு வந்தவர் எங்கள் அண்ணன் விஜய் ; அரசியலை விட்டு சினிமாவுக்கு போனால் உதயநிதிக்கு இன்னும் செட்டாக இருக்கும் போல! 😄
@Udhaystalin