“பாலைவனத்தில் தண்ணீரை சேமிக்கும் முயற்சி”
ரூ.242 கோடி செலவில், தார் பாலைவனத்தின் மத்தியில் பிரமாண்டமான செயற்கை ஏரி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் சுமார் 50 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இயற்கையாக மழை குறைவாக கிடைக்கும் பகுதிகளில்கூட, சரியான திட்டமிடலும், நீர் மேலாண்மையும் இருந்தால் தண்ணீர் பற்றாக்குறையை வெல்ல முடியும் என்பதை இந்த முயற்சி மீண்டும் நிரூபிக்கிறது.
நாம் இயற்கை ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் மற்றும் கால்வாய்களை பாதுகாத்து சீரமைத்தால், புதிய செயற்கை நீர்த்தேக்கங்களை உருவாக்க வேண்டிய அவசியமே குறையும்.
நீரின்றி அமையாது உலகு;
நீர்நிலைகளின்றி அமையாது நீர்!
- நிமல் ராகவன்.
"ஏஐயால் வீணாகும் தண்ணீர்"
"இப்போது AIகாக அதிக மின்சார உற்பத்தி தேவைப்படுகிறது. நீங்கள் ஒவ்வொரு கேள்வி கேட்கும் போதும் ஒரு டம்ளர் தண்ணீர் வீணாகிறது என்று அர்த்தம். அதனால் தேவையான கேள்விகளை மட்டும் AIயிடம் கேளுங்கள். இல்லைன்னா பக்கத்தில் இருக்கும் Friend கிட்ட கேளுங்கள்"
- நிகழ்ச்சி ஒன்றில் கமல்ஹாசன் பேச்சு
#kamalhaasan #ai #water #thanthitv
Mr.Marimuthu, a govt servant in TamilNadu has trained and sent over 10,000 people to govt jobs all at free of cost. Listen to the following videos! What an impact!
பிறக்கப்போகும் 2025-வது ஆண்டாவது இராமநாதபுரத்திற்கு ஒரு தீர்வை கொடுக்கட்டும்.
தயவுசெய்து இந்த காணொளியை பார்த்துவிட்டு, எங்களுக்கு தீர்வு கூறுங்கள்🙏🏽
கடந்த இரண்டு வருடங்களாக ராமநாதபுர மாவட்டத்தின் வறட்சியை போக்குவதற்காக வரத்து கால்வாய்களை சரி செய்யும் பணியையும் ஊரணிகள் அமைத்துக் கொடுக்கும் பணிகளையும் குடிநீர் போர்வெல் அமைக்க பணிகளில் தொடர்ந்து செய்து வருகிறோம்.. கடந்த ஆகஸ்ட் மாதம் 48 கிலோ மீட்டர் நீளமுள்ள நாராயணன் கால்வாயினை சரி செய்தால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடையும் 59 நீர்வளத்துறை தன்மைகளும் 70 ஊராட்சி கண்மாய்களும் பயன்பெறும் என்று வேலையை துவக்கினோம். ஆனால் நீர்வளத் துறை அதிகாரிகள் சில காரணங்களை சொல்லி எங்களை தடுத்தார்கள். இதுவரை ராமநாதபுரம் பகுதிகளில் நாம் பார்த்த வேலைக்கு எந்த தடங்களும் சொல்லாமல் இருந்தவர்கள் நாராயணன் கால்வாய் பணியினை கையில் எடுத்தவுடன் பல கட்ட நிபந்தனைகளுடன் வேலைகள் செய்ய நிர்பந்திக்கிறார்கள். இதனால் இந்த பணிகளை நாம் கைவிட நேர்ந்தது. தற்பொழுது அந்த நாராயணன் கால்வாய் சம்பந்தப்பட்ட கிராம மக்களை முன்னின்று அவரவர் ஊர் கிராமத்தின் சார்பாக தங்களுக்கு தேவையான பணிகளை தாங்களே செய்வதற்கு ஆயத்தமாக்கி அதற்கான பணிகளையும் மேற்கொண்டனர். ஆனால் கமுதி நீர்வளத் துறையில் இருந்து அதிகாரிகள் நேரடியாக வந்து இந்தப் பணிகளையும் தடுத்து நிறுத்தியோடு கிராம மக்களுக்கு மிரட்டலும் விடுத்துச் சென்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் நீர்நிலைப் பணிகள் செய்து வரும் எனக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் பணிகள் செய்வதற்கு தடங்கல் மென்மேலும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மற்ற மாவட்டங்களிலும் எங்களை பணி செய்ய அழைக்கிறார்கள். ஆனால் வறட்சி மாவட்டமான இராமநாதபுரத்தில் நிலைமையோ தலைகீழாக உள்ளது. தமிழக முதல்வர் அவர்கள் வெளிநாடுகளில் இருந்து அதிக முதலீடுகளை என் ஜி ஓ கள் மூலமாக சிறப்பான பணிகள் செய்வதற்கு பெற்று வருகிறார். ஆனால் ராமநாதபுரம் மாவட்ட அதிகாரிகள் தமிழக அரசுக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக இந்த மக்களை வஞ்சிக்கும் விதமாக செயல்படுகிறார்கள்.
தயவுசெய்து எங்களுக்கு நீதி பெற்று தாருங்கள்.