கடந்த இருண்ட கால திமுக ஆட்சியின் மறுபதிப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் தற்போதைய 'பொய்க்கால் குதிரை' அரசின் கையாலாகாத்தனத்தால், தங்குதடையின்றி கிடைக்கும் போதைப் பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் முற்றிலும் சீரழிந்து வருகிறது.
மேடையில் ஏறி வசனம் பேசுவது மட்டும் போதாது; அதனைச் செயலில் காட்ட வேண்டும். @CMOTamilNadu
#பொய்க்கால்_குதிரை_அரசு
"அந்த கத்தியை எடு, இவனை வண்டியில ஏத்து.."
நடுரோட்டில், ஒரு பொக்லைன் ஆப்ரேட்டரை ஆளுங்கட்சியின் நிர்வாகி ஒருவர் அராஜகமாகத் தாக்கும் காட்சி, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த நிலைக்குச் சென்றுள்ளது என்பதற்குச் சான்று.
அதிகார போதையில் மிதக்கும் இவர்களுக்கு இவ்வளவு தைரியம் எங்கிருந்து வருகிறது? தட்டிக் கேட்க வேண்டிய காவல் துறை மௌனமாக வேடிக்கை பார்ப்பது யாருக்காக?
@CMOTamilNadu, "இதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா? ஆட்சி அதிகாரம் என்பது அடக்குமுறையை ஏவுவதற்கு அல்ல; சாமானியன் அச்சமின்றி வாழ்வதை உறுதிப்படுத்துவதற்கு. சட்டத்தை கையில் எடுக்கும் உங்கள் கட்சியினரின் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.
#பொய்க்கால்_குதிரை_அரசு
அன்று கரூரில் போல, இன்று திருப்பரங்குன்றத்தில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியது ஏன்?
நிர்வாகத் திறமையின்மைக்கும், அலட்சியத்திற்கும் பெயர் போன இந்த "பொய்க்கால் குதிரை" அரசின் முதலமைச்சர், அன்றும் சரி இன்றும் சரி, மக்கள் நலனில் துளியும் அக்கறையின்றி அவர்களை வாட்டி வதைப்பதையே தனது தலையாய கொள்கையாகக் கொண்டுள்ளார்.
மக்களை ஒரு பொருட்டாகவே மதிக்காதவர்கள், இந்தத் துயரச் சம்பவத்திற்காவது பொறுப்பேற்பார்களா? அல்லது வழக்கம்போல் மற்றவர் மீது பழியைப் போட்டுவிட்டு, மீண்டும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கொள்வார்களா?
#பொய்க்கால்_குதிரை_அரசு
கானா பாடகர்கள் இருவரை ஆறுபேர் கும்பல் கொடூர ஆயுதங்களால் குத்தி படுகொலை நடவடிக்கை எடுக்காத பொய்க்கால் குதிரை அரசு இளைஞர்களை வெட்டிக் கொன்றுள்ள போதை ஆசாமிகளை உடனடியாக கண்டுபிடித்து சட்டம் ஒழுங்கை காக்க வலியுறுத்துகிறேன்.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#பொய்க்கால்_குதிரை_அரசு
வருவாய்த்துறையை நவீனமயமாக்கி, நிலப் பதிவுகள், பட்டா வழங்கல் மற்றும் பேரிடர் நிவாரண சேவைகளை விரைவுபடுத்தி, மக்களின் நலனையும் நம்பிக்கையையும் உறுதி செய்தது அதிமுக அரசு.
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்#Vote4AIADMK
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயல் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தும் திமுக-வினருக்கு கண்டனம்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் 23.4.2026 அன்று தமிழ் நாட்டில் நல்லாட்சி மலர வேண்டும் என்பதற்காக, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காலை 7 மணி முதல் மாலை வரை வரிசையில் நின்று, தமிழக வரலாற்றில் முன்எப்போதும் இல்லாத அளவில் மிக அதிகமான வாக்குப் பதிவை உறுதி செய்துள்ள தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
இரவு, பகல் பாராமல், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்குப் பதிவுநாள் வரை சுற்றிச் சுழன்று பணியாற்றிய @AIADMKOfficial மற்றும் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் @BJP4TamilNadu, பாட்டாளி மக்கள் கட்சி, @ammkofficial, தமிழ் மாநில காங்கிரஸ், புரட்சி பாரதம், இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகம் உட்பட நமது கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளுக்கும், ஆதரவு அளித்த கட்சித் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் மற்றும் ஆதரவு அளித்த அனைத்து அமைப்புகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
@AIADMKOfficial தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்த மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய அமைச்சர்களுக்கும், பிற மாநில முதலமைச்சர்களுக்கும், கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ் நாட்டில் தற்போது நடைபெற்று வரும் நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசின் மீது மக்களுக்கு இருக்கின்ற வெறுப்பை நாம் கண்கூடாகக் கண்டோம். விரக்தியின் விளிம்பில் உள்ள திமுக-வினர், எப்படி புறவாசல் வழியாக ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற எண்ணத்தோடு, அதற்கான முயற்சிகளை இந்தத் தேர்தலிலும் எடுப்பதற்குத் தயாராக உள்ளனர்.
தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு 23.4.2026 அன்று முடிந்துள்ள நிலையில், 4.5.2026 அன்று வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளது. இதற்காக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் முகவர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் அனைவரும் மிகுந்த கவனத்துடனும், விழிப்புடனும் பணியாற்றி, வெற்றிக் கனியை சிந்தாமல், சிதறாமல் பெற்று கழகத்திற்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் சமர்ப்பிக்கும் வகையில் பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்திடும் வகையிலும், மக்கள் தீர்ப்பு நிலைநாட்டப்படும் வகையிலும், அனைவரும் மிகவும் விழிப்புடன் பணியாற்றிட வேண்டும். இது, ஜனநாயகப் பயிர் தழைத்தோங்க நாம் அனைவரும் ஆற்ற வேண்டிய இன்றியமையாத கடமை என்பதை நினைவில் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
கோடான கோடி மக்களின் பேராதரவோடு, கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெற்று, வெற்றிக் கனியை 'பொன்மனச் செம்மல்' புரட்சித் தலைவர், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது பொற்பாதங்களில் சமர்ப்பிப்போம்.
தமிழக மக்களைக் காப்பதற்காக, தீயசக்தி திமுக மீண்டும் தலையெடுத்துவிடாமல் தடுத்து நிறுத்துவோம். இதுதான், தன் நலன் பாராமல் நமக்காக உழைத்த, நாட்டுக்காக உழைத்த, புரட்சித் தலைவருக்கும், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கும் நாம் செலுத்தும் நன்றிக் கடன் என்பதை இந்த நேரத்தில் உங்கள் அனைவருக்கும் நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன்.
வெற்றி நமதே!
#அண்ணாதிமுக_WINNING!
#நல்லாட்சி_COMING!
@AIADMKOfficial
EPS victory would be personal to me. A person from a humble background winning against nepotism products and cinema stars would be an inspiration for many like me. I wish and pray to God that EPS wins.
விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகளும், உயிரிழப்புகளும் தொடர்கதையாகிவிட்டன. இதுகுறித்து நானும் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்தும், பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை @mkstalin-ன் திமுக அரசு. மாறாக, பட்டாசு ஆலை என்ற பெயரில் ஒரு பளபளக்கும் அறையில் போட்டோஷூட் மட்டுமே எடுத்தார்.
இன்னும் சில நாட்களில் அமையவுள்ள @AIADMKOfficial அரசு இப்படியெல்லாம் ஏமாற்றாமல், பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பு நெறிமுறைகளை உறுதிசெய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்ள விழைகிறேன்.