கடந்த 10 மணி நேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான தலைவர்கள் பதிவு செய்து, நமது அரசியல் இயக்கம் சாதனைப் படைத்துள்ளது. இந்த மகத்தான வரவேற்பு, நாம் ஒன்றாகக் கொண்டிருக்கும் இலட்சியத்தின் மீதும், சமூக மாற்றத்திற்கான நமது பயணத்தின் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்த ஒவ்வொரு நபருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
https://t.co/bpwUirXkR4
மீண்டும் தேர்தல் வந்தால் விஜய் 200+ தொகுதிகள் அள்ளிவிடுவார் என பல பதிவுகள் பார்க்க முடிகிறது. சில கருத்துகள் -
1. தேர்தல் உடனே வராது. குறைந்தது 6 மாதங்கள் ஆகும். அதற்குள் இப்போது உள்ள மக்கள் மனநிலை பெருமளவுக்கு மாறலாம்.
2. இந்த தேர்தல் பிரச்சாரத்தில் விஜய்தான் திமுகவை கடுமையாக எதிர்த்தும், அதிமுகவை "மற்றும் பலர்" என்றும் விமர்சித்துக் கொண்டிருந்தார். திமுகவோ அதிமுகவோ பெரிதாக விஜய்யை விமர்சிக்கவில்லை. ஆனால், அடுத்த தேர்தலில் விஜய் மீது அக்குவேறு ஆணிவேறாக எதிர் விமர்சனங்கள் வைக்கப்படும். இந்த முறை போல் எதிர்வாதம் இல்லாத luxury விஜய்க்கு இருக்காது. மக்களும் ஒருதலைப்பட்சமாக சிந்திக்கவேண்டிய அவசியம் இருக்காது.
3. இந்த தேர்தலில் தவெக வேட்பாளர்கள் குறித்தும் அந்தந்த தொகுதியின் திமுக, அதிமுக வேட்பாளர்கள் எந்த விமர்சனமும் வைக்கவில்லை. அடுத்த முறை தவெக வேட்பாளர் தகுதி, பின்புலம் என பலவற்றை எடுத்து பேசுவார்கள். அதனால் "விஜய் முகம், விசில் சின்னம்" என்று மட்டும் வேட்பாளர்கள் தப்பிப் பிழைக்கமுடியாது.
4. இந்த முறை கவனிக்கத் தவறிய தவெகவின் Influencer மற்றும் Social Media Marketingஐ அடுத்த முறை பெரிய கட்சிகள் சரியாக எதிர்கொள்ளும். சோஷியல் மீடியாவிலும் உறுதியான counterகள் இருக்கும்.
5. குறுகிய காலத்தில் மீண்டும் ஆயிரக்கணக்கான டாலர் செலவில் "அண்ணனுக்காக வரேன்" என வெளிநாட்டு தமிழக வாக்காளர்கள் பலர் வரமாட்டார்கள். எனவே அவர்களால் கிடைக்கும் Ripple Effect Marketing அடிபட்டுப் போகும்.
6. "என்ன, வெறும் சென்டிமென்டுக்கு ஓட்டு போட்டுட்டியா?" போன்ற கேள்விகளால் இன்று கூனிக்குறுகி நிற்கும் வாக்காளர்கள் பலர் மீண்டும் விஜய்யின் "எனக்கு எதிரான சதி" emotional பேச்சுக்கு செவிசாய்க்கும் வாய்ப்பு குறைவு.
7. ஆட்சி நடத்தி திட்டங்களை செயல்படுத்தி மீண்டும் ஒரு தேர்தலை சந்திப்பதற்கும், ஆட்சியே செய்யாமல் ஜனாதிபதி ஆட்சி வந்து ஒரு தேர்தலை சந்திப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. ஆட்சி நடத்தாமல் இப்போதைய "தீயசக்தி தூயசக்தி", "Career உச்சத்தை விட்டுட்டு ஆறு மாசம் வேலையில்லாம இருந்தேன்" போன்ற repeat பிரச்சாரங்கள் எடுபடாது.
இவை போன்ற இன்னும் சில காரணங்களால் விஜய் இப்போது ஏற்படுத்திய cinematic effectஐ மீண்டும் ஏற்படுத்துவது கடினம்.
அதனால்தான் இப்போது எந்த வழியிலாவது முதலமைச்சர் பதவியை ஏற்றுவிட விஜய் முனைப்பாக இருக்கிறாரோ?!
குதிரை பேரம் செய்து MLA கள் ஆதரவை பெறுகிறார் விஜய்...
திமுகவை எதிர்த்து பேசி ஓட்டு வாங்கி திமுக கூட்டணியில் இருந்து வரும் கட்சிகளின் ஆதரவில் எப்படி ஆட்சி அமைக்க முடியும்..??
ஆட்சி அமைக்கவே ஊழல் செய்யும் விஜய் எப்படி தூய ஆட்சி கொடுப்பார்
தினகரன் அடுக்கடுக்கான புகார்..
Maridhas Shocking 😳🤯🤯
TVK Tirunelveli MLA - கனிம கொள்ளையில் கோடிக்கணக்கான பணத்தை சுருட்டிய நபர்
TVK Royapuram MLA - ஆட்டோ ஓட்டுநர் இல்லை, அவரிடம் 4 கார்கள் உள்ளது (1 இண்ணோவா)
TVK Virugambakkam MLA - விஜய் ஓட்டுநர் மகன் இல்லை, பினாமி மகன், அவர் பெயரில் 4 நிறுவனங்கள் உள்ளது
வெட்கமாக உள்ளது. இந்திய தேர்வாணைய தேர்வில் ((IPS) சிறப்பான வெற்றியை பெற்ற
படித்த பண்பாளர்;
அகில இந்திய அளவில் அரசியல் ஞானம் உள்ளவர்
உயர் பதவியில் சிங்கமாக வலம் வந்தவர்.
குழந்தைகள் முதல் முதியோர் வரை அன்பும் மரியாதையும் கொண்டவர்.
பொருளாதாரம், சட்டம், மற்றும் சமூக அறிவியல் கற்றவர்.
அவையெல்லாம் புறந்தள்ளப்பட்டு, வேஷமும் script இல் உள்ளதை மட்டுமே படித்து நடித்த ஒரு நடிகனிடம்
தமிழ்நாட்டை அடகு வைத்ததை எண்ணி ஞானம் உள்ளவர்களெல்லாம் வெட்க பட வைத்து விட்டது இந்த தேர்தல்.
...ச்சீய்
சூப்பர் ஸ்டார்
ரஜினிகாந்த் நடித்த
அருணாசலம் படத்தில்
இடம்பெற்ற
'அதான்டா இதான்டா'
பாடலுக்காக எழுதப்பட்டுப்
படத்தில் இடம்பெறாத
மாற்றுப் பல்லவியும் சரணங்களும்
ஆயிரத்தொரு பாடல்கள் தொகுப்பில்
இடம்பெறுகின்றன
இந்த வரிகளை
ரசிகர்கள் அதே மெட்டில்
பாடிப் பார்க்கலாம்;
பரவசம் கொள்ளலாம்
பல்லவி
அன்புள்ள அண்ணன்டா
அருணாசலம் நான்தாண்டா
சாதிபேதம் இல்லாம
சகலருக்கும் சொந்தம்டா
ஆண்டவன் நடத்திடுவான்டா
அருணாசலம் நடந்திடுவான்டா
நான் எந்த நாளும்
எளிமையான ஆளடா - அட
ஏழை வீட்டு உப்புக் கல்லு நானடா
சரணம் 1
எல்லா மனிதனுக்கும்
ஓராற்றல் உண்டு – அதை
நல்லா வளர்த்துவிடு
அடையாளம் கண்டு – அட
உதவாத பயலென்று
எவனுமில்லை இன்று – சிறு
வேப்பம் பூவானாலும்
தேனுண்ணும் வண்டு
பாம்புகடிச்சு இங்கே
பொழச்சவனும் உண்டு – தன்
செருப்புக் கடிச்சு இங்கே
செத்தவனும் உண்டு – அட
நாளை என்னாகும் என்ற
கவலைகளை வென்று – நீ
இன்றே சுகம் கண்டு
வாழ்வதுதான் நன்று
போதிக்கும் மனிதர்கள்
சாதிப்பது இல்லையடா
சாதிக்கும் மனிதர்கள்
போதிப்பது இல்லையடா
உழைக்கும் மனிதன்
அழைக்கும்போது
தெய்வம் வருமடா
நெற்றி வேர்வை
நிலத்தில் சிந்தி
வெற்றி வெற்றி கொள்ளடா
சரணம் 2
கறையேதும் இல்லாத
நிலவெங்கே சொல்லு? – சிறு
நுரை கூட இல்லாத
நதி எங்கே சொல்லு – அட
சதுரத்தில் முட்டையிடும்
பறவை எதுசொல்லு – மிகச்
சரியாக வாழ்கின்ற மனிதன்
யார் சொல்லு?
ரோஜாச் செடியென்றால்
அதிலுண்டு முள்ளு – நீ
முள்ளோடு மோதாமல்
ரோஜாவைக் கிள்ளு – அட
அறியாத பிழை என்றால்
அதை விட்டுத் தள்ளு – சிறு
குறை நீக்கி நிறை கண்டு
நெறியோடு நில்லு
இளமையில் உழைப்பவன்
முதுமையில் சிரிக்கிறான்
இளமையில் படுத்தவன்
முதுமையில் அழுகிறான்
விதைக்கு வைத்ததைச்
சமைத்து உண்பவன்
மிகவும் மூடனடா
மழைக்கு முந்தியே
கலப்பை செய்பவன்
எவனோ அவனே சூரன்டா
#BREAKING | "அந்த நடிகை பகிர்ந்த புகைப்படங்களால் நானும் எனது குழந்தைகளும் மன ரீதியாக பாதிக்கப்பட்டோம்.." -சங்கீதா குற்றச்சாட்டு
#SunNews | #ActorVijay | #Sangeetha