சென்ற ஆண்டு இதே நாளில், என்னுடைய திருமணத்தை செயல் தலைவர் அண்ணன் தளபதி தலைமை தாங்கி நடத்தி வைத்து, ஆற்றிய உரையினை கேட்டு நான் ஆனந்த கண்ணீர் வடிந்த நிமிடங்கள். இந்த எளியவனின் விருப்பத்திற்கேற்ப திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து அண்ணன் தளபதி அவர்களுக்கு மிக்க நன்றி.
@mkstalin
@JioCare On priority? Does it really take 9 days to restore a JioFiber connection? I've been facing continuous issues for the past 2 months despite multiple complaints and follow-ups. Stop making false promises and provide a permanent solution immediately.
@JioCare@AmbaniKaVansaj@TRAI
CM சார்…
நாடு சிரிக்கும் நான்கு மாதங்கள்! இந்த நான்கு கேள்விகளுக்குப் பதிலுண்டா…?
1. பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியோரைச் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் மாவட்டச் செயலாளர்களாகவும் வைத்துக்கொண்டு முதலமைச்சர் பெண் பாதுகாவலர் போல வேடம் போடலாமா?
2. அறிவிக்கப்படாத மின்வெட்டில் இருந்து, இனி தினமும் அறிவித்துவிட்டு 8 மணிநேரம் மின்வெட்டு என்பதை நோக்கித் தமிழ்நாடு நகரவுள்ளதாக வரும் செய்திகள் உங்கள் செவிகளை எட்டவில்லையா?
3. அசையாத மரமொன்று விழுந்தது கீழே என்ற கதையாக, இடைத்தேர்தல் தோல்வியைத் தவிர்க்க நீ��்கள் மணிக்கணக்கில் தெருவலம் போவது போதாமல், டிபன் கேரியரில் பணமும் போகிறதாமே? ஒரு தெருவுக்கு இவ்வளவு என வாக்குகள் விலைபேசப்படுவதாக உங்கள் ஆட்சி அமைய ஆதரவு தெரிவித்த கட்சிகளே குற்றம்சாட்டுவதற்குப் பதில் என்ன?
4. இத்தோடு, குதிரைவேக குதிரை பேரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? அல்லது, இனியும் TVK Horse Trading-இன் அடுத்த Season தொடருமா?
தூயசக்தி எனத் தம்பட்டம் அடித்த உங்களது ரீல் இப்படி ந���ன்கே மாதங்களில் அறுந்து தொங்கிவிட்டதே!
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் கொள்கைகளை ஏந்தி,
தமிழ்நாட்டைச் சீர்மிகு பாதையில் வழிநடத்தும் 'திராவிட மாடல்' ஆட்சியின் நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்
#HBDCMMKStalin#HBDMKStalin73#ஸ்டாலின்_தொடரட்டும்
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் – இடையே தற்போது ஏற்பட்டுள்ள போர் காரணமாக ஈரான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஐக்கிய அரபு அமீரகம் (UAE), குவைத், பஹ்ரைன், ஓமன், சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதன் காரணமாக அங்கு உள்ள இந்தியர்களின் பாதுகாப்பைக் கருதி, பயணங்களைத் தவிர்க்கவும், ���ுடிந்தவரை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவும், இந்தியத் தூதரகம் வெளியிடும் அறிவுறுத்தலின்படி செயல்படவும் இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சராக, வளைகுடா நாடுகளில் வசித்து வரும் நம் தமிழர்களின் பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன். அங்குள்ள தமிழர்களின் நிலைமையை உடனுக்குடன் அறிந்து, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்காக, தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறைக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் புது டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திலும் கட்டு��்பாட்டு அறை அமைக்கப்பட்டு, நிலைமை தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு, அங்குள்ள தமிழர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, நிலைமையைக் கண்காணித்து வருகிறது.
மேலும் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கவும் தயார் நிலையில் உள்ளது.
போர்ப் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால், அவர்கள் அல்���து தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினர், தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறையின் 24x7 கட்டணமில்லா உதவி எண்களையோ அல்லது புது டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் கட்டுப்பாட்டு அறையினையோ தொடர்புகொள்ளலாம்.
மேலும், தங்கள் பகுதிகளில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிடும் அறிவுறுத்தல்களைக் கண்டிப்பாகப் பின்பற்றிப் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
புது தில்லி கட்டுப��பாட்டு அறையின் உதவி எண்கள்
011-24193300 (Land line)
92895 16712 (Mobile Number with Whatsapp)
அயலகத் தமிழர் நலத்துறையின் உதவி எண்கள்:
இந்தியாவிற்குள் – 1800 309 3793
வெளிநாடு – +91 80 6900 9900 (Missed Call)
தொடர்புக்கு – +91 80 6900 9901
NDA Circus Ringmaster BJP; டெல்லி கட்டளைக்குப் பணிந்து வித்தை காட்டும் பழனிசாமி!
“தேர்தல் முடிந்ததும் கொள்கையற்ற சந்தர்ப்பவாத NDA கூட்டணியில் இருந்து எல்லோரும் சிதறிவிடுவோம்“ எனத் தங்களின் தோல்வியை முன்பாகவே கணித்துள்ளார் எதிர்க்கட்சித் தல��வர் பழனிசாமி அவர்கள்! இப்படி அடிக்கடி செய்த அனுபவம் கொண்டவரென்பதால் இதில் அவரை நம்பலாம்.
மேற்கு மண்டலத்துக்கு நமது #DravidianModel அரசு செய்து தந்திருக்கும் சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்போம்! மேற்கு மண்டலத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்ற Flash News-ஐத்தான் தேர்தல் முடிவு வெளிவரும் நாளில் உங்களிடம் நான் எதிர்பார்க்கிறேன்.
கொள்கையால் இணைந்து பயணிக்கும் நம் மதச்சார்பற்ற ம��ற்போக்குக் கூட்டணி வலிமையடைந்துகொண்டே போகிறது. பாசிச பா.ஜ.க.வை எதிர்கொள்ளும் து��ிச்சல் கொண்ட கட்சியாக இந்திய அளவில் நமக்குள்ள stature உயர்கிறது!
அடிமைகள், ஆதிக்கவாதிகள், அவர்களின் ஏவல் அமைப்புகள் என எத்தனை பேர் வந்தாலும், தமிழ்நாட்டு மக்களின் பேராதரவோடு #வெல்வோம்_ஒன்றாக!
மேற்கு மண்டலத்துக்கான அறிவுச்சுரங்கமாக நமது #DravidianModel அரசு கோவையில் அமைத்து வரும் 'பெரியார் அறிவுலகம்' கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டேன். தங்கள் ஊருக்கு யார் வந்தாலும் கோவை மக்கள் பெருமிதத்தோடு அழைத்துச் ச��ன்று காண்பிக்கும் சிறப்புக்குரிய அறிவுக்கோயிலாக இதனைக் கூடிய விரைவில் திறந்து வைப்பேன்!
மேலும், "என் வாழ்வே எனது செய்தி" என வாழ்ந்து இந்தியர்களின் இதயங்களில் நிறைந்த அண்ணல் காந்தி அவர்களின் நினைவகத்தையும் பார்வையிட்டேன்.
உடலுறுப்புகளைக் கொடையளித்து இறவாப் புகழை எய்திவிட்ட குழந்தை வெண்பா நம் மனங்களில் நிறைந்து வாழ்வாள் ♥️
பெற்றெடுத்த அன்பு மகளை இழந்த வலியையும் தாங்கிக் கொண்டு, மாந்தநேயத்தோடு அந்தக் குழந்தையின் உடலுறுப்புகளைக் கொடையளித்த பெற்றோர் திரு. சோமு மற்றும் திருமிகு. சுகன்யா ஆகியோருக்கு நமது அன்பு ஆறுதலாய் துணை நிற்கட்டும்!
திரு. சோமு அவர்கள் நமது திராவிட முன்னேற்றக் கழகத்தில் நிர்வாகியாக இருந்து மக்களுக்குத் தொண்டாற்றுவதில் பெருமை கொள்கிறேன்.
உடலுறுப்புகளைக் கொடையளிப்பது குறித்து நான் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். அதேபோல், கொடையாளரின் இறுதி நிகழ்வுகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் எனக் கடந்த 23-09-2023 அன்று அறிவித்திருந்தேன். இதனைத் தொடர்ந்து, தங்களது உடலுறுப்புகளைக் கொடையளிப்போரின் எண்ணிக்கை தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மட்டுமல்ல; இந்திய மாநிலங்களிலேயே அதிகளவுக்கு அதிகரித்து வருகிறது. இதுவரையில், இறப்பிலும் பலருக்கு வாழ்வளித்த 653 பேருக்கு அரசு மரியாதைய���டன் இறுதி நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. அறிவியல் மனப்பான்மையோடு சிந்தித்துச் செயல்படும் தமிழ்நாடு வளரட்டும்!
இறப்பிலும் புதுவாழ்வளிக்கும் ��ந்தக் கருணை உள்ளங்களே போற்றுதலுக்குரிய தியாகிகள்!
#OrganDonation
The Union BJP government must not mortgage the integrity of investigating agencies for short-term politics. Have some shame.
Well done, my respected friend Thiru. @ArvindKejriwal, and Thiru. @msisodia, for standing firm through it all and letting the truth speak for itself.
#ArvindKejriwal #CBI @AamAadmiParty
முன்னாள் முதலமைச்சரும் அருமைச் சகோதரருமான திரு. ஓ.பன்னீர்செல்வம�� அவர்கள் தாய்க்கழகமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார். அவரை வருக வருக என வரவேற்கிறேன்.
திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவரின் பெயரைத் தாங்கிய அவர் திராவிட இயக்கக் கொள்கை காக்கும் நம் பேரியக்கத்தில் இணைந்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தல் என்பது தமிழ்நாட்டுக்கும் பாசிச பா.ஜ.க.வுக்கும் இடையிலான ஜனநாயகப் போர். இதனை உணர்ந்து��ான் பல்வேறு ஜனநாயக சக்திகளும் கழகக் கூட்டணியில் இணைந்து வருகிறார்கள். நம்மோடு இணைந்துள்ள சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்! அவரது வரவு நல்வரவாகட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!
#வெல்வோம்_ஒன்றாக!
@OfficeOfOPS
#DravidianModel: தொடரும் வளர்ச்சிப் பணிகள், பெருகும் திட்டங்கள், குறையாத வேகம்!
🔷 ECR-இல் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை 2,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்க��்படவுள்ள சாலை மேம்பாலப் பணிகளுக்கு அடிக்கல்,
🔷 கடலூரில் 98.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள அஞ்சலை அம்மாள் அறிவுலகக் கட்டடத்திற்கு அடிக்கல்,
🔷 பிரிக்ளின் சாலைக்கு ’திராவிடமணி’ இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பெயர் சூட்டப்பட்டுத் திறந்துவைத்தல்,
🔷 @TNIndMin சார்பிலான நிகழ்ச்சியில், EROS GEN AI நிறுவனம் - @IITMadras ஒத்துழைப்புடன் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள Large Cultural Voice Models (LCVM) திட்டம் வெளியீடு,
🔷 திருநெல்வேலி - ரெட்டியார்பட்டி, விருதுநகர் - கூரைக்குண்டு மற்றும் ஈரோடு - கங்காபுரம் என மூன்று டைடல் நியோ பூங்காக்கள் அமைக்க அடிக்கல்,
🔷 தைவான் ADATA டெக்னாலஜி துணை நிறுவனமான ADATA செமிகண்டக்டர் நிறுவனம், ரூ. 931 கோடி உறுதிசெய்யப்பட்ட முதலீட்டில் #SIPCOT திருப்பெரும்புதூரில், DRAM memory modules and Flash drives உற்பத்தி ஆலை அமைக்க அடிக்கல்,
🔷 ��ேலூர் மாவட்டம், பெருமுகை கிராமத்தில் 250 படுக்கைகள் வசதி கொண்ட கலைஞர் நூற்றாண்டு தங்கும் விடுதிக் கட்டடம் மற்றும் சென்னை, சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் அரசுப் பணியாளர்களுக்கான “C” வகை குடியிருப்புக் கட்டடம் திறப்பு,
🔷 @tnschoolsedu சார்பில் 35 மாவட்டங்களில், 217 அரசுப் பள்ளிகளில் 296.62 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 1,232 வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் பிற வசதிகள் திறப்பு,
🔷 இராணிப்பேட்டை மாவட்டத்தில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் ஏரியை ஆழப்படுத்தி கொள்ளளவினை உயர்த்திடும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள மறுகட்டுமானங்கள் திறப்பு,
🔷 வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், கோயில்மலையாற்றின் குறுக்கே சிறிய அணை அமைக்கும் பணிக்கு அடிக்கல்,
🔷 @tnhrcedept சார்பில் திருக்கோயில்களில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல்,
🔷 குழந்தைகள் பாலின விகிதத்தை உயர்த்தச் சிறப்பாகச் செயலாற்றிய தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகங்களின் சாதனைகளைப் பாராட்டி விருதுகள் உள்ளிட்ட இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பு!
தகைசால் தமிழருக்குச் செவ்வணக்கம்!
வாழ்நாள் போராளியாய் - அரசியலில் எங்களுக்குப் பேரொளியாய் விளங்கிய தோழர் நல்லகண்ணு அய்யா அவர்களுக்கு என் இறுதி மரியாதையைச் செலுத்தினேன்.