தவெக ஆட்சியில் தொடரும் காவல் நிலைய மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்போது? முதலமைச்சர் விஜய் பாரவுந்து ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மரணத்திற்கு மன்னி��்பு கேட்கப்போகிறாரா? நீதிப்பெற்றுத்தரப்போகிறாரா?
@CMOTamilnadu @TVKVijayHQ
மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காகச் சென்ற தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாரவுந்து ஓட்டுநர் பாலகிருஷ்ணன் அவர்கள் காவல் நிலையத்திற்குள்ளேயே மர்மமான முறையில் உயிரிழந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியையும் மிகுந்த வேதனையையும் அளிக்கிறது.
விசாரணைக்காக காவல்நிலையம் சென்ற எளிய மனிதர் உயிரோடு ���ீடு திரும்ப முடியாத கொடுமை நிகழ்ந்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
காவல் நிலையம் என்பது மக்களின் குறைகளைத் தீர்க்கும் இடமாக இருக்க வேண்டுமே தவிர, அவர்களின் உயிரைப் பறிக்கும் இடமாக மாறிவிடக்கூடாது! மக்களின் உயிரைப் பாதுகாக்க முடியாத காவல்துறையால் சட்டம்-ஒழுங்கை எப்படிப் பாதுகாக்க முடியும்?
தான் ஓட்டிச் சென்ற வாகனம் தீப்பிடித்து எரிந்தது தொடர்பான விசாரணைக்காகக் காவல் நிலையம் சென்ற பாலகிருஷ்ணன் அவர்கள், காவல் நிலையக் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறை கூறுவது பல்வேறு ஐயங்களை எழுப்புகிறது. விசாரணைக்குச் சென்றவரை இரவு முழுவதும் காவல் நிலையத்தில் தங்க வைத்தது ஏன்? காவல்துறையின் கண்காணிப்பில் இருந்த ஒருவர் காவல் நிலையத்திற்குள்ளேயே உயிரிழக்கும் அளவிற்கு என்ன நடந்தது? அவரது உயிரைப் பாதுகாக்கத் தவறியது யார்? இக்கேள்விகளுக்கெல்லாம் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டாமா?
கடந்த திமுக ஆட்சியில் திருப���புவனம் இளைஞர் அஜித்குமார் காவல்துறையினரால் கொல்லப்பட்டபோது, அவரது தாயாரிடம் அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மன்னிப்புக் கேட்டதை விமர்சித்து, அஜித்குமார் குடும்பத்திடம் மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதுமா? என்று கேள்வி எழுப்பி 'Sorry வேண்டாம்; நீதி வேண்டும்' என்ற இன்றைய முதலமைச்சர் விஜய் அவர்கள், இன்று தம்முடைய ஆட்சியில் காவல் நிலையத்திற்குள்ளேயே ஓர் உயிர் பறிபோயிருப்பதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்? பாலகிருஷ்ணன் மரணத்திற்கு
என்ன நீதியை பெற்றுத்தரப்போகிறார்?
எதிர்க்கட்சியாக இருந்தபோது தான் கேட்ட கேள்விகளுக்கு, ஆளுங்கட்சியாக வந்த பிறகு பதில் சொல்ல வேண்டிய கடமை தனக்கு இருக்கிறது என்பதை முதலமைச்சர் விஜய் அவர்கள் மறந்துவிடக்கூடாது! அன்று கேட்ட நீதி, இன்று ஆட்சிக்கு வந்ததும் மறந்துபோகலாமா? ஆட்சி மாறினாலும் காவல் நிலைய மரணங்கள் மட்டும் மாறாமல் தொடர்வதுதான் நீங்கள் சொன்ன ஆட்சி மாற்றமா?
ஒவ்வொரு நாளும் வெவ்வேறு குற்றங்களில் சிக்கும் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அறிவுரையோடு அனுப்பிவைக்கும் முதலமைச்சர் விஜய் அவர்கள், ��ந்தக் காவல் நிலைய மரணத்திற்கு காரணமான காவலர்களைப் பணியிடை நீக்கம் செய்ததோடு கடமை முடிந்துவிட்டதாகக் கருதக்கூடாது. பாலகிருஷ்ணன் காவல் நிலைய மரண வழக்கு விசாரணை எவ்வித அரசியல் தலையீடுமின்றி நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடைபெற வேண்டும். காவல் நிலையக் கண்காணிப்பு பதிவுகள் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதோடு, நீதித்துறை விசாரணையின் மூலம் பாலகிருஷ்ணன் மரணத்தில் உள்ள அனைத்து ���யங்களுக்கும் விடை காணப்பட்டு அவரது குடும்பத்தினருக்கு உண்மை தெரியப்படுத்தப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்து, நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
மேலும், குடும்பத்தின் வாழ்வாதாரமாக விளங்கிய பாலகிருஷ்ணனை இழந்து தவ���க்கும் அவரது குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு உரிய துயர்துடைப்பு நிதி வழங்குவதோடு, குடும்பத்தில் தகுதியுள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
கள்ளக்குறிச்சி கலெக்டர் விவகாரத்தில் முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்காத நிலையில் புகாரை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார் கலெக்டர் & அவர் கணவர்...
இந்த ஒரு விவகாரத்தில் தன் கட்சி MLA எடுக்காமல் காப்பாற்ற நினைக்கும் விஜய் நோக்கம் அ���ுவருப்பானது மட்டும் அல்ல ஆபத்தானது.
MLA மீது நடவடிக்கை எடுக்காமல் நிர்மல் சிங்கை விட்டு அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்று நேற்று பேட்டி கொடுக்க சொல்கிறார் விஜய் எனில் இவர் சொன்ன "பெண்கள் பாதுகாப்பு அண்ணனா இருப்பேன்" என்பது பெரிய பொய்... ஒரு கலெக்டருக்கு இந்த நிலைமை...
பிற பெண்கள் நிலை?
விஜய் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மத்திய அரசு உரிய நடவடிக்கையை MLA மீது எடுப்பது அவசியம்.
மாவட்ட ஆட்சியருக்கு பாலியல் ரீதியான குறுஞ்செய்தி அனுப்பியவரை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட ஆட்சியர் இதனை மறுக்கவில்லை. பாதிக்கப்பட்டவர் பக்கம்தான் அரசு நிற்க வேண்டும். - CPM மாநிலச் செயலாளர் பெ. சண்முகம்
#CPM | #Shanmugam | #CMVijay | #TNGovt | #PuthiyathalaimuraiTV
காவல்துறைக்கு அடிவாங்கிய நபர் டாஸ்மாக் போனாரா இல்லையா என தேட வெக்கமா இல்லை?
விஜய் உங்களுக்கு நடவடிக்கை எடுக்க வக்கு இல்லை என்றால் வழக்கம் போல கொஞ்சம் நாளைக்கு போய் பதுங்கி கொள்ளுங்கள்.. வெளியே வராதீர்.
துணை சபா நாயகர் அடிச்சது தவறா இல்லையா ? அசிங்கமா பேசியது தவறா இல்லையா? அந்த ஆளை கைது எப்போது செய்வீர்? இதை செய்ய துப்பு இல்லை.. காவல்துறையை ஏவி எவன் எவன் டாஸ்மாக் கடைக்கு போறான் தேடி கொண்டிருக்கிறீர்கள்..
அதிகாரம் கிடைத்ததும் எப்படி நீங்கள் நடந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்..
விஜய் வழக்கமான அரசியல்வாதி போல போலீஸ் அதிகாரத்தை பயன்படுத்தி ஒரு சாமானியனாக ஒடுக்க துடிப்பது வெட்கக்கேடு.
Serious questions to be answered by the TVK on law and order- murders, political crimes peaking and many of them linked to TVK functionaries, this must be a wake up call for the TN govt
ஒரே நாளில் 11 படுகொலைகள்! குறைகளைத் தெரிவிக்க வந்தவரைத் தாக்கிய துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கர்! சட்டம் ஒழுங்குக்கும், பொது அமைதிக்கும் விடுமுறைவிட்டு விட்டாரா விஜய்?
@CMOTamilnadu@TVKVijayHQ
தீபாவளி பண்டிகைக் கொண்டாடப்பட்ட நேற்றைய தினம் மட்டும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 11 பேர் கொல்லப்பட்டதாக வெளியாக��யுள்ள செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஒரு பண்டிகை நாளைக்கூட பாதுகாப்பாகக் கொண்டாட முடியாத அளவுக்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு மிக மோசமாகச் சீரழிந்திருந்திருப்பது கையாலாகா தவெக ஆட்சியாளர்களின் மோசமான ஆட்சிக்கான சாட்சியாகும். தேனி, சமதர்மபுரத்தில் பொதுச்சாலையை மறித்துப் பட்டாசு வெடித்தவர்களைத் தட்டிக்கேட்டதற்காகக் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார். சாலையில் செல்லும் மக்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தட்டிக்கேட்ட ஒரு காவல்துறை அதிகாரிக்கே இந்நிலையென்றால், பொதுமக்கள் யாரை நம்பி வீதிக்கு வருவார்கள்? மக்களைக் காக்கும் காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லை எனுமளவுக்கு���் தமிழ்நாட்டுச்சூழல் தள்ளப்பட்டிருப்பது பொதுஅமைதி முற்றிலும் குலைந்ததற்கான அறிகுறியாகும்.
வார இறுதியில் தலைமைச்செயலகத்துக்கு விடுமுறை விடுவதுபோல, சட்டம் ஒழுங்குக்கும், பொது அமைதிக்கும் விடுமுறை விட்டுவிட்டாரா முதலமைச்சர் விஜய்? இத்தனைக் கொலைகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? ஒரு பண்டிகை நாளன்றுகூட மக்கள் பயத்தோடும், பதற்றத்தோடும்தான் இருக்க வேண்டுமென்றால், நடப்பதற்குப் பெயர் ஆட்சியா? குற்றங்களை நிகழவிட்டுவிட்டு, குற்றவாளிகளைப் பிடித்துச் சிறைலடைப்பது காவல்துறையின் வேலை இல்லை; குற்றங்களே நிகழாதவணக்கம் அமைதியான, பாதுகாப்பான சமூகத்தைப் படைப்பதே காவல்துறையின் முதன்மை நோக்கமாக இருக்க முடியும். ச��றைவாசிகள் சர்வசாதாரணமாகச் சிறையிலிருந்து தப்பித்து ஓடுவது ஒருபுறமென்றால், போதைப்பொருட்களின் மிதமிஞ்சியப் புழக்கம் மறுபுறம்! தவெகவின் நிர்வாகிகளே போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஒன்றிய அரசின் படையாலும், கேரள அரசின் காவல்துறையாலும் கைதுசெய்யப்படுகின்றனர். அதனைக் கண்டுகொள்ளாத காவல்துறை, மதுக்கடைக்கு எதிராகப் போராடியவரின் கடையில் போதைப்பொருளை வைத்து, பொய் வழக்குத் தொடுக்க முனைகிறதென்றால், இந்த அவலத்தை என்னவென்று கூறுவது?
தொகுதிசார்ந்த குறையை நேரில்கூறச் சென்ற ஒருவரை துறையூர் சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான ரவிசங்கர் தாக்கும் காணொளிக்காட்சிகள் ��வெக ஆட்சியின் அதிகாரத் திமிருக்கும், அடாவடித்தனத்துக்குமான சான்றாகும். தேர்தல் வழக்குக்காக என்னுடைய தங்கை கார்த்திகா, தம்பி இசை மதிவாணன் உள்ளிட்டவர்களைத் தேடிப்பிடித்துக் கைதுசெய்து சிறைப்படுத்திய தவெக அரசு, இப்போது என்ன செய்யப் போகிறது? பாதிக்கப்பட்ட நபரை மிரட்டி அச்சுறுத்தி, ஒன்றுமே நடக்கவில்லை எனப் பக்கத்தில் அமர வைத்துப் பேச வைப்பதெல்லாம் கேவலம் இல்லையா?
தவறுகளுக்குப் பொறுப்பேற்பு, பிழைகளை ஏற்றுக்கொண்டு திருத்திக் கொள்ளுதல், குற்றமிழைத்தவர் எவராயினும் நடவடிக்கை எடுத்தல் என்பதெல்லாம் தலைமைப்பண்புக்கான அடிப்படைக் குணநலன்கள். இதுவெல்லாம் என்னவென்று முதல்வர் விஜய்க்கு ஒருபோதும் தெரியப் போவதில்லை. எல்லாவற்றிற்கும் அவரிடம் இருக்கும் ஒற்றைத்தீர்வு, Road Show எனும் பெயரில் நடக்கும் கேலிக்கூத்து, மக்களைத் திசைதிருப்ப நடக்கும் மலினமான நாடகங்கள், போலியானக் கட்டுக்கதைகள், பொய்யானக் கருத்துருவாக்கங்கள்! இதுவெல்லாம் பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தை மடைமா��்றுமே ஒழிய, ஒருபோதும் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுத் தராது. இனியாவது உணர்வாரா முதல்வர் விஜய்?
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
கள்ளக்குறிச்சி #தவெக சட்டமன்ற உறுப்பினர் அந்த மாவட்ட ஆட்சியர் பத்மஜாவிற்கு மட்டமான குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார் அது மட்டும் இல்லாமல் போதையில் அவர் வீட்டுக்கு போய் தொல்லையும் கொடுத்துள்ளார்...!
மாற்றத்திற்காக வாக்களித்த தமிழக மக்களே ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கே இப்படி நிலைமை என்றால் சாதாரண பெண்களின் நிலை⁉️
Kallakurichi #TVKMLA has sent a degrading text message to District Collector Padmaja. Not only that, he also went to her house drunk and harassed her...!
People of Tamil Nadu who voted for change, if this is how an IAS officer is being treated, what must ordinary women be going through⁉️
#TVKVijay
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் அவரது வீட்டுக்க��� சென்று தொந்தரவு செய்ததாகவும், இதைத் தொடர்ந்து ஆட்சியருக்குத் தனிப் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வருகின்றன.
இந்தத் திறனற்ற தவெக ஆட்சியில், தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை என அடுத்தடுத்து நடக்கும் குற்றச்சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. இப்போது தவெக எம்.எல்.ஏ. ஒருவரால் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்��ட்டுள்ளது. அப்படியிருக்க, தனிப் பாதுகாப்பு அதிகாரியை நியமிப்பதன் மூலம் மட்டும் தலைமைச் செயலாளர் அந்த ஆட்சியருக்கு என்ன பாதுகாப்பைக் கொடுத்துவிடப் போகிறார்?
முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களே, இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?
துறையூரில் கோரிக்கையுடன் சென்ற நபர் மீது சட்டமன்ற துணை சபாநாயகர் தாக்குதல் நடத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு – பாரபட்சமற்ற விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டும்!
தமிழகத்தில் மக்களின் கோரிக்கைகளை முன்வைக்கச் செல்லும் நபர்களுக்கே உரிய பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன.
கோரிக்கையுடன் சென்ற ஒருவர், சட்டமன்ற துணை சபாநாயகரால் தாக்கப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து மிரட்டப்பட்டு காணொளி வெளியிட வைக்கப்பட்டதாகவும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் மிகவும் கண்டனத்திற்குரியவை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்கள், பொதுமக்களின் குறைகளைக் கேட்டு அவர்களுக்குத் தீர்வு காண வேண்டுமே தவிர, அதிகாரத்தைப் பயன்படுத்தி அச்சுறுத்தும் வகையில் செயல்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுவது ஜனநாயகத்திற்கு அழகல்ல.
இந்த விவகாரத்தில் தமிழக அ���சு இனியும் மௌனம் காக்காமல், உடனடியாகத் தலையிட்டு, சம்பந்தப்பட்ட நபரின் புகாரின் அடிப்படையில் பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும்.
தாக்குதல் மற்றும் மிரட்டல் தொடர்பான குற்றச்சாட்டுகள் உண்மையென நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அதிகாரம் என்பது மக்களைப் பாதுகாப்பதற்கும், அவர்களின் க��ரலுக்குச் செவிசாய்ப்பதற்குமே தவிர, அவர்களை அச்சுறுத்துவதற்கோ அடக்குவதற்கோ அல்ல என்பதைப் பொறுப்பில் இருப்பவர்கள் உணர வேண்டும்.
ஜனநாயகத்தில் மக்களின் கருத்துரிமையும், கேள்வி கேட்கும் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் உண்மையை வெளிக்கொணர்ந்து பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிற��ன்.
பிரேமலதா விஜயகாந்த்
பொதுச்செயலாளர்,
தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தே.மு.தி.க.)
சட்டமன்ற உறுப்பினர் – விருத்தாசலம் தொகுதி
#DMDK #PremalathaVijayakanth #CaptainVijayakanth #TamilNaduPolitics #PoliticalMeeting
@CMOTamilnadu
அதிகார போதை MLA ரவிசங்கர் தலைக்கு ஏறி இருக்கிறது ! லோக்கல் காவல்துறை MLA ரவுடித்தனத்திற்கு அடியாள் வேலை பார்க்கிறது.
வன்முறை செய்த ரவிசங்கர் மற்றும் அதை மறைக்க உதவிய ��ாவலர்கள் மீது FIR பதிய வேண்டும்.
ரவிசங்கரை கட்சியை விட்டுத் தூக்க வேண்டும் !
இதன் மீது நடவடிக்கை எடுத்தால் மற்ற MLAக்களுக்கு வன்முறை செய்யக் கூடாது என்ற பயம் வரலாம்!
நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மற்ற MLA க்களும் ரவுடித்தனம் செய்வதை ஊக்குவிக்கும் !
என்ன செய்யப் போகிறார் @CMOTamilnadu ??
இந்த சோப்ளாங்கி ஆட்சியில் நேற்��ு ஒரே நாளில் மட்டும் காவலர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் - பண்டிகை நாளில் பட்டாசு சத்தத்தை��ிட பட்டா கத்திகளின் சத்தமே அதிகம் கேட்கும் அளவுக்கு கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் இந்த Dummy CM-ஐ வன்மையாக கண்டிக்கிறேன்.
Dummy CM, ஆய்வு செய்கிறேன் என்று சிறைக்குப் போனால் கைதிகள் தப்பிக்கிறார்கள் - காவல் நிலையங்களுக்குப் போனால் காவலர்கள் கொலையாகிறார்கள்.
இந்த மூடர் கூட்டத்தின் ஆட்சியில் மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை – அவர்களை காக்க வேண்டிய காவலர்களுக்கும் Safety இல்லை.
கோரிக்கையோடு சென்றவரை துணை சபாநாயகரே அடித்து விரட்டுவதும் பின் மிரட்டி வீடியோ வெளியிட வைப்பதும் – தமிழ்நாடு இதுவரை பார்த்திடாத கேவலம்.
ஆய்வு செய்தேன் – ஆபிஸரை நியமித்தேன் என்றும் – தி.மு.க – தி.மு.க என்றும் - இன்னும் எத்தனை நாள் மக்களை ஏமாற்றுவார் இந்த அட்டக்கத்தி சி.எம்?
தமிழ்நாட்டு மக்கள் சிந்தும் கண்ணீருக்கும் – ரத்தத்துக்கும் இந்த சர்க்கஸ் ஆட்சியாளர்கள் பதில் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை.
திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் , துணை சபாநாயகருமான ரவிசங்கர் என்பவரால் கொடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கார்த்திக் குமார் என்பவரின் வாக்குமூலம் !
துறையூர் தொகுதி கண்ணபிரான் காலனியில் ஒருவார காலமாக தண்ணீர் வரவில்லை என்பதை தெரிவிக்க சென்றபோது கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார் ரவிசங்கர் .
பிரச்சனை சமூகவலைதளங்களில் பெரிதான உடன் சமாதானம் செய்து காணொளி வெளியிட்டுள்ளார் ரவிசங்கர் !
உண்மையிலேயே தூயசக்தி என்றால் இந்த ரவிசங்கரின் துணை சபாநாயகர் பதவி பறிக்கப்பட வேண்டும் அதற்கு துளியு��் தகுதியற்றவர் இந்த நபர் .
@CMOTamilnadu @TVKVijayHQ
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 9 படுகொலைச் சம்பவங்கள் – தீபாவளியன்று அசுரர்களின் ஆட்சியை நினைவு படுத்துகிறதா இந்த தவெக அரசு?
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இளைஞர் ஒருவரும், கல்லல் அருகே ரவுடியும் ஓட ஓட விரட்டிப் படுகொலை,
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருகே தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பெண் கட்டி வைத்து கொலை,
கடலூர் மாவட்டம் காட்டுப்பாளையம் அருகே மது அருந்துவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் குத்திக் கொலை,
சென்னை வியாசர்பாடியில் 18 வயது இளைஞர் கொடூர கொலை,
திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை,
என நேற்றைய தீபாவளி திருநாள் கொலைச் சம்பவங்களின் சங்கமமாக உருவெடுத்திருக்கிறது.
அதிலும், தேனி மாவட்டம் சமதர்மபுரத்தில் சாலையில் வாகனங்களை வழிமறித்து பட்டாசு வெடித்ததை தட்டிக்கேட்ட காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.செந்தில் அவர்கள் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டிருப்பதும், கடலூர் அருகே கொலை குற்றவாளியை பிடிக்க சென்ற காவல்துறையினர் மீது நடைபெற்றிருக்கும் கண்மூடித்தனமான தாக்குதலும் கடந்த 6 மாத கால தவெக ஆட்சியில் காவல்துறையினர் மீதே தொடரும் தாக்குதல்கள், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு சீர்குலைந்திருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.
தமிழகத்தின் தலை���கர் சென்னையில் தொடங்கி கடைக்கோடி மாவட்டங்கள் வரை படுகொலைச் சம்பவங்கள் சர்வசாதாரணமாக நடைபெறும் அளவிற்கு சீர்குலைந்திருக்கும் சட்டம் ஒழுங்கை சீரமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், கேளிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் முதலமைச்சரையும், தீபாவளி சிறப்பு தின நிகழ்வுகளில் விருந்தினர்களாக பங்கேற்று கொண்டாடி மகிழும் அமைச்சர்களையும் பெற்றிருப்பது தமிழக மக்களின் சா���க்கேடாகவே பார்க்க வேண்டியுள்ளது.
மக்களை பெரும் துன்பத்திற்கு உள்ளாக்கிய அசுரர்களை, திருமால் அழித்து நன்மை அளித்த இத்திருநாளை கொண்டாடவேண்டிய மக்கள், தினம்தோறும் நடைபெறும் கொலை கொள்ளையை பார்க்கும் போது அசுரர்கள் இன்னும் வாழ்வதாகவும், ��வர்களை அழிக்கவேண்டிய இந்த அரசு வெறும் வேடிக்கை மட்டுமே பார்ப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, பொதுமக்களின் உயிரையும், உடமைகளையும் பாதுகாக்க வேண்டிய காவலர்களுக்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கிற்கு அடிக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை மணி என்பதை இனியாவது உணர்ந்து, அதளபாதாளத்தில் இருக்கும் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்க தேவையான நடவடிக்கைகளை மேற���கொள்ளவேண்டும் என முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @TVKVijayHQ
தொகுதியில் நிலவும் பிரச்னையை பற்றி கூற வந்த நபர் மீது கண்மூடித்தனமான தாக்குதல்- இது மக்கள் ஆட்சி அல்ல தற்குறிகளின் ஆட்சி தான் என அடித்து நிரூபித்துள்ளார் துறையூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர்!
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த சில மாதங்களாக நிலவும் தண்ணீர் பிரச்னை குறித���து புகார் அளிக்க வந்த நபரை, தகாத வார்த்தைகளை பயன்படுத்தி தரக்குறைவாக பேசியதோடு, அந்த நபர் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியிருக்கும் துறையூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற துணை சபாநாயகருமான திரு.ரவிசங்கர் அவர்களின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
தன்னை சந்திக்க வந்த நபரை துணை சபாநாயகர் அடித்து விரட்டிய வீடியோவும், அங்கு நடைபெற்ற சம்பவங்கள் குறித்��� வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் எதிர்ப்பு கிளம்பிய பின்னர், அவரை வைத்து விளக்க வீடியோ வெளியிட்டிருப்பது வேடிக்கையின் உச்சம்.
விஜய்க்காக ஓட்டு போட்டவன் என பலமுறை பாதிக்கப்பட்ட நபர் சொன்ன பின்பும், அவரை திரு.ரவி சங்கர் அவர்கள் கண்மூடித்தனமாக தாக்கியிருப்பதை பார்க்கும் போது அவருக்கு கோபம் தனக்கு வாக்களித்தவர் மீதா? அல்லது ஏதோ தனது ஆசையை திரு.விஜய் அவர்கள் நிறை���ேற்றாமல் காலம் தாழ்த்துவதால் அவர் மீது ஏற்பட்ட கோபமா? என்ற சந்தேகமே எழுகிறது.
மக்களோடு மக்களாக நிற்பவர்களைத் தான் வேட்பாளர்களாக தானே தேர்ந்தெடுத்திருப்பதாக வேட்பாளர்களின் அறிமுகக்கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் திரு.ஜோசப் விஜய் அவர்கள், அவர் தேர்ந்தெடுத்த லட்சணம் இது தான் என்பதை இப்போதாவது புரிந்து கொள்வாரா?
எனவே, தொகுதி பிரச்னையை கூற வந்த நபரை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்குதல் நடத்திய துணை சபாநாயகர் திரு.ரவி சங்கர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, மக்கள் பிரநிதிநிதிகள் ஆளப்பிறந்தவர்கள் அல்ல மக்களுக்காக பணியாற்றத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து செயல்படவேண்டும் என இந்நேரத்தில் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @TVKVijayHQ
துணை சபாநாயகரை சந்திக்க சென்ற நிருபர் மற்றும் துறையூர் சட்டமன���ற தொகுதியை சேர்ந்த கார்த்தி என்பவரை கண்மூடித்தனமாக தாக்கிய துறையூர் சட்டமன்ற உறுப்பினர் துணை சபாநாயகர் ரவிசங்கர் !
பொறுப்புள்ள பதவியில் இருக்கும் ரவிசங்கர் போன்றோர் பொதுமக்களில் ஒருவரை இப்படி கண்மூடித்தனமாக தாக்குவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
@CMOTamilnadu @tvkravisankar
MLA-க்களை வாங்க தெரிந்த Dummy CM-க்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா?
உரிக்க உரிக்க ஒன்றுமில்லாத வெங்காயம் தான் இந்த #சோப்ளாங்கி_அரசு என்பதற்கு , கூட்டுறவுத்துறை மூலம் இவர்கள் வெங்காயம் கொள்முதல் செய்த லட்சணமே சாட்சி.
ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு கொடுப்பத���்காக எந்த ஆய்வும் செய்யாமல் 450 டன் வெங்காயத்தை இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பிடம் இருந்து வாங்கி இருக்கிறது இந்த மூடர் கூட்ட அரசு.
மகாராஷ்ட்ராவில் இருந்து ரயிலில் வந்திறங்கிய அந்த வெங்காயம், அழுகிய நிலையில் தரமற்று இருக்கவே, அதை Cover-up செய்ய, கொருக்குப்பேட்டை ரயில் முனையத்திலேயே இந்த ஆட்சியாளர்கள் விட்டுவிட்டார்கள்.
இந்த Circus ஆட்சியை போலவே, நாளாக ந���ளாக வெங்காயமும் நாற்றமெடுக்க, "நாங்கள் வெங்காயம் வாங்கவில்லை - கொருக்குப்பேட்டை ரயில் முனையத்தில் இருக்கும் வெங்காயத்திற்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று அரசே Fake News Peddler-ஆக மாறி Abusive Warriors-க்கு tough கொடுத்திருக்கிறது.
அதோடு நிற்காமல், வெங்காயத்தின் ஒரு பகுதியை திருச்சி காந்தி மார்க்கெட்டில் விற்க, லாரி ஏற்றியும் அனுப்பியுள்ளனர்.
இந்த கோமாளிக் கூட்டத்தை நம்பி எதிலும் இறங்க முடியாது என்பதை அறிந்த திருச்சி வணிகர்கள், வெங்காயத்தை பார்க்காமல் வாங்க மாட்டோம் என்று மறுத்துவிட்டனர்.
இப்போது அழுகிய வெங்காய மூட்டைகளோடு என்ன செய்வது என்று புரியாமல் லாரி ஓட்டுநர் கதறிக் கொண்டிருக்கிறார். வெங்காய விலையேற்றத்தால் மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.
இதுபற்றி எந்த ஒரு கவலையும் இல்லாமல், இடைத்தேர்தல் வேலைகளில் பிஸியாகிவிட்டார் 24-ஆம் புலிகேசி.
இந்த தரமற்ற வெங்காயத்தை கொள்முதல் செய்தவர் யார்? அதற்கு பின்பு அழுகிய வெங்காயத்தை மறைக்க புளு���ுணி ஆட்டம் ஆடியவர்கள் யார்?
ஏற்கனவே ரேஷன் கடைகளில் 30 ரூபாக்கு பொன்னி அரிசி வழங்குவதாக சொல்லிவிட்டு, tender விடாமல், வழக்கமான ரேஷன் அரிசியை Polish போட்டு விற்பது தொடர்பாக நான் எழுப்பிய கேள்விக்கு, காலம் வரட்டும் பதில் சொல்வேன் என்று ஓட்டமெடுத்தார்களே.. எப்போது தான் அந்தக்காலம் வரும்?
வெங்காயம் வாங்கக்கூட துப்பற்ற இந்த வெட்கங்கெட்ட ஆட்சியை நடத்தும் Dummy CM, இந்த கேள்விகளுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?
ஆறுகளில் நுரை பொங்குவதற்குச் "சோப்பு, ஷாம்புகள்தான் காரணம்" விஞ்ஞானமே வியக்கும் அமைச்சரின் வினோத விளக்கம் - கோமாளிகளின் கூடாரமான தமிழ்��ாடு அமைச்சரவை !
திருப்பூர் மாவட்டம், காசிபாளையம் பொது சுத்திகரிப்பு நிலையத்தில் சாயக்கழிவு நீர் சுத்திகரிப்புக் கட்டமைப்புகளை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர், ஆறுகளில் நுரை பொங்குவதற்குச் சோப்பு, ஷாம்பு பயன்பாடுகள்தான் காரணம் என விஞ்ஞானமே வியக்கும் வினோதமான விளக்கத்தை அளித்திருக்கிறார்.
அரசியல் விபத்தால் முதலமைச்சரான திரு. ஜோசப் விஜய் அவர்களின் அமைச்சரவையில், தனக்கு ஒதுக்கப்பட்ட துறையின் பெயரையே தெரியாமல் சில காலம் குழம்பிய அமைச்சர், தற்போது தனது துறை சார்ந்த பிரச்சினைகள் குறித்துப் பேசுவதைப் பார்த்து ஆச்சரியப்படுவதா? அல்லது ஆறுகளில் மாசு ஏற்பட்டு நுரை பொங்குவதற்கும் எதிர்க்கட்சிகளின் சதிதான் காரணம் எனக் கூறாமல் விட்டு விட்டாரே என்று மகிழ்ச்சியடைவதா? என்று தெரியவில்லை.
மேலும் ஆறுகளில் நுரை பொங்குவதற்கான உண்மையான காரணங்களைக் கண்டறிந்து, கழிவுகள் கலக்கப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டிய அமைச்சர், பிரச்சினையின் தீவிரத்தை உணராமல் இத்தகைய விளக்கங்களை அளிப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்த அரசு எந்த அளவிற்கு அக்கறையுடன் செயல்படுகிறது என்ற கேள்வியை எழுப்பு��ிறது.
காற்று வீசாததால் காற்றாலைகள் சுழலவில்லை; அதனால்தான் மின்தட்டுப்பாடு ஏற்பட்டது எனக் கூறிய எரிசக்தித் துறை அமைச்சர், டெங்குவிலிருந்து பாதுகாப்பாக இருக்க முழுக்கைச் சட்டை அணிய வேண்டும் என சொல்லிய சுகாதாரத் துறை அமைச்சர், தற்போது ��றுகளில் நுரை பொங்குவதற்குச் சோப்பு, ஷாம்பு பயன்பாடுகள்தான் காரணம் என விளக்கம் அளித்திருக்கும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் என, ஒட்டுமொத்த அமைச்சரவையும் நிர்வாகத் திறனற்றவர்களாலும் கோமாளிகளாலும் நிறைந்திருப்பதை முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் தெரிந்திருக்கிறாரா அல்லது தெரிந்தும் தெரியாததுபோல் நடிக்கிறாரா?
எனவே, ஒவ்வொரு பிரச்சனைக்கும் அபத்தமான விளக்கங்களை அளிப்��தில் நேரத்தைச் செலவிடுவதைத் தவிர்த்து, ஆறுகளில் நுரை பொங்குவதற்கான உண்மையான காரணங்களைக் கண்டறிய உரிய ஆய்வுகளை மேற்கொள்ளவும், சட்டவிரோதமாகக் கழிவுகள் கலக்கப்படுவதைத் தடுத்து, ஆறுகளையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறையையும் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ