நள்ளிரவை நெருங்கியது!
பணி முடிந்து வீடு திரும்ப வேண்டும்! மெட்ரோ ரயில் சேவை முடிந்து இருக்கும் என்பதால் மாநகர பேருந்து நோக்கி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது! சென்னையில் நள்ளிரவை கடந்தும் பல முறை மாநகரப் பேருந்தில் பயணம் செய்துள்ளேன்! இன்றும் அதே போல ஒரு பயணம்! மெட்ரோ மற்றும் பேருந்துகளுக்கு ஒரே NCMC கார்டு உள்ளது. சென்னை ஒன் செயலியும் உள்ளது. சில்லறையாக வைத்துக் கொண்டால் இன்னும் நல்லது. சென்னையில் மக்கள் நிம்மதியாக இரவு நேரங்களில் பயணிக்கலாம்.
..
இதனால் நான் சொல்ல வருவது Super deluxe படத்தில் வரும் கதாப்பாத்திரம் சொல்வது போல ' நானும் சாட்சி ' என்பது தான்! அரசு பேருந்து சேவை நம் மாநிலத்தின் முக்கிய உயிர்நாடி! திமுக, அதிமுக ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறியதில்லை!
...
2026ல் தேர்தலுக்கு பிறகு என்ன ஆகும்?...மீண்டும் யோசிக்கச் சென்றார் பதிவர்!
#சென்னை #chennai #MTCBus #tnstc #SETC @mkstalin@sivasankar1ss
தமிழ்நாடு அரசு விரைவுப் பேருந்து போக்குவரத்து கழகத்தின் பேருந்து ஒன்றில் சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி செல்ல ஆயத்தமாக (இரவு 11:40) மணிக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 2ஆம் நடைமேடையில் இருந்து புறப்படத் தயாராக இருந்த குளிரூட்டப்பட்ட அரசு பேருந்தின் உள்ளே திருநங்கை ஒருவர் வந்து பயணிகளிடம் யாசகம் கேட்க வந்தார். உள்ளே பயணிகளிடம் ஆபாசமாகவும் அநாகரிகமாகவும் நடந்து கொள்ள முயற்சித்தார். யாசகம் தராத சிலரை வசை பாடினார். என்னருகில் வந்து பணம் கேட்டு மிரட்டினார். தரமுடியாது என்றவுடன் மிகவும் கேவலமாக பேசிவிட்டு நகர்ந்தார். இவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? @tnpoliceoffl@chennaipolice_
இது போன்று அரசு பேருந்துகளில் நடப்பதை நடத்துனர்கள் கண்டிக்காமல் வெளியே நிற்கும் நிலை தான் இருக்கிறது.
அரசு போக்குவரத்து துறை அமைச்சர் @sivasankar1ss கவனத்திற்கு! இதுபோன்று அரசு பேருந்துகளில் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
#TNPolice
#greaterchennaipolice
இன்று காலை சட்டப்பேரவை நிகழ்வுகளை பின்தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தேன். ஆளுங்கட்சியை சேர்ந்த மூத்த உறுப்பினர் சாரி.. வாலிபர் ஐயா துரை முருகன் பேசினார்...அவை முன்னவர் பேசினார்...இன்றைய பேரவை கூட்டத்தில் நடந்த முக்கிய சம்பவம் அதுவல்ல!!
கரூர் சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் vs எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி..இருவரும் பேசியது தான் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம்!
கரூருக்கு ஏன் ஓடோடி சென்றேன் என முதல்வர் ஒரு விளக்கம் கொடுக்க..கரூர் போனீங்களே! கள்ளக்குறிச்சிக்கு ஏன் போகல? கள்ளச்சாராய விவகாரத்தை @EPSTamilNadu கேள்வி கேட்க...அந்தப்பக்கம் தூத்துக்குடி விவகாரத்தை கையில் எடுக்க அவையில் பெரும் அமளி ஏற்பட்டு அதிமுக தரப்பு வெளிநடப்பு செய்தது...
முன்னதாக கரூர் சம்பவம் குறித்து எடப்பாடி கே பழனிசாமி பேசியதை உற்று நோக்க வேண்டும். அடித்து ஆடி இருக்கிறார். அதிமுக ஆட்சியின்போது கரூர் ரவுண்டானா பகுதியில், முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது பிரச்சாரம் செய்ய அன்றைய அதிமுக அரசு அனுமதி அளித்தது குறித்தும் அமைச்சர் உதயநிதி, எம். பி. கனிமொழி ஆகியோர் ரவுண்டானா பகுதியில் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்பட்டது குறித்து ஆதாரத்தோடு பேசி இருக்கிறார். வேண்டுமென்றே வேலுச்சாமிபுரம் அதிமுக பரப்புரையின் போதும் ( மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பரப்புரை கூட்டத்தை குறிப்பிட்ட EPS) தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்திற்கும் கொடுக்கப்பட்டதை குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதில் முக்கியமா கவனிக்க வேண்டியது வழக்கம்போல எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதை நேரலை செய்யாமல் மீண்டும் துண்டித்தது தான்! அவர் பலமுறை இதுகுறித்து பொதுவெளியில் பதிவு செய்தார். இன்றளவும் ஆளுங்கட்சியை விமர்சித்து அவர் பேரவையில் பேசினாலே கட் தான்!
அதிமுக தரப்பில் இதை இன்னும் உரக்கச் சொல்ல வேண்டும்...ஆனால் பெரிதும் இந்த விவகாரம் பேசுபொருளாவதில்லை....
ஆனால் ஒன்றை கவனம் கொள்ள வேண்டும்....சமூக வலைதளங்களை, டிஜிட்டல் தளங்களை திமுக பயன்படுத்தியது போல அதிமுக பயன்படுத்தாமல் தவறவிட்டதன் காரணமே இன்று அதிமுகவுக்கு என்று ஆதரவு பொதுதளத்தில் இல்லை. அப்படி இருந்திருந்தால் ஒருமித்த குரலாக எல்லோரும் குரல் கொடுத்திருப்பார்கள். இன்று எதிர்க்கட்சித் தலைவர் அவையில் பேசுவதை இருட்டடிப்பு செய்த அரசு, நாளை எந்த குரலை வேண்டுமானாலும் தடுக்கும்...வளைக்கும்...அதை தடுக்க வேண்டும்!
கவனம் தேவை! ...இது எல்லோருக்கும் பொருந்தும்! திமுக, அதிமுக அல்லது எந்த ஆளுங்கட்சி செய்தாலும் அது தவறே!...எதிர்காலத்தில் இதுபோன்ற நேரலை துண்டிப்பு சம்பவங்கள் நடக்காமல் இருக்க வேண்டும்!
#அதிமுக #ADMK @AIADMKOfficial@AIADMKITWINGOFL@RajSatyen@TVKVijayHQ@actorvijay #TVK
இனி வரும் நாட்களில் தடுப்புகளை அமைத்து கட்டுக்கோப்பாக தொண்டர்கள் இருக்கும்படி கூட்டம் நடத்த வேண்டும்! அனைவரையும் சரியாக வழி நடத்த வேண்டும்! கட்டுக்கடங்காத கூட்டத்தை இனியும் சேர்க்க வேண்டாம். சரியான திட்டமிடலுடன் மீண்டும் களத்திற்கு வாருங்கள்!
ஒரு செய்தியாளர் சந்திப்பு நடத்த வேண்டும்! பாதிக்கப்பட்டவர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் செலுத்த வேண்டும்! களத்தில் தவெக தொண்டர்கள் இருக்க வேண்டும்!
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல். நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன்.
நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன. பாசமும் நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க, அது என் இதயத்தை மேலும் மேலும் அதன் இடத்திலிருந்தே நழுவச் செய்கிறது.
என் சொந்தங்களே… நம் உயிரனைய உறவுகளை இழந்து தவிக்கும் உங்களுக்கு, சொல்லொணா வேதனையுடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிற அதே வேளையில், இப்பெரும் சோகத்தை உங்கள் மனதுக்கு நெருக்கமாக நின்று பகிர்ந்துகொள்கிறேன்.
நமக்கு ஈடு செய்யவே இயலாத இழப்புதான். யார் ஆறுதல் சொன்னாலும் நம் உறவுகளின் இழப்பைத் தாங்கவே இயலாதுதான். இருந்தும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவினை இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 20 லட்ச ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 லட்ச ரூபாயும் அளிக்க எண்ணுகிறேன். இழப்பிற்கு முன்னால் இது ஒரு பெரும் தொகையன்றுதான். இருந்தும், இந்த நேரத்தில், என்னுடைய உறவுகளான உங்களுடன் மனம்பற்றி நிற்க வேண்டியது உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவனாக என் கடமை.
அதேபோல, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைத்து உறவுகளும் மிக விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். சிகிச்சையில் இருக்கும் நம் உறவுகள் அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் நம் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகச் செய்யும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம்.
கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன.
கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி,
முன்னாள் அமைச்சர் @V_Senthilbalaji, மாண்புமிகு அமைச்சர் @Subramanian_Ma அவர்களையும் - மாவட்ட ஆட்சியரையும் தொடர்புகொண்டு அறிவுறுத்தியுள்ளேன்.
அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் @Anbil_Mahesh அவர்களிடமும் போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினைச் செய்து தரும்படி உத்தரவிட்டிருக்கிறேன். அங்கு, விரைவில் நிலைமையைச் சீராக்கும் நடவடிக்கைகைளை மேற்கொள்ள ADGP-யிடமும் பேசியிருக்கிறேன்.
பொதுமக்கள் மருத்துவர்களுக்கும் காவல் துறைக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.