📢 *“மக்களுடன் நான்”*
சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி மக்களின் அன்பாலும், நம்பிக்கையாலும் இன்று நான் மக்கள் பிரதிநிதியாக சட்டமன்றத்தில் நிற்கிறேன்.
எனவே, தொக��தி மக்களின் குறைகளை நேரடியாக அறிந்து உடனுக்குடன் தீர்வு காணும் நோக்கத்தில்,
*“மக்களுடன் நான்”* என்ற மக்கள் சந்திப்பு இயக்கத்தை தொடங்க உள்ளோம்.
இனி ஒவ்வொரு *பூத்திலும்*, ஒவ்வொரு *வார்டிலும்*,
ஒவ்வொரு *பகுதியிலும்*,
கழக தோழர்கள் நேரடியாக மக்களை சந்தித்து,
✅ மக்கள் குறைகளை கேட்டு பதிவு செய்யவும்
✅ தேவைகளை உடனுக்குடன் தெரியப்படுத்தவும்
✅ அரசு திட்டங்கள் மக்களை சென்றடைய செய்யவும்
✅ மக்களுக்கும் கழகத்திற்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தவும்
களப்பணியில் ஈடுபட வேண்டும் என கேட்��ுக்கொள்கிறேன்.
வருகின்ற உள்ளாட்சி தேர்தலிலும் மக்கள் வெற்றி தொடர,
இப்போதே *வீடு வீடாக* சென்று மக்கள் மனதை வெல்ல வேண்டும்.
“மக்களோடு இருந்தால்தான் அரசியல் உயிரோடு இருக்கும்”
என்பதை உணர்ந்து அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றுங்கள்.
🤝 மக்கள் நம்பிக்கையை காப்போம்
🏆 சேலம் தெற்கின் வெற்றியை தொடர்வோம்
அன்புடன்,
*விஜய் தமிழன் ஆ. பார்த்திபன் MLA.,*
_சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி_
தமிழக அரசியலின் நேர்மைமிகு நம்பிக்கை ஒளியாய், நாளைய தலைமுறைகளின் தலைசிறந்த வழியாய் நாமே மாறுவோம்.
புதிதாகப் பிறக்கும் இந்த 2026ஆம் ஆண்டு, தமிழகத் த��ர்தல் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம் என்பதை மக்கள் நிரூபிக்கப் போவது நிச்சயம்.
வாகை சூடும் வரலாறு திரும்பப் போகிறது.
வளமான, நலமான, பலமான தமிழகம் ஒளிரப் போகிறது.
மக்களுடன் மக்களாக இணைந்து
அதை நம் தமிழக வெற்றிக் கழகம்தான் நிகழ்த்திக் காட்டப் போகிறது.
வெற்றிச் சரித்திரம் படைக்கப் போகும் அந்த உறுதியை மனதிலும் செயலிலும் ஏற்று
இப்புத்தாண்டை வரவேற்போம்.
அனைவருக்கும் ஒளிமிக்க ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல். நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும�� கலங்கித் தவிக்கிறேன்.
நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன. பாசமும் நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க, அது என் இதயத்தை மேலும் மேலும் அதன் இடத்திலிருந்தே நழுவச் செய்கிறது.
என் சொந்தங்களே… நம் உயிரனைய உறவுகளை இழந்து தவிக்கும் உங்களுக்கு, சொல்லொணா வேதனையுடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிற அதே வேளையில், இப்பெரும் சோகத்தை உங்கள் மனதுக்கு நெருக்கமாக நின்று பகிர்ந்துகொள்கிறேன்.
நமக்கு ஈடு செய்யவே இயலாத இழப்புதான். யார் ஆறுதல் சொன்னாலும் நம் உறவுகளின் இழப்பைத் தாங்கவே இயலாதுதான். இருந்தும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவினை இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 20 லட்ச ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 லட்ச ரூபாயும் அளிக்க எண்ணுகிறேன். இழப்பிற்கு முன்னால் இது ஒரு பெரும் தொகையன்றுதான். இருந்தும், இந்த நேரத்தில், என்னுடைய உறவுகளான உங்களுடன் மனம்பற்றி நிற்க வேண்டியது உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவனாக என் கடமை.
அதேபோல, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைத்து உறவுகளும் மிக விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். சிகிச்சையில் இருக்கும் நம் உறவுகள் அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் நம் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகச் செய்யும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இறைவன் அருளால், அனைத்தில் இரு���்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம்.
இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.
கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.