45 நாட்கள் கழித்து, கலந்தாய்வுக்கான காலம் நெருங்குகையில், வேறு வழியின்றி 7.5% #Reservation-க்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி!
திமுக-வின் போராட்டமும் நீதியரசர்கள் வைத்த மனச்சாட்சி வேண்டுகோள்களும் ஆளுநரின் மனமாற்றத்துக்கு காரணம்.
இறுதியில் வென்ற சமூகநீதி, எப்போதும் வெல்லும்!
அரசை வலியுறுத்தினார்- ஆளுநர்-பிரதமருக்கு கடிதம் எழுதினார்- வீதியில் இறங்கி போராடினார். தலைவர் @mkstalin அவர்களின் இந்த முயற்சிகளே அரசுப்பள்ளி மாணவருக்கு மருத்துவப்படிப்பில் 7.5% இட ஒதுக்கீட்டை சாத்தியமாக்கியது. அரசாணை செயலாகவும் அடிமைகள் மெனக்கெட வேண்டும்.
#MKStalinForStudents
மார்ச்சில் தொடங்கிய #Lockdown ஆகஸ்டை நெருங்கியும் #Covid19 குறையவில்லை.
முன்னெச்சரிக்கை- பாதுகாப்பு- ஊரடங்கு- மருந்துகள் - உபகரணங்கள் வழங்கல் என அனைத்திலும் தோல்வியடைந்து விட்டது @CMOTamilNadu அரசு!
இந்த அரசை நம்பிப் பயனில்லை தமிழக மக்களே! சுயபாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள்!
பூர்வீக சொத்தில் சம பங்கினை பெண்கள் பெறலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன்.
பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு உண்டென 1989ம் ஆண்டே சட்டம் கொண்டு வந்த முத்தமிழறிஞர் கலைஞர் - திமுகவுக்கு கிடைத்த வெற்றி இது!
உரிமை கொண்டவர்களாக பெண்ணினம் உயர அடித்தளம் அமைக்கும் தீர்ப்பு!
இந்தி தெரியாது என்று சொன்னதால், 'நீங்கள் இந்தியரா?' என்று விமானநிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் @KanimozhiDMK வை பார்த்துக் கேட்டுள்ளார்.
இந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? இது இந்தியாவா? “இந்தி”-யாவா?
பன்முகத்தன்மைக்கு புதைகுழி தோண்டுகிறவர்களே அதில் புதையுண்டு போவார்கள்!
இயற்கைக்குப் புறம்பான சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 பற்றி மக்கள் கருத்து சொல்வதற்கான கெடு ஆகஸ்ட் 11 அன்று முடிகிறது. இதுவரை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் EIA Draft 2020ஐ மத்திய அரசு வெளியிடவில்லை. மக்கள் கருத்தை தவிர்ப்பதற்கான இந்த எதேச்சதிகார தந்திரம் கண்டிக்கத்தக்கது.
பீரங்கியால் துளைக்கப்படும் நிலையிலும் வெள்ளையருக்கு மண்டியிடாத மாவீரன் அழகு முத்துக்கோன் வீரமரணம் எய்திய தியாகத் திருநாள் ஜூலை 11.
அடிமைத்தனத்தை எதிர்த்து - உரிமைகளைக் காப்பதற்கான போர்க்களத்தில் மடிந்த மாவீரன் அழகு முத்துக்கோனின் தியாக நினைவினை என்றும் போற்றிடுவோம்!
மாவீரன் அழகுமுத்துக்கோனை நேரே சந்திக்க துணிச்சலற்ற வெள்ளையரின் அடிமைப்படை
இதே நாளில் சூழ்ச்சியால் வீழ்த்தி பீரங்கி வாயில் உடலைக் கட்டி சிதறடித்தது. அன்று வெள்ளையரின் அடிமைகளால் மண்ணுக்கு சிக்கல் வந்தது போல் இன்று கொள்ளைப்புற அடிமைகளால் உரிமைக்கு ஆபத்து வந்துள்ளது. முறியடிப்போம்!
இழந்த உரிமைகளை போராட்டங்களினால் மீட்டெடுத்த திராவிட இயக்கத்தில் தனி முத்திரை பதித்தவர் 'நடமாடும் பல்கலைக்கழகம்' நாவலர்!
இயக்க வரலாற்றில் தகுதிமிக்கதோர் இடம் கொண்ட நாவலரின் நூற்றாண்டு விழாவினை வாழையடி வாழையென வந்த திருக்கூட்டம் என்ற உறவிலும் உரிமையிலும் கொண்டாடி மகிழ்கிறது திமுக!
இறுதிமூச்சுவரை திராவிட சித்தாந்தத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்தி நடமாடும் பல்கலைக்கழகமாக திகழ்ந்த நாவலர் அவர்களின் நூற்றாண்டு நிறைவுவிழாவில் தலைவர் @mkstalin அவர்களுடன் கலந்துகொண்டேன். விழுவதற்கு காலும் தொழுவதற்கு டயருமென புது முதலாளிகள் வரவே அடிமைகள் நாவலரை மறந்ததில் ஆச்சரியமில்லை
வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை அழைத்துவர சாதகமான திட்டங்களுடன் வருமாறு, தி.மு.க தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
நெருக்கடியான நிலையில் தாயகம் திரும்புவோருக்கான செலவை அரசு ஏற்பதே சரி.
இனியும் அலட்சியம் காட்டாமல் தமிழக அரசு செயல்பட வேண்டும்.
ஜெயராஜ்-பென்னிக்ஸ் மீதான முதல் தகவல் அறிக்கை புனையப்பட்டது என்பது நிரூபணமாகியுள்ளது. இவர்கள் மீது போலீசுக்கு முன்பே கோபம் இருந்துள்ளதும் தெரியவருகிறது. போலீஸ் மீது கொலை வழக்கு பதிய அனைத்து ஆதாரங்கள் இருந்தும் அரசு அமைதி காப்பது ஏன்?#ArrestKillersOfJayarajAndBennix
#JayarajandFenix கொலைகளை விசாரிக்கும் நீதிபதியை போலீஸ் அதிகாரிகள் ஒருமையில் மிரட்டியிருக்கிறார்கள். இதனால் விசாரணையை திருச்செந்தூருக்கு மாற்றியிருக்கிறார் நீதிபதி!
என்ன நடக்கிறது இங்கு? நாட்டை ஆள்வது யார்? நீதிபதிக்கே மிரட்டலா? கைது செய்ய தைரியமற்றவருக்கு முதல்வர் பதவி எதற்கு?
‘மெயின் ரோடு’ செக் போஸ்ட்கள் அனைத்திலும் போலீசாருக்கு பதிலளித்துள்ளோம். இ-பாஸை காட்டியபிறகே மேற்கொண்டு பயணிக்க அனுமதித்தனர். ஆனால், என் சாத்தான்குளம் பயணத்தை பேசுபொருளாக்கி, மக்களின் கவனத்தை திசைதிருப்பி, கொலையாளிகளை தப்பவைக்க அரசு திட்டமிடுவதாகவே இதை எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது
#COVID19'க்கு எதிரான போரில், தமிழக மக்கள் ஒற்றுமையே வலிமை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர்.
#OndrinaivomVaa மூலம் லட்சக்கணக்கான குடும்பங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடிந்தது.உங்களின் உன்னத சேவைக்கும்,எங்கள்மேல் வைத்துள்ள நம்பிக்கைக்கும் தி.மு.கழகம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளது