பாஜக அடிமட்டத்திலிருந்து வளர வேண்டும்… கட்சிக்காக களப்பணி செய்யும் சாதாரண தொண்டனும் தலைவர்களாக வேண்டும் என ஆசைப்பட்டு வெறும் 5% இடங்கள் தருகிறேன் என டயர்பாடி 2022 உள்ளாட்சி தேர்தலின்போது சொன்னபோது, நீ ஆணியே புடுங்க வேண்டாம் என வெளியே வந்து 43% இடங்களில் பாஜகவினரை நிற்க வைத்து 5.5% வாக்குகளை வாங்கி காண்பித்தார் அண்ணாமலை…
அவர் failure தலைவராம்… ஆனால் தொண்டனுங்க எக்கேடுகெட்டு போனா என்ன, நாங்க 4-5 பேர் MLA MP ஆனா போதும்னு நினைக்கிற இதுங்க பெரிய தலைவர்களாம்…
இதுங்கள வெச்சுக்கிட்டு, திமுக என்ன சொல்றது… நாமலே சொல்லிடலாம்… தாமரை எதுலயோதான் மலரும்னு 🤦♂️
நாங்க கொடுத்தோம்… நாங்க கொடுத்தோம்… ஆஹா… என்னா தன்னடக்கம்… மேடம்… ஒரு உண்மையா சொல்லனும்னா, கொடுக்கற அளவுக்கெல்லாம் நீங்க பெரிய தலைவரும் இல்லை, வெற்றியாளரும் இல்லை…
அண்ணாமலை என்ன தவறாக சொன்னார்? மத்தியில் உங்க கட்சி ஆட்சியில் இருப்பதால் மத்திய அரசின் மேல் இங்கே உள்ள எதிர்க்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டிற்கு பதில் கொடுத்தே அநேக நேரம் செல்வாகிறது… இங்கே உள்ள மக்களுக்கான அரசியலை முன்னெடுக்க முடிவதில்லை என்பதே… உதாரணம் மும்மொழி கொள்கை… இது இந்த மக்களிம் பிரச்சனையா? அதைவிட அதிமுக்கிய விஷயங்கள் பல இருக்கின்றன…
உங்களுக்கு அவர் அப்படி பதில் கொடுத்திருக்கிறாரே என்பதெல்லாம்
காண்டில்லை… மொத்தமாக அவர் மீது வயித்தெரிச்சல் மட்டுமே… அதை இப்படி வெளிப்படுத்துகிறீர்கள்…
அவர் NOTA கட்சியென உங்க தலமையில்
கிண்டலடிக்கப்பட்ட கட்சியை 11.5% கட்சியாக முதல் முறையாக தமிழகத்தில் கொண்டுவந்து விட்டவர்… அவர் failure ன்னா, கூட்டணியோட நின்னு 2019 ல தூத்துக்குடியிலும், 2026 ல மைலாப்பூர்லயும் மண்ணை கவ்வின நீங்க என்ன?
@DrTamilisai4BJP
@govardhanan_GVK@Vi_Gayathri Simple… நேரடியா போய் அவங்களோட பதிவை ரீட்வீட் செஞ்சு பதில் கொடுத்து அவங்களுக்கு விளம்பரம் கொடுக்காம, பதிலை மட்டும் உங்க சொந்த பதிவா போட்டு உங்களுக்கென்று ஒரு follower base ஐ உருவாக்கிக்கோங்க… அதன் மூலம் data வை பரப்புங்க.
அந்த குண்டு குடிகார dog க்கு எல்லாம் விழுந்து விழுந்து பதில் குடுக்காதீங்கப்பா… அண்ணாமலையை திட்டினாதான் அதுங்களுக்கு அட்டென்ஷன் கிடைக்கும்னு விளம்பரத்துக்கு அலையுதுங்க…
We the leaders ஆரம்பித்ததன் நோக்கம் இதுங்க கூட சண்ட போட்டு ஜெயிக்க இல்ல… இங்கே முதலமைச்சர் மற்றும்
அமைச்சர்கள் மட்டும் நேர்மையா இருந்தா போதாது… அடிமட்டத்தில் இருந்து சரி செய்ய வேண்டிய அவசியம் உள்ளது…
மக்கள் சிந்தனையிலும் மாற்றம் தேவை… வட்டி மட்டுமே தமிழ்நாடு ஆண்டுக்கு 69000 கோடி செலுத்துகிறது என்று சொல்கிறது
இந்த புதிய அரசு… சரி, கடனை குறைக்க, வட்டியை குறைக்க நீங்க என்ன திட்டம் வெச்சிருக்கீங்க? நீங்களும் இலவச வாக்குறுதிகளைதானே கொடுத்திருக்கிறீர்கள்?
இன்று கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும் என்கிறார் முதல்வர் விஜய்… இந்த 69000 கோடியில் ஒவ்வொரு ஜில்லாவிலும் ஒரு எய்ம்ஸ் கட்டியிருக்க முடியும்… முந்தய காலங்களில் மக்கள் சில தியாகங்களை செய்திருந்தால்…
அதற்க்காக இலவசங்களே கூடாதா என்றால், நிச்சயம் தேவை… ஆனால் targeted ஆக இருக்க வேண்டும்… யாருக்கு தேவையோ, அவர்களுக்கு மட்டும்… வாக்குறுதிகளும் அப்படித்தான் அரசியல் கட்சிகள் கொடுக்க வேண்டும்…
எல்லோருக்கும் என தேர்தலுக்கு முன்பு சொல்லிவிட்டு, பிறகு உட்டாலக்கடி வேலை செய்ய கூடாது… அதை ஏற்கும் மனநிலைக்கு மக்களையும் கொண்டுவர வேண்டும்…
நமக்கி நிறய வேலை இருக்கு… இதுங்கள விட்டுத்தள்ளுங்க 🙏
சென்னையில் ஓடும் (இன்று சாக்கடையாக மாறியுள்ள) நதிகளை சுத்தப்படுத்த 7500 கோடி தமிழக அரசுக்கு கடந்த வாரம் வழங்கியுள்ளது…
ஆனால் இங்கே உள்ள திஜக கடந்த 10 நாட்களா அண்ணாமலையை புடிச்சு தொங்கிட்டிருக்கானுங்க, இதை மக்களிடம் எடுத்து செல்லாமல் 🤦♂️
Works on cleaning up the three major waterways of Chennai - Cooum, Adyar & Buckingham Canal to begin shortly! Centre has already allotted 7500 Crs for the same!!
இந்த அரசின் மீது இந்த குறுகிய காலத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பான சில விமர்சனங்கள் இருந்தாலும் சில நல்ல விஷயங்களையும் கேள்விப்பட முடிகிறது… அரசிடம் வைக்கப்படும் அப்ளிகேஷன்கள் வேகமாக பரிசீலிக்கப்பட்டு file கள் நகர்வது, இன்று சட்டசபையில் இரு முறை தேசியகீதம் பாடப்பட்டது, இந்து அறநிலையத்துறை சீர்திருத்தம் தொடர்பான அறிவிப்பு போன்றவைகள்…
அதனால் இப்போதே ஒரே போடாக இது மோசமான அரசு என முத்திரை குத்தாமல் இன்னும் 2-3 மாதங்கள் time கொடுத்துதான் பார்க்கவேண்டும்…
என எதிர்பார்த்த நிலையில், சில கடைசி நேர தவறான முடிவுகளால் (seat மற்றும் candidate selection களில்) பாஜக கூட்டணி 18% ல் முடிகிறது… எதிர்பார்த்த வெற்றி இல்லை என்றாலும், வெறும் 3 ஆண்டுகளுக்கு முன் NOTA கட்சி என பெயரெடுத்த கட்சி, தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியான அதிமுகவை சுமார் 80 தொகுதிகளில் 3 வது இடத்திற்கு தள்ளுகிறது…
சீட் ஜெயிக்கவில்லை என டெல்லி வருத்தமடைகிறது… பொறுமை இழக்கிறது… எடப்பாடியோடு டீல் போட்டுக்கொண்டு அண்ணாமலையை தூக்குகிறது… சரி அண்ணாமலையை தூக்கினார்கள் சரி… அதற்கு பிறகு வீரியத்தோடு செயல்பட்டார்களா என்றால் அதுவும் இல்லை… அண்ணாமலை தலமையில் வாங்கிய வாக்கிற்கு ஏற்றார்போல சீட்டு எண்ணிக்கையை பெற்றார்களா? அதுவும் இல்லை… குறைந்தபட்சம் ஜெயிக்கக்கூடிய தொகுதிகளை பெற்றார்களா? அதுவும் இல்லை… கடைசியில் ஒரு சீட்டு… ஒரே சீட்டு… மீண்டும் 2021 க்கு முன்பு இருந்ததை போல 2026 ல் மீண்டும் 2.5% க்கு சென்று மீண்டும் பரமப்பதத்தில் பாம்பில் சறுக்கியதை போல சறுக்கினார்கள்…
இப்போது அண்ணாமலை மீண்டும் தொடருகிறார் பாஜகவில் என்றே வைத்துக்கொள்வோம்… மீண்டும் தலைவர் பதவி கொடுக்கப்படுகிறது என்றேகூட வைத்துக்கொள்வோம்… அண்ணாமலை எந்த நம்பிக்கையில் மீண்டும் மக்களிடம் சென்று எங்களை நம்பி வாக்களியுங்கள் என கேட்பார்? மக்களும் இவர்களை ஒரு மாற்று சக்தியாக நம்பி வாக்களிப்பார்கள்?
அண்ணாமலை 4 வருடங்கள் அரும்பாடுபட்டு கட்சியை மேலே கொண்டுவந்தால், டெல்லியில் உட்கார்ந்துகொண்டு தவறான முடிவுகளை எடுத்து, overnight ல் மீண்டும் பழைய நிலமைக்கு கொண்டுவந்துவிடுகிறார்கள்… திரும்ப முதலிலிருந்து ஆரம்பிக்க யார் மனதில் தெம்பும் உற்சாகமும் இருக்கும்?
கேட்டால் சிந்தாந்தத்தை கேடயமாக கொண்டு வருகிறார்கள்… சித்தாந்தம் எல்லாம் செயல்வடிவம் பெறவேண்டும் என்றால் அதற்கு அதிகாரம் தேவை… உங்களுக்கு தமிழ்நாட்டில் அதை கைப்பற்றும் எண்ணமே இல்லயே? அப்பறம் சித்தாந்தம் பேசி என்ன பயன்?
அண்ணாமலை சித்தாந்தம் பேச மாட்டார்… மக்கள் பிரச்சனை பேசுவார்… அதுதான் தமிழ்நாட்டில் அதிகாரத்திற்கு வர ஒரே வழி… அவர் இன்னும் முதல் அடியே எடுத்து வைக்கவில்லை… அதற்குள் அவரை அமுக்க ஒரு கூட்டம் துடிக்கிறது… அவர் கொள்கை சித்தாந்தம் எல்லாம் அவர் கட்சி ஆரம்பித்தபோதுதான் தெரியும்… அதற்குள் அவர் அப்படி, இப்படி என brand செய்ய துடிக்கிறார்கள்…
ஆக நாங்களும் உருப்பட மாட்டோம், அடுத்தவரையும் உருப்படவிட மாட்டோம் என்கிற எண்ணம்…
ஆனால் இவர்கள் எதிர்க்க எதிர்க்கதான் அண்ணாமலைக்கு நல்லது என்பது இவர்களுக்கு புரியவில்லை… இன்னும் நிறய கதறுங்கள்… அவர் இன்னும் வேகமாக வளருவார் 🙏
(2/2)
சில பதிவுகளை சுருக்கமாக எழுத முடியாது… ஏனென்றால் அவை உள்ளத்திலிருந்து குமுறலாக வரும்போது அது கொட்டித்தீர்க்கும்… அதை தடுத்து நிறுத்தி சுருக்கினால் உள்ள குமுறல்களும் தீராது… உண்மையும் இருக்காது… அதனால் கொஞ்சம் நீளமான பதிவாகவே எழுதுகிறேன்… பொறுமை இருந்தால் தொடருங்கள்…
நான் 2013 முதல் மோடி பிரதமர் வேட்பாளராக வர வாய்ப்புள்ளது என்றதும்தான் சமூகவலைதளங்களில் அவருக்கு ஆதரவாக எழுத துவங்கினேன்… அவர் வெற்றி பெற்றதும் மனதில் நானே வென்றது போல ஒரு சந்தோஷம்… ஏனென்றால் அதற்கு முன்பு இருந்த காங்கிரஸ் ஆட்சியில் தினம் ஒரு ஊழல் குற்றச்சாட்டு, அடிக்கடி குண்டு வெடிப்புகள் என இந்தியர்கள் மானம் நொந்து நம்பிக்கை இழந்த காலத்தில் மோடி நம்பிக்கை அளித்தார்…
2014 தேர்தலில் தமிழகத்தில் கூட மோடி அலை வீசியது… 2009 தேர்தலில் பாஜகவோடு கூட்டணி வைத்து தோல்வி அடைந்ததால் ஜெயலலிதா 2014 ல் பாஜகவோடு கூட்டணி வைக்க தயங்கினார்… அவர் செய்த மிகப்பெரிய தவறும் அதுதான்… அன்று ஜெயலலிதா மோடி கூட்டணி ஏற்ப்பட்டிருந்தால் இங்கே அரசியல் களம் இன்றுவரை வேறாக இருந்திருக்கிம்… காரணம்…
அன்று பலர் ஜெயலலிதா தேர்தலுக்கு பிறகு மோடிக்குதான் ஆதரவு கொடுப்பார் என தெரிந்தே (என்னிடம் என்னுடைய கிறிஸ்தவ நண்பர் ஒருவர் கூட சொன்னார்) ஜெயலலிதாவிற்கு வாக்களித்தார்கள்… அன்று பாஜக அதிமுக கூட்டணி அமைந்திருந்தால் அதிமுக அன்றே மத்தியில் கூட்டணி ஆட்சியில் பங்கு வகிர்த்திருக்கும்… அதோடு, திமுக போன்ற கட்சிகள் 2019 ல் எடப்பாடி பாஜகவோடு கூட்டணி போனதை பாஜக அடிமை (ஜெயலலிதா மோடியா லேடியா என 2014 ல் செய்த பிரச்சாரத்தை சுட்டிக்கான்பித்து) அதிமுக என விமர்சித்திருக்க மாட்டார்கள்…
2014 ல் ஜெயலலிதா கூட்டணி வைக்க மறுத்த காரணத்தால் பாஜகவிற்கு வேறு வழியில்லாமல் போனது… ஆனால் மோடிக்கு இருந்த ஆதரவால், விஜயகாந்த், வைகோ, பாமக எல்லாம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வந்தார்கள்… அன்று திமுக பாஜக கூட்டணிக்கு வர ஆசைப்பட்டது… கருணாநிதி கூட மோடி ஒரு நல்ல மனிதர் என்று பாராட்டியது நினைவில் இருக்கும்… ஆனால் பாஜக திமுக பெயர் 2G விஷயத்தில் சிக்கொண்டிருந்ததால் அந்த கூட்டணியை ஏற்கவில்லை…
பிறகு 2016 தேர்தலில் மீண்டும் 2.5% க்கு பரமபதத்தில் சறுக்கியது போல் சறுக்கியது பாஜக… ஏனென்றால் மாநில அளவில் பாஜகவிற்கு importance இல்லாததால் அதை யாரும் கூட்டணியில் சேர்க்கவில்லை…
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு இங்கே மோடிக்கு எதிராக, demonetization மூலம் ஏற்பட்டிருந்த மக்களின் கோவத்தை பயன்படுத்தி பெறும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது… தமிழ்நாட்டில் என்ன பிரச்சனை நடந்தாலும் இது ஆர்எஸ்எஸ் சதி, மோடி சதி, பாஜக சதி என பிரச்சாரம் செய்யப்பட்டது… மோடி வெறுப்பு பிரச்சாரத்தோடு supplement ஆக இந்திய எதிர்ப்பு பிரச்சாரம், இந்து எதிர்ப்பு பிரச்சாரம் என கட்டவிழ்க்கப்பட்டது…
அதை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியாமல் அன்றைய ஆட்சியில் இருந்த அதிமுகவும் முயற்சிக்கவில்லை, பாஜகவிற்கு என்ன செய்வதென்றும் புரியவில்லை… சொல்லப்போனால் சில தற்குறித்தனமான பேச்சாலும், செயல்களாலும் நிலமையை மேலும் சிக்கலாக்கிக்கொண்டிருந்தார்கள் இங்கே உள்ள பாஜக தலைவர்கள்…
அப்போது 2020 ல் பல தன்னார்வத்தோடு சமூகவலைதளங்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்த தேசியவாதிகள் பலர் களமாடி ஓரளவு இந்த பிரச்சாரத்தை முறியடித்தார்கள்…
இதில் ரஜினி வந்து ஒரு மாற்றத்தை கொடுப்பார் என நம்பி ஏமாந்தது வேறு கதை…
பிறகு அண்ணாமலை என்கிற ஒரு retired IPS அறிமுகமாகிறார்… அவர் முதல் பிரஸ்மீட்லியே சரவெடியாக வெடிக்கிறார்… நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் எங்கள் மீது குப்பையை வீசி எரியுங்கள்… நாங்கள் அந்த குப்பையிலேயே தாமரையை மலர செய்கிறோம் என சவால் விடுகிறார்… அட… என நிமிர்ந்து உட்காருகிறோம்…
பிறகு 2021 ல் 4 MLA க்கள் மட்டுமே பாஜக வென்றாலும், அதுவே பெரிய சந்தோஷத்தை கொடுத்தது… காரணம் அதற்கு முன்பு தாமரை கூந்தலில்தான் மலரும் என்கிற பிரச்சாரம் முடிவிற்கு வந்ததே என்கிற அல்ப சந்தோஷம்… பிறகு அண்ணாமலை தலைவராகிறார்… அடுத்த 3 ஆண்டுகள் பாஜக மட்டுமே தலையங்கம் set செய்தது…
தினம் அனல் பறக்கும் பேட்டிகள், அறிக்கைகள், போராட்டங்கள் என அண்ணாமலை ஆட்டிவிக்கிறார் தமிழக களத்தை… நாம் 2021 க்கு முந்தய 4 ஆண்டுகள் பாஜக எப்படியெல்லாம் செயல்படவேண்டும் என ஆசைப்பட்டோமோ அத்தனையும் நிஜமாகிறது… ஆனால் அண்ணாமலையின் வளர்ச்சி எடப்பாடிக்கு வயித்தில் புளியை கரைக்கிறது… அது அதிமுக பாஜக மோதலாக மாறுகிறது… அண்ணாமலை மீது தொட்டதற்கெல்லாம் குத்தம் கண்டுபிடிக்கிறது அதிமுக… 2024 ல் கூட்டணி முறிகிறது…
முதல் முறையாக பாஜக தலமையில் ஒரு கூட்டணி அமைகிறது… அதிமுக கிட்டத்தட்ட தனிமைப்படுத்த படுகிறது… பாஜக இங்கே 20-25% வோட்டு எடுக்கும்
(1/2)
இந்த பையன் ஏதோ பாஜகல இப்ப இருக்கற தலைவர்கள் ஏதோ கொள்கைக்காக தியாகம் பண்ணிட்டு உட்கார்ந்திருப்பதை போல அண்ணாமலையோட பழைய பதிவுகள் எல்லாம் எடுத்து நரேட்டிவ் செட் பண்ண try பண்ணிட்டிருக்கப்ல…
இதெல்லாம் தெரிஞ்ச அப்பறம்தான் அவர் கட்சிக்குள் கொண்டு வரப்பட்டார்… அவர் சிந்தனைகள் பல மாற துவங்கின… கட்சியில் சேர்க்கப்பட்டார் , பதவிகள் கொடுக்கப்பட்டது..
இப்ப கூட அவர் கொள்கை பிடிக்காம ஓடல… இங்க கட்சி நடக்கற லட்சணம் பிடிக்காம ஓடிருக்கார்… மற்ற தலைவர்கள் சிலர் பதவிக்காகவும், வேறு சிலர் வேறு வழியில்லாம உட்கார்ந்திருக்காங்க … so ரொம்ப உணர்ச்சிவசப்படாத ப்ரோ 😂
Liberal ன்னு நானா சொன்னேன்? அப்படி அவரை brand பண்றது யாருன்னு கார்த்தி போட்ட பதிவை முழுசா படிங்க… எல்லோருக்குமான தலைவன் பெயர் லிபரல் இல்லை, இன்றைய சூழ்நிலையில்… இந்துத்வவாதியாக இருக்க வேண்டாம்… தேசியத்தை கைவிடாமல் இருந்தால் போதும்… ஆமாம்… தேசியத்தை விட்டு திராவிட பாணி அரசியலை இவரும் கையில் எடுத்தால் என் வழியை நான் பார்த்துக்கொள்ளதான் போகிறேன்… ஆனால் அதற்கான அவசியம் ஏற்படாது என நம்புகிறேன்…
இந்த மாதிரி கிறுக்குத்தனமா ட்வீட் போட்டு அண்ணாமலைக்கு முட்டு கொடுக்கிறேன் பேர்வழி என அவர் பெயரை மேலும் மேலும் டேமேஜ் செய்வது இந்த கும்பல்தான்…
அண்ணாமலை liberal என தன்னை அறிவித்துக்கொண்டால் அவர் நமக்கு தேவையே இல்லை… அவர் எந்த side உம் எடுக்காமல் அன்றாட மக்கள் பிரச்சனைகளை பேசினால் போதும்…
தம்பி @TwitzKarthi செத்த மூடிட்டு இருப்பா… உங்க ஆர்வ கோளாறால…
இவனுங்க கடந்த 10 நாட்களா அண்ணாமலைக்கு எதிரா காட்டற கொந்தளிப்புல, ஒரு 25% திராவிட கட்சிகளுக்கு எதிரா காண்பிச்சிருந்தா, பாஜக தமிழ்நாட்ல எப்பவோ வளர்ந்திருக்கும்…
முதல்ல அண்ணாமலை மோடியை விட்டு விலகியது கொஞ்சம் வருத்தமாகதான் இருந்தது… ஆனால் அண்ணாமலையின் சிந்தனைகளை இந்த கட்சி, கொள்கை மற்றும் சித்தாந்தங்களை எல்லாம் தாண்டி அடிப்படை மாற்றம் என்பதை நோக்கி உள்ளது…
அவரே சொன்னதுபோல பாஜக போன்ற ஒரு பெரிய கட்சிக்குள் இருந்தால், அதுவும் தமிழ்நாடு போன்ற ஒரு hostile ஆன ஈகோசிஸ்டத்தில், அந்த கட்சி சார்பாக பேசியே அல்லது விமர்சனங்களும்கு பதில் சொல்லியே பொழுது முடிந்துவிடும்… அவர் நினைத்ததை செய்ய முடியாது…
எப்போதும் அண்ணாமலை இனி தேசியத்திற்கு எதிராக பேசமாட்டார்… வட இந்தியர்கள் என அவர் போட்டது கணக்கெடுக்க வேண்டும் என போலீசுக்கு அவர் வைத்த கோரிக்கை… இதையும் சீமான் மற்றும் திராவிட அரசியலோடு முடிச்சுப்போடுவது தேவையற்றது… அப்படி திராவிட பாணியை அவர் கையில் எடுத்தால் நாமே அவருக்கு எதிராக நிற்போம் என அவருக்கும் தெரியும்…
அதனால் இனியும் சும்மா நொள்ளை நொட்டை சொல்லாமல், அவர் வேலயை அவரை பார்க விடுங்க… உங்க வேலைய (தமிழக பாஜக) நீங்க பாருங்க… இனிமேலாவது முடிஞ்சா கட்சிய வளர்க்க பாருங்க…
This is a movement for a real change!