கவிதைகளின் காதலன்... சமூகத்தின் சாடல்!! கொஞ்சம் கம்யூனிசம்..சாதியில்லா சமூகம்.. ரெளத்திரம் பழகு.. இத்தனையும் ஆசை... பேராசை தான்..
ஆனாலும் இது எனக்கான உலகம்!!!
சிறு கிறுக்கலில் உய்த்த
மொழியென இருக்கிறாள்..
சிறு குழந்தை கிறுக்கிடும்
ஓவியமென துளிர்கிறாள்..
உலகின் உயிரெழுத்தான "ஐ"
யென உயிர்க்கிறாள்..
இத்தனையும் சான்றென பதிந்த
தமிழ்மொழியென சுவைக்கிறாள்..
வரலாறு தந்த கீழடியென
புதையலாய் மணக்கிறாள்.
என் தமிழ்மொழி மூலம்
அவளை எழுதுவேன்...✍️
தள்ளி நின்று கொள்கிறாய்
தூரம் கடந்தும் கடத்துகிறாய்
உன் நினைவின் ஊஞ்சலில்
நான் காற்றாடியென மிதக்கிறேன்
அறிந்தும் இடறின்றி தடுமாறியே....!
#சோழதேசன்_விமல் ✍️
நிலவு அழகென்று
வர்ணிப்பதுண்டு யிங்கு
ஆனால்,
உன்னை யாதொருவரும்
இன்னும் கவனிக்கவில்லை...!
அதன��ல் தான்
அவர்களுக்கு தெரியவில்லை
நீ ஒளி
சிதறலின் பெருங்கீற்றென்று....!
#சோழதேசன்_விமல் ✍️
அன்பே
இனி உன்னை
நிலவென்று சொல்ல மாட்டேன்..!
இப்போது தான் அதை பார்த்தேன்;
அவ்வளவ��� பள்ளம் மேடு நிறைந்த கும்மிருட்டு..
நீ அப்படியல்ல என் இருள் வானத்தின் பிரகாச சூரியன்...!
#சோழதேசன்_விமல் ✍️