Mamata Banerjee’s constituency:
51k votes deleted. She lost by 15k.
M.K. Stalin’s constituency:
1 lakh votes deleted. He lost by 9k.
Arvind Kejriwal’s constituency:
40k votes deleted. He lost by 4k.
Was this the real reason behind the introduction of SIR?
கூட்டணி பற்றி பேச செல்வப்பெருந்தகை யார் எனக் கேட்கிறார் அறிவு ஜீவி என்று கூறிக்கொள்ளும் ஒருவர்.
வடமாநிலத்தில் எங்கள் தலைவர் சென்ற பின் அவர் இருந்த மேடையை தண்ணீர் உற்றி கழுவிய அழுக்கேறிய மதவாத மேட்டுக்குடி மனநிலையின் நீட்சியே இது.
மாண்புமிகு நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காத எவரோடும் கூட்டணி எதற்கு என்பதே என் கேள்வி?
அதற்கு நீண்ட நேரம் முதல்வர் சிரித்துப் பேசினார் என்கிறார் அந்த அறிவு ஜீவி.
உங்களுடன் நீண்ட நேரம் சிரித்து பேசுவதுதான் கூட்டணியில் தொடருவதற்கான ஒப்பந்தமா? சரி முதல்வராவது ஒரே ஒரு முறை ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லிவிட்டால் போதுமே. பிரச்சினை தீர்ந்ததே.
முதல்வர் கூட சொல்ல வேண்டாம் அந்தக் கட்சியில் உள்ள முன்னனிப் பொறுப்பில் உள்ளோர் யாராவது சொல்லட்டுமே, அது கூட வேண்டாம், நீண்ட நேரம் உங்களிடம் சிரித்துப் பேசிய முதல்வரிடம் நம் அணியின் பிரதமர் வேட்பாளர் எங்கள் தலைவர் ராகுல் காந்திதான் என்று நீங்கள் அழுத்தமாகச் சொல்லி அதை அவரும் ஏற்றுக்கொண்டு உங்களிடமாவது உத்தரவாதம் தந்தாரா? தந்திருந்தால் அதையாவது சொல்லுங்களேன்.
பிரதமர் மோடி குறித்தோ, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்தோ, பாஜக குறித்தோ சட்டப்பேரவையில் விமர்சித்தால் அது சட்டப்பேரவைக் குறிப்பில் இருந்து வேகமாக நீக்கப்படுகிறதே அது ஏன் என்று அடுத்த முறை சிரித்துப் பேசும் போது முதல்வரிடம் கேட்டுச் சொல்லுங்கள்.
உழைக்காமல் கிடைத்த பதவியை அனுபவிப்பது எளிது; உழைத்து இயக்கத்தை வளர்ப்பதுதான் கடினம். பதவியின் உயரம் ஒருவரின் அரசியல் உயரத்தைத் தீர்மானிப்பதில்லை; அவர் இயக்கத்திற்காகச் செய்த உழைப்பும் அர்ப்பணிப்புமே அதைத் தீர்மானிக்கும்.
காலம் பலரை முன்னிறுத்தும்; அதே காலம் பலரை மறந்தும் போகும். ஆனால் ஒரு பேரியக்கத்திற்காக நேர்மையாக உழைத்தவர்களின் பங்களிப்பை வரலாறு பதிவு செய்யும்.
காங்கிரஸ் பேரியக்கம் தனிநபர்களைவிடப் பெரியது. பதவிகளைவிட அதன் கொள்கை பெரியது.
தற்போதைய தமிழ்நாட்டின் முதல்வர் தான் பிரதமர் வேட்பாளர் என்போர் பக்கம் நின்று கொண்டு என் தலைவர் திரு ராகுல் காந்தி தான் பிரதமர் எனச் சொல்லும் என் மீது கல்லெறிபவர் என்னை யார் என்று கேட்கிறார்.
உரக்கச் சொல்கிறேன்.
நான் திரு. ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என விரும்பும் காங்கிரஸ் தொண்டன். சுயமரியாதையுடன் இந்த மண்ணின் மைந்தன், பூர்வகுடி.
விஜய் சொன்ன பொய்கள்!
விலையில்லாமல் வாசிக்கலாம்!
விஜய் ஆட்சிக்கு வந்து 100-ஆவது நாளை கொண்டாடும் இந்த தருணத்தில் விஜய் சொன்ன பொய்கள் புத்தகத்தை இணையத்தில் வெளியிட்டிருக்கிறேன்.
பொய் சொல்வதில் மோடிக்கு கொஞ்சமும் சளைத்தவன் அல்ல நான் என நிரூபித்திருக்கிறார் முதல்வர் விஜய். ஆட்சிக்கு வருவதற்கு வாக்குறுதிகள் மட்டுமல்ல, பொய்களும் மூலதனம் என்கிற அரசியல் அரிச்சுவடியை அறிந்து வைத்திருக்கிறார் விஜய்.
‘’ஆட்சிக்கு வருவதற்காக ஒரு பெரும் பொய், ஆட்சிக்கு வந்ததும் அதைவிட இன்னும் மிகப் பெரிய பொய் என்பதே திமுக தலைமையின் அறமற்ற அரசியல். பொய்வேடம் தரிக்கும் கபட நாடகத் திமுக. தலைமையின் பொய்முக வரலாறு அன்றில் இருந்து இன்றுவரை நில்லாமல் நீள்கிறது’’ என 2025 ஏப்ரல் 4-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் சொல்லியிருந்தார் விஜய். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அவர் முன்மொழிந்த இந்த வாக்கியங்களை ஆட்சிக்கு வந்த பிறகு அப்படியே வழிமொழிந்து நடப்பதுதான் விந்தை!
விஜய் மட்டுமல்ல, அவருடைய கட்சி நிர்வாகிகளும் அமைச்சர்களும் அதே பொய் பாதையில்தான் பயணிக்கிறார்கள். விஜய் சொன்ன 17 பொய்களும் தவெக நிர்வாகிகளும் அமைச்சர்களும் சொன்ன 12 பொய்களும் என 29 பொய்கள் இந்த நூலில் தொகுக்கப்பட்டிருக்கிறது.
இன்றும் நாளையும் மட்டும் இந்த புத்தகத்தை விலையில்லாமல் அமேசான் கிண்டிலில் வாசிக்கலாம்.
லிங்க்: https://t.co/62RTTeHd3F
தொடர் கொலைகள்
தொடர் ஆணவப் படுகொலைகள்
தொடர் பாலியல் வன்மங்கள்
தொடர் பாலியல் வன்மக் கொலைகள்
தொடர் கொள்ளைகள்
தொடர் காவல்நிலைய மரணங்கள்
தொடர் மின்வெட்டு
அறிவிக்கப்படாத மின் கட்டண உயர்வு
அறிவிக்கப்படாத வீட்டுவரி உயர்வு
தொடர் பொய் வழக்குகள்
தொடர் பொய் வழக்கு கைதுகள்
நீட் எதிர்த்து போராட அனுமதி மறுப்பு
போராடுபவர்கள் மீது காக்கிச்சட்டை ரௌடிகளின் தாக்குதல்
காவிரி நதிநீர் உரிமையைப் பெற கள்ள மௌனம்
வேளாண் கடன் தள்ளுபடி மறுப்பு
தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய தமிழ்நாடு
போலி முதலீட்டாளர்கள் மாநாடு
அமைச்சர்களின் கோமாளி கூத்துகள்
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாவது இடம்
கவர்னரின் கேடுகெட்ட செயல்களுக்கு முட்டுக்கொடுப்பது
பத்திரிக்கையாளர்களை சந்திக்க மறுப்பு
பத்திரிக்கையாளர்களுக்கு பொது நிகழ்விலும் அனுமதி மறுப்பு
பத்திரிக்கையாளர்கள் மீதும் ஆளும்கட்சியினர் தாக்குதல்
திராவிடம்-தமிழ்நாடு என்ற சொல்லாடல்களை தவிர்ப்பது
தமிழ்நாட்டோடு எவ்வகையிலும் ஒன்றாத ஒன்றிய அரசை எதிர்த்துப் பேச மறுப்பு
தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றாதது.
சிங்கப்பெண் படை என்கிறாயா?
வேலு நாச்சியார் படை என்று உருவாக்குவோம் என்பதே உனது தேர்தல் வாக்குறுதி.
எதை நூறு நாளில் சாதித்தாய்?
பத்திரிக்கைகளில் பல்லைக்காட்டி விளம்பரம் கொடுக்கிறாய்?
பேசுவது அனைத்தும் பொய்
செய்வது அனைத்தும் மூடத்தனம்
திரிஷாவை தவிர இங்கு யாருக்கு உன்னால் மகிழ்ச்சி?
சூர்யா சேவியர்
17-08-26
100 நாட்களில் அரங்கேறிய குற்றங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பாதுகாப்பு இல்லாத சூழல் என சந்தி சிரிக்கும் சர்க்கஸ் சர்க்காரால் நாசமான தமிழ்நாட்டின் தற்போதைய நிலையைத் தோலுரித்துக் காட்டும் காணொளி!
#நாசமாகும்தமிழ்நாடு
ஆளவும் தெரியாமல்,
அரசியலும் புரியாமல்
கட்டுப்பாடற்ற கோமாளிகளின்
ஆட்சியில்,
கட்டுக்கடங்காமல்
எங்கும் போதை
மயமாய் மாறி;
இதுவரை இல்லாத அவலமாய்; பள்ளி மாணவர்களையும்
பலியாக்கி வருகிறது.
இன்று அமைச்சராக
இருக்கும் ஒருவரே போதைப் பொருள் குற்றச்சாட்டுக்கு ஆளாகியும் எந்த ஆணியும் புடுங்காமல், அவர் மீது மேற்கொண்ட விசாரணையை
வெளியே சொல்லாமல்; வெட்கம் சிறிதுமின்றி.. இவர்களுக்கு போதை தடுப்பு உறுதிமொழி வேறு கேடா!🔥😡
@mkstalin@Udhaystalin
#LeaderOfOpposition
#DMK
#TVKFails
#TVKVijayFails