நிர்மல் குமார் பேசிய வீடியோவைப் பற்றி இரண்டு நாட்களாகவே யோசித்துக்கொண்டிருந்தேன்.
எலக்ட்ரீஷியன், பிளம்பர் போன்ற தொழில்களுக்கு டிமாண்ட் இருக்கிறதா என்றால் நிச்சயமாக இருக்கிறது. ஆனால் அதை ஏன் கல்லூரி மாணவர்களிடம் போய் பேச வேண்டும்?
அங்கேதான் உண்மையான விஷயம் இருக்கிறது. இன்னும் 5 வருடங்களில் நம் ஊரும் அமெரிக்காவைப் போல கல்விக் கட்டணங்களில் மாறப்போகிறது. நான் படிக்கும்போது தனியார் கல்லூரிகளில் அதிகபட்ச கட்டணம் ₹40,000; ஹாஸ்டல் உள்ளிட்டவை சேர்த்தாலும் சில இடங்களில் ₹1 லட்சம் வரைதான். அதுவே அப்போது பெரிய தொகையாகத் தெரிந்தது.
இன்றோ பொறியியல் படிக்க வருடத்திற்கு ₹1 லட்சத்திற்குக் குறைவாகக் கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்லூரிகளே இல்லை. சில கல்லூரிகள் ₹4 லட்சம் வரை போகின்றன.
ஆனால் வேலைவாய்ப்பு 40-60% மாணவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. மீதி பேர் கிக் ஒர்க்கர்களாக (குறிப்பாக டெலிவரி) மாறுகிறார்கள்.
“நான் படித்தாலும் இதே சம்பளம்தானே” என்று நினைத்து ஏற்கனவே பலர் டிராப் அவுட் ஆகிறார்கள். அமெரிக்காவுக்கும் நமக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் என்னவென்றால், அங்கே எதுவுமே தெரியாமல் டிகிரி வாங்க முடியாது. இங்கேயோ டிகிரி முடிப்பது மிக எளிதாகிவிட்டது. ஒருபுறம் கல்லூரிகள் திறக்கத் திறக்க, மறுபுறம் உள்ளே எல்லாரையும் தூக்கிப் போட்டு டிகிரி மில்லாக மாற்றி பட்டங்களை வழங்குகிறோம். நான்கு வருடம் இன்ஜினியரிங் படித்தும் ஒன்றும் தெரியாத நிலை ஏற்படுகிறது. இது மாணவனின் திறன்/கற்றல் திறன் தொடர்பான பிரச்சினை. இதைச் சரிசெய்யாமல் “நீ படிக்கவே வேண்டாம்” என்று நேரடியாகச் சொல்வது வன்மம்.
இன்னும் 5-10 வருடங்களில் அமெரிக்காவைப் போல படித்தவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்த சிரமப்பட்டு உழைக்கும் நிலையும், படிக்காமல் ஏதாவது கடை/தொழில் தொடங்கியவர்கள் நன்றாக வாழும் நிலையும் வரலாம். ஆனால் அது எல்லோருக்கும் இருக்காது.
இப்போது வந்துள்ள “பிரெயின் ராட்” இளைஞர்கள் இன்னும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். ரீல்ஸ், ஷார்ட்ஸ், கேமிங், எண்ட்லெஸ் ஸ்க்ரோலிங்கில் மூழ்கி கவனம் சிதறி, அடிப்படை சிந்தனைத் திறனையும், ஒழுக்கத்தையும், நீண்டகால முயற்சியையும் இழந்துவிடுகிறார்கள். கல்லூரிக் கட்டணம் ஏறிக்கொண்டே போகும்போது, திறன் இல்லாமல் வெறும் பட்டம் வாங்கினால் வேலை கிடைக்காது; கடன் சுமை அதிகரிக்கும். அப்போது டெலிவரி, கிக் ஒர்க் என்று தாழ்ந்த ஊதிய வேலைகளில் சிக்கி, உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் சோர்ந்துபோவார்கள். பிரெயின் ராட் அவர்களை மேலும் சோம்பேறியாக்கி, திறன் மேம்படுத்துவதற்கான ஆர்வத்தையும் அழித்துவிடும். இறுதியில் படித்தவர்கள் கூட கடனில் மூழ்கித் தவிக்க, படிக்காமல் உழைத்துத் திறன் வளர்த்தவர்கள் முன்னேறும் காட்சி உருவாகும். அப்போது இந்த இளைஞர்களுக்கு மீண்டு வருவது மிகவும் கடினமாகிவிடும்.
இந்த நிலையைப் பயன்படுத்தி அரசியல்வாதிகளும், நடிகர்களும், சில பிரபலங்களும் ஏற்கனவே படிக்காதவர்களையும், டிராப் அவுட் ஆனவர்களையும், பிரெயின் ராட் இளைஞர்களையும் “இன்ஃப்ளூயன்ஸராக மாறினால் எளிதாக சம்பாதிக்கலாம்” என்ற மாயையை விதைத்து சுரண்டத் தொடங்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
“படிப்பு தேவையில்லை, ரீல்ஸ் போட்டால் போதும், லட்சங்கள் வரும்” என்று சொல்லி அவர்களை யூடியூப், இன்ஸ்டாகிராம், ஷார்ட்ஸ் உலகில் தள்ளிவிடுவார்கள். சிலர் உண்மையில் பிரபலமாகி சம்பாதிக்கலாம். ஆனால் பெரும்பாலானோர் வெறும் நேரத்தையும், உழைப்பையும் வீணடித்து, அல்காரிதம் மாற்றங்களாலும், போட்டியாலும் பின்னுக்குத் தள்ளப்பட்டு மீண்டும் வேலையில்லாதவர்களாக மாறுவார்கள். அப்போது அவர்களின் கோபத்தையும், ஏமாற்றத்தையும் அரசியல்வாதிகள் தங்கள் வாக்கு வங்கியாக மாற்றிக் கொள்வார்கள். நடிகர்களும் பிராண்ட் எண்டோர்ஸ்மென்ட், ஷோக்கள் மூலம் இந்த “படிப்பு இல்லாமல் வெற்றி” கதையை மேலும் ஊக்குவித்து தங்கள் வியாபாரத்தை வளர்த்துக் கொள்வார்கள்.
இது ஒரு பெரிய சமூகப் பிரச்சினையாக உருவெடுக்கும். கல்வி மதிப்பு குறையும், திறன் இல்லாத இளைஞர்கள் கூட்டம் பெருகும், குடும்பங்கள் கடனில் மூழ்கும், சமூகத்தில் அமைதியின்மை அதிகரிக்கும். உண்மையான உழைப்பும், அறிவும் ஒதுக்கப்பட்டு, வெறும் பார்வை எண்ணிக்கையும், லைக்குகளும் மதிப்பாக மாறும். அப்போது நாட்டின் எதிர்காலமே ஆபத்தில் சிக்கும்.
இதனால் பெரும் சிக்கல் வர இருக்கிறது. ஐடி துறையை நம்பி உருவான நடுத்தர வர்க்கம், பொறியியல் பட்டதாரிகள், கல்விக் கடன் வாங்கிய குடும்பங்கள் அனைவரும் பாதிக்கப்படுவார்கள். வேலைவாய்ப்பு மேலும் சுருங்கும். கல்விக் கட்டணம் உயர்ந்துகொண்டே இருக்கும் நிலையில், ஐடி போன்ற பெரிய வாய்ப்புகள் குறையும்போது, திறன் இல்லாத பட்டதாரிகளும், பிரெயின் ராட் இளைஞர்களும் இன்னும் மோசமான நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
போன மாசம் சொன்னதுக்கு முட்டு தந்த தவெக்கன்ஸ இப்ப ஒவ்வொரு குடும்பமாக வெளியே வர ஆரம்பிச்சதும் பதுங்கிட்டாங்க ஆகஸ்ட் மாசம் பில் வந்த பின்னாடி இடி இறங்குன மாதிரி ஆகப் போறாங்க...
நடுத்தர வர்க்க ஆணுக்கு வாழ்க்கைப்பட்டு வரும் பெண்தான் உண்மையிலேயே
மஹாராணிகள்....
பெரிய இடத்துக்கு வாழ்க்கைப்பட்டு போகிறவர்கள் அடிமை வாழ்க்கை வாழ வேண்டும்... இல்லை என்றால் தனெக்கென ஒரு பாதையை அமைத்துக்கொள்ள வேண்டும்... இவர்களிடம் பணம், நகைகள் குவிந்திருக்கலாம்.... ஏறினால்/இறங்கினால் குளிரூட்டப்பட்ட வாகனங்கள் இருக்கலாம்..... அடுக்கு மாடி வீடிருக்கலாம்... அதட்டி வேலை வாங்க ஆள் இருக்கலாம்... ஆனாலும் அவர்கள் பணக்கார உரிமையற்றவர்கள்தான்...
அடித்தட்டு ஆணுக்கு வாழ்க்கைப்படுபவர்கள் சரிக்கு சரியாய் உழைக்க வேண்டும்.. வெளியில் கணவனுக்கு சமமாகவும், வீட்டில் கணவனுக்காகவும் உழைக்கவும் அல்லது அதற்கு மேலும் கூட உழைக்க வேண்டும்... குடிகார கணவெனென்றால் அவனுக்கும் சேர்த்து உழைக்க வேண்டும்... இங்கே அதிகாரமிக்க அடிமையாகத்தான் பெண் வாழ முடியும்...
நடுத்தர குடும்ப ஆணுக்கு வாழ்க்கைப்பட்டவர்களுக்கு சம்பாதிக்க உழைக்க வேண்டிய கட்டாயமில்லை... அவர்கள் உழைக்க தயாரானாலும் தடை இல்லை.... கணவனின் வருமானத்தை கணக்கிட்டு செலவு செய்யவோ, சேமிக்கவோ முழு அதிகாரம் உண்டு... வேண்டியவர்களை சேர்க்கலாம்... வெறுப்பவர்களை விலக்கலாம்.. எல்லா முடிவுகளையும் தாமே எடுக்கலாம்.... வியர்வையோடு தூங்கினாலும் பாதுகாப்பாய், ஆதரவாய் தூங்கலாம்.... பேருந்தில் பயணித்தாலும் உற்றவர்களுடன் பயணிக்கலாம்... கடன் வாங்கினாலும் கவலை பட்டாலும் உனக்கு நான் எனக்கு நீ என சாய்ந்துகொள்ள தோளிருக்கும் ... இன்ஸ்டால்மெண்டில் வாங்கினாலும் சந்தோஷத்தை ஒவ்வொரு நொடியும் உணரலாம்..வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்ப தாமதமானால் தேடி வர ஆளிருக்கும்...
இப்படி ஆயிரமாயிரம் இருக்கும்...
தன் பொறுப்புணர்ந்து வாழும் நடுத்தர வர்க்க பெண்ணா நீங்கள்??? உரக்கச்சொல்லுங்கள் இந்த
உலகிற்கு.... மகாராணி என்று....