நீட் தேர்வை எதிர்த்து போராடிய மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு.
தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 🙌
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, நீட் தேர்வை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீது பதிவுசெய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுகின்றன. இதர விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
As per the directions of the Hon’ble Chief Minister of Tamil Nadu, all cases registered against students who protested against the NEET examination will be withdrawn. Further details will be announced shortly. Heartfelt gratitude to the Hon’ble Chief Minister of Tamil Nadu.
- Rajmohan
காமன்வெல்த் விளையாட்டில் தமிழ்நாட்டின் பிரவீன் சித்ரவேல் வெள்ளியும், செல்வ பிரபு வெண்கலமும் வென்று அசத்தினர். 🏅🇮🇳
இருவரின் சாதனையை பாராட்டி தமிழ்நாடு அரசு ₹30 லட்சம் மற்றும் ₹20 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்துள்ளது. 👏
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில்
நடைபெற்றுவரும் 23-வது காமன்வெல்த்
விளையாட்டுப் போட்டியில்,
ஆண்களுக்கான மும்முறை தாண்டுதல்
போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற
தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தைச்
சேர்ந்த திரு. பிரவீன் சித்ரவேல்
அவர்களுக்கும், வெண்கலப் பதக்கம்
வென்ற மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த
திரு. செல்வ பிரபு அவர்களுக்கும் எனது
மனமார்ந்த வாழ்த்துகளையும்
பாராட்டுகளையும் தெரிவித்துக்
கொள்கிறேன்.
இவ்வீரர்களின் சாதனையைப் பாராட்டி,
தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய
ஊக்கத்தொகையாக, வெள்ளிப் பதக்கம்
வென்ற திரு. பிரவீன் சித்ரவேல்
அவர்களுக்கு 30 இலட்சம் ரூபாயும்,
வெண்கலப் பதக்கம் வென்ற திரு. செல்வ
பிரபு அவர்களுக்கு 20 இலட்சம் ரூபாயும் வழங்கப்படும்.
ஒரே போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த
இரண்டு விளையாட்டு வீரர்கள்
பதக்கங்களை வென்றிருப்பது மிகுந்த
மகிழ்ச்சியளிக்கிறது. இந்த இருவீரர்களும்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு
ஆணையத்தின் விளையாட்டு விடுதிகளில்
தங்கி பயின்று, முறையான பயிற்சி
பெற்றவர்கள் என்பது தமிழ்நாட்டின்
விளையாட்டுத் துறைக்குப் பெருமை
சேர்ப்பதாகும்.
இவர்களின் கடின உழைப்பும்,
விடாமுயற்சியும், அர்ப்பணிப்பும்
வெற்றியைத் தேடித்தந்ததோடு,
ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை
அளிக்கிறது. சர்வதேச அரங்கிலும்
தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற எனது வாழ்த்துகள் !