எங்களுக்கு ஹிந்தியும் எப்போதும் அந்நிய மொழிதான். நீங்கள் திணிக்கும் மொழியைப் பேசுவதைவிட நாங்கள் விரும்பும் மொழியை நாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம். அது அவமானம் அல்ல, சுயமரியாதை.
தொகுதி மறுவரையறையால் தமிழகம் பாதிக்காது என்று மத்திய அரசு கூறியுள்ளது. அதைத்தான் நான் கூற முடியும். நானே ஒன்றைக் கூற முடியாது. கூறினால் முதலாளிகள் கூறு போட்டு விடுவார்கள். ஆகவே இரட்டை இலைக்கு உங்கள் பொன்னான வாக்குகளை... - எடப்ஸார்
டிசம்பர் 05 அன்று பேய்மழை, பல திசைகளிலிருந்து வீசும் சூறாவளி, வரலாறு காணாத புயல், உலகளாவிய நிலநடுக்கம்... இப்படி ஏதேனும் இயற்கைப் பேரிடர்கள் நிகழ்வதற்கு வாய்ப்பிருக்கிறது என்று உள்ளூர் வெதர்மேன்கள் முதல் சர்வதேச வானிலை ஆய்வாளர்கள் வரை யாரேனும் எச்சரிக்கை கொடுத்திருக்கிறீர்களா?