நக்கல் மன்னன் கவுண்டமணிக்கு இனிய அகவை தின வாழ்த்துக்கள் 💚💚❤️❤️❤️
உன் பையன்லாம் படிக்கப் போனா வெட்டியான் வேலைய யார் பாப்பா...?
கொஞ்ச நாளைக்கு நீயும் உன் புள்ளையும் பாருங்க...!! 🥰🥰🥰🤒🤒🤣🤣
விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர் பிரபு நேற்று கூறியது:
அப்பா சிவாஜி அவர்களின் இறுதி ஊர்வலம் நடைபெற இருந்த நேரம். கட்டுக்கடங்காத கூட்டம். எந்த பிரச்னையும் இல்லாமல் ஊர்வலம் நடக்க வேண்டுமே எனும் பதட்டம் இருந்தது.
அப்போது என்னிடம் விஜயகாந்த் அளித்த வாக்குறுதி: எதைப்பத்தியும் கவலைப்பட வேண்டாம். சின்ன கலாட்டா கூட நடக்காது. எல்லாம் நான் பாத்துக்கறேன்.
சொன்னதை செய்தார் விஜயகாந்த். அந்த நன்றியை நான் மறக்கவே மாட்டேன்.
வீடியோ ஆதாரம்.
Watch | தந்தையின் இறுதி ஊர்வலத்துக்கு வந்த பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு, கைகூப்பி நன்றி தெரிவித்த மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன்!
#SunNews | #RIPVijayakanth | #விஜயகாந்த் h
தமிழ்த்திரைத்துறையில் தமது கம்பீரமான நடிப்பாற்றலால் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகனாகத் திகழ்ந்த ஆகச்சிறந்த திரைக்கலைஞர், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத்தலைவர், தமிழ்நாட்டின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அன்புச்சகோதரர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறை��ெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நடிகர் சங்கத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றிருந்தபோது, அனைவரையும் ஒருங்கிணைக்கும் கனிவுமிக்கப் பெருங்குணத்தாலும், நிர்வாகத் திறமையாலும் கோடிக்கணக்கான ரூபாய் கடனிலிருந்து நடிகர் சங்கத்தை மீட்ட பெருமைக்குரியவர். தம் நண்பர்கள் பலரின் திரைத்துறை வளர்ச்சிக்கு காரணமாகத் திகழ்ந்த பெருந்தகை. தான் நடிக்கும் படப்பிடிப்பு தளமானாலும், தம��ு அலுவலகமானாலும் பசியோடு யாரும் இருந்திடக்கூடாது என்று தம்மை நாடி வந்த மக்கள் அனைவருக்கும் பசியாற உணவளித்த மனிதநேயவாதி. தமிழ்த்திரைத்துறையிலும், அரசியல் துறையிலும் அவர் படைத்த சாதனைகள் காலத்தால் அழியாதவை. கேப்டன் விஜயகாந்த் அவர்களின் புகழ் தமிழ்நாட்டு மக்கள் மனங்களில் என்றென்றும் நீங்காது நிலைத்திருக்கும்.
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவால் துயருற்றுள்ள தேமுதிக ப��துச்செயலாளர் அம்மையார் பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும், அன்புத்தம்பிகள் விசய பிரபாகரன், சண்முக பாண்டியன் மற��றும் அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும், உலகெங்கும் வாழும் அவருடைய லட்சக்கணக்கான ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, இப்பெருந்துயரில் பங்கெடுக்கிறேன்.
அன்புச்சகோதரர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!